கோடிக்கணக்கில் நன்கொடை: பகீர் கிளப்பிய தேர்தல் பத்திர விவரங்கள் வெளியீடு..

கோடிக்கணக்கில் நன்கொடை: பகீர் கிளப்பிய தேர்தல் பத்திர விவரங்கள் வெளியீடு.. தேர்தல் பத்திரங்கள் மூலம் ₹6,060 கோடியை நன்கொடையாக பெற்று பாஜக முதலிடம். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ₹1,609 கோடி நன்கொடை பெற்று 2வது இடத்திலும், காங்கிரஸ் ₹1,421 கோடி பெற்று 3வது இடத்திலும் உள்ளன. அதிகபட்சமாக ₹1,368 கோடி நன்கொடை வழங்கி ஃபியூச்சர் கேமிங், ஓட்டல் சர்வீசஸ் நிறுவனம் முதலிடம். மேகா இன்ஜினியரிங் மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனம் ₹966 கோடியும், க்விக் சப்ளை செயின் நிறுவனம் […]

புதிய இந்தியத் தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து நியமனம்..

இந்திய தேர்தல் ஆணையத்தில் புதிய ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிய தேர்தல் ஆணையர்களை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். புதிய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கேரள பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றியவர். சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டபோது காஷ்மீரை நிர்வகித்த அதிகாரிகளில் ஞானேஷ்குமாரும் இருந்தார். சுக்பீர் சிங் சாந்து பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். மக்களவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், கடந்த […]

அடேங்கப்பா!!ரூ.1,368 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கிய லாட்டரி மார்ட்டினின் நிறுவனம்..

ரூ.1,368 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கிய லாட்டரி மார்ட்டினின் நிறுவனம்.. கோவையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் சார்பில் ரூ.1,368 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. கடந்த 2019 முதல் கடந்த ஜனவரி மாதம் வரையில் பல்வேறு காலகட்டங்களில் இதனை அந்நிறுவனம் வாங்கியுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எஸ்பிஐ வங்கி அளித்த தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் தனது அதிகாரபூர்வ தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. இதில் ரூ.1 […]

தென்காசி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி..

தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி.. தென்காசி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் துவக்கி வைக்க உள்ளார். தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக் கிணங்க தென்காசி இ.சி. ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கத்தில் செய்தி […]

வாகன ஓட்டிகளே! நாளை பேடி எம் ஃபாஸ்டேக்கிற்கு கடைசி!-அப்போ என்ன செய்ய வேண்டும்? செய்ய கூடாது..

வாகன ஓட்டிகளே! நாளை பேடி எம் ஃபாஸ்டேக்கிற்கு கடைசி!-அப்போ என்ன செய்ய வேண்டும்? செய்ய கூடாது.. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தடையற்ற பயண அனுபவத்தை உறுதி செய்யவும், சுங்கச்சாவடிகளில் சிரமத்தைத் தவிர்க்கவும், பேடி எம் ஃபாஸ்டேக் பயனர்கள் 2024 மார்ச் 15-ம் தேதிக்கு முன்னர் மற்றொரு வங்கியால் வழங்கப்பட்ட புதிய ஃபாஸ்டேக்-கை வாங்கிப் பயன்படுத்துமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிவுறுத்தியுள்ளது. இது தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது அபராதம் அல்லது இரட்டை கட்டணங்களைத் தவிர்க்க […]

தமிழ்நாட்டில் 13 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது..

தமிழ்நாட்டில் 13 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.. இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜி தேன்மொழி காவல்துறை பயிற்சி பள்ளி கூடுதல் இயக்குநர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். அரக்கோணம் ஏ.எஸ்.பி. யாதவ் கிரிஷ் அசோக், எஸ்.பி. ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டு திருப்பூர் தெற்கு சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். உத்தமபாளையம் ஏஎஸ்பி மதுகுமாரி, எஸ்.பி. ஆக பதவி உயர்வு […]

தேர்தல் பத்திர முறைகேடுகள் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பினை குடியரசுத் தலைவர் மூலம் நிறுத்தி வைக்க பாஜக அரசு முயல்வது வெட்கக்கேடானது! – சீமான் கண்டனம்..

தேர்தல் பத்திர முறைகேடுகள் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பினை குடியரசுத் தலைவர் மூலம் நிறுத்தி வைக்க பாஜக அரசு முயல்வது வெட்கக்கேடானது! – சீமான் கண்டனம்.. தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை, குடியரசுத் தலைவர் மூலம் நிறுத்தி வைக்க, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது. வெளிநாட்டு வங்கிகளில் குவிக்கப்பட்ட கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவருவேன் என்று கூறி ஆட்சி அதிகாரத்தை அடைந்த பிரதமர் மோடி, […]

சீமானுக்கு வந்த சோதனை! கரும்பு விவசாய சின்னத்தில் போட்டியிட விருப்பமா கூட்டணிக்கு வாங்க! என கூப்பிடும் கர்நாடகா கட்சி..

கரும்பு விவசாயி சின்னத்தை பெற்ற கர்நாடக கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி, ‘ தமிழகத்தில் எங்களுடன் கூட்டணி வைத்தால் அந்த வேட்பாளர்களுக்கு கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கொடுப்போம்’ என சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு கடந்த தேர்தலில் வழங்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதனை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்தில் சீமான் தரப்பு வழக்கு […]

இன்றைய கள நிலவரப்படி தமிழக அரசியல் நிலைப்பாட்டில் 2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி வாய்ப்பு உள்ள கூட்டணி எது? கீழை நியூஸுக்காக தூத்துக்குடி சம்சுதீன்..

இன்றைய கள நிலவரப்படி தமிழக அரசியல் நிலைப்பாட்டில் 2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி வாய்ப்பு உள்ள கூட்டணி எது? கீழை நியூஸுக்காக தூத்துக்குடி சம்சுதீன்.. (I N D I A) திமுக கூட்டனி சீட் வாய்ப்பு திமுக = 29% காங்கிரஸ் = 4% விசிக = 4% கம்யூ+(மா) = 3% மதிமுக = 1.5% ம ம க = 3% மு.லீக் = 2% கமல் = 0.5% கெமக = […]

கீழக்கரையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை !

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள மீன் மார்க்கெட்டினை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மரு. ஜி.விஜயகுமார் அறிவுறுத்தலின் பேரில் இன்று அனைத்து கடைகளையும் சுத்தம் குறித்தும் , மீன்களில் வேதிப்பொருட்கள் கலக்கப்படம் குறித்தும் , கீழக்கரை உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ் , மீன்வளத்துறை சார்பு ஆய்வாளர் பாண்டியராஜ் ஆகியோர் இணைந்து ஆய்வு மேற்கொண்டனார். அதனை தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் பெறப்பட்ட உரிமைத்தினை அனைத்து கடைகளிலும் முன்பாக பார்வையில் படும்படி தொங்கவிடப்பட வேண்டும் […]

கிடு கிடுவென உயரும் தங்கம்!- அதிர்ச்சியில் கிடுகிடுத்து கிடக்கும் சாமானியர்கள்..

இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக டிசம்பர் மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ஒரு சவரன் ரூ.49,200-க்கும், கிராமுக்கு ரூ. 45 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,150-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் […]

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -3 கப்ளிசேட் உஸ்மானிய பேரரசு -14 ( கி.பி 1299-1922) தைமூர் பயாசித்திற்கு எழுதிய கடிதம் இப்படி துவங்கியது.. ஷாஹின்ஷா பயாசித்.. உங்களின் அருமை நண்பர் தைமூர் எழுதுவது என துவங்கிய கடிதத்தை படித்த பயாசித் அசந்து போனார். தைமூரின் குணத்தை எடை போடுவது மிக சிரமமானது என்பதை பயாசித் புரிந்து கொண்டார். இதற்கிடையில் தைமூரின் கவனம் இந்தியாவின் பக்கம் திரும்பியது. ஆசியாவின் பேரரசுகளில் ஒன்றான டெல்லி பேரரசு ஆட்டம் கண்டு இருந்தது. […]

குடியுரிமை திருத்த சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை; அதை அமல்படுத்தியே தீருவோம்!- அமித்ஷா திட்டவட்டம்..

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்த நிலையில், வாக்கு வங்கிக்காக தேர்தல் தேதி அறிவிப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன் அமல்படுத்தப்பட்டுள்ளது என பா.ஜனதா மீது எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சட்டை வைத்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காள மாநில அரசுகள் சிஏஏ-வை செயல்படுத்தமாட்டோம் எனத் தெரிவித்துள்ளன.இந்த நிலையில் அமித் ஷா  ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-வாக்கு வங்கி அரசியலுக்காக குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கட்சிகள் பயன்படுத்துகின்றன. […]

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி..

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி.. ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கும் மகாலட்சுமி திட்டம் செயல்படுத்தப்படும். வேலைக்கு செல்லும் பெண்களுக்காக மாவட்டத்துக்கு ஒரு விடுதி அமைக்கப்படும். மத்திய அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும். ஒவ்வொரு பஞ்சாயத்திலும் பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார். அங்கன்வாடி, ஆஷா, மதிய உணவு திட்ட பணியாளர்களுக்கான மாத ஊதியம் இரட்டிப்பாக்கப்படும். -காங்கிரஸ் கட்சி அறிவிப்பு

நெல்லையில் பரவிய குழந்தை கடத்தல் வதந்தி; காவல் துறை எச்சரிக்கை..

குழந்தை கடத்தல் எச்சரிக்கை போஸ்டரால் நெல்லையில் பரவிய வதந்தி; காவல்துறை எச்சரிக்கை.. திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபட்டி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பற்பநாதபுரம் பகுதியிலுள்ள சுவர்களில் “ஊர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!” என்ற பெயரில் நெல்லையில் சிறு பிள்ளைகளை கடத்துவதாகவும், பெற்றோர்கள் கவனமாக இருக்கும் படி தெரிவிக்கப்படுவதாகவும் காவல்துறை மற்றும் ஊர்பொதுமக்கள் என்ற பெயரில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. இது சம்பந்தமாக காவல்துறை விசாரித்ததில், பற்பநாதபுரத்தை சேர்ந்த கோயில் பிள்ளை மகன் இமானுவேல் அந்தோணி (29) என்பவர், பாளையங்கோட்டை, அண்ணா நகரை […]

அதிமுக சாா்பில் இப்தாா் நோன்பு துறப்பு நிகழ்ச்சி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி  தலைமையில்  (13.03.2024) எழும்பூரில் உள்ள சிராஜ் மஹால் வளாகத்தில் நடைபெற்றது..

அதிமுக சாா்பில் இப்தாா் நோன்பு துறப்பு நிகழ்ச்சி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி  தலைமையில்  (13.03.2024) எழும்பூரில் உள்ள சிராஜ் மஹால் வளாகத்தில் நடைபெற்றது.. இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் S.P.வேலுமணி, OS.மணியன், கடம்பூர் ராஜூ, ஆவடி அப்துல் ரஹீம், பொன்னையன், தம்பி துரை , ஜெயக்குமார், கோகுல இந்திரா, திண்டுக்கல் சீனிவாசன், அன்வர் ராஜா, அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், அரசு தலைமை காஜி […]

மகளிர் உரிமைத் தொகையை கொச்சைப்படுத்தி பேசிய குஷ்பு! படத்தை எரித்து கோபத்தை காட்டிய மகளிரணி பழநியில் பரபரப்பு..

திமுக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை, நடிகை குஷ்பு அவதூறாக பேசியதை கண்டித்து பழனியில் திமுகவினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது குஷ்புவின் உருவப்படத்தை செருப்பால் அடித்தும், தீயிட்டு கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திமுக அரசின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை, கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை குஷ்பு அவதூறாக பேசியதாகக்கூறி, குஷ்புவை கண்டித்து பழனியில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழனி பேருந்துநிலையம் அருகே, திமுக நகரச் செயலாளர் வேலுமணி தலைமையில் நடைபெற்ற […]

பழனி அடிவாரம் பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை திமுக அரசு காக்கத் தவறியதாக பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

பழனியில் அடிவாரம் பகுதி மக்கள், வியாபாரிகள் வாழ்வாதாரத்தை திமுக அரசு காக்கத் தவறியதாக பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. உயர்நீதி மன்ற உத்திரவு என்ற பெயரில் பழனி அடிவாரம் பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை திமுக அரசு காக்கத்தவறி விட்டதாகவும், இந்து இயக்க பொறுப்பாளர்கள் மீது பொய்வழக்கு போடப்படுவதாகவும் தெரிவித்து இன்று பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழனி அடிவாரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகுறு வர்த்தகர்கள் வாழ்வாதாரத்தை […]

முதலமைச்சர் அறிவித்த 4 சதவீத அகவிலைப்படி யார் யாருக்கு பொருந்தும்: நிதி துறை சொல்வது என்ன..

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 4 சதவீத அகவிலைப்படி உயர்வு குறித்த அரசாணை வெளியிடப்பட்டு, அது யார் யாருக்கு பொருந்தும்? என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழக அரசுப் பணியாளர்களுக்கு 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக அகவிலைப்படியை 1-1-2024 முதல் உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில், அகவிலைப்படியை 4 சதவீதம் கூடுதல் உயர்வு அளித்து அரசு ஆணையிடுகிறது. இந்த ஆண்டு ஜனவரி, […]

இன்னைக்கு கூட அவங்க ஆளுகிற மாநிலத்தில் ரூ.480 கோடி போதைப் பொருள் பிடிச்சிருக்காகங்க அதுக்கு என்ன பதில் சொல்லப் போறாராம் அண்ணாமலை!- இஃப்தார் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி..

தமிழகத்தை குறை சொல்லும் அண்ணாமலை, பாஜ ஆளும் மாநிலத்தில் ரூ.480 கோடிக்கு போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதே, அதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பேசியதாவது: அதிமுக ஆட்சியின் போது, சட்டம் ஒழுங்கு பேணிகாக்கப்பட்டு பொதுமக்கள், குறிப்பாக சிறுபான்மையின மக்கள் அச்சமின்றி பாதுகாப்புடன் வாழ்ந்தார்கள். இஸ்லாமியர்களுக்கு அரணாக இருப்பது நாம்தான். சிறுபான்மையினர் மீது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காட்டிய […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!