ஈஷா மஹா சிவராத்திரி விழா: தடை விதிக்க உயர்நீதி மன்றம் மறுப்பு

ஈஷா மஹாசிவராத்திரி விழா: தடை விதிக்க சென்னை உயர்நீதி மன்றம் மறுப்பு கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 8 ஆம் தேதி நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழா குறித்து மனுதாரர் கோரிய நிகழ்நிலை அறிக்கைக்கு உத்தரவிட மறுத்த சென்னை உயர்நீதி மன்றம், வழக்கை வரும் மார்ச் 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. மஹா சிவராத்திரி விழாவிற்கு ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில், ஈஷாவிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் தனது விவசாய நிலத்தில் கலப்பதாக […]

வாடிப்பட்டி அருகே கத்திக்குத்து காயங்களுடன் டிரைவர் படுகொலை; போலீசார் விசாரணை..

வாடிப்பட்டி அருகே கத்திக்குத்து காயங்களுடன் ஆம்புலன்ஸ் டிரைவர் படுகொலை; தாலுகா அலுவலகம் பின்புறம் அழுகிய நிலையில் பிணம் மீட்பு. போலீசார் விசாரணை.. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கத்தி குத்து காயங்களுடன் படுகொலை செய்த ஆம்புலன்ஸ் டிரைவர் பிணம் தாலுகா அலுவலகம் பின்புறத்தில் மீட்கப்பட்டது. கொலையாளிகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் பின்புறம் காம்பவுண்டு சுவர் அருகில் செடி கொடிகள் அடர்ந்த புதருக்குள் சுமார் 30 வயது […]

பிஎஸ்என்எல் டெலிகாம் அலுவலகத்திற்கு சீல் வைக்க வந்த அதிகாரிகள்; சுரண்டையில் பரபரப்பு..

பிரபல பிஎஸ்என்எல் டெலிகாம் அலுவலகத்திற்கு சீல் வைக்க வந்த அதிகாரிகள்; சுரண்டையில் பரபரப்பு.. சுரண்டை பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு திடீரென அதிகாரிகள் சீல் வைக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் சுரண்டையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் நகராட்சிக்கு கடந்த 2008 ஆம் வருடம் முதல் செலுத்த வேண்டிய சொத்துவரி ரூ 2,90,840, செலுத்தவில்லை. இது குறித்து நகராட்சி தரப்பில் பல முறை அறிவிப்பு வழங்கியும் கட்டாததால் இன்று காலையில் நகராட்சி மேலாளர் வெங்கட சுப்பிரமணியன் […]

பாலியல் சீண்டல் காட்டு ராஜா போக்சோ சட்டத்தில் கைது..

புளியங்குடியில் நான்கு சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக நடந்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம் புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் காட்டுராஜா என்பவர் தனது வீட்டின் அருகே விளையாடும் 9 வயது சிறுமிகள் மூன்று பேர் மற்றும் 8 வயது சிறுமி ஆகியோருக்கு அவ்வப்போது மிட்டாய் வாங்கி கொடுத்து, அவரது வீட்டின் உள்ளே அழைத்து சென்று சிறுமிகளின் உடலில் உள்ள அந்தரங்க உறுப்புகளில் தவறான முறையில் தொட்டுள்ளார். இந்நிலையில் 05.03.24 […]

15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாஜ கூட்டணியில் இணையும் பிஜு ஜனதா தளம்..

🔵🟣 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாஜ கூட்டணியில் இணையும் பிஜு ஜனதா தளம்.. 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாஜ கூட்டணியில் பிஜு ஜனதா தளம் இணைந்து தேர்தல் பணியாற்ற உள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி வருகிறது. அரசியல் கட்சிகள் தீவிர களப்பணிகளை தொடங்கி விட்டன. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி இடையே வெற்றி பெற கடுமையான முனைப்பில் ஈடுபட்டு வருகிறது. ‘இந்நிலையில், பாஜ கூட்டணியில் ஒடிசா […]

இடைகால் ஊராட்சியில் ரூ.34.50 இலட்சம் மதிப்பில் கால் நடை மருந்தக கட்டடம் திறப்பு..

இடைகால் ஊராட்சி பகுதியில் ரூ.34.50 இலட்சம் மதிப்பில் கால்நடை மருந்தக கட்டடம் திறப்பு.. தென்காசி மாவட்டம் இடைகால் ஊராட்சியில் கால்நடை மருந்தக புதிய கட்டடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின் படி 06.03.2024 அன்று தென்காசி மாவட்டம் இடைகால் ஊராட்சியில் ரூ.34.50 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கால்நடை மருந்தக கட்டடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் திறந்து வைத்து கட்டட வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நிகழ்ச்சியில் […]

தவறான தகவலை சமூக வலைத்தளத்தில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

தவறான தகவலை சமூக வலைத்தளத்தில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரிக்கை.. திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ; அப்போது சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் குழந்தை கடத்தல் பற்றிய வதந்திகள் அதிகளவில் பரப்பப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தை கடத்தல் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. பெற்றோர்கள் குழந்தை கடத்தல் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் […]

ஒன்றிய பாஜக அரசு ஏஜென்சிகளை தவறாக பயன்படுத்துவது அரசியலமைப்பிற்கு எதிரானது! – எஸ்டிபிஐ குற்றச்சாட்டு..

எஸ்டிபிஐ கட்சியின் தேசிய செயலகக் கூட்டம் நேற்று (மார்ச்,06)  புதுதில்லியில் உள்ள கட்சியின் தேசிய அலுவலகத்தில் நடைபெற்றது.  இந்தகூட்டத்திற்கு தேசிய துணைத் தலைவர் முகமது ஷாபி தலைமை தாங்கினார். எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் எஸ்டிபிஐ கட்சி  கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் போட்டியிடுகிறது. இது தொடர்பாகவும், தேர்தல் பிரச்சார ஏற்பாடுகள் குறித்தும் தேசிய செயலக குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. […]

பொதுத் துறை நிறுவனமான என்.எல்.சி.யின் 7% பங்குகளை ஆஃபர் ஃபார் சேல்ஸ் முறையில் விற்பனை செய்ய ஒன்றிய அரசு முடிவு..

பொதுத் துறை நிறுவனமான என்.எல்.சி.யின் 7% பங்குகளை ஆஃபர் ஃபார் சேல்ஸ் முறையில் விற்பனை செய்ய ஒன்றிய அரசு முடிவு.. பொதுத் துறை நிறுவனமான என்.எல்.சி.யின் 7% பங்குகளை ஆஃபர் ஃபார் சேல்ஸ் முறையில் விற்பனை செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. என்.எல்.சி. நிறுவனத்தின் 1 பங்கின் நேற்றைய விலை ரூ.226க்கு என்ற நிலையில், விலையை குறைத்து பங்கு ஒன்றை ரூ.212க்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது பங்கின் தற்போதைய சந்தை விலையை விட 6% […]

தொடர்ந்து ஜெட் வேகத்தில் பறக்கும் “தங்கம்” விலை..

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.48,720-க்கு விற்பனையாகிறது. தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. அந்த வகையில், சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில், […]

திமுகவுடன் பல ஆண்டுகளாக கூட்டணியில் உள்ளோம். எனவே, திமுகவை விட அதிக இடங்களை ஒதுக்கினாலும் அதிமுகவுடன் கூட்டணி சேரமாட்டோம்!- செல்வப் பெருந்தகை பேட்டி..

மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜ்குமார் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே உரையாற்றினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை பேசியபோது; தமிழ்நாட்டில் பாஜக நோட்டா வாக்குகளை விட […]

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் சம்மன்..

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் சம்மன்.. டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா, மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் உள்ளிட்டோர் மீது சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குபதிந்தது. கடந்த ஓர் ஆண்டாக ஆம்ஆத்மி மூத்த தலைவர்கள் சிலர் சிறையில் உள்ளனர். இவ்வழக்கில் ஆம் ஆத்மியின் தலைவரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி வருகிறது. இதுவரை […]

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -3 கப்ளிசேட் உஸ்மானிய பேரரசு -7 (கி.பி.1299-1922) உலகத்திலேயே பலமான படைப்பிரிவாக உருவான “எனிச்சாரி” படைப்பிரிவு மன்னரின் ஆணைகளையே புறம் தள்ளியது. எனவே அந்தப்பிரிவு சிறிது சிறிதாக கலைக்கப்பட்டது. மன்னரை மக்கள் சந்திக்க விடாமல் இந்த படைப்பிரிவு, மன்னரை தனிமைப்படுத்தியது. உர்கானின் ஆட்சியில் பொதுவாக நாடு அமைதியாக இருந்தது. ஏராளமான கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட்டன. உஸ்மானியர்களின் தலைநகராக புருஷா நகரே இதுவரை இருக்கிறது. உஸ்மானிய படைகள் சவுதி அரேபியா, ஐரோப்பா, துருக்கியின் காண்ஸ்டாண்டி […]

சென்னை வருவாய் ஆணையர் அலுவலகத்தில் குவிந்த வருவாய் துறையினர் ! பொதுமக்கள் பாதிப்பு !! அரசு அழைத்துப் பேச சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் !!!

சென்னையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சுமார் 5000 வருவாய்த்துறை அலுவலர்கள் வருவாய் ஆணையர் அலுவலகம் முன்பாக முகாமிட்டு இன்று முதல் (07.03.2024) காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் வருவாய் துறை அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளான மேம்படுத்தப்பட்ட ஊதியத்தினை உடனடியாக வழங்க வேண்டும், புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச வாழ்வாதார கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற கோரி […]

கரும்பு விவசாயி சின்னம் கோரி உச்ச நீதிமன்றம் சென்ற சீமான்..

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, 2016 சட்டமன்றத் தேர்தலில் மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டி போட்டது. அதன்பிறகு வந்த 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது.இந்நிலையில், வரும் மக்களவை தேர்தலில் கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி, தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. […]

சோழ வந்தான் அருகே செல் போன் திருடிய மூவர் கைது; போலீசார் விசாரணை.

சோழவந்தான் அருகே செல்போன் திருடிய மூவர் கைது; போலீசார் விசாரணை. சோழவந்தானைச் சேர்ந்த ஆசிரியர் ஆசீர் பிரபாகர். இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் செக்கானூரணியிலிருந்து சோழவந்தானுக்கு வந்து கொண்டிருந்த பொழுது இவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர் ஆசீர்பிரபாகர் மோட்டர் சைக்கிளை வழிமறித்து அவரிடம் இருந்த செல்போனை வழிப்பறி செய்து தப்பி ஓடி விட்டனர். இது குறித்து ஆசீர் பிரபாகர் சோழவந்தான் போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் வழக்கு […]

சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிலம்ப பட்டையம் வழங்கல்..

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, கருமாத்தூரில் மீசைகாரர் சிலம்பகூடம் நடத்திய சிலம்பாட்ட போட்டியில், வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிலம்பபட்டையம் வழங்கும் விழா நடைபெற்றது. இந்தப் போட்டியில், மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 300 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இப் போட்டியானது, பொன் சங்கரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. போட்டியில், கலந்து கொண்ட மாணவர்களுக்கு அவரவர் தகுதிக்கு ஏற்ப பச்சை நீலம் மஞ்சல் பட்டையம் வழங்கபட்டது. இதில், உசிலம்பட்டி பகுதியிலிருந்து மாஸ்டர் கெளதம் தலைமையில் […]

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணி வகுப்பில் பங்கேற்று திரும்பிய மதுரை கல்லூரி மாணவிக்கு பாராட்டு விழா..

மதுரைக் கல்லூரியின் NCC மாணவி செல்வி. கோபிகா சமீபத்தில் புது டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில், தமிழக NCC அணி சார்பாக பங்கேற்று திரும்பி உள்ளார். இதனை பாராட்டும் விதமாக மதுரைக் கல்லூரி NCC துறை மற்றும் NCC 7 பட்டாலியன் சார்பாக மாணவிக்கு பாராட்டு விழா மதுரைக் கல்லூரியில் நடைபெற்றது. விழாவில் NCC 7 பட்டாலியன் கமாண்டிங் அதிகாரி லெப்டினென்ட் கர்னல் சிவகுமார். கலந்து கொண்டு பாராட்டுரை வழங்கினார். மதுரைக் கல்லூரி வாரிய […]

புத்தானம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் இயற்கை வேளாண்மை கருத்தரங்கம்..

நேரு நினைவுக் கல்லூரியில் இயற்கை வேளாண்மை கருத்தரங்கம்.. திருச்சிராப்பள்ளி மாவட்டம், புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி தாவரவியல் மற்றும் ஊட்டச்சத்து உணவுமுறை துறையின் சார்பாக “இயற்கை வேளாண்மை கருத்தரங்கம்” என்ற தலைப்பில் 5 மார்ச் 2024 செவ்வாய் கிழமை காலை கல்லூரி கருத்தரங்க அரங்கில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் முனைவர் M.மீனாட்சி சுந்தரம் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தலைவர் பொன். பாலசுப்பிரமணியன் மற்றும் கல்லூரி செயலார் பொன்.இரவிச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார். தானே உருவாகும் நோயை குணப்படுத்த இயற்கை […]

ஈஷாவில் கோலாகலமாக தொடங்கிய யக்‌க்ஷா திருவிழா..

ஈஷாவில் கோலாகலமாக தொடங்கிய யக்‌க்ஷா திருவிழா; மஹா சிவராத்திரியை முன்னிட்டு மூன்று நாள் கொண்டாட்டம் மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மூன்று நாட்கள் கொண்டாடப்படும்  ‘யக்‌க்ஷா’  கலைத் திருவிழா கோவை ஈஷா யோக மையத்தில் கோலாகலமாக தொடங்கியது.  கோவை ஈஷா யோக மையத்தில் 30 ஆம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா மார்ச் 8ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு இந்திய பாரம்பரிய கலை வடிவங்களை ரசித்து உணர்வதற்காக நடத்தப்படும் ‘யக்‌க்ஷா’ கலைத் திருவிழா தொடங்கியது. […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!