திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பழைய ஆயக்குடியை சேர்ந்தவர் ராம்குமார் இவரது மனைவி மீனா கடந்த சில வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மீனாவின் தாய் மாமாவான ஜெகதீஸ்வரன் வீட்டில் வசித்து வருவதால் மீண்டும் குடும்பம் நடத்த முடியவில்லை எண்ணிய ராம்குமார். இன்று காலை விவசாய தோட்டத்திற்கு சென்று கொண்டு திரும்பிக் கொண்டிருந்த ஜெகதீஸ்வரனை வழிமறித்த ராம்குமார் மற்றும் அவரது நண்பருடன் சேர்ந்து அரிவாளில் சரமாரியாக 10க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டியதில் நிலை […]
Category: மாவட்ட செய்திகள்
கஞ்சா போதையில் ஓட்டுநரையும், காவலர்களையும் தாக்கிய இளைஞர்கள்! எடப்பாடி பழனிச்சாமி கடும் விமர்சனம்..
கும்பகோணத்தில் இளைஞர்கள் கஞ்சா போதையில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாகவும், சென்னை கண்ணகி நகர் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவலர்கள் இருவரை போதை ஆசாமிகள் இருவர் தாக்கியதாகவும் வருகின்ற செய்திகள் கவலையளிக்கின்றன. அரசு ஊழியர்களுக்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய காவல்துறையினருக்குமே பாதுகாப்பற்ற நிலையில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிற்கான முக்கிய காரணமாக போதைப்பொருள் புழக்கம் அமைந்துள்ளது. நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, மளிகைப் […]
மதுரை அவனியாபுரத்தில் 6ம நூற்றாண்டை சேர்ந்த பாண்டிய மன்னர் காலத்திய பாலா மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் திருக்கல்யாண விழா !
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள அவனியாபுரத்தில் கி.பி. 6ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டிய காலத்திய பால மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் உள்ளது.மதுரை திருவிளையால் புராணங்களில் மீனாட்சி குழந்தையாக இருக்கும்போது விளையாடிய திருத்தலமாக இக் கோயில் கருதப்படுகிறது.மதுரை சித்திரைத் திருவிழாவை ஒட்டி நடைபெறும் திருவிழாவைப் போல் அவனியாபுரம் பாலம் மீனாம்பிகை திருக்கோயிலும் கொடியேற்றத்துடன் துவங்கி திக்விசயம் திருக்கல்யாணம் பூப்பல்லாக்கு போன்ற அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெறும். இதனையொட்டி இன்று மாலை எட்டு மணியளவில் பாலா மீனாபியை கல்யாண […]
வெயிலின் தாக்கத்தைப் பொருட்படுத்தாமல் பள்ளிகளில் நடத்தப்படும் சிறப்பு வகுப்புகளை பள்ளிக் கல்வித்துறை தடுத்து நிறுத்த வேண்டும்! எம். எச். ஜவாஹிருல்லா அறிக்கை..
வெயிலின் தாக்கத்தைப் பொருட்படுத்தாமல் பள்ளிகளில் நடத்தப்படும் சிறப்பு வகுப்புகளை பள்ளிக்கல்வித்துறை தடுத்து நிறுத்த வேண்டும்! எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கை.. மாணவர்களும் ஆசிரியர்களும் கல்வி கடுமையிலிருந்து விடுபட்டு ஓய்வு பெறுவதற்காகவும் கடும் வெப்பத்திலிருந்து மாணவர்களைக் காப்பதற்காகவும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது பரவலாக 105க்கும் மேல் வெப்பநிலை இருந்து வருகிறது. முதியவர்களும் பொதுமக்களும் நோயாளிகளும் இந்த வெப்ப அலையை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் சில தனியார்ப் பள்ளிகள் கோடை விடுமுறைக் காலங்களில்பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்த இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. சீருடை இல்லாமல் மாற்று உடையில் மாணவர்களை அழைத்து தனியாகச் சிறப்பு வகுப்புகளை நடத்துவதாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பெற்றோர்கள் புகார் அளித்த வண்ணம் இருக்கிறார்கள். இது மாணவர்களின் மீது உளவியல் […]
சாயல்குடியில் கல்வி வழிகாட்டி கருத்தரங்கம் நிகழ்ச்சி !
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் சாயல்குடி சமுதாயக்கூடத்தில் ரூரல் வொர்க்கர்ஸ் டெவலப்மெண்ட் சொசைட்டி (RWDS) நிறுவனம் சார்பாக மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான பள்ளி மற்றும் கல்லூரிகளில் எந்தெந்த பாடத்தகட்டங்கள் தேர்வு செய்யலாம் என்று விவாதங்கள் மூலம் சிறந்த கல்வியாளர்களை கொண்டு Need exam எப்படி படிக்கனும், தொழில் நுட்பம் சார்ந்த கல்விகளை பயிலும் வழிமுறைகள், என அனைத்து வகையான […]
இனி PhD படிக்க 4 ஆண்டுகால இளங்கலைப் பட்டம் பெற்றால் போதும்!!
இனி PhD படிக்க 4 ஆண்டுகால இளங்கலைப் பட்டம் பெற்றால் போதும்! குறைந்தபட்சம் 75% மதிப்பெண்கள் பெற்று 4 ஆண்டுகால இளங்கலைப் பட்டம் பெற்ற மாணவர்கள் நேரடியாக PhD படிப்பை தொடரலாம் மேலும், இளங்கலைப் பட்டம் பெற்ற மாணவர்கள் தங்கள் படிப்பைப் பொருட்படுத்தாமல் எந்தப் பாடத்தில் வேண்டுமானாலும் PhD படிக்கலாம் அதேபோல், 4 ஆண்டுகால இளங்கலை பட்டம் பெற்ற மாணவர்கள் இனி தேசிய தகுதித் தேர்வில் (NET) நேரடியாக பங்கேற்கலாம் -பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் ஜெகதேஷ் […]
கீழக்கரையில் ஜகாத் கமிட்டி பொதுக்குழு கூட்டம் ! நிர்வாகிகள் தேர்வு!!
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பல்வேறு சமூக சேவைகளை செய்துவரும் 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளை (ஜகாத் கமிட்டியின்) பொதுக்குழு கூட்டம் ஜகாத் கமிட்டியின் அலுவகத்தில் இன்று நடைபெற்றது, இக்கூட்டத்திற்கு மூத்த உறுப்பினரும் கௌரவ ஆலோசகருமான க.கு அப்துல் ஜப்பார் மற்றும் சிக்கந்தர் பாட்சா ஆகியோர் தலைமை தாங்கினார். ஜகாத் கமிட்டி செயலாளர் ஷாஹுல் ஹமீது முன்னிலை வகித்தார். ஜகாத் கமிட்டி தலைவர் ஜாஹிர் ஹுசைன் வரவேற்புரை வழங்கினார்.பொருளாளர் சீனி முஹம்மது ஆண்டறிக்கை வாசித்தார். துணைத்தலைவர் […]
பனைக்குளம் பகுதியில் சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தின் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா !ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு !!
ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகே உள்ள சோகையன் தோப்பு பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது சுந்தர் ராஜ பெருமாள் ஆலயம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு வேத விற்பனர்கள் முருகன் சுந்தரம் உள்ளிட்ட குழுவினர்களால் யாக சாலை பூஜை நிகழ்வு மற்றும் கணபதி பூஜையுடன் துவங்கியது. கடம் புறப்பாடு விழா மேளதாளத்துடன் நடைபெற்றது ஏராளமான ஆன்மீக பக்தர்கள் குலவை யிட்டு கடம் […]
நான் முதல்வன் திட்டத்தில் பயின்று ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற தென்காசி மாவட்ட மாணவி; முக்கிய பிரமுகர்கள் பாராட்டு..
நான் முதல்வன் திட்டத்தில் பயின்று ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற தென்காசி மாவட்ட மாணவி; கல்வியாளர்கள் முக்கிய பிரமுகர்கள் பாராட்டு.. தமிழ்நாடு முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தில் பயின்று ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற தென்காசி மாவட்ட மாணவியை கல்வியாளர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டை விஸ்வநாதபுரத்தை சேர்ந்த மாணவி இன்பா. தமிழ்நாடு முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயின்று ஐஏஎஸ் தேர்வில் […]
தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு: சிசிடிவி கேமரா மூலம் 24 மணி நேர கண்காணிப்பு..
தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 39 வாக்கு எண்ணும் மையங்களுக்கும் 4 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அப்பகுதிகள் முழுவதும் தலா 188 சிசிடிவி கேரமாக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து வாக்குகள் பதிவான அனைத்து இயந்திரங்களும் ஏற்கெனவே தயார்படுத்தப்பட்ட 39 வாக்கு எண்ணும் மையங்களுக்கும் நேற்று முன்தினம் இரவே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு […]
பந்துவீச்சில் மிரட்டிய நடராஜன்; 67 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி அபார வெற்றி..
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி ஐதராபாத் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா அதிரடியான துவக்கம் கொடுத்தனர். அபிஷேக் ஷர்மா 46 ரன்களுக்கும், டிராவிஸ் ஹெட் 89 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதைத் தொடர்ந்து ஐதராபாத் அணியின் ஸ்கோர் மெல்ல சரிய துவங்கியது. […]
கேரளாவில் பயங்கரமாக பரவி வரும் பறவை காய்ச்சல்! பல சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்..
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் எடத்வா மற்றும் செருதளா கிராமங்களில் உள்ள சில கோழி பண்ணைகளில் வாத்துகள் அடுத்தடுத்து இறந்தது. இறந்த வாத்துகளை ஆய்வு செய்ததில் எச்5என்1 என்ற பறவை காய்ச்சல் இருப்பது உறுதியானது.இதையடுத்து கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கேரளாவில் பறவை காய்ச்சல் பரவியுள்ளதால், தமிழக எல்லைப்பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி தமிழக கேரள எல்லைப்பகுதிகளான ஆனைகட்டி, வாளையாறு, வேலந்தாவளம், மேல்பாவி, முள்ளி, மீனாட்சிபுரம், கோபாலபுரம், செம்மனாம்பதி, வீரப்ப கவுண்டன்புதூர், […]
எங்களை ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைத்தது உங்கள் பாட்டி- ராகுல் காந்திக்கு பினராயி விஜயன் காட்டமான பதில்..
எங்களை ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைத்தது உங்கள் பாட்டி- ராகுல் காந்திக்கு பினராயி விஜயன் காட்டமான பதில்.. கோழிக்கோட்டில் நடைபெற்ற தேர்தல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஜயன், கேரள முதல்வரை ஏன் விசாரிக்கவில்லை, ஏன் அவரைக் காவலில் எடுக்கவில்லை என்று ராகுல் கவலைப்படுகிறார். உங்கள் பாட்டி இந்திரா காந்தி நாடு முழுவதையும் அடக்கிய எமர்ஜென்சியின் போது, எங்களை ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைத்தார், என்றார். வியாழக்கிழமை, கண்ணூரில் நடந்த பேரணியில் பேசிய ராகுல், இரண்டு முதல்வர்கள் சிறையில் […]
தோல்விக்கு முன்னுரை பாடத் தொடங்கிவிட்டார்கள் பா.ஜ.க. வேட்பாளர்கள்- திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை..
தோல்விக்கு முன்னுரை பாடத் தொடங்கிவிட்டார்கள் பா.ஜ.க. வேட்பாளர்கள்- திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை.. தங்களுக்குத் தோல்வி உறுதி என்றவுடன், வாய்ப்பறை கொட்டிய கோவை பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை, தென்சென்னை பா.ஜ.க. வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராசன், மத்திய சென்னை பா.ஜ.க. வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் போன்றவர்கள் புதுப்புது வாதங்களைக் கூறி, ‘ஒப்பாரி’ வைத்துப் பேட்டி தந்ததைப் பார்த்தபோது, எப்படி சிரிப்பது என்றே தெரியவில்லை. குற்றம் சுமத்தி, தோல்விக்கு இப்போதே அச்சார சமாதானங்கள் சொல்லக் கிளம்பியுள்ள காவிகளே, […]
தமிழகத்தில் 69.46 சதவீத வாக்குப்பதிவு: மாவட்ட வாரியாக எவ்வளவு சதவீதம், தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை தோராயமான வாக்குப்பதிவு தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.இந்த நிலையில் தற்போது இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் 69.46 சதவீத வாக்குகள் பதிவானதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.அதன் முழு விவரம் வருமாறு:-1. தருமபுரி- 81.482. நாமக்கல்- 78.163. கள்ளக்குறிச்சி- 79.254. ஆரணி- 75.655. கரூர் – 78.616. பெரம்பலூர்- 77.377. சேலம்- 78.138. சிதம்பரம்- 75.329. விழுப்புரம்- 76.4710. ஈரோடு- 70.54 […]
வாக்குப்பதிவு இயந்திரங்கள் அண்ணா பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு அறையில் சீல் வைப்பு !
இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றதையொட்டி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் மற்றும் இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தல் பார்வையாளர் (பொது) பண்டாரி யாதவ் ஆகியோர் தலைமையில் வேட்பாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட பிரமுகர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அண்ணா பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி இன்று (20.04.2024) நடைபெற்றது. இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட இராமநாதபுரம்- 338, பரமக்குடி (தனி) -303, முதுகுளத்தூர்- 386, திருவாடானை -347, திருச்சுழி- 276, அறந்தாங்கி-284 என மொத்தம் […]
ஓட்டுபோட சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப சிறப்பு பஸ் மற்றும் ரெயில்கள் இன்று முதல் இயக்கம்..
பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக நேற்று அரசு பொது விடுமுறை அறிவித்து இருந்தது. தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு கட்டாயம் விடுப்பு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தததால் சொந்த ஊர்களுக்கு 17, 18 ஆகிய தேதிகளில் புறப்பட்டு சென்றனர்.சென்னை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தங்கி வேலை செய்து வந்த கூலி தொழிலாளர்கள், ஊழியர்கள் ஓட்டு போடுவதற்காக சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதற்காக அரசு சிறப்பு பஸ்கள் இயக்கின. தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை […]
மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னையில் இருந்து பேருந்துகள் மூலம் மட்டும் ஏப்.17, 18-ல் 4,03,800 பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக தகவல்..
2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு, சென்னையிலிருந்து இயக்கப்பட்ட 7299 பேருந்துகளில் 4,03,800 பயணிகள் பயணித்துள்ளதாக போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார். இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக இந்தியாவில் 102 தொகுதிகளில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக இன்று காலை தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு சென்னையிலிருந்து இயக்கப்பட்ட 7299 […]
தமிழ்நாட்டில் தேர்தல் சுமூகமாக நடைபெற்றது! தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்..
தமிழ்நாட்டில் தேர்தல் சுமூகமாக நடைபெற்றது! தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்.. இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடங்கியது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் முதற்கட்டமாக நாட்டில் உள்ள 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. மக்கள் பலர் தங்கள் ஜனநாயக கடமையை தவறாமல் ஆற்றியுள்ளனர். சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 […]