குணசித்திர நடிகை தண்டட்டி பெருமாயி காலமானார்

இயக்குனர் பாரதிராஜா வின் படங்கள், விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்த உசிலம்பட்டியைச் சேர்ந்த மூதாட்டி பெருமாயி மாரடைப்பால் உயிரிழந்தார்., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அன்னம்பாரிபட்டியைச் சேர்ந்தவர் மூதாட்டி பெருமாயி., 73 வயதான இவர் இயக்குனர் பாரதிராஜாவின் தெற்கத்தி பொண்ணு சீரியல் மூலம் பிரபலமாகி அந்த சீரியல் துவங்கி பாரதிராஜாவின் பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார்., தண்டட்டியுடன் காணப்படும் இந்த மூதாட்டி,நடிகர் சிவகார்த்திகேயனின் மனம் கொத்தி பறவை, விஜய் ன் வில்லு உள்ளிட்ட படங்கள் […]

நெல்லையில் கடும் வெயில் பதிவாகும்..

தென் மாவட்டங்களில் இன்று (04.05.2025) கடுமையான வெயில் சுட்டெரிக்கும் எனவும், மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய அறிக்கையில், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும். கடந்த சில நாட்களாக வெப்பநிலை குறைவாக பதிவாகி வந்த நிலையில் இன்று கடுமையான வெயில் கொளுத்தும். தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் அதிக புழுக்கம் காணப்படும். எனவே இன்று நெல்லை, தூத்துக்குடி மக்கள் வெளியே செல்வதை […]

சிறந்த கல்வி அளித்து வரும் டிரஸ்ட் இந்தியா பள்ளி..

தென்காசி மாவட்டம் கடையம்- பாவூர்சத்திரம் அருகே அமைந்துள்ளது வெங்காடம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில், சமூக நல ஆர்வலர் பூ.திருமாறன் சிறந்த கல்விச் சேவை அளிப்பதை நோக்கமாக கொண்டு “டிரஸ்ட்-இந்தியா” எனும் பள்ளியை நிறுவினார். கடந்த 14 ஆண்டுகளாக கல்வி சேவை வழங்கி வரும் இப்பள்ளியின் முதல்வராக சாந்தி திருமாறன் இருந்து வருகிறார். “எட்டு வருடங்கள் உங்கள் குழந்தை எங்கள் பள்ளியில் படிக்கட்டும் – அதன் மாற்றம், ஏற்றம், வளர்ச்சி, முன்னேற்றம் உங்களுக்குப் புரியும்” என்கிறார் இப்பள்ளி நிறுவனர் […]

பாலமேட்டில் பொதுமக்கள் கூடும் வாரச்சந்தை அருகே ஆபத்தான நிலையில் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதால் விபத்து ஏற்படும் அபாயம்

மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர் இந்த பேரூராட்சியில் வாரம் தோறும் சனிக்கிழமை வாரச்சந்தை பாலமேடு பேரூராட்சி அருகே பேருந்து நிலைய பகுதிகளில் நடைபெறுவது வழக்கம் இந்த நிலையில் பாலமேடு பேரூராட்சி சார்பில் 5 லட்சம்லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது இந்த பணியானது சுமார் 10,000 க்குமமேற்பட்ட பொதுமக்கள் கூடும் பாலமேடு வாரச்சந்தை நடைபெறும் மையப் பகுதியில் கட்டுமான […]

சோழவந்தான் – பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். ஆர் பி உதயகுமார் சிறப்புரை

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் இரும்பாடி கருப்பட்டி நாச்சிகுளம் ஆகிய ஊராட்சியில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா மாணிக்கம் அம்மா பேரவை துரை தன்ராஜ் வெற்றிவேல் வக்கீல் திருப்பதி மகளிர் அணி லட்சுமி […]

சோழவந்தான் ரயில் நிலையத்தில் பெட்ரோல் ஏற்றி வந்த ரயிலில் டேங்கில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டதால் அரை மணி நேரம் ரயில்கள் தாமதமாக புறப்பட்டது

மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில் நிலையத்தில் இன்று காலை 8 மணி அளவில் பெட்ரோல் ஏற்றி வந்த ரயிலில் டேங்கில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டதால் சோழவந்தான் வழியாக செல்லும் ரயில்கள் அரை மணி நேரம் தாமதமாக சென்றதால்ரயில் பயணிகள் பாதிக்கப்பட்டனர் இன்று காலை 8 மணி அளவில் சோழவந்தான் ரயில் நிலையம் வழியாக பெட்ரோல் ஏற்றி வந்த சரக்கு ரயில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டதால் சோழவந்தான் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டது உடனடியாக சோழவந்தான் தீயணைப்புத் […]

கீழமாத்தூர் ஆதிதிராவிடர் காலனியில் கழிவுநீர் செல்ல வழி இல்லாததால் கோப்பைகளில் அள்ளி கால்வாயில் ஊற்றும் அவலம் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரை மாவட்டம் கீழமாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டு ஆதிதிராவிடர் காலனியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த பகுதியில் கழிவு நீர் கால்வாய் இல்லாததால் பகுதி பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் இது குறித்து கிராம சபை கூட்டங்களில் பலமுறை கோரிக்கை வைத்தும் ஊராட்சி நிர்வாகம் மற்றும் யூனியன் அதிகாரிகள் தரப்பில் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை இந்த நிலையில் கடந்த மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற […]

மே தின விழா..

நெல்லையில் மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம் சார்பாக பாளை மார்க்கெட் பகுதியில் ஆட்டோ ஒட்டுனர்களுக்கு இனிப்பு வழங்கி மே தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு பாளை பகுதி மஜக செயலாளர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் அலிஃப் A..பிலால் ராஜா அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். தொடர்ந்து மே தின உறுதி மொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க பாளை மண்டல செயலாளர் சிதம்பரம் செய்திருந்தார். செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

சோழவந்தானில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படும் பேரூராட்சி மூலம் அறிவிப்பு

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை மூலம் 2.5.25 மற்றும் 3.5.25 ஆகிய இரண்டு நாட்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூடும் இடங்களில் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பாக வர்த்தக நிறுவனங்கள் தனியார் அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் ஆகியோர் தங்கள் நிறுவனங்களின் முன்பு ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருந்தால் தாங்களாகவே அவற்றை அகற்றிக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் நெடுஞ்சாலை துறை மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் […]

கிராம சபை கூட்டத்தில் அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்.கிராம சபை கூட்டத்தை பாதியிலேயே முடித்துச் சென்ற அதிகாரிகளால் பரபரப்பு

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமிழக முழுவதும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது மதுரை மாவட்டம் கீழமாத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கீழ மாத்தூர் ஊராட்சியின் 5 வது வார்டு ஆதிதிராவிடப் பொதுமக்கள் தங்கள் பகுதியில் கழிவுநீர் கால்வாய் செல்லாமல் தேங்கி இருப்பதாகவும் மேலும் 200 குடும்பங்கள் வசிக்கும் ஆதிதிராவிட பொதுமக்களுக்கு இதுவரை கழிப்பறை வசதி கூட கட்டித்தரவல்லை எனக்கூறி திருப்பரங்குன்றம் யூனியன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயன் அவர்களை முற்றுகையிட்டு […]

சோழவந்தானில் சர்வதேச உரிமைகள் கழகம் மற்றும் மனித உரிமைகள் கழகம் சார்பில்உழைப்பாளர் தின கொண்டாட்டம்.

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சோழவந்தான் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு சோழவந்தான் தொகுதி மாவட்டத் தலைவர் தவமணி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் பரத் கவுசிகன், மாவட்ட செயலாளர் இளவரசன் துணைச் செயலாளர்கள் குருசாமி, பாபு ராஜ், காசி மாயன், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் சூரிய பிரகாஷ் முன்னிலை வகித்தனர் மதுரை மண்டல மாநிலத் துணை பொதுச் செயலாளர் செந்தில்குமார் தொழிலாளர்களுக்கு மரியாதை செய்து […]

சோழவந்தான் திரௌபதை அம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

சோழவந்தான் திரவுபதிஅம்மன் கோவில் பூக்குழி திருவிழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு மேளதாளத்துடன் வடக்கு ரத வீதி வெள்ளாளர் உறவின் முறை சங்க தலைவர் சுகுமாரன் தலைமையில், நிர்வாகிகள் முன்னிலையில் பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். திரௌபதை அம்மன் அர்ச்சுனன் அலங்கரித்து கோவில் வளாகத்தில் சுற்றி வந்தனர்.திருமண மேடையில் வந்து திருமண கோலத்தில்அலங்காரம் செய்தனர். இதை தொடர்ந்துபிரசாந்த் சர்மா தலைமையில் திருக்கல்யாண யாகபூஜை நடந்தது. பரம்பரையை […]

சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி மூலநாத சாமி கோவில் சித்திரை திருவிழா முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் அமைந்துள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மன் உடனுறை திரு மூலநாத சுவாமி திருக்கோவில் சித்திரை திருவிழா முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது கொடி மரத்திற்கு பால் பன்னீர் சந்தனம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து சாமி திருவீதி உலா வரும் சப்பர தேருக்கும் அபிஷேகம் நடைபெற்றது விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகின்ற 8ம் தேதியும் திருத்தேர் ஊர்வலம் 9ஆம் தேதியும் அதனைத் தொடர்ந்து 10ஆம் தேதி தீர்த்தவாரி […]

மையோனைஸ் விற்பனைக்கு தடை; கலெக்டர் கமல் கிஷோர் தகவல்..

தென்காசி மாவட்டத்தில் முட்டையில் இருந்து தயார் செய்யப்படும் மையோனைஸ் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் மாசுபடுவதால், மையோனைஸை தயாரிக்க மற்றும் விற்பனை செய்ய தமிழக அரசு ஓராண்டு தடை விதித்துள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு அரசிதழ் எண்: 161, ஏப்ரல் 8, 2025 இன் படி, முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ்க்கு ஓராண்டு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அரேபிய வகை உணவுகளான தந்தூரி சிக்கன், பார்பிகியூ ஷவர்மா போன்றவை […]

உசிலம்பட்டி டி இ எல் சி ஆசிரியர் பயிற்சி பள்ளி முன்னாள் தாளாளர் மதுரம் நினைவு நாள் அனுசரிப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் சாலையில் உள்ள டி இ எல் சி ஆலயம் வளாகத்தில் உள்ள வி மதுரம் நினைவிடத்தில் 4ம் ஆண்டு நினைவேந்தல் சர்வ கட்சியினர் கலந்து கண்டு அனுசரிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி டி இ எல் சி ஆலயம் வளாகத்தில் உள்ள டி இ எல் சி ஆசிரியர் பயிற்சி முன்னாள் தாளாளர் வி மதுரம் நாலாம் ஆண்டு நினைவேந்தல் விழாவில் குடும்பத்தினர் மனைவி ரதி எம். வசந்த ராஜன் பிரவீனா […]

குறைதீர் கூட்டத்தில் காதொலி கருவிகள் வழங்கல்..

தென்காசியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.2,29,500 மதிப்பிலான காதொலி கருவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 28.04.2025 திங்கள் கிழமை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் […]

தாராப்பட்டியில் ஆபத்தான நிலையில் கழிவு நீர் கால்வாய் கான்கிரீட். சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் கொடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட தாராப்பட்டி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர் இந்த கிராமத்தில் உள்ள எட்டாவது வார்டு பகுதியான நடுத்தெருவில்கழிவுநீர் செல்ல கால்வாய் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கழிவு நீர் கால்வாய் கட்டியவர்கள் காங்கிரட் பூச்சுகள் மற்றும் கம்பிகளை அப்படியே கால்வாய் மீது போட்டுவிட்டு சென்றதால் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர் மேலும் கழிவுநீர் கால்வாய் கான்கிரீட்டுகளை […]

சோழவந்தான் அருள்மிகு திரௌபதை அம்மன் கோவில் பூக்குழி விழாவிற்கான கொடியேற்றம்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் அமைந்துள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழாகொடியேற்றம் இன்று இரவு நடைபெறுகிறது அதற்காக கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு முழுவதும் மின்னொளி வெளிச்சத்தில் திரௌபதி அம்மன் காட்சியளித்தார் கோவில் பரம்பரை அறங்காவலர்கள் அர்ச்சுனன்,திருப்பதி, ஜவஹர்லால், குப்புசாமி மற்றும் கோவிலைச் சேர்ந்தவர்கள் கொடியேற்றத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.கொடியேற்ற நிகழ்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்பதால் போக்குவரத்து துறை அதிகாரிகள் இன்று இரவு பேருந்துகளை மாற்று வழியில் இயக்க நடவடிக்கைகள் […]

அலங்காநல்லூர்மாற்றுத்திறனாளிகள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருப்பு.பள்ளி நிர்வாகம் திடீரென பள்ளியின் சாவியை தர மறுத்ததால் பூட்டை உடைத்து முகாமை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு உள்ளிட்ட பகுதிகளுக்கான மாற்றுத் திறனாளிகள் புதிய அட்டை பதிவு மாற்றுத்திறனாளிகளுக்காக நிவாரண உதவி தொகைக்கான மனுக்கள் பெறுதல் உள்ளிட்ட பணிகளுக்கான முகாம் இன்று காலை 10 மணிக்கு அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது இதற்காக காலை 8 மணி முதல் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு திரண்டனர் முகாமை […]

தென்காசி மாவட்டத்தில் அதிகரித்து வரும் கனிம வள கனரக வாகனங்கள்..

தென்காசி மாவட்டத்தில் வெளி மாநில கனிம வள லாரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதாகவும், இதற்கு விரைவில் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் எனவும் இயற்கை வள பாதுகாப்பு சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து இயற்கை வள பாதுகாப்பு சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி மாவட்டத்தில் வெளி மாநில கனிம வள லாரிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. கனிம வள லாரிகளில் கொள்ளளவை அதிகரித்து ஓவர் லோடு குவித்து […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!