கொடைக்கானல்: மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் மலர்க்கண்காட்சிக்கும் கோடை விழாவுக்கும் ஏற்பாடு செய்யப்படும். அவ்வகையில் இந்த மாதம் (மே) 17ஆம் தேதி கொடைக்கானலின் 61வது மலர்க் கண்காட்சியும் கோடை விழாவும் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் தொடங்கி தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ள இந்த கோடைத் திருவிழாவில் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் வகையில் விதவிதமான விளையாட்டுப் போட்டிகளும் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. திண்டுக்கல் மாவட்ட […]
Category: மாவட்ட செய்திகள்
பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!- தமிழ்நாடு அரசு அறிவிப்பு..
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 6 ஆம் தேதியும், 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 10 ஆம் தேதியும் வெளியிடப்பட்டது. இதில் […]
மூடப்பட்ட மணல் குவாரிகள் மூடப்பட்டவையாகவே இருக்க வேண்டும். அதை மீண்டும் திறக்க அரசு துடிப்பது இயற்கை வளங்களை சிதைக்கும் செயலாகும்!- அன்புமணி ராமதாஸ் அறிக்கை..
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை சோதனை உள்ளிட்ட பல காரணங்களால் மூடப்பட்ட 26 ஆற்று மணல் குவாரிகளை மீண்டும் திறக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இயற்கை வளங்களையும், நிலத்தடி நீர்மட்டத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்து வரும் நிலையில், அந்த நோக்கங்களை சீர்குலைக்கும் வகையில் மணல் குவாரிகளை மீண்டும் திறக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும். தமிழ்நாட்டில் செயல்பட்டு […]
நெல்லையில் இரவு நேரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை; போலீசார் விசாரணை..
நெல்லையில் இரவு நேரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை; போலீசார் விசாரணை.. நெல்லை பாளையங்கோட்டை சாந்திநகர் மணிகூண்டு அருகே இரவு நேரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாநகர மணிக்கூண்டு அருகே மே.17 இரவு இசக்கிமுத்து என்ற நபர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாளையங்கோட்டை போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முதல் கட்ட விசாரணையில், அவர் தூத்துக்குடி […]
100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா.? யாரும் நம்பாதீங்க அடித்து கூறிய மின்சார வாரியம்..
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சமூக வலைத்தளம் மற்றும் காட்சி ஊடகத்தில் வெளிவரும் 100 யூனிட் இலவச மின்சாரம் குறித்த செய்தி உண்மை நிலைக்கு மாறானது. தமிழ்நாடு மின்வாரியம் வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு எதிராக மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி வரும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து ஒருங்கிணைக்கும் பணி மேற்கொள்ளபடுகிறது. இதேபோல், வீட்டுப் பயன்பாட்டுக்கென […]
காவல்துறை மூலம் அடக்குமுறைகளை ஏவி மண்ணின் மக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயல்வது, தி.மு.க. அரசின் எதேச்சதிகார மனப்பான்மையையே வெளிக்காட்டுகிறது!- சீமான் காட்டமான அறிக்கை..
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- ஆவடி தொகுதிக்குட்பட்ட திருவேற்காட்டில் கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களின் வீடுகளை இடித்து, தி.மு.க. அரசு வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயல்வது வன்மையான கண்டனத்திற்குரியது. மூன்று தலைமுறைகளாக வீடுகள் கட்டி வாழ்ந்து வரும் மக்களை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்கிரமிப்பாளர்களெனக்கூறி அகற்ற முற்படுவது கொடுங்கோன்மையாகும். திருவேற்காட்டில் கூவம் ஆற்றுக்கு அருகில் பெருமாள் கோவில் தெரு பகுதியில் மூன்று தலைமுறைகளை கடந்து 300 […]
பழநியில் அரசு உதவித்தொகை வழங்க மறுக்கும் வங்கியில் மாற்றுத்திறனாளி பெண்ணை ஒப்படைக்கும் போராட்டம்..
பழநியில் அரசு உதவித்தொகை வழங்க மறுக்கும் வங்கியில் மாற்றுத்திறனாளி பெண்ணை ஒப்படைக்கும் போராட்டம்.. திண்டுக்கல் மாவட்டம் பழைய ஆயக்குடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் ,மனைவி புஷ்பா இவர்களுடைய மகள் ராமலட்சுமி (25) இவர் கடுமையான மன வளர்ச்சி குன்றிய நிலையில் இருந்து வருகிறார். இவருக்கு தமிழக அரசின் சார்பில் மாற்றத்திறனாளிகள் திட்டத்தின் சார்பில் மாதம் 2000 ரூபாய் வங்கி மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ராமலட்சுமி என்ற மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிக்கு ஆயக்குடி கிளையில் ஆதார் எண் […]
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பள்ளிகளில் கல்வித்துறை இயக்குனர் திடீர் ஆய்வு..
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பள்ளிகளில் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் திடீர் ஆய்வு.. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பள்ளிகளில் இன்று 17-05-2024 வெள்ளியன்று தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக, மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல் நிலைப் பள்ளிக்கு , தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர். முனைவர். எஸ்.கண்ணப்பன் அவர்களும், பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் பிரிவு) த. ராஜேந்திரன் அவர்களும், கல்வி சார்ந்த பல்வேறு பணிகளை ஆய்வு செய்தனர். . […]
இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் கல்லூரியில் வேளாண்மை கல்வி அனுபவ பணி முகாம்..
இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் கல்லூரியில் வேளாண்மை கல்வி அனுபவ பணி முகாம்; இயற்கை விவசாயம் குறித்து விளக்கம்.. தென்காசி மாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் வாசுதேவநல்லூர் எஸ். தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி சார்பில் மாணவ ஆசிரியர்களிடையே ஊரக வேளாண்மை கல்வி அனுபவ பணி முகாம் நடந்தது. இதில் இயற்கை விவசாயம் குறித்தும், விவசாய வளர்ச்சி குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார். முதல்வர் பொ. […]
கோனேரி கிராமத்தில் நவீன பருத்தி எடுக்கும் கருவி ! மதுரை வேளாண் கல்லூரி மாணவி விவசாயிகளுக்கு அறிமுகம் !!
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோனேரி கிராமத்தில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப உதவியுடன் நவீன முறையில் பருத்தி எடுக்கும் கருவி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை இறுதியாண்டு படிக்கும் மாணவி வீ. தாமரைச்செல்வி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நவீன பருத்தி எடுக்கும் கருவியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும் இதனைப் பயன்படுத்துவதனால் வேலையாட்கள் கூலி, போக்குவரத்துக் கூலி முதலான செலவுகள் குறைந்து, […]
செவிலியர் தின விழாவில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு..
மதுரை தோப்பூரில் அமைந்துள்ள அரசு காசநோய் மருத்துவமனையில் செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் செவிலியர் கண்காணிப்பாளர் கனகவேலம்மாள் விழாவிற்கு தலைமை வகித்தார். ஜான்சிராணி, பாத்திமா ஸ்டெல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்டெல்லா பிரசில்லா தனலட்சுமி ஆகியோர் வரவேற்றனர். விழாவில் செவிலியர் கோமதி சுற்றுச்சூழல் மேம்படுத்தவும் மருத்துவமனை பசுமை வளாகத்தில் மரம் நடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பச்சை மற்றும் நீல நிறம் நோயாளிகளுக்கு தன்னம்பிக்கையும் உற்சாகத்தை வழங்கி நோய்கள் குணமாகும். அதே போல் நமது சுற்றுச்சூழல் […]
மகப்பேறு காலத்தில் மரணம் அடைந்த மருத்துவர் அஞ்சுதாவின் குடும்பத்திற்கு நிதி உதவி !
. புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியைச் சேர்ந்த மருத்துவர் அஞ்சுதா கடந்த 30.04.2024 அன்று மகப்பேறு காலத்தில் துயர மரணம் அடைந்தார். அதனை தொடர்ந்து இன்று அவரது இல்லத்திற்கு சென்று தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக திரட்டப்பட்ட ரூபாய் 7,25,000/- ஏழு இலடத்து இருபத்தி ஐந்தாயிரம் காசோலையை மருத்துவர் அஞ்சுதாவின் தாயார் தமிழரசி, கணவர் கார்த்திக் மற்றும் அவர்களுடைய குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் புதுக்கோட்டை, அறந்தாங்கி சுகாதார மாவட்டம் […]
சோழவந்தான் அருகே குண்டும் குழியுமான சாலை; பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி..
சோழவந்தான் அருகே குண்டும் குழியுமான சாலை; பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி.. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தச்சம்பத்து முதல் திருவேடகம் வரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டிய பள்ளத்தை சரிவர மூடாததால் தற்போது பெய்து வரும் மழைக்கு சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக தச்சம்பத்து திருவேடகம் பகுதியில் அதிக அளவில் பள்ளங்கள் இருப்பதால் அடிக்கடி விபத்து […]
குற்றாலம் மற்றும் இதர சுற்றுலா பகுதிகளில் குளிக்க தடை; மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் அறிவிப்பு..
கனமழை எச்சரிக்கை எதிரொலி: குற்றாலம் மற்றும் இதர சுற்றுலா பகுதிகளில் குளிக்க தடை; மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.. தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவி மற்றும் இதர சுற்றுலா பகுதிகளில் மறு உத்தரவு வரும் வரை குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என தென்காசி மாவட்ட கலெக்டர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், சென்னை வானிலை மையம் தென்காசி மாவட்டத்திற்கு 17.05.2024, 18.05.2024, 19.04.2024, 20.05.2024 மற்றும் 21.05.2024 ஆகிய தினங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் (Orange […]
மேட்டுப்பாளையம் பள்ளிகளில் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் திடீர் ஆய்வு !
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பள்ளிகளில் இன்று 17-05-2024 வெள்ளியன்று தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக, மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல் நிலைப் பள்ளிக்கு , தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர். முனைவர். எஸ்.கண்ணப்பன் அவர்களும், பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் பிரிவு) த. ராஜேந்திரன் அவர்களும், கல்வி சார்ந்த பல்வேறு பணிகளை ஆய்வு செய்தனர் . அப்போது மேல்நிலை வகுப்புக்கான சேர்க்கையை முனைவர் எஸ்.கண்ணப்பன் அவர்கள் துவக்கி வைத்ததுடன் […]
குற்றால வெள்ளப் பெருக்கில் சிக்கிக் கொண்ட நெல்லை சிறுவன் சடலமாக மீட்பு..
குற்றால வெள்ளப் பெருக்கில் சிக்கிக் கொண்ட நெல்லை சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சோகம்.. பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட நெல்லை சிறுவன் அஸ்வினை தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் […]
பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு..
பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு.. பழைய குற்றால அருவியில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக திருநெல்வேலியை சேர்ந்த அஸ்வின் என்ற 16 வயது சிறுவன் அடித்துச் செல்லப்பட்டார். […]
மக்களே கவனம்! தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் மழைக்கான மஞ்சள் அலர்ட்..
மக்களே கவனம் தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் மழைக்கான மஞ்சள் அலர்ட்.. கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, தேனி மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு. விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு. புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று மழை பெய்யும். திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட்டில் இன்று மழைக்கு வாய்ப்பு என தகவல். மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் 64.5 மி.மீ முதல் 115. […]
திருவாடானை அருகே வழக்கு பதியாமல் இருக்க லஞ்சம் வாங்கிய சிறப்பு சார்பு ஆய்வாளர் கைது !
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா பெருமாநேந்தல் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கும் அவரது உறவினர்கள் சிலருடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு சம்பந்தமாக இருதரப்பினரும் கொடுத்த புகார்களுக்கு தொண்டி காவல் நிலையத்தில் வழக்கு மற்றும் எதிர் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இதே சம்பவம் தொடர்பாக வேல்முருகன் மீது மற்றொரு புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. மேற்படி வழக்கில் புகார் தாரரை ஜாமீனில் விடுவித்ததற்கும் மற்றொரு புகாருக்கு வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதற்கும் தொண்டி காவல் நிலையத்தில் […]
“ஞானவாபி மசூதி” இருக்கும் இடத்தில் கோயிலை கட்டுவோம்:-அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்ச்சை பேச்சு..
நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை நாடு முழுவதும் 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், மீதமிருக்கும் தொகுதிகளுக்கு அனைத்து கட்சியினரும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் தேர்தல் விதிகளை மீறி பிரதமர் மோடி வெறுப்பு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக மேற்கொள்ளும் பிரசாரத்தில் தேர்தல் விதிகளை மீறி மதம் சார்ந்து பேச்சுகள் பேசப்பட்டு வருகிறது. மேலும் இந்து – முஸ்லீம் […]
You must be logged in to post a comment.