போதைப் பொருள் விவகாரம்!-பாஜக தலைவர்கள் பட்டியல் என்னிடத்தில் இருக்கிறது;அதிரடி காட்டிய ஆர்.எஸ்.பாரதி..

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று (04-03-2024) கடலுார் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகம் உள்ளது போல, எடப்பாடி பழனிசாமி பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறார். தங்களது கூட்டணிப் பிரச்சினைகளைக் கையாள முடியாமல், யார் வருவார் எனக் காத்திருக்கும் அவர், தி.மு.க. மீது அவதூறுகளைப் பேசி வருகிறார். தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையை அனைத்துத் தரப்பினரும் மனதாரப் பாராட்டி உள்ளனர். இதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல், எடப்பாடி […]

உலகின் மிகப் பிரம்மாண்ட மஹா சிவராத்திரி விழா; மார்ச் 08 ஈஷாவில் கோலாகலம்..

உலகின் மிகப் பிரம்மாண்டமான மஹாசிவராத்திரி விழா கோவை ஈஷா யோக மையத்தில் வரும் 8-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகள் முழு தீவிரத்தில் நடைபெற்று வருகின்றன. மஹாசிவராத்திரி என்பது ஆன்மீக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள் ஆகும். இந்த இரவில் நிகழும் கோள்களின் அமைப்பு மனித உடலில் இருக்கும் உயிர் சக்தி இயற்கையாகவே மேல்நோக்கி செல்வதற்கு உதவி புரிகிறது. இந்த நோக்கத்தில் தான் மஹாசிவராத்திரி விழா நம் […]

நீங்கள் ஒரு அமைச்சர்!- சாமானியர் அல்ல: உதயநிதி மீது உச்ச நீதிமன்றம் காட்டம்..

நீங்கள் ஒரு அமைச்சர்!- சாமானியர் அல்ல: உதயநிதி மீது உச்ச நீதிமன்றம் காட்டம்.. நீங்கள் சொன்ன கருத்துகளின் விளைவுகள் உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் ஒன்றும் சாமானியர் அல்ல, அமைச்சர்” என்று சனாதனம் தொடர்பான வழக்கில் உதயநிதி மீது காட்டமாக அதிருப்தியை வெளியிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ […]

பேரழிவை ஏற்படுத்தும் கல்பாக்கம் ஈணுலை திட்டத்தை பாஜக அரசு கைவிட வேண்டும்! -சீமான் வலியுறுத்தல்..

பேரழிவை ஏற்படுத்தும் கல்பாக்கம் ஈணுலை திட்டத்தை பாஜக அரசு கைவிட வேண்டும்! -சீமான் வலியுறுத்தல்.. சென்னை கல்பாக்கத்திலுள்ள அணுவுலை வளாகத்தில் புதிதாக 500 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட மாதிரி அதிவேக ஈணுலையை (Prototype Fast Breeder Reactor) பிரதமர் மோடி துவக்கி வைப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. பாதுகாப்பற்ற திரவ சோடியத்தைக் குளிர்விப்பானாகக் கொண்ட ஈணுலைகள் பேரழிவை ஏற்படுத்தும் என்பதால், அதைத் தொடங்கிய நாடுகளே கைவிட்டுவிட்ட நிலையில் பாஜக அரசு அதனை இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் […]

சிவசேனா கட்சியின் ஆலோசனை கூட்டம்; முக்கிய தீர்மானம்..

திருப்பரங்குன்றத்தில் சிவசேனா கட்சி சார்பில் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வரும் பாராளுமன்ற தேர்தலில் 15 இடங்கள் போட்டியிடுவது குறித்து ஆலோசனை மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா தனியார் மண்டபத்தில் சிவசேனா கட்சி சார்பில் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தென்மண்டல அமைப்புச் செயலாளர் காமேஸ்வரன் முன்னிலை வகித்தார். மாநில இளைஞரணி தலைவர் சாலை முத்து மற்றும் மாநில மகளிர் அணி செயலாளர் ஜெயா வரவேற்றனர். மாநில முதன்மைச் செயலாளர் தண்டபாணி, மாநில பொதுச்செயலாளர் […]

மதுரை அவனியாபுரத்தில் அனுமதியின்றி செயல்படும் வார சந்தையால் போக்கு வரத்து நெரிசல்..

மதுரை அவனியாபுரத்தில் விமான நிலையம் செல்லும் பிரதான சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட காய்கறி வார சந்தையால் போக்குவரத்து நெரிசல்; வாகன ஓட்டிகள் அவதி.. மதுரை திருப்பரங்குன்றம் தாலுக்கா அவனியாபுரத்தில் அனுமதி இன்றி வைக்கப்பட்ட காய்கறி வார சந்தையால் அவனியாபுரம் விமான நிலையம் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து அவனியாபுரம் தினசரி காய்கறி சந்தை வியாபாரிகள் கூறிய போது, அவனியாபுரத்தில் மாநகராட்சி நிர்வாகம் மூலம் 100க்கும் மேற்பட்ட கடைகள் கட்டிக் கொடுக்கப்பட்டு இதில் […]

மதுரையில் 1,000 ஆண்டு பழமையான கற்சிலை கண்டெடுப்பு..

மதுரை அவனியாபுரத்தில் 1,000 ஆண்டு பழமையான முருகன் சிலை கண்டெடுப்பு; பிற்கால பாண்டியர்கள் காலத்திய 11 ஆம் நூற்றாண்டு கால சிலையாக இருக்கலாம் என வரலாற்று ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு மதுரை காமராசர் பல்கலைக்கழக முதுகலை மாணவர் த.வினோத் அவனியாபுரம் பகுதியில் கள ஆய்வு செய்த போது, இந்த முருகன் சிலையை கண்டுபிடித்துள்ளார். குறிஞ்சி நிலத் தலைவனான முருகனுக்கு தமிழகத்தில் பல கோயில்கள் உள்ளன. பல தனிச் சிலைகளும் உள்ளன. மதுரை அவனியாபுரம் புறவழிச் சாலையின் மேற்குப் புறமாக […]

மதுரையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்கி விழிப்புணர்வு..

மதுரையில் ரோட்டரி சங்கம் சார்பில் புற்று நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்கி விழிப்புணர்வு.. மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து மல்லிகை ரோட்டரி சங்கம் சார்பில் நறுமணம் என்ற பெயரில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை மல்லிகை ரோட்டரி சங்க தலைவர் உமாராணி தனசேகரன் தலைமை தாங்கினார். சர்வதேச ரோட்டரி இயக்குனர் முருகானந்தம், ரோட்டரி கவர்னர் ஆனந்த ஜோதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி […]

செங்கோட்டை நூலகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார முகாம்; உறுதி மொழி ஏற்பு..

செங்கோட்டை நூலகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார முகாம் நடந்தது. இதில் ஜனநாயகத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டு வாக்களிப்போம் என்ற உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர். மத்திய விளையாட்டுத் துறை, நேரு யுவகேந்திரா மற்றும் செங்கோட்டை வருவாய்த்துறை, செங்கோட்டை நூலக வாசகர் வட்டம் ஆகியோர் இணைந்து நூலகத்தில் வைத்து வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு செங்கோட்டை வருவாய் துறை தனித்துணை வட்டாட்சியர் தேர்தல் பிரிவு அலுவலர் சிவன் பெருமாள் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு […]

17 ஆண்டுகளாக தலை மறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்த காவல் துறை; தென் மண்டல காவல் துறை தலைவர் பாராட்டு..

17 ஆண்டுகளாக தலை மறைவாக இருந்த நபரை கைது செய்த காவல் துறை; தென் மண்டல காவல் துறை தலைவர் பாராட்டு.. நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை கைது செய்த காவல் துறையினருக்கு தென் மண்டல காவல் துறை தலைவர் பாராட்டு தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலையத்தில் 2006 ஆம் ஆண்டு பதிவான குற்ற வழக்கின் குற்றவாளியான கபீர்@ மணிசாகுல் @ அபு குரைரா(42) என்பவர் கடந்த 2007ஆம் […]

நாங்களும் கொடுப்போம் மாதம் 1000 ரூபாய்!- களம் இறங்கிய கெஜ்ரிவால் அரசு.

டெல்லியில் 18 வயது நிரம்பிய பெண்கள் அனைவருக்கும் மாதம் ₹1,000 உதவித்தொகை வழங்கப்படும் என அம்மாநில பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.2024-25 நிதியாண்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இதற்காக பட்ஜெட்டில் 2000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று சட்டசபையில் டெல்லி நிதியமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.முக்யமந்திரி மகிளா சம்மன் யோஜனா என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தில், 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பயனடைவர்.அதே சமயம், ஓய்வூதியம் மற்றும் டெல்லி அரசின் வேறு திட்டங்களில் பலனடைபவர்கள், அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்களுக்கு இத்திட்டத்தின்மூலம் […]

காஸாவில் மக்கள் மோசமான துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். உடனடி சண்டை நிறுத்தம் அவசியம!-கமலா ஹாரிஸ்..

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஆறு வாரகால போர் நிறுத்தத்திற்கு பாலஸ்தீன போராளி அமைப்பான ஹமாஸ் உடனடியாக ஒப்புக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதே சமயத்தில் காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் தவிக்கும் அப்பாவி மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் விநியோகத்தை அதிகரிக்க வேண்டும் என்று இஸ்ரேலை அவர் கட்டாயப்படுத்தியுள்ளார். இஸ்ரேல்-காஸா பிரச்சினையில் இதுவரை எந்தவொரு அமெரிக்க தலைவரும் வலுவாகக் கருத்துரைக்கவில்லை. தற்போது திருமதி கமலா ஹாரிஸ், இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளதோடு மக்கள் […]

கை நழுவியது கரும்பு விவசாய சின்னம்; ஏன், எப்படி, எதற்காக!- என்ன செய்ய போகிறார் சீமான்.?

தமிழ்நாட்டில் கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட கரும்பு விவசாயி சின்னம், பாரதிய பிரஜா அய்க்யாதா கட்சி (BPA) என்ற கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதனால், கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் அக்கட்சி சார்பில் முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது, நாம் தமிழர் கட்சி தரப்பில், பல ஆண்டுகளாக பல தேர்தலில் கரும்பு […]

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -3 கப்ளிசேட் உஸ்மானிய பேரரசு -4 ( கி.பி 1299-1922) மன்னர் உஸ்மானின் எளிய மாளிகையில் மருத்துவர்கள் சூழ்ந்து இருந்தனர். நாடித் துடிப்பு குறைந்து கொண்டே வந்தது. நினைவுகள் விட்டு விட்டு வந்தது. மன்னருக்கு காதுகளில் சில ஒலிகள் ரிங்காரமிட்டது. அரசை, மக்களை நேசித்த ஒரு ஆட்சிதலைவருக்கு இறுதிநிலையிலும் அதே மனநிலையே இருந்தது.அவரின் பேரரசின் துவக்க காலங்களும் தனது தாத்தா தனக்கு சிறுவயதில் கூறிய நிகழ்வுகளும் மனதில் கண்ணாடி போல் ஜொலித்தன. தனது […]

முதலியார் பட்டி அரசு மேல் நிலை பள்ளிக்கு புதிய இருக்கைகள் அன்பளிப்பு..

சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் முதலியார் பட்டி அரசு மேல் நிலைப் பள்ளிக்கு இருக்கைகள் வழங்கல்.. தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள முதலியார் பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில்,, சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் புதிய இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு, துணைத் தலைவர் பாசுல் அஷ்ரப், எஸ்எம்சி தலைவி ஜன்னத், விஜயலஷ்மி, வார்டு உறுப்பினர் காலித் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் முத்துராஜா […]

விஜயகாந்த் நினைவிடத்தை காண வருவோருக்கு சமபந்தி விருந்து!-இறந்தும் பசியாற்றும் கேப்டன் என தொண்டர்கள் நெகிழ்ச்சி..

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனர், முன்னாள் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து விஜயகாந்த் உடல் அக்கட்சி தலைமையகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. இவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு பொது மக்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே அவருக்கு மணி மண்டம் கட்ட வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில், […]

தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நாளை (திங்கட்கிழமை) கண்டன ஆர்பாட்டம்!-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய விடியா திமுக அரசைக் கண்டித்தும் நாளை (திங்கட்கிழமை) அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். நாளைய போராட்டத்தோடு நிச்சயமாக இது நின்றுவிடப்போவதில்லை. தமிழ்நாட்டில் கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும். பெற்றோர்களே- இந்த தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக […]

இங்கு போட்டியே திமுக vs அதிமுக தான்  களத்தில் இல்லாத பாஜக பற்றி பேச்சே இல்லை!-அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சுளீர் பேச்சு..

இங்கு போட்டியே திமுக vs அதிமுக தான்  களத்தில் இல்லாத பாஜக பற்றி பேச்சே இல்லை!-அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சுளீர் பேச்சு.. தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாளையொட்டி, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது; முதன்முதலில் சவுண்ட் இன்ஜினியர் போஸ்டிங் கிடைத்து இருந்தால், இப்போது ரிட்டயர்ட் ஆகி இருப்பேன். அப்படி இருந்தால் உங்களை எல்லாம் பார்த்திருக்க முடியாது. […]

காதல் மனைவியுடன் பா.ஜ.க. பிரமுகர் தற்கொலை- வத்தலக்குண்டு அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருணாசலபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). இவர் பா.ஜ.க. கட்சியின் மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர். மேலும் இவர், வத்தலக்குண்டுவில் செல்போன் கடை நடத்தி வந்தார். அவருடைய மனைவி சிவதர்ஷினி (29). ஈரோட்டை சேர்ந்த இவரை, காதலித்து மணிகண்டன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு சாய்சைலேஷன் (10) என்ற மகனும், சாய்சிரஞ்சி (4) என்ற மகளும் உள்ளனர். தற்போது மணிகண்டன், பட்டிவீரன்பட்டி அருகே உள்ள எம்.வாடிப்பட்டியில் சொந்தமாக வீடு கட்டி குடும்பத்துடன் […]

தமிழ்நாட்டில் இன்று 56.34 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது..

போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெறறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என 43,051 மையங்களில் சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது.இந்த மையங்களில் 57 லட்சத்து 84 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.அதன்படி, சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!