திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு !

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நகர திமுக சார்பில் நீர் மோர் பந்தலை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் பங்கேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர் தர்பூசணி வெள்ளரி மற்றும் பழரசம்,மோர் பானங்களை வழங்கினார்.இதில் முன்னாள் அமைச்சர் மு. தென்னவன் மாவட்ட கவுன்சிலர் நாகனி செந்தில்குமார் மாவட்ட துணைச் செயலாளர் ஜோன்ஸ் ரூசோ நகரச் செயலாளர் பெரி பாலமுருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இலங்கைக்கு கடத்த இருந்த 12  லட்சம் மதிப்பிலான வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் ஒருவர் கைது !

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை அடுத்த பெரியபட்டினம் கடல் பகுதியில் இருந்து வலி நிவாரணி மாத்திரைகள் இலங்கைக்கு கடத்துவதற்கு வாகனத்தில் கொண்டு செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் OCIU பிரிவினர் திருப்புல்லாணியை அடுத்த ஆனைகுடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியே வந்த TATA AC  வாகனத்தை சோதனை செய்தனர் சோதனையில்  11,88,000  லட்சம் மதிப்பிலான PREGAP Capusules எனும் வலி நிவாரணி மாத்திரைகள் இருப்பதை கண்டதும் அதனை பறிமுதல் செய்த போலீசார் வாகன ஓட்டுனரான  திருப்புல்லாணி […]

இன்று முதல் ஆரம்பம் அக்னி நட்சத்திரம்! கொளுத்த போகும் வெயிலும், “கீழை நியூஸ்” வழங்கும் ஆலோசனைகளும்..

தமிழ் பஞ்சாங்கம் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் (கத்தரி வெயில்) கணக்கிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு கத்தரி வெயில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இந்த கத்தரி வெயில் வருகிற 28-ம் தேதி வரை அதாவது, 25 நாட்கள் தொடர்ந்து வாட்டி வதைக்க காத்திருக்கிறது.பொதுவாக கத்தரி வெயில் காலத்தில்தான் வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு அப்படி இல்லை. கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்தே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதிலும் […]

பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் தேனியில் அதிரடி கைது! கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை! கோவை அழைத்து வரும்போது விபத்தில் சிக்கிய போலீஸ் வாகனம்..

பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் தேனியில் அதிரடி கைது! கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை! கோவை அழைத்து வரும்போது விபத்தில் சிக்கிய போலீஸ் வாகனம்.. யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சவுக்கு சங்கருக்கு என்று ரசிகர் பட்டாளேமே இருந்து வருகிறது. அரசியல் விமர்சகரான இவர் தொடர்ந்து ஆளுங்கட்சியான திமுகவை கடுமையாக தாக்கி பேசிவந்தார். கடந்த ஆண்டு நீதிபதியை விமர்சனம் செய்த காரணத்தால் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சுமார் 10 மாதத்திற்கு […]

மேட்டுப்பாளையம் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 32பேர் படுகாயம் ! சிறுவன் பலி !!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைச்சாலையில் குஞ்ச பண்ணை அருகே உதகைக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பிய சுற்றுலா வாகனம் கவிழ்ந்த விபத்துக்குள்ளானது . இந்த விபத்தில் முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தததாகவும் சிறுவன் பலியானதாகவும் தகவல் கிடைத்துள்ளது. சென்னை வியாசர்பாடி பெரம்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஒரு குழுவாக 16 பெரியவர்கள் 15 குழந்தைகள் மற்றும் என 31 பேர் கடந்த 30 ஆம் தேதி நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் புறப்பட்டு 1 ம் தேதி மேட்டுப்பாளையம் […]

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலைகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு ! 

இராமநாதபுரம் மாவட்ட சிறைச்சாலை, பரமக்குடி மகளிர் தனிச்சிறைச்சாலை மற்றும் முதுகுளத்தூர் சிறைச்சாலையில் கைதிகள் அறை, சமையல் கூடம், குளியல் அறை, குடிநீர், நூலகம், பார்வையாளர் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.குமரகுரு, மாவட்ட ஆட்சித்தலைவர் பா விஷ்ணு சந்திரன்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்திஷ் ஆகியோர் இன்று (03.052024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் சிறைகளிலுள்ள கைதிகளின் எண்ணிக்கை, குற்றங்களுக்கான காரணங்கள், பார்வையாளர்கள் அனுமதிக்கப்படும் நேரம், […]

கோவில் திருவிழா நடத்துவதை தடுத்து நிறுத்த கோரி கிராம மக்கள் மாவட்ட எஸ்பியிடம் கோரிக்கை !

இராமநாதபுரம் அருகே உள்ள தேர்போகி கிராமத்தில் 150 குடும்பங்கள் இருந்து வருவதாகவும் இந்த நிலையில் இவர்களுக்கு சொந்தமாக சுடலைமாடசாமி என்ற ஆலயம் ஒன்று அமைத்து காலங்காலமாக வழிபட்டு வந்துள்ளனர் . இந்த சூழ்நிலையில் அங்கு பூசாரியாக இருந்தவரை பணி நீக்கம் செய்ததை தொடர்ந்து அவர் கிராமத்திற்கு எதிராக தனியாக ஊருக்கு வெளியே இந்தக் கோயில் போன்று சிலைகள் அமைத்து கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்த சென்றதாகவும் அதனை கிராம மக்கள் தடுத்து நிறுத்தியதால் இருதரப்புக்கும் இடையே தகராறு […]

பழனியில் நேதாஜி நற்பணி மன்றம் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது! 15 நாட்களுக்கு பொதுமக்களுக்கு மோர் வழங்க திட்டம்..

பழனியில் நேதாஜி நற்பணி மன்றம் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது! 15 நாட்களுக்கு பொதுமக்களுக்கு மோர் வழங்க திட்டம்.. பழனி காந்தி மார்க்கெட்டில் நேதாஜி நற்பணி மன்றம் சார்பில் தண்ணீர் பந்தல் இன்று திறக்கப்பட்டது. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் வெப்பத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். காந்தி மார்க்கெட் வழியாக தினமும் வரக்கூடிய மக்களுக்கு மோர் வழங்கும் வகையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திறப்பு விழா நிகழ்ச்சியில் முன்னாள் நகர் மன்ற […]

கண்டித்த தாத்தாவை பூச்சி மருந்து கலந்த சிக்கன் கொடுத்து கொன்று நாடகமாடிய பேரன் கைது..

கண்டித்த தாத்தாவை பூச்சி மருந்து கலந்த சிக்கன் கொடுத்து கொன்று நாடகமாடிய பேரன் கைது.. நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு முதியவர் உயிரிழந்த |வழக்கில் திடீர் திருப்பமாக அவரது பேரன் பகவதி கைது. நடத்தையை கண்டித்ததால் தாய் மற்றும் தாத்தாவுக்கு பூச்சி மருந்து கலந்து சிக்கன் ரைஸ் தந்தது அம்பலம். சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் தாய், தாத்தாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக மாவட்ட ஆட்சியரிடம் பகவதி புகார் அளித்த நிலையில், போலீசார் விசாரணையில் உண்மை வெளியே வந்துள்ளது. தாய் […]

விருத்தாசலம் அருகே கொல்லம் விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பெண் சடலமாக மீட்பு..

விருத்தாசலம் அருகே கொல்லம் விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பெண் சடலமாக மீட்பு.. கஸ்தூரி தவறி விழுந்ததும் உறவினர்கள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்த முயற்சித்தபோது அபாய சங்கிலி வேலை செய்யாததால் 8 கி.மீ. தள்ளி ரயில் நின்ற இடத்தில் கர்ப்பிணியை தேடினர் சுமார் 10 நிமிடங்கள் ரயில் நிறுத்தப்பட்டு தவறி விழுந்த கஸ்தூரியை தேடிய நிலையில் அவர் கிடைக்கவில்லை. 2 மணி நேர தேடலுக்குப் பின் உளுந்தூர்பேட்டை அருகே கர்ப்பிணி […]

இணைய வழி சூதாட்டத்தை ஊக்குவித்தால் ஒரு ஆண்டு சிறை: தமிழக அரசு கடும் எச்சரிக்கை..

இணைய வழி சூதாட்டத்தை ஊக்குவித்தால் ஒரு ஆண்டு சிறை: தமிழக அரசு கடும் எச்சரிக்கை.. இணையவழி சூதாட்டத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் அல்லது துாண்டும் நபர்கள், நிறுவனங்களுக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை அல்லது 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இணைய வழி சூதாட்டத்தால், ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு: இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தயம் போன்றவற்றை விளம்பரப்படுத்தினால் கடும் […]

அருப்புக்கோட்டையில், சுட்டரிக்கும் வெயிலில் செய்தி சேகரிக்க சென்ற சன் டிவி செய்தியாளர் உயிரிழப்பு: “கீழை நியூஸ்” மற்றும் “சத்திய பாதை” குழுமத்தின் ஆசிரியர் இரங்கல்.

அருப்புக்கோட்டையில், சுட்டரிக்கும் வெயிலில் செய்தி சேகரிக்க சென்ற சன் டிவி செய்தியாளர் உயிரிழப்பு: “கீழை நியூஸ்” மற்றும் “சத்திய பாதை” குழுமத்தின் ஆசிரியர் இரங்கல். இது சம்பந்தமாக கீழை நியூஸ் மற்றும் சத்திய பாதை குழுமத்தின் ஆசிரியர் சையது ஆப்தீன் கீழ்கண்டவாறு இரங்கல் செய்தி தெரிவித்துள்ளார். அருப்புக்கோட்டை சன் டிவி செய்தியாளர் ராஜா சங்கர் இன்று மே 2 காரியாபட்டி அருகே ஆவியூர் பகுதியில் சுட்டெரிக்கும் கடும் வெயிலில் சென்று செய்தி சேகரித்துவிட்டு உடல் சோர்வடைந்த நிலையில், […]

மதுரை விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு 192 பயணிகளுடன் புறப்பட்ட விமானம்! சுமார் நூறு பயணிகளின் உடைமைகளை விட்டுச் சென்றது..

மதுரை விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு 192 பயணிகளுடன் புறப்பட்ட விமானம்! சுமார் நூறு பயணிகளின் உடைமைகளை விட்டுச் சென்றது.. துபாய் செல்லும் விமானத்தின் மொத்த எடை அளவு அதிகமானதால் பயணிகளின உடமைகள் நாளை கொண்டு செல்லப்படும் என  விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். மதுரை விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு செல்ல தினமும் ஸ்பைஸ்ஜெட் விமான சேவை செயல்பட்டு வருகிறது.  துபாயிலிருந்து 188 பயணிகளுடன் புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் இன்று பகல் 12:30 மணியளவில் மதுரை விமான […]

திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் வரக்கூடிய 5 ம் தேதி, வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு தேடியும்,  மழை வேண்டியும்  3 இடங்களில் சிறப்பு தொழுகை..

திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் வரக்கூடிய 5 ம் தேதி, வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு தேடியும்,  மழை வேண்டியும்  3 இடங்களில் சிறப்பு தொழுகை.. தமிழ்நாட்டில் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும். ஆனால், இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே அதாவது கடந்த 3 மாதங்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வெப்ப அலை வீசிக்கொண்டே இருக்கிறது. சென்ற ஆண்டுகளில் சில நாட்கள் மழை பெய்து வெப்பத்தை தணித்து […]

107 டிகிரி கொளுத்திய வெயில்! சிறிது நேரத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழை! மகிழ்ச்சியில் வேலூர் மக்கள்..

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுவட்டாரத்தில் ஆலங்கட்டியுடன் பெய்த கோடை மழை பொதுமக்கள் மகிழ்ச்சி. வேலூர் மாவட்டத்தில் இன்று 107 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவான நிலையில் பேரணாம்பட்டு, குடியாத்தம் சுற்றுவட்டாரங்களில் ஆலங்கட்டியுடன் மழை பெய்து சற்று வெப்பம் தணிந்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ்; முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் வலியுறுத்தல்..

கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ்; முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் வலியுறுத்தல்.. கனிமவளங்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என அம்பை தொகுதி முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் வலியுறுத்தியுள்ளார். இது பற்றிய அவரது அறிக்கையில், ஊட்டி கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களுக்கு வாகனங்களை கட்டுப்படுத்தவும் போக்குவரத்தை முறைப்படுத்தவும் இன்று முதல் தமிழக அரசு இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்தி இருக்கிறது. இது வரவேற்கத்தக்கது. அதேபோல் தமிழகத்தில் இருந்து தென்காசி, நெல்லை, குமரி, கோவை […]

தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வரக்கூடிய நிலையில் இன்று   22 மாவட்டங்களில் 100°F தாண்டி வெப்பம் பதிவாகி உள்ளது..

தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வரக்கூடிய நிலையில் இன்று   22 மாவட்டங்களில் 100°F தாண்டி வெப்பம் பதிவாகி உள்ளது. நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு தமிழ்நாடு உள்பட நாட்டின் பல இடங்களில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில், இந்தியாவில் இன்றைய தினம் பீகார், மேற்குவங்கம் மற்றும் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஜார்க்கண்ட், ஒடிசா, தெலங்கானா, கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமாவில் […]

அண்டார்டிகாவில் தங்கத்துகள்களை வெளியேற்றும் எரிமலை: தினசரி ரூ.5 லட்சம் தங்கத்துகள்கள் வெளியேற்றம்..

அண்டார்டிகாவில் தங்கத்துகள்களை வெளியேற்றும் எரிமலை: தினசரி ரூ.5 லட்சம் தங்கத்துகள்கள் வெளியேற்றம்.. அண்டார்டிகா: எரிமலைகள் என்றாலே லாவா குழம்புகள் தான் வெளியேறும். ஆனால் எரிமலையில் இருந்து தங்க துகள்கள் வெளியேறுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. முழுக்க பனி பாறைகளால் சூழப்பட்டுள்ள கண்டம் என்றாலும், அண்டார்டிகாவிலும் நெருப்பை கக்கும் 138 எரிமலைகள் இருக்கின்றன. இவற்றுள் 8 எரிமலைகள் அவ்வப்போது லாவா குழம்பை வெளியேற்றி உயிர்ப்புடன் இருப்பவை. அதில் ஒன்றுதான் ரோஸ் தீவில் உள்ள மவுண்ட் எரிமலை. 1972ம் […]

10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு..

10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு.. தமிழ்நாட்டில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடந்தது. இதில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் பல்வேறு பாடங்களில் மாணவ, மாணவிகள் தேர்வுக்கு வரவில்லை. அதன்படி மாநிலம் முழுவதும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை. இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து […]

வருவாய் ஈட்டும் முதல் பத்து ரயில் நிலையங்களில் தெற்கு ரயில்வே மண்டலத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது!!

உலகில் மிகப்பெரிய ரயில் வழித்தடங்களை கொண்டுள்ள இந்தியாவில், அதிக வருவாய் ஈட்டும் முதல் பத்து ரயில் நிலையங்களில் தெற்கு ரயில்வே மண்டலத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. நாடு முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளன. பயணிகள் ரயில்கள் மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணங்களும், சரக்கு ரயில்கள் மூலம் கோடிக்கணக்கான சரக்குகளும் அனுப்பப்பட்டு வருமானங்கள் ஈட்டப்பட்டு வருகின்றன. நாட்டில் இருக்கும் துறைகளில் அதிக வருமானம் அளிக்கும் துறையாக ரயில்வே இருந்து வருவதால் ரயில்வேக்கு என […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!