எனது தற்கொலைக்கு இவர்கள் இருவர் தான் காரணம்! இவர்களை விடாதீர்கள்! கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்துக் கொண்ட விஏஓ!- தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராம நிர்வாக அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பு..

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பனைமரத்துபாளையத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் கருப்பசாமி ( வயது 38) முதுகலை பட்டதாரி. இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கணக்கம்பாளையத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் அவரது வீட்டில் மொட்டை மாடியில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார் .திருமணம் முடியாத ஏக்கத்தில் இவர் […]

அச்சச்சோ இவ்வளவு நாளா, சளி காய்ச்சலுக்கு நாம சாப்பிட்ட மருந்துகள்?? 67 மருந்துகள் தரமற்றவை என ஆய்வில் தகவல்..

சளி, காய்ச்சல் உள்ளிட்ட உடல்நல பிரச்சினைகளுக்கான 67 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளை மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்து வருகின்றன. ஆய்வின்போது போலியான, தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த மார்ச் மாதத்தில் 931 மருந்துகளின் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், சளி, […]

பலாப்பழம் நழுவி “கையில்” விழுந்தது! காங்கிரஸ் கட்சியில் இணையும் நடிகர் மன்சூர் அலிகான்..

பலாப்பழம் நழுவி “கையில்” விழுந்தது! காங்கிரஸ் கட்சியில் இணையும் நடிகர் மன்சூர் அலிகான்.. சென்னை சத்யமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையுடன் நடிகர் மன்சூர் அலிகான் சந்திப்பு. ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்து கடிதம். “முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன் – மீண்டும் தாய் கழகத்தில் இணைய உள்ளேன்” “இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை காங்கிரசுடன் இணைக்க முடிவு என  மன்சூர் அலிகான் அறிவிப்பு..

திருச்சியில் இருக்கையோடு தூக்கி வீசப்பட்ட நடத்துநர்! அரசு பேருந்துகளின் அவல நிலை! அச்சத்தில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள்..

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் இருந்து கேகே நகர் நோக்கி அரசு நகர பேருந்து ஒன்று புறப்பட்டது. பேருந்தை பாஸ்கரன் என்பவர் ஓட்டினார் .நடத்துனராக திருச்சி எடமலைபட்டிபுதூரை சேர்ந்த முருகேசன் (54) பணியாற்றினார். மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பேருந்து கலையரங்கம் தியேட்டரை கடந்து சென்றது. பேருந்தில் பயணிகள் அதிகம் இல்லாததால் கடைசியில் இருந்து வலது புறத்தில் உள்ள மூன்றாவது இருக்கையில் நடத்துனர் முருகேசன் உட்கார்ந்திருந்தார். திருச்சி நகரப் பேருந்துகளில் நடத்துனருக்கு என்று தனி இருக்கை கிடையாது. அந்த […]

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது- ராமதாஸ் அறிக்கை..

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-தமிழ்நாட்டில் தொகுதி 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய […]

நிலக்கோட்டையில் மூத்த வழக்குரைஞர்களுக்கு பாராட்டு விழா! ஓய்வுபெற்ற புதுச்சேரி தலைமை நீதிபதி பங்கேற்பு..

நிலக்கோட்டையில் மூத்த வழக்குரைஞர்களுக்கு பாராட்டு விழா! ஓய்வுபெற்ற புதுச்சேரி தலைமை நீதிபதி பங்கேற்பு.. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் வட்டார வழக்கறிஞர் சங்கம் சார்பாக வரக்கூடிய 30 ந்தேதி மாலை மூத்த வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற (புதுச்சேரி) தலைமை நீதிபதி டி.கிருஷ்ணராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள உள்ளார். மேலும் வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு விளையாட்டு விழா நடைப்பெற உள்ளது அதனைத் தொடர்ந்து வரக்கூடிய அனைவருக்கும் அறுசுவை விருந்தும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் […]

பழனி கோயிலுக்கு அமெரிக்காவில் பணிபுரியும் முருக பக்தர் 7 லட்சம் மதிப்பிலான பேட்டரி காரை நன்கொடையாக வழங்கினார்..

பழனி கோயிலுக்கு அமெரிக்காவில் பணிபுரியும் முருக பக்தர் 7 லட்சம் மதிப்பிலான பேட்டரி காரை நன்கொடையாக வழங்கினார்.. திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நீதிமன்ற உத்தரவுபடி கிரி வீதிகளில் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கிரி வீதியில் உள்ள வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இதனால் கிரிவீதியில் பக்தர்கள் எளிதாக செல்வதற்கு இலவசமாக பேட்டரி வாகனங்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. மேலும் கோவிலுக்கு ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் மட்டும் […]

3வது முறை விண்வெளி பயணத்திற்கு தயார் ஆகும் சுனிதா வில்லியம்ஸ்! குவியும் வாழ்த்துக்கள்..

3வது முறை விண்வெளி பயணத்திற்கு தயார் ஆகும் சுனிதா வில்லியம்ஸ்! குவியும் வாழ்த்துக்கள்.. புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தனது 3வது விண்வெளி பயணத்திற்கு தயாராகி வருகிறார். நாசாவின் புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். இவர் நாசாவின் போயிங்கின் ஸ்டார்லைனர் திட்டத்தில் க்ரூ ப்ளைட் டெஸ்ட் மிஷனின் பைலட்டாக பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் இந்த ராக்கெட்டை புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் ஸ்பேஸ் போர்ஸ் ஸ்டேஷனில் உள்ள விண்வெளி ஏவுதளம் 41ல் இருந்து […]

ஆதரவற்ற முதியவரை மீட்டெடுத்து மறுவாழ்வு அளித்த பசியில்லா தமிழகம் தன்னார்வ அமைப்பு..

ஆதரவற்ற முதியவரை மீட்டெடுத்து மறுவாழ்வு அளித்த தென்காசி பசியில்லா தமிழகம் தன்னார்வ அமைப்பு.. தென்காசி மாவட்டத்தில் ஆதரவற்ற மக்களை மீட்டெடுத்து அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் பணிகளை பசியில்லா தமிழகம் அறக்கட்டளை தொடர்ந்து செய்து வருகிறது. அந்த வகையில் கடையநல்லூர் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் ஆதரவற்ற நிலையில் 60 வயதிற்கும் மேற்பட்ட ஒரு பெண் தங்கியிருப்பதாக கடையநல்லூர் காவல் ஆய்வாளர் மூலமாக பசியில்லா தமிழகத்திற்கு தகவல் வந்தது. உடனடியாக களத்திற்குச் சென்று அந்த முதியவரை மீட்டெடுத்து காவல் […]

தென்காசி வாக்கு எண்ணும் மையத்தில் காவல் துறைத் துணைத் தலைவர் ஆய்வு..

தென்காசி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் துறைத் துணைத் தலைவர் ஆய்வு.. தென்காசி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறைத் துணைத் தலைவர் இன்று ஆய்வு மேற்கொண்டார். தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் USP தனியார் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார் IPS ஆய்வினை மேற்கொண்டு காவல் […]

கீழக்கரையில் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம்  !

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில்  இளைஞர்கள் ஒன்றிணைந்து போதை புழக்கம் இல்லாத கீழக்கரையை உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கத்தோடு கீழை கிழக்குநகர் பொதுநல சங்கம் என்ற பெயரில் உருவாக்கியுள்ளனர். இதன் மூலம்  இன்று கீழக்கரை பட்டாணியப்பா பகுதியில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆரம்பித்து முக்கிய சாலைகளில் துண்டு பிரசுரங்கள் வழங்கி போதைப் பொருளினால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைத்தனர் .மேலும் பெற்றோர்கள் பிள்ளைகளை கவனமாக கண்காணிக்க வேண்டும் என்றும் 18 வயதிலிருந்து 25 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் […]

இன்று தமிழ்நாட்டின் 14 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. இதில், அதிகபட்சமாக ஈரோட்டில் 107.6°F வெப்பமானது பதிவாகி உள்ளது..

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை பல அறிவுரைகளை வழங்கி வருகிறது. மேலும் கடந்த சில நாட்களாகவே பல இடங்களில் வெயில் சதமடித்து வருகிறது. […]

இராஜபாளையத்தில் மருந்து கடையில் மருந்து வாங்க நின்றிருந்த 37 வயது ஆண் திடீரென கீழே விழுந்து உயிரிழந்த பரிதாபம்..

இராஜபாளையத்தில் மெடிக்கல் ஷாப்பில் மருந்து கடையில் மருந்து வாங்க நின்றிருந்த 37 வயது ஆண் கீழே விழுந்து உயிரிழப்பு.. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காந்தி சிலை அருகே உள்ள தனியார் மருந்து கடை (மெடிக்கல் ஷாப்பில் ) பூபால்பட்டி பகுதியைச் சேர்ந்த பொன் அருளப்பன் என்பவர் திருமணமாகி தனியாக வசித்து வந்த நிலையில் உடல் நலக்குறைவால் மருந்து கடையில் மருந்து வாங்குவதற்காக வரிசையில் நின்ற போது மயங்கி விழுந்ததில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்தார். உடனடியாக […]

சௌராஷ்டிர பாரம்பரிய மன்றம் சார்பில், மதுரை கீதா நடன கோபால நாயகி மந்திரில்,  தியாக பிரம்ம பஞ்சரத்ன கீர்த்தனை மற்றும் சித்ரா பூஜா நிகழ்ச்சி..

சௌராஷ்டிர பாரம்பரிய மன்றம் சார்பில், மதுரை கீதா நடன கோபால நாயகி மந்திரில்,  தியாக பிரம்ம பஞ்சரத்ன கீர்த்தனை மற்றும் சித்ரா பூஜா நிகழ்ச்சி.. சென்னையில் பயிற்சி பெற்று வரும் இளம் வழக்கறிஞர் பிரஷாந்த் கே.பிரகாஷ்  தொடங்கியுள்ள சௌராஷ்டிர பாரம்பரிய மன்றத்தின் புதிய முயற்சியாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இந்த மன்றத்தின் முக்கிய நோக்கமானது, சௌராஷ்டிர மொழியில் எழுதப்பட்ட பாடல்களை கர்நாடக இசை மூலம் மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும். கர்நாடக சங்கீத்தை மையமாக கொண்டு நடத்தப்படும் […]

இராமநாதபுரம் தோட்டக்கலைத்துறை தென்னை நாற்றுகள் விநியோகம் ! பொதுமக்கள் பயன்பெற வேண்டுகோள் !!

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி மற்றும் தேவிபட்டினத்தில் தோட்டக்கலைத்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு தென்னை நாற்று பண்ணைகளில் நெட்டை மற்றும் நெட்டை x குட்டை இரக தென்னை நாற்றுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர் மேலும் அவர்கள் கூறுகையில் உச்சிப்புளி வட்டாரம் உச்சிப்புளி தென்னை நூற்று பண்ணையில் 10000 எண்கள் நெட்டை இரக நாற்றுகளும் 8000 எண்கள் நெட்டை x குட்டை இரக நாற்றுகளும், இராமநாதபுரம் வட்டாரம் தேவிப்பட்டிணம் தென்னை நாற்று பண்ணையில் 3500 எண்கள் […]

ராமநாதபுரத்தில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம் அறிமுகம் !அடுத்த 3 ஆண்டுகளில் 41 ஆயிரம் வீடுகளுக்கு வழங்க திட்டம்..!!

இந்தியாவின் நகர எரிவாயு வினியோகத் தொழில்துறையில் முன்னணி நிறுவனமாக தனியார் ஏஜிகபி பிரதம்)நிறுவனம் அனைத்து மக்களுக்கும் குழாய் மூலம் இயற்கை எரிவாயுவை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தீவிரமாக பணியாற்றி வருகிறது. அந்த வகையில் பசுமையான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்கும் விதமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கான அதன் லட்சியத் திட்டங்களை இன்று வெளியிட்டது. ராமேஸ்வரம், பரமக்குடி மற்றும் ராமநாதபுரத்தில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் விரிவாக்க திட்டம் குறித்து இந்நிறுவனம் இன்று அறிவித்தது. இதன் மூலம் […]

வருமான வரி கணக்கீடு, குழப்பங்களை தீர்க்க தமிழக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்..

வருமான வரி கணக்கீடு, குழப்பங்களை தீர்க்க தமிழக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்.. IFHRMS மென்பொருளில் வருமான வரி பிடித்ததில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள் இது நிதித்துறை மற்றும் கருவூலக் கணக்கு துறையின் கவனத்திற்கு மாநில அமைப்பின் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. பழைய முறையில் வருமான வரி செலுத்துபவர்களுக்கு 20% தானாக ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அவர்களுடைய வீட்டு கடன், ஆயுள் காப்பீடு ,இதர சேமிப்புகள் கணக்கில் கொள்ளப்படாமல் உள்ளன . […]

இந்துஸ்தானிகளின்’ வலிக்கு மருந்தாக வேண்டிய பல லட்சம் கோடி பணம், ‘அதானி’களுக்காகச் செலவு செய்யப்பட்டது!- ராகுல் காந்தி கடும் விமர்சனம்..

நரேந்திர மோடி தனது பில்லியனர் நண்பர்களின் ரூ.1,60,00,00,00,00,000 அதாவது ரூ.16 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்தார்! இவ்வளவு பணத்துடன்: 16 கோடி இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள வேலை கிடைத்திருக்கும் 16 கோடி பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்குவதன் மூலம் அவர்களின் குடும்பங்களின் வாழ்க்கையை மாற்றியிருக்கலாம். 10 கோடி விவசாயக் குடும்பங்களின் கடன்களை தள்ளுபடி செய்வதன் மூலம் எண்ணற்ற தற்கொலைகளைத் தடுத்திருக்கலாம். 20 ஆண்டுகளுக்கு வெறும் 400 ரூபாய்க்கு நாடு முழுவதும் எரிவாயு […]

நரேந்திர மோடி போட்டியிட தேர்தல் ஆணையம் உடனடியாக தடை விதித்து அவரை தகுதியிழப்பு செய்து இந்திய இறையாண்மையை காத்திட வேண்டும்!-சு.ஆ.பொன்னுசாமி காட்டம்..

தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கீழ்கண்டவாறு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பல்வேறு மொழிகள், ஜாதி, மதங்கள் கொண்ட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நம் தேசத்தில் அவற்றின் பெயரால் வெறுப்புணர்வை விதைத்து, பிரிவினையை தூண்டி, அமைதியை சீர்குலைத்து அதில் குளிர்காய நினைக்கும் எவராயினும் அவர்கள் இந்திய அரசியலமைப்பு தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும், அந்த வகையில் 18வது மக்களவைக்கான பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் கடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும் பிரிவினைவாதத்தை […]

தமிழகத்தின் பல்வேறு ரயில் நிலையங்களில் புதிய வசதி!இனி வீட்டில் இருந்து இத எடுத்துட்டு போகாதீங்க! தெற்கு ரயில்வேயின் அசத்தல் ஏற்பாடு..

  தமிழகத்தின் பல்வேறு ரயில் நிலையங்களில் புதிய வசதி!இனி வீட்டில் இருந்து இத எடுத்துட்டு போகாதீங்க! தெற்கு ரயில்வேயின் அசத்தல் ஏற்பாடு.. தமிழகத்தின் பல்வேறு ரயில் நிலையங்களில் புதிய வசதியை தெற்கு ரயில்வே சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ரயிலில் பயணம் செய்வது என்றால் மக்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதுவும் இரவு நேரங்களில் ரயில் பயணம் என்பது அனைத்து மக்களும் விரும்பக் கூடியது. பொதுவாக ரயிலில் பயணம் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!