இராஜபாளையம் திமுக இளைஞர் அணி சார்பில் இரத்த தானம்..

முதல்வர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இராஜபாளையத்தில் திமுக இளைஞர் அணியினர் இரத்த தானம் செய்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் திமுகவினர் ஏழை எளிய மக்களுக்கு வேஷ்டி, சேலை, அன்னதானம் வழங்குதல், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்குதல், மேல் நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல் என பல்வேறு வகைகளில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ராஜபாளையம் நகர திமுக இளைஞர் அணி சார்பில், தமிழக முதல்வர் […]

திருப்பாலைக்குடியில் பேலியோ சொட்டு மருந்து முகாம் !

ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட திருப்பாலைக்குடி கிழக்குத் தெருவில் அமைந்துள்ள சத்துணவு மையத்தில் 28 வது ஆண்டு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆர்எஸ் மங்கலம் அதிமுக சிறுபான்மை நலபிரிவு ஒன்றிய செயலாளர் பஜருல் ஹக் கலந்து கொண்டு தன் பிள்ளைக்கு போலியோ சொட்டு மருந்து ஊற்றினார் . மேலும் போலியோ நோயை இந்தியாவிலிருந்து முழுமையாக ஒழிப்பதற்கு ஆண்டுதோறும் தீவிரமான செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இம்முகாமில் அமைப்பாளர் நிர்மலா உதவியாளர் […]

மதுரை மீனாட்சி பஜார் பகுதியில் கார் மோதிய விபத்து; பெண் சம்பவ இடத்தில் உயிரிழந்த சோகம்..

மதுரை மீனாட்சி பஜார் பகுதியில் கார் மோதிய விபத்து; பெண் சம்பவ இடத்தில் உயிரிழந்த சோகம்.. மதுரை கரிமேடு பகுதியில் உள்ள மோதிலால் மெயின் ரோடு பகுதியில் வசித்து வருகிறார் பாத்திமா மேரி. அண்ணன் அந்தோணி செல்வராஜ் உடன் ரேஷன் கடையில் பொருள்கள் வாங்க கைரேகை வைப்பதற்காக வந்துள்ளார். அப்போது பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள மீனாட்சி பஜார் பகுதியில் சாலையை கடக்கும் பொழுது நான்கு சக்கர வாகனத்தில் ராஜசேகர் என்பவர் தனக்கன்குளம் பகுதியில் இருந்து […]

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் அவசர மத்திய செயற்குழு கூட்டம் ! அனைத்து மாவட்ட தலைநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு !!

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் திருவள்ளூரில் அவசர மத்திய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை மேலும் எழுச்சியாகத் தொடர்வது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களாக காலவரையற்ற போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் அநேக கோரிக்கைகள் மீது தீர்வு காணப்படாததால், வருகின்ற திங்கள் கிழமை (04.03.2024) மாலை 5.00 மணிக்கு அனைத்து மாவட்டத் தலைநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் […]

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -3 கப்ளிசேட் உஸ்மானிய பேரரசு -3 ( கி.பி 1299-1922) மங்கோலிய படைவீரர்கள் கொடூரமான வர்களாக இருந்தார்கள். மங்கோலிய படைகள் புகும் எல்லா நாடுகளும் நாசப்படுத்தபட்டன. பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். முதியவர்கள், குழந்தைகள் என எந்த இரக்கமும் இல்லாமல் மக்களை கொன்று குவித்துவிடுவார்கள். சொத்துக்களை தீ‌வைத்து கொளுத்திவிடுவர். இதுபோன்ற கொடுமைகளை செய்துவிட்டு அந்த பகுதியில் எந்த நிர்வாகமோ, ஆட்சிகளோ அமைக்காமல் விட்டு விட்டு அடுத்த பிரதேசத்திற்கு நகர்ந்து விடுவர். மங்கோலிய படைகள், ஓடுகிற மக்களை […]

மதுரையில் நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து; இருசக்கர வாகனங்கள் சேதம்..

மதுரையில் நள்ளிரவில் தீவிபத்து; சாலையில் நின்று கொண்டிருந்த 6 இருசக்கர வாகனம் தீயில் கருகி சேதமடைந்தன; போலீசார் விசாரணை மதுரை எல்லீஸ் நகர் போடி லைன் பகுதியில் உள்ள சூர்யா அப்பார்ட்மெண்ட்டில் வசிக்கும் மணி என்பவரின் மகன் முத்துராஜ் (வயது 26) லோடுமேன் ஆக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்று இரவு மணி மற்றும் முத்துராஜ் ஆகிய இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் முத்து ராஜ் தந்தையிடம் கோபித்துக் கொண்டு வீட்டின் அருகே நின்று சிகிரெட் குடித்து […]

மதுரை விமான நிலையம் சுற்று வட்டார பகுதிகளில் தேசிய போலியோ தடுப்பு சிறப்பு முகாம்..

மதுரை விமான நிலையம் சுற்று வட்டார பகுதிகளில் தேசிய போலியோ தடுப்பு சிறப்பு முகாம்.. மதுரை திருப்பரங்குன்றம் மதுரை விமான நிலையம் வட்டார பகுதிகளில் “தேசிய போலியோ” தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் பகுதிகளில் 107 போலியோ சொட்டு மருந்து முகாமில் 472 களப்பணியாளர்கள் மூலம் பகல் 12 மணி வரை 8637 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம் திருப்பங்குன்றம் பகுதிகளில் தேசிய போலியோ சிறப்பு முகாம் மதுரை மாவட்ட சுகாதார அலுவலர் குமரகுருபரன் அறிவுறுத்தலின் […]

நூலக துறையில் சாதனை புரிந்த தென்காசி நூலகர் பிரமநாயகம் நூலகப் பணி நிறைவு; பொது மக்கள் வாழ்த்து..

நூலக துறையில் சாதனை புரிந்த தென்காசி நூலகர் பிரமநாயகம் நூலகப் பணி நிறைவு; பொது மக்கள் வாழ்த்து.. நூலக துறையில் அளப்பரிய சாதனை புரிந்த தென்காசி நூலகர் பிரமநாயகம் பணி நிறைவு பெற்றார். அவரது பணி நிறைவு விழாவில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர். தென்காசி மாவட்டத்தில் நூலகர் பிரமநாயகம், நூலகத்துறை அரசு போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் என மேற்கொண்ட முன்னெடுப்புகள் பணிகள் மிகவும் சிறப்பானவை. தென்காசி நூலகர் […]

தென்காசி நகர திமுக சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த தின விழா; 10 குழந்தை செல்வங்களுக்கு தங்க மோதிரம்..

தென்காசியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த தின விழா; அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கல்.. தென்காசியில் நடந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த தின விழாவில், மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. தென்காசியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71-வது பிறந்தநாள் விழா தென்காசி நகர திமுக செயலாளரும், நகர்மன்ற தலைவருமான ஆர். சாதிர் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில், தென்காசி […]

மாற்றுத் திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்..

மாற்றுத் திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்.. தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை, உபகரணங்கள், கடனுதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் வழங்கினார். தென்காசி மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு செயல்படுத்தப்படும் நலத் திட்டங்களை பெறுவதில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்படும் சிக்கல்களை களைய ஏதுவாக சம்மந்தப்பட்ட துறைகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு […]

ஆடு திருடர்கள் இருவர் கைது; 11 ஆடுகள் மீட்பு..

ஆடு திருடர்கள் இருவர் கைது; 11 ஆடுகள் மீட்பு.. தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்டு வந்த.ஆடு திருடர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆடுகளை மேய்த்து வரும் பட்டமுத்து என்ற நபர் அவருக்கு சொந்தமான 03 ஆடுகளை அடையாளம் தெரியாத நபர் திருடி சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன் தலைமையிலான காவல் துறையினர் துரிதமாக விசாரணை […]

சுய உதவி குழுக்களுக்கு சிறந்த சேவையாற்றிய வங்கிகளுக்கு விருது மற்றும் பாராட்டு சான்று வழங்கல்..

நெல்லையில் சுய உதவிக் குழுக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றிய சிறந்த வங்கிகள் மற்றும் வங்கி கிளைகளுக்கு விருதுகள், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன் வழங்கினார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2022-23-ஆம் ஆண்டில் சுய உதவிக் குழுக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றிய சிறந்த வங்கிகள் மற்றும் வங்கி கிளைகளுக்கு விருதுகள், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப. கார்த்திகேயன் வழங்கினார். 2022-23 […]

சோழவந்தான் அருகே பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி

சோழவந்தான் அருகே பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி சோழவந்தான் அருகே ராயபுரத்தில் அமைந்துள்ள சர்வதேச பொதுப்பள்ளியில் “தேசிய அறிவியல்” தினத்தை முன்னிட்டு மாணவர்களின் அறிவியல் திறன் மற்றும் ‘சமூக விழிப்புணர்வை’ ஏற்படுத்தும் வகையில் “ஒருங்கிணைந்த அறிவியல் மற்றும் சமூக அறிவியல் கண்காட்சி” பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும், பள்ளி நிறுவனத் தலைவர் .செந்தில் குமார், பள்ளியின் தாளாளர் குமரேசன், உதவி தலைமை ஆசிரியர் அபிராமி மற்றும் டயானா, ஒருங்கிணைப்பாளர்கள் சுபா […]

திருப்பரங்குன்றம் அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியல்..

திருப்பரங்குன்றம் அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியல்.. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரி கிராமத்தில் ஆதி சிவன் நகரில் ரூபாய் 55 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணிக்காக, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோமீட்டர் தொலைவில் பெயர்த் தெடுக்கப்பட்ட சாலையை இதுவரை சீரமைக்காததால், கற்கள் பெயர்ந்து அவ்வழியே செல்லக்கூடிய குழந்தைகள், முதியோர் கீழே விழுந்து காயம் ஏற்படுவதாகவும், இருசக்கர வாகனங்கள் நாள்தோறும் பழுது ஏற்பட்டு வருவதால், கூலி தொழிலாளர்கள் இருக்கும் […]

போதைப் பொருளுக்கு எதிராக கடும் நடவடிக்கை வேண்டும்; மதுரை எம்பி சு.வெங்கடேசன் பேட்டி..

போதைப் பொருளுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். பத்தாண்டுகளில் அதிக பயணிகளை கையாளும் விமான நிலையமான மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றாமல், ஒரு தனி நபருக்காக ஜாம்நகர் விமான நிலையத்திற்கு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்காக, மதுரைக்காக, தமிழகத்துக்காக இந்த அரசு இயங்க மறுக்கிறது. எனவே இந்த அரசு யாருக்கானது என்பதை இந்த சம்பவம் தெளிவுபடுத்துகிறது. மதுரை எம்பி.சு. வெங்கடேசன் […]

மதுரையில் பெண்களிடம் வழிப்பறி; இளைஞர்கள் இருவர் அதிரடி கைது..

மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் தனியாக செல்போன் பேசி செல்லும் பெண்களிடம் செல்போன் வழிபறியில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது. மதுரை மாநகர் அவனியாபுரம் அருகே உள்ள CSA ஆலை பெரியசாமி நகர் முன்பு கடந்த மாதம் 21-ஆம் தேதி மதியம் வைத்தீஸ்வரி என்ற பெண் செல்போன் பேசிக்கொண்டு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை டூவீலரில் பின் தொடர்ந்து வந்த மர்மநபர்கள் அப்பெண்ணின் செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இச்சம்பவம் […]

குண்டுவெடிப்பு சம்பவத்தை வைத்து பாஜக அரசியல் செய்ய வேண்டாம்!- கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா..

குண்டுவெடிப்பு சம்பவத்தை வைத்து பாஜக அரசியல் செய்ய வேண்டாம்!- கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா.. பெங்களூரு நகரின் ராஜாஜி நகர் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபலமான உணவகத்தில் நேற்று குண்டு வெடித்தது. இதில் கடை ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என 9 பேர் காயமடைந்தனர். முதற்கட்டமாக சிலிண்டர் வெடித்ததே தீ விபத்துக்கான காரணம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பின் உணவகத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான விபத்து காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.இதனையடுத்து, பெங்களூரு தெற்கு […]

கற்றலில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்த விருதுநகர் மாவட்ட போலீசார்..

கற்றலில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்த விருதுநகர் மாவட்ட போலீசார். விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா அறிவுறுத்தலின் பேரில், விருதுநகர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சூரிய மூர்த்தி மேற்பார்வையில், மனித வர்த்தகம் மற்றும் ஆள் கடத்தல் தடுப்புப்பிரிவு சார்பு ஆய்வாளர் மற்றும் குழந்தை கடத்தல் தடுப்புப்பிரிவு காவலர் குழு மூலம் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் பள்ளி படிப்பை இடைநிற்றல் செய்த 15 மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களுக்கு பள்ளி படிப்பின் […]

சோழவந்தான் பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்த நாள் விழா; திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..

சோழவந்தான் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா; திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் சோழவந்தான் அருகே முதலமைச்சர் ஸ்டாலின் 71 வது பிறந்த தின விழா திமுக சார்பில் அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் அன்னதானம் வழங்கினார். மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் வக்கீல் முருகன், முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வெற்றிச் செல்வன், […]

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க கூட்டம்; போதை இல்லா தமிழகத்தை உருவாக்க தீர்மானம்..

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க மதுரை மண்டல நிர்வாகிகள் கூட்டம்; போதை இல்லா தமிழகத்தை உருவாக்க தீர்மானம்.. தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மதுரை மண்டல நிர்வாகிகள் கூட்டம், வைகை வடகரை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மண்டல தலைவர் மைக்கல்ராஜ் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் சூசை அந்தோணி, மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல இளைஞர் அணி தலைவர் சிவா வரவேற்றார். மாநில தலைவர் முத்துகுமார் சிறப்புரை […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!