தென்காசி பாராளுமன்ற வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமாரை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும்; அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர் பேச்சு..

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேசியதாவது, வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமாரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும். நம்மைப் போன்ற சாதாரணமான ஆட்களும் பாராளுமன்றத்திற்கு போக வேண்டும் என்ற எண்ணத்தில் ராணி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க பொதுமக்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இந்தியாவுடைய தலையெழுத்தை மாற்றி […]

அதிமுக பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா; மதுரையில் பரபரப்பு..

மதுரை அலங்காநல்லூர் பகுதியில் அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா செய்ததால் பரபரப்பு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருடன் கிராமம் கிராமமாக சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரச்சாரம் முடிந்தவுடன் ஆரத்தி எடுத்த பெண்களுக்கு அதிமுக நிர்வாகிகள் தலா நூறு ரூபாய் வீதம் பணப்பட்டுவாடா செய்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளவர் நாராயணசாமி. இவர் தேனி […]

நான் ஏன் சசிகலா காலில் விழுந்தேன்! பரபர விளக்கம் கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி..

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜ தலைமையில் தனித்தனி கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் இந்த தேர்தலில் களம் இறங்கியுள்ளன. அனைத்து கூட்டணி கட்சிகளும் தொகுதி பங்கீடுகளை முடித்துவிட்டு, தற்போது தலைவர்கள், சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தொடங்கி விட்டனர். மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மருத்துவர் சரவணனுக்கான தேர்தல் பணிமனை அலுவலகத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் […]

தென்காசி மாவட்டத்தில் நூறு சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி..

தென்காசி மாவட்டத்தில் நூறு சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி.. தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மக்களவை பொதுத் தேர்தல் 2024 ஐ முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களிடையே 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பேரூராட்சியில் இருசக்கர வாகன பேரணியும், மனிதச்சங்கிலி பேரணியும், ஆய்க்குடி பேரூராட்சியில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதி […]

தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 05 நபர்கள் கைது; தென்காசி மாவட்ட எஸ்.பி. அதிரடி நடவடிக்கை..

தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 05 நபர்கள் கைது; தென்காசி மாவட்ட எஸ்.பி. அதிரடி நடவடிக்கை.. கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குத்தபாஞ்சான், தாழையூத்து மற்றும் ராம்நகர் பகுதிகளில் பேட்டரிகள், மின் வயர்கள், நீர்மூழ்கி மோட்டார்கள் மற்றும் ஆடுகள் என தொடர் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து வந்தது. இந்நிலையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.P. சுரேஷ்குமார் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் கடையம் காவல் துறையினர் மற்றும் ஆலங்குளம் […]

தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு பரிசீலனை; 26 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு..

தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு பரிசீலனை; 26 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு.. தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு பரிசீலனை தேர்தல் பொதுப் பார்வையாளர் டோபேஷ்வர் வர்மா தலைமையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் முன்னிலையில் நடந்தது. இதில் 37 வேட்பு மனுக்களில் 26 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு 11 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024 ஐ முன்னிட்டு 28.03.2024 அன்று […]

பாஜகவின் தேர்தல் பத்திர முறைகேடு உலகிலேயே மிகப்பெரிய ஊழல்: பகீர் கிளப்பிய நிர்மலா சீதாராமனின் கணவர்..

ஒன்றிய பாஜக அரசு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தேர்தல் பத்திரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், ஆகவே இதை ரத்து செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தேர்தல் பத்திர நடைமுறை ரத்து செய்யப்படுவதாக ஒருமித்த தீர்ப்பு வழங்கினர். மேலும், தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை SBI வங்கி வெளியிடவேண்டும் […]

பானை சின்னம் கேட்டு டெல்லி ஐகோர்ட் கதவை தட்டிய விசிக! ஏப்ரல் 1-ந்தேதி விசாரணை..

தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம், விழுப்புரத்தில் போட்டியிடுகிறது. தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்கக்கோரி அந்த கட்சி தேர்தல் கமிஷனை நாடியது. இந்த விண்ணப்பம் கடந்த 20.2.2024 அன்று அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தேர்தல் கமிஷனுக்கு இதுகுறித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி சச்சின் தத்தா விசாரித்து, இதுகுறித்து உடனடியாக முடிவு எடுத்து அறிவிக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டது. ஆனால் பானை சின்னத்தை ஒதுக்க முடியாது […]

ஐ.பி.எல். 2024: வார்னர், ஸ்டப்ஸ் போராட்டம் வீண்!- 12 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் த்ரில் வெற்றி..

17-வது ஐ.பி.எல். சீசன் கடந்த 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் […]

விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு; தவறான சிகிச்சை அளித்ததாக தனியார் மருத்துவமனை கண்ணாடிளை அடித்து நொறுக்கிய மாணவர்கள்..

விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு; தவறான சிகிச்சை அளித்ததாக  மருத்துவமனை கண்ணாடிளை அடித்து நொறுக்கிய மாணவர்கள்.. மதுரை சம்மட்டிபுரம் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் வயது 17 இவர் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் சக மாணவர் ஒருவரும் காலை கல்லூரிக்கு செல்வதற்காக அச்சம்பத்து வழியாக சென்று கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினார்கள் .விபத்தில் சிக்கிய இரண்டு மாணவர்களையும் 108 ஆம்புலன்ஸ் மூலம்  […]

கீழக்கரையில் வாக்களிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ! பொதுமக்கள் ஆவலுடன் கையொப்பம் !!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முக்கு ரோட்டில் இருந்து வள்ளல் சீதக்காதி சாலை வழியாக நடை பயணம் மேற்கொண்டு தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம் பாராளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தலில் 100% வாக்களிப்பது அவசியம் குறித்து ஆட்டோக்களில் பதாகை வைத்து பொதுமக்களிடம் கையொப்பம் பெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சி கீழக்கரை வட்டாட்சியர் பழனிகுமார் தலைமையில் நடைபெற்றது. பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024 தொடர்பாக 100% வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் , வாக்காளர்கள் மத்தியில் வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதை […]

இன்று தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளின் ஏற்கப்பட்ட வேட்புமனுக்களும்! நடைபெற்ற களேபரங்களும்!- “கீழை நியூஸின்” ஓர் முழு பார்வை..

பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் முதல் கட்டமாக தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பாரதிய ஜனதா கூட்டணி மோதும் அரசியல் களத்தில் நாம் தமிழர் கட்சி தனியாக களம் இறங்கி உள்ளது.இக்கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் வேட்பு மனுதாக்கல் செய்து விட்டனர். இது தவிர சுயேட்சை வேட்பாளர்களும் ஆர்வமுடன் போட்டி போட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்த […]

சின்னம் ஒதுக்கீடு செய்வதில் தேர்தல் ஆணையத்தின் பாரபட்சம் நியாயமற்றது!- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்..

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் நா.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:- நடைபெறும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் ஏற்கனவே நடந்து முடிந்த தேர்தலில் ஒதுக்கீடு பெற்ற சின்னங்களை மீண்டும் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் முறையிட்டிருந்தன. இந்த முறையீடுகள் மீது தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டாது, சார்பற்ற நடுநிலையோடு நடந்து கொள்ளவில்லை என்பது பெரும் கவலை அளிக்கிறது. இந்தியா […]

ராமநாதபுரத்தில் போட்டியிடும் 5 பன்னீர்செல்வங்கள்!ஏதோ ஒரு முடிவோட தான் இருக்காங்க போல..

பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அ.தி.மு.க. சார்பில் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் 4 சுயேட்சை வேட்பாளர் […]

அரவிந்த் கெஜ்ரிவால் ₹100 கோடி லஞ்சம் கேட்டதற்கு ஆதாரம் உள்ளது; அமலாக்கத்துறை வாதம்..

அரவிந்த் கெஜ்ரிவால் ₹100 கோடி லஞ்சம் கேட்டதற்கு ஆதாரம் உள்ளது; அமலாக்கத்துறை வாதம்.. “₹100 கோடி ஊழல் என்றால், அந்த பணம் எங்கே உள்ளது?” – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் வாதம். மதுபானக் கொள்கை வழக்கில் தன்னை சிக்க வைக்க வேண்டுமென்றே செயல்பட்டுள்ளது அமலாக்கத்துறை. இதுவரை எந்த நீதிமன்றமும் என்னை குற்றவாளி என்று தீர்ப்பளிக்கவில்லை. வெறும் 4 பேர் என்னை பற்றி கூறியதால் நான் கைது செய்யப்பட்டிருக்கிறேன். ஆம் ஆத்மி […]

வாடிக்கையாளர்களே உஷார்! நாளை முதல் (மார்ச் 29)வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை..

வாடிக்கையாளர்களே உஷார்! நாளை முதல் (மார்ச் 29)வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை.. நாடு முழுவதும் அனைத்து வங்கிகளும் தொடர்ச்சியாக 4 நாட்கள் மூடப்படுகிறது. புனித வெள்ளியையொட்டி நாளை வெள்ளிக்கிழமை (மார்ச் 29), சனிக்கிழமை (மார்ச் 30) வங்கிகளுக்கு விடுமுறை. ஞாயிறு (மார்ச் 31), திங்கள் (ஏப்.1) இறுதி ஆண்டு கணக்குகள் முடிப்பதற்காக செயல்படும். ஆனால், மக்களுக்கு வங்கி சேவை கிடையாது என கூறப்பட்டுள்ளது.

தாது மணல் நிறுவனத்திடம் ரூ.1.72 கோடி பெற்ற விவகாரம் பினராயி விஜயனின் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு..

தாது மணல் நிறுவனத்திடம் ரூ.1.72 கோடி பெற்ற விவகாரம் பினராயி விஜயனின் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு.. கொச்சியிலுள்ள ஒரு பிரபல தனியார் தாது மணல் நிறுவனத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது அங்கிருந்து கைப்பற்றப்பட்ட ஒரு டைரியில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் நடத்திவரும் சாப்ட்வேர் நிறுவனத்திடமிருந்து சேவை பெற்றதற்காக ரூ.1.72 கோடி பணம் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இது குறித்து வருமான வரித்துறை […]

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -3 கப்ளிசேட் உஸ்மானிய பேரரசு -28 (கி.பி 1299-1922) உஸ்மானிய பேரரசர் இரண்டாம் பயாஸித் அவர்கள் அரசவையிலேயே நடக்க முடியாமல் கீழே சரிந்தார். அரண்மனையே நிலைகுலைந்து போனது. பேரரசர் இரண்டாம் பயாஸித் அவர்களுக்கு திடீரென இடுப்பிலிருந்து கீழ்பகுதிகள் வேலை செய்யாமல் போனது. உடனடியாக அரசாங்க மருத்துவர்களும், நரம்பு சிறப்பு மருத்துவர்களும், வரவழைக்கப்பட்டனர் மன்னருக்கு பக்கவாத நோய் தாக்கி இருப்பதாக அறிந்து அதற்கு பலவவகையான மருந்துகளை உள்ளே குடிக்க வைத்தும் மேலே பூசியும் மருத்துவம் […]

பிரதமர் மோடி தமிழகத்தையே சுற்றி சுற்றி வந்தாலும் பாஜகவிற்கு நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒரு சீட்டு கூட கிடைக்காது!-உதயநிதி ஸ்டாலின் உறுதி..

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணியை உறுதி செய்து அதன் வேட்பாளர்களை அறிவித்து தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு பக்கம் தீவிராக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், மறு பக்கம் உதயநிதி வீதி வீதியாக மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகிறார். கடந்த ஐந்து தினங்களாக தமிழகத்தின் […]

தென்காசி மாவட்டத்தில் தேர்தல் விளம்பரங்கள் வெளியிடும் முன் ஊடக கண்காணிப்பு குழுவிடம் அனுமதி பெற வேண்டும்; மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவிப்பு..

தென்காசி மாவட்டத்தில் தேர்தல் விளம்பரங்கள் வெளியிடும் முன் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் அனுமதி பெற வேண்டும்; மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவிப்பு.. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை வெளியிடுவதற்கு முன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் அனுமதி பெற வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!