பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் மக்களை திசைத் திருப்புவதற்காக ஆதாரமற்ற அவதூறான கருத்துகளை பரப்பி வருவதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வாயிலாக கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு; தமிழகத்திற்கு வருகை புரிகிற பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் மக்களை திசைத் திருப்புவதற்காக ஆதாரமற்ற அவதூறான கருத்துகளை பரப்பி வருகின்றனர். தமிழகத்தில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை […]
Category: மாநில செய்திகள்
பாசிச கும்பலிடமிருந்து நாட்டை மீட்க அரசமைப்புச் சட்டம் காக்க அம்பேத்கர் பிறந்த நாளில் உறுதியேற்போம்- திருமாவளவன் அறிக்கை..
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-புரட்சியாளர் அம்பேத்கர் இயற்றித் தந்த அரசமைப்புச் சட்டத்தை ஒழிப்பதையே மோடி அரசு தனது இலக்காக வைத்துள்ளது. இந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றி மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றுவிட்டால் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையான அம்சங்களில் ஒன்றான ‘மதச்சார்பற்ற நாடு’ என்பதை மாற்றி இந்தியாவை ‘மதம் சார்ந்த நாடு’ என அறிவிப்பதற்கும், மீண்டும் மனு நூலின் அடிப்படையில் வருண வேற்றுமையை […]
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் அறிக்கை ! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகள் வெளியீடு !!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான இந்தியா கூட்டணியில் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் ஏணி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் கே நவாஸ்கனி தேர்தல் அறிக்கை 2024 வெளியிட்டார். வேட்பாளர் கே நவாஸ்கனி செய்தியாளர்களிடம் கூறியதாவது :- கடந்த ஐந்தாண்டு காலம் உங்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் நம் தொகுதியின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் சமரசம் இல்லாமல் குரல் கொடுத்திருக்கிறேன். தேசிய சராசரியை விடவும், மாநில சராசரியை விடவும் பன்மடங்கு அதிகமான பங்களிப்பை நாடாளுமன்றத்தில் சிறப்பாக வழங்கி இருக்கிறேன். பாஜக அரசின் வஞ்சகப் […]
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டம்; புதிய நிர்வாகிகள் தேர்வு..
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டம்; புதிய நிர்வாகிகள் தேர்வு.. தென்காசி மாவட்டம் சுரண்டை ஆலடிப்பட்டி சமுதாய நலக்கூடத்தில் தமிழ்நாடு பட்டதாரி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத்தலைவர் சு.குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வே.கிருபா சம்பத், மாவட்ட பொருளாளர் வே.நல்லையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழுவில் பட்டதாரி ஆசிரியர்கள் நலன் குறித்து விவாதிக்கப்பட்டு. அது தொடர்பாக ஆசிரியர்கள் நலன் குறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் […]
தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் சமத்துவ தின உறுதி மொழி ஏற்பு..
தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் சமத்துவ தின உறுதி மொழி ஏற்பு.. தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் சமத்துவ தின உறுதிமோழியை ஏற்றுக்கொண்டனர். இந்தியாவின் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த தினமான ஏப்ரல் 12 ஆம் நாள் ஆண்டு தோறும் சமத்துவ நாள் ஆக அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவுறுத்தலின்படி தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினத்தை […]
தொல்.திருமாவளவன் மீது, டிஜிபி சங்கர் ஜிவால் இடத்தில் இந்து மக்கள் கட்சி பரபரப்பு புகார்..
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் அறிவுறுத்தலின் பேரில் அக்கட்சியின் அமைப்பு குழு பொதுச் செயலாளர் ஆனந்த் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவாலிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளரான அருண் நேருவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட போது, உண்மைக்கு புறம்பான சமூகத்திற்கு மிகவும் ஆபத்தான விஷயங்களை தன்னுடைய பிரசார உரையில் குறிப்பிட்டுள்ளார்.மோடி மீண்டும் பிரதமர் ஆனால் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. தேவாலயங்கள், மசூதிகளுக்கும் […]
உலகில் அமைதி நிலவவும், இந்தியாவில் நல்லாட்சி மலரவும் இந்நன்னாளில் இறைவனை பிரார்த்திக்கிறேன், “கீழை நியூஸ்” மற்றும் “சத்திய பாதை” குழுமத்தின் ஆசிரியர் ரமலான் வாழ்த்து..
தமிழகத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.ரம்ஜான் பண்டிகையையொட்டி முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்தார்.இந்நிலையில், கீழை நியூஸ் மற்றும் […]
திருமங்கலம் அருகே பயங்கரம்: சாலையைக் கடக்க முயன்ற டூவீலர் மீது மோதி அந்தரத்தில் பறந்து சென்ற கார்:ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுமி உட்பட ஐந்து பேர் பலி, நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சிகள்..
திருமங்கலம் அருகே பயங்கரம்: சாலையைக் கடக்க முயன்ற டூவீலர் மீது மோதி பறந்து சென்ற கார்:ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுமி உட்பட ஐந்து பேர் பலி நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சிகள்.. மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த கனகவேல் என்பவர் தளவாய்புரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூ மிதி திருவிழாவில் பங்கேற்க குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் தளவாய் புரத்திலிருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தார். காரை கனகவேல் மகன் மணி […]
இந்த வாரம் முழுவதும் சுட்டெரிக்க போகும் வெயிலும், சுள்ளென்று பெய்யும் மழையும்..
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.நாளை தென் தமிழகம், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.12-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், […]
தென்காசியில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்..
தென்காசியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்.. சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில், தென்காசி பாறையடி தெரு, காயிதே மில்லத் நகரில் வைத்து, நோன்பு பெருநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிஸான் அணி மாநிலச் செயலாளர் தென்காசி முகம்மது அலி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, ஒன்பதாவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் நாகூர் மீரான், மின்சார வாரிய செயற்பொறியாளர் ரபீக் பின் உசைன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல துணைச் செயலாளர் சித்திக் […]
முதலியார் பட்டி பகுதியில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு..
முதலியார் பட்டி பகுதியில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு.. கடையம் அருகிலுள்ள முதலியார்பட்டியில் காங்கிரஸ், திமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் வீடு வீடாக சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். திமுக கிளைச் செயலாளர் நவாஸ்கான் தலைமையில் நடைபெற்ற வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு, திமுக கடையம் வடக்கு ஒன்றிய செயலாளரும், கடையம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவருமான மகேஷ் மாயவன், ஒன்றிய கவுன்சிலர் தமிழரசி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு உறுப்பினர் […]
தென்காசியில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மகளிர் கல்லூரி அமைத்திட பாடுபடுவேன்; டாக்டர் ராணி ஸ்ரீகுமார் வாக்குறுதி..
தென்காசியில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மகளிர் கல்லூரி அமைத்திட பாடுபடுவேன்; தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் வாக்குறுதி.. தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் கடையநல்லூர் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க திமுக முன்னணி தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளுடன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தென்காசியில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் நெல்லை ராணி அண்ணா கல்லூரியை போன்ற மகளிர் […]
வாகனங்களில் ஸ்டிக்கர்கள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு
தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்ச்சி.. தென்காசி மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. 100 சதவீதம் வாக்களித்தல் மற்றும் நேர்மையாக வாக்களித்தல், ஆகியவற்றை வலியுறுத்தி ஏற்கனவே தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளிலும் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து 09.04.2024 அன்று கீழப்பாவூர் பேருந்து நிலையத்திலும், கீழப்பாவூரில் உள்ள தனியார் பேருந்துகள், கார் மற்றும் தனியார் ஆட்டோக்களில் தேர்தல் திருவிழா-தேசத்தில் […]
கீழக்கரை மூணாவது வார்டு பகுதியில் மின் விளக்கு எரியாமல் பொதுமக்கள் அவதி ! நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் !!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மூணாவது வார்டுக்கு உட்பட்ட சதக்கத்துல் ஜாரியா நடுநிலைப் பள்ளியில் எதிர்ப்புற சந்தில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய பாதை உள்ளது . இப்பாதை இரவு நேரங்களில் இருளடைந்து காணப்படுவதால் பெண்களும் குழந்தைகளும் அவ்வழியில் செல்வதற்கு அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் வயதானவர்கள் அவ்வழியில் பலமுறை விழுந்ததாகவும் சொல்லப்படுகிறது . நகர்மன்ற உறுப்பினர் கண்டும் காணாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அப்பகுதியில் நீண்ட காலமாக பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி நிதியிலிருந்து சூரிய […]
அதிகாலையில் கோர விபத்து; பேருந்து லாரி மீது மோதியதில் நடத்துனர் உயிரிழந்த சோகம்..
கடையநல்லூர் அருகே அதிகாலையில் கோர விபத்து; அரசு பேருந்து லாரி மீது மோதி நடத்துனர் உயிரிழந்த சோகம்.. கடையநல்லூர் அருகே அரசு பேருந்து நினாறு கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் நடத்துனர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மற்றும் இடைகால் இடையே சையது காட்டன் மில்ஸ் அருகில் அதிகாலை நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. திருப்பூரில் […]
புதிய வாக்காளர் பட்டியல்: வயது வாரியாக, வாக்காளர் எண்ணிக்கை! தேர்தல் ஆணையம் அறிவிப்பு..
தமிழகத்தில் நடைபெற இருக்கும் வாக்குப்பதிவில் பங்கேற்கத் தகுதி உடைய புதிய வாக்காளர் பட்டியலை சமீபத்தில் இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டது. அதன்படி மொத்தம் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 3 கோடியே 6 லட்சத்து 5 ஆயிரத்து 793 பேர் ஆண்கள்; 3 கோடியே 17 லட்சத்து 19 ஆயிரத்து 665 பேர் பெண்கள்; 8,467 பேர் மூன்றாம் பாலினத்தவர். முதல்முறை வாக்காளர்களின் (18 முதல் 19 வயது […]
கீழக்கரையில் ஏழை எளிய மக்களுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சி !
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சித்திக் ரினாஃப் ஹஸ்ஸ் ஃபௌண்டேஷன் சார்பாக ரமலான் மாதத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு வீட்டில் உபயோகம் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னால் நகர்மன்ற உறுபினர் மற்றும் தெற்குத்தெரு ஜாமாத் முன்னால் செயலாளர் லாஹிதுகான் , முன்னால் நகர்மன்ற உறுப்பினர் மற்றும் சமூக ஆர்வலருமான ஆனா மூனா காதர் சாகிப் , விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் நெய்னா அசாருதீன் ஹபீப் மரைக்கா ஆகியோர் கலந்து கொண்டு […]
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி! சென்னை மற்றும் பிற பகுதிகளில் இருந்து ஏப்ரல் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது..
பாராளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 19-ந்தேதி நடைபெற இருக்கிறது. சொந்த ஊரில் இருந்து பலர் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் சொந்த ஊர் சென்று வாக்களிக்கவும், வாக்களித்த பின்னர் மீண்டும் வேலை செய்யும் இடத்திற்கு திரும்பவும் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.அதன்படி சென்னையில் இருந்து 17 மற்றும் 18-ந்தேதிகளில் 2,970 சிறப்பு பேருந்துகள் என 2 நாட்களுக்கு மொத்தம் 7154 பேருந்துகள் இயக்கப்படுகிறது. பிற […]
மதுரை சோழவந்தான் அருகே மு.க.அழகிரியின் பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சி! போலீசார் விசாரணை..
மதுரை சோழவந்தான் அருகே மு. க. அழகிரியின் பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சி! போலீசார் விசாரணை.. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் விக்கிரமங்கலம் ரோட்டில் நாகமலை அடிவாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரிக்கு சொந்தமான 24 ஏக்கர் தென்னந்தோப்பில் பங்களா உள்ளது. விசேஷ நாட்களில் மற்றும் வார இறுதி நாட்களில் மு. க. அழகிரி குடும்பத்துடன் இங்கு வந்து தங்கி இப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு உதவிகள் செய்வது வழக்கம். மேலும் முக்கிய தினங்களிலும் குடும்பத்துடன் இங்கு வந்து […]
எதிர்மறைச் சிந்தனைகளைக் கடந்து நேர்மறைச் சிந்தனையோடு வாக்களிக்க வேண்டும்; கவிஞர் பேரா பேச்சு..
நாடாளுமன்ற தேர்தலில் எதிர்மறைச் சிந்தனைகளைக் கடந்து நேர்மறைச் சிந்தனையோடு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என நெல்லை இலக்கிய விழாவில் கவிஞர் பேரா பேசினார். நெல்லையில் 07.04.2024 அன்று பொருநை இலக்கிய வட்டத்தின் 2059-ஆவது வார நிகழ்வு நடந்தது. இலக்கிய ஆர்வலர் நசீர் தலைமை வகித்தார். மீனாட்சிநாதன் இறைவணக்கம் பாடினார். பொருநை இலக்கிய வட்ட இளைய புரவலர் தளவாய் இரா.திருமலையப்பன் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் கோதைமாறன், சண்முகசுந்தரம், ஓய்வு பெற்ற வட்டாட்சியர் அய்யாக்குட்டி, முத்துகுமாரசாமி ஆகியோர் பேசினர். தொடர்ந்து […]