தென்காசி மாவட்ட காவல் துறை; செய்தித் தொகுப்பு..

தென்காசி மாவட்ட காவல் செய்திகள்.. லேப்டாப் மற்றும் ஆம்ப்ளிபையர் திருடிய மூன்று நபர்கள் கைது.. ஆய்க்குடி குதியில் அமைந்துள்ள இந்திய மருத்துவ சங்கத்தின் காவலாளி வெளியே சென்றிருந்த நேரத்தில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கலையரங்கதில் இருந்த லேப்டாப் மற்றும் ஆம்ப்ளிபையர் ஆகியவற்றை திருடி சென்றதாக அதன் மேலாளர் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன் விசாரணை மேற்கொண்டு மேற்படி திருட்டில் ஈடுபட்ட சிந்தாமணியை சேர்ந்த சேகர் என்பவரின் மகன் சுரேஷ் (35), […]

நெல்லையில் மகளிர் தின போட்டிகள்; காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி தகவல்..

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மகளிர் தின சிறப்பு போட்டிகள்; காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி தகவல்.. நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மகளிர் தின சிறப்பு போட்டிகள் நடைபெற உள்ளதாக காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தெரிவித்துள்ளார். இது பற்றிய அருங்காட்சியக செய்திக் குறிப்பில், அரசு அருங்காட்சியகம், திருநெல்வேலி, NPNK – நல்லதைப் பகிர்வது நம் கடமை கலைப் பண்பாட்டு மன்றம், ஸ்டார் கோச்சிங் சென்டர் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் மற்றும் மகளிர் […]

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -3 கப்ளிசேட் உஸ்மானிய பேரரசு -2 (கி.பி 1299-1922) அந்த அழகியபெண், சூஃபி ஞானி அதப்பாலி அவர்களின் மகள் என்று கவிஞர் அஹ்மது சொன்னபோது, அந்த அழகிய இளைஞர் உஸ்மான் ஆச்சரியப்பட்டு போனார். அந்தப் பேரழகிதான் அன்றைய உலக அழகி மல்காத்தூன் என்பதையறிந்த உஸ்மான் அவர்கள், சூஃபி ஞானி அதப்பாலியிடம், அவரது மகளை திருமணம் செய்து கொள்ள பெண் கேட்டார். உஸ்மான் அவர்கள் செல்ஜூக்கியர்கள் இடமிருந்து சில பிரதேசங்களை பரிசாக பெற்று அதன் […]

மதுரைச் சிறுவனுக்கு அமெரிக்காவின் உலக சாதனைக் குழு (World Record Committee) சான்றிதழ்..

மதுரையைச் சேர்ந்த சிறுவன் கலை இளமணி ஜெ. அதீஸ்ராம் கடந்த 2023 டிசம்பர் 24 அன்று மதுரை,புளியங்குளம், கேரன் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற ஸ்கேட்டிங் செய்து கொண்டே சிலம்பம் சுற்றுதலில் 90 நிமிடங்கள் தொடர்ச்சியாக செய்து சாதனை புரிந்தார். இச்சாதனையை அங்கீகரித்து அமெரிக்காவில் உள்ள உலக சாதனைக் குழு (World Record Committe) 28.02.2024 அன்று சான்றிதழ் அளித்துள்ளது.    தமிழர்களின் தற்காப்புக் கலையான சிலம்ப விளையாட்டில் பெயர் பெற்ற மதுரையைச் சேர்ந்த சிறுவன் ஜெ. அதீஸ்ராம் […]

தென்காசி மாவட்ட காவல் துறையின் வாகனங்கள் பொது ஏலம்..

தென்காசி மாவட்ட காவல் துறையின் வாகனங்கள் பொது ஏலம்.. தென்காசி மாவட்ட காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட அரசு வாகனங்கள் 02.03.2024 அன்று காலை 10 மணிக்கு குற்றாலம் ஆயுதப்படை வளாகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலத்தில் 03 இருசக்கர வாகனங்களும் 01 நான்கு சக்கர வாகனமும் ஏலம் விடப்படுகின்றன. வாகனங்களை 01.03.2024 முதல் 02.03.2024 காலை 09.00 மணி வரை நேரில் வந்து பார்வையிடலாம். இதில் ஏலம் எடுக்க விரும்பும் நபர்கள் இரு சக்கர […]

தில்லையேந்தல் ஊராட்சி அரசு பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர்பிறந்தநாள் விழா !

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் தில்லையேந்தல் ஊராட்சி அரசு பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்து ராமலிங்கம் அறிவுறுத்தலின்படி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது . இந் நிகழ்ச்சியில் ஒன்றியச்செயளாலர் உதயகுமார் , மாவட்ட பிரதிநிதி கல்யாணசுந்தரம், பொருளாளர் இராமகிருஷ்ணன் மற்றும் பிரபாகரன், தமீம், செல்லத்துரை கிராம தலைவர்கள் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தில்லைசீமை ந.ரகுமான் செய்திருந்தார்.

முதுகுளத்தூரில் முதலமைச்சர் பிறந்தநாள் விழா !

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூர் திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பேரூராட்சி சேரமன் ஏ.ஷாஜஹான் தலைமையில் தூய்மை பணியாளர்கள் மற்றும் விளங்குளத்தூர் ஆதரவற்றோர் மையத்தில் உள்ளவர்கள் ஆகியோருக்கு கறி பிரியாணி உணவுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் நகர் கழக செயலாளர் ஏ.ஷாஜஹான், முன்னாள் துணை சேர்மன் பாசில் அமீன், தூவல் ஹரிமுத்துராமலிங்கம், முன்னால் மாவட்ட துணை செயலாளர் ஆர்.செல்லமணி, ‘முகம்மது இக்பால், மூர்த்தி, தூவல் மதியழகன், ஷாகுல் ஹமீது, விளங்குளத்தூர் […]

பெரியபட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகள் பேரணி !

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி பெரியபட்டிணத்தில் 2024 – 2025 ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பேரணி திருப்புல்லாணி வாட்டாரக் கல்வி தொடக்க கல்வி அலுவலர் கோ. உஷாராணி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிபள்ளி வளாகத்தில் தொடங்கி பேருந்தது நிலையத்திலிருந்து ஊரின் பிராதான சாலைகள் மற்றும் தெருக்களின் வழியாக அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையின் நன்மைகள் குறித்த பதாகைளுடன் கோஷங்களை எழுப்பி பேரணியாக சென்றனர். இப்பேரணில் பெரியபடட்டிணம் ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ்கான், ஊராட்சி மன்றத் […]

ஆறு மாத தொடர் போராட்டம் வெற்றி!; மதுரை பாராளுமன்ற உறுப்பினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..

மதுரை ரயில்வே விளையாட்டு மைதானத்தை காக்கிற ஆறுமாத தொடர் போராட்டம் வெற்றி!; பாராளுமன்ற உறுப்பினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.. மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் கூறுகையில், மதுரை ரயில்வே விளையாட்டு மைதானம் தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை கைவிடக் கோரி ரயில்வே நில பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பல்லாயிரக் கணக்கான கையெழுத்துகளை பெறும் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. தொடர்ந்து மதுரைக்காகத்தான் என்கிற விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. நமது தொடர் முயற்சியின் விளைவாக […]

திருமங்கலம் கோவில் வாசலில் கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு..

திருமங்கலம் மீனாட்சி அம்மன் கோவில் வாசலில் கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு.. திருமங்கலம் மீனாட்சி அம்மன் கோவில் வாசலில் கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோவில் வாசலில் நேற்று இரவு 7 மணி அளவில் எலக்ட்ரிக்கல் வேலைக்கான பொருட்கள் வைப்பது போன்ற ஒரு பெட்டி இருந்துள்ளது.‌ இதனை பார்த்த கோவில் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெட்டியை திறந்து பார்த்த போது அதில் […]

கனரக வாகனங்களை மாற்றுப் பாதையில் இயக்கிட வேண்டும்; தென்காசி ஆட்சியரிடம் கோரிக்கை..

கனரக வாகனங்களை மாற்றுப் பாதையில் இயக்க வேண்டும்; சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை.. தென்காசி மாவட்டம் கடையம் அருகே முதலியார் பட்டியில் உள்ள, அரசு தொடக்கப்பள்ளி புதிய கட்டிடத்தை சமீபத்தில், தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனைப் பார்வையிட முதலியார் பட்டி வந்த தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இடம் சமூக நல்லிணக்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கட்டி அப்துல் காதர் கனரக வாகனங்களை மாற்றுப் பாதையில் இயக்க […]

ராமநாதபுரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை மையம் ஆய்வு !

இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்று வந்த அரசு பொதுத்தேர்வு மையத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி வரும் மையங்களை பார்வையிட்டதுடன், கண் பார்வையற்ற மாணவி தேர்வு எழுதி வருவதை பார்வையிட்டு உதவியாளர் உரிய உதவிகளை வழங்கி நல்ல முறையில் தேர்வு எழுதிட உறுதுணையாக இருந்திட வேண்டுமென தெரிவித்தார். மேலும் […]

பெண்ணை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை; நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு..

பெண்ணை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.. தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் பெண்ணை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அந்தோணி வியாகம்மாள் என்பவரை அதே பகுதியை சேர்ந்த பாத்திமாராஜ் என்பவர் தெருக் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார். இது தொடர்பாக மேற்படி […]

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு முகாம்; மாவட்ட கலெக்டர் தகவல்..

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு முகாம்; மாவட்ட கலெக்டர் தகவல்.. தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது குறித்த செய்திக் குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு செயல்படுத்தப்படும் நலத் திட்டங்களை பெறுவதில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்படும் சிக்கல்களை களைய சம்மந்தப்பட்ட துறைகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. அனைத்து வகையான மாற்றுத் […]

ரயிலில் கடத்தி வரப்பட்ட 90 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்..

ரயிலில் கடத்தி வரப்பட்ட 90 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்.. சென்னை – செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலில் போதை பொருள் கடத்துவதாக மத்திய போதை தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து மதுரை ரயில்வே நிலையத்தில் வைத்து ரயிலில் வந்த பயணி பிரகாஷ் என்பவரை பிடித்து ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியதில், அவரிடம் இருந்து சுமார் 30 கிலோ இடையிலான போதை பொருள் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து இதன் […]

இந்தியாவை இரண்டு பேர் விற்கிறார்கள் இரண்டு பேர் வாங்குகிறார்கள்; அமைச்சர் செஞ்சி மஸ்தான் உரை..

இந்தியாவை இரண்டு பேர் விற்கிறார்கள். இரண்டு பேர் வாங்குகிறார்கள். இந்தியாவை விற்கும் மோடி அமித்ஷா. இந்தியாவை வாங்கும் இரண்டு பேர் அதானி அம்பானி. 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் வளர்ச்சி மூன்றாவது இடத்தில் இருந்து தற்போது 164 வது இடத்தில் இருக்கிறது. இதுதான் மோடி ஆட்சியின் அவல நிலை. யார் ஆட்சியில் இருக்கக் கூடாது என்பதை தீர்மானிக்கின்ற தேர்தல் மோடியை தனிப்பட்ட முறையில் அல்ல பாசிச பாஜக பிஜேபி கூட்டத்தினரை நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதற்காகத் […]

திருமங்கலம் அரசு மருத்துவ மனையில் கையூட்டு பெற்ற இருவர் சஸ்பெண்ட்; இணை இயக்குனர் அதிரடி..

திருமங்கலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் கையூட்டு; இருவரை சஸ்பெண்ட் செய்து மதுரை மாவட்ட நலப்பணி இணை இயக்குனர் அதிரடி நடவடிக்கை.. மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில், கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் பெறுவதாக வந்த புகாரின் அடிப்படையில், மதுரை மாவட்ட நலப் பணி இணை இயக்குனர் செல்வராஜ், மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த நோயாளிகளிடம் விசாரணை மேற்கொண்டதில், பிணவறையில் உடற்கூறு […]

இராஜபாளையம் தொகுதியில் அரசு பள்ளிகளுக்கு 10000 நோட்டு புத்தகங்கள்; சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் 71 வது பிறந்த முன்னிட்டு இராஜபாளையம் தொகுதியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கு 10000 நோட்டு புத்தகங்கள்; சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார். விருதுநகர் மாவட்டடம் இராஜபாளையத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் 71 வது பிறந்த தினத்தை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் இராஜபாளையம் தொகுதிக்கு உட்பட்ட மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் இராஜபாளையத்தில் உள்ள எஸ்.எஸ்.அரசு மேல்நிலைப்பள்ளி & எஸ்.எஸ்.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு நோட்டு புத்தகங்களை […]

தேர்தலுக்காக எம்ஜிஆர் ஜெயலலிதா புகழை பாடி வருகிறார் மோடி; திருநாவுக்கரசு எம்.பி.பேட்டி..

எம்ஜிஆர் ஜெயலலிதா புகழை தேர்தலுக்காக பாடி வருகிறார் மோடி. ஓட்டுக்காக அவர்களின் புகழை பாடுகிறார். அதிமுகவில் கூட்டணியில் இல்லை என்பதால் அவர்கள் இரண்டு பேரின் புகழைப்பாடி வாக்குகளை சேகரிக்க பார்க்கிறார் என திருநாவுக்கரசு எம்.பி. கூறியுள்ளார். இது குறித்த திருநாவுக்கரசு எம்.பி அளித்த பேட்டியில், தற்போது பொது மேலாளர் தலைமையில் ரயில்வே ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. வருடத்திற்கு ஒருமுறை இந்த கூட்டம் நடைபெறும். இதன் மூலம் எம்பிக்கள் தங்களது தொகுதி சம்பந்தமான ரயில்வே கோரிக்கைகளை முன்வைக்க முடிகிறது. […]

மதுரை ரயில்வே மைதானம் தனியாரிடம் ஒப்படைக்கப்படவில்லை; மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தகவல்..

மதுரை ரயில்வே மைதானத்தை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கப் படவில்லை என தெற்கு ரயில்வே மேலாளர் திட்ட வட்டமாக தெரிவித்து உள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் ரயில்வே திட்டங்கள் குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் மதுரை ரயில்வே நிலைய அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!