வாக்குப்பதிவு இயந்திரங்கள் அண்ணா பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு அறையில் சீல் வைப்பு ! 

இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றதையொட்டி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் மற்றும் இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தல் பார்வையாளர் (பொது) பண்டாரி யாதவ் ஆகியோர் தலைமையில் வேட்பாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட பிரமுகர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அண்ணா பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி இன்று (20.04.2024) நடைபெற்றது. இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட இராமநாதபுரம்- 338, பரமக்குடி (தனி) -303, முதுகுளத்தூர்- 386, திருவாடானை -347, திருச்சுழி- 276, அறந்தாங்கி-284 என மொத்தம் […]

ஓட்டுபோட சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப சிறப்பு பஸ் மற்றும் ரெயில்கள் இன்று முதல் இயக்கம்..

பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக நேற்று அரசு பொது விடுமுறை அறிவித்து இருந்தது. தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு கட்டாயம் விடுப்பு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தததால் சொந்த ஊர்களுக்கு 17, 18 ஆகிய தேதிகளில் புறப்பட்டு சென்றனர்.சென்னை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தங்கி வேலை செய்து வந்த கூலி தொழிலாளர்கள், ஊழியர்கள் ஓட்டு போடுவதற்காக சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதற்காக அரசு சிறப்பு பஸ்கள் இயக்கின. தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை […]

மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னையில் இருந்து பேருந்துகள் மூலம் மட்டும் ஏப்.17, 18-ல் 4,03,800 பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக தகவல்..

2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு, சென்னையிலிருந்து இயக்கப்பட்ட 7299 பேருந்துகளில் 4,03,800 பயணிகள் பயணித்துள்ளதாக போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார். இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக இந்தியாவில் 102 தொகுதிகளில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக இன்று காலை தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு சென்னையிலிருந்து இயக்கப்பட்ட 7299 […]

தமிழ்நாட்டில் தேர்தல் சுமூகமாக நடைபெற்றது! தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்..

தமிழ்நாட்டில் தேர்தல் சுமூகமாக நடைபெற்றது! தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்.. இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடங்கியது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் முதற்கட்டமாக நாட்டில் உள்ள 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. மக்கள் பலர் தங்கள் ஜனநாயக கடமையை தவறாமல் ஆற்றியுள்ளனர். சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 […]

தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குப்பதிவு! மாவட்ட வாரியாக எத்தனை சதவிகிதம்..!

தமிழகத்தில் 39 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டுள்ள தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டனர்.காலை முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர். நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாக்குப்பதிவில் சற்று மந்தம் ஏற்பட்டது. அதன்பின் வாக்குப்பதிவு செய்ய மக்கள் அதிக அளவில் திரண்ட வண்ணம் உள்ளனர்.இந்நிலையில், இரவு 7 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 72.09 […]

மாநில வாரியாக பதிவாகியுள்ள வாக்குகள் நிலவரம்..

மாநில வாரியாக பதிவாகியுள்ள வாக்குகள் நிலவரம்.. நாடாளுமன்ற தேர்தலில் முதல் கட்டமாக இன்று 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 102 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தல் நிறைவு பெற்றது. இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி (இன்று) தொடங்குகிறது. இறுதி மற்றும் 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெறும் […]

பரந்தூரில் தொடரும் தேர்தல் புறக்கணிப்பால் பரபரப்பு..

பரந்தூரில் தொடரும் தேர்தல் புறக்கணிப்பால் பரபரப்பு.. காஞ்சிபுரம் அருகே பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரும் தேர்தல் புறக்கணிப்பு ஸ்ரீ பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏகனாபுரம், நாகப்பட்டு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், இதுவரை அரசு ஊழியர்கள் 13 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். ஏகனாபுரம் கிராமத்தில் 1400 வாக்காளர்கள் உள்ள நிலையில், இதுவரை ஒரு வாக்காளர் கூட வாக்களிக்கவில்லை. பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு […]

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி வாக்குபதிவு! சட்டமன்ற தொகுதி வாரியாக பிற்பகல் 03: மணி நிலவரம்..

 இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி வாக்குபதிவு சட்டமன்ற தொகுதி வாரியாக பிற்பகல் 03: மணி நிலவரம்.. அறந்தாங்கி : 53.35 சதவீதம். பரமக்குடி (தனி ) : 53.29 சதவீதம். திருவாடனை : 51.37 சதவீதம். இராமநாதபுரம் : 48.35 சதவீதம். முதுகுளத்தூர் : 51.28 சதவீதம். திருச்சுழி : 59.94 சதவீதம். சராசரி : 52.46 சதவீதம்

அரியலூர் மாவட்டம் நரசிங்க பாளையம் வாக்குச்சாவடி அருகே, விசிக – பாஜகவினர் மோதலால் பரபரப்பு..

அரியலூர் மாவட்டம் நரசிங்க பாளையம் வாக்குச்சாவடி அருகே, விசிக – பாஜகவினர் மோதலால் பரபரப்பு.. இருகட்சி நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட மோதலில் இருவரின் மண்டை உடைப்பு. மோதல் காரணமாக 2 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நிறுத்தம் – போலீஸ் குவிப்பு. பதற்றமான வாக்குச்சாவடி என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு. வாக்குப்பதிவு மையத்திற்குள் பிரசாரம் செய்ததாக இரு தரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டு.

பாராளுமன்ற தேர்தல்: 102 தொகுதிகளில் 3 மணி நிலவரப்படி 49.9 சதவீத வாக்குகள் பதிவு..

மக்களவை தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.நாடு முழுவதும் 21 மாநிலங்களில் இதுவரை பதிவாகியுள்ள வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.அதன்படி, 21 தொகுதிகளில் 9 மணி நிலவரப்படி 9.7 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 24.5 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி 39.9 சதவீதம் வாக்குகள் பதிவாகின.இந்நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி […]

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் 25 வாக்கு சதவீதம் பதிவு ! வாக்குச்சாவடி மையத்தில் வேட்பாளர் ஜெயபெருமாள்  ! ! 

ராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலில் நடைபெறுவதையொட்டி அதிகாலை முதல் வாக்காளர் தங்கள் வாக்குகளை செலுத்துவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.  அதன்படி  இந்த நிலையில் 12 மணி நிலவரப்படி 25% வாக்கு பதிவாகியுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.  இதனைத் தொடர்ந்து அதிமுகவின் பாராளுமன்ற வேட்பாளர் ஜெயபெருமாள் ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டார் மேலும்  புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெண்கள் வாக்குச்சாவடி மையத்தை  […]

சென்னை எழும்பூர் – திருச்சி இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் இயக்கம்..

பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கான தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆயிரக்கணக்கான பேருந்துகளை போக்குவரத்துத்துறை இயக்கி வருகிறது.இந்நிலையில், தேர்தலை […]

நாளை (19/04/2024) மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் வரிசை நிலையை அறிந்து கொள்ளும் வகையில் தேர்தல் ஆணையம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது..

நாளை மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் வரிசை நிலையை அறிந்து கொள்ளும் வகையில் தேர்தல் ஆணையம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.. வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வருவதற்கு முன்பே வாக்குச்சாவடியின் வரிசை நிலையை https://erolls.tn.gov.in/Queue/ என்ற இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம்

தேர்தலில் வாக்களியுங்கள். ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள் – பொது மக்களுக்கு வேண்டுகோள்..

இந்திய நாட்டை மதசாற்பட்ட,ஊழலுக்கு துணை போகாமல், மக்கள் நலனுக்காக, எதிர்கால இந்தியாவின் நலனுக்காக பாடுபடக்கூடிய பாரளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்யக்கூடிய ஜனநாயக வழி தேர்தல் நடைபெற ணஉள்ளது. இந்த நிலையில் தற்போது தோல்வி பயத்தில்,முதுகெலும்பு இல்லாத சில கட்சியினர் ஜனநாயக உரிமையான உங்கள் வாக்குரிமையை விலை பேசும் முகமாக மேன்மை நிறைந்த உங்கள் வாக்கை விலை பேசி அற்ப பணத்தை பல்வேறு புரோக்கர்கள் மூலமாகவும்,தன் கட்சிக்காரர்கள் மூலமாகவும் கொடுப்பதாக அறிய முடிகிறது. அன்பிற்குரிய வாக்காளப்பெருமக்களே! இந்த தேர்தல் […]

பச்சிளம் குழந்தைகளின் உடல்நலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி !

சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் மதுரை- ஆனையூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து நடத்திய பச்சிளம் குழந்தைகளின் உடல்நலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆனையூரில் உள்ள சுகாதார மையத்தில் நடத்தப்பட்டது இதில் நிகழ்ச்சியின் ஆரம்பமாக மதுரை சில்ட்ரன் டிரஸ்ட் இன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக சாத்தி தொண்டு நிறுவனத்தின் மதுரை மாவட்ட திட்ட அலுவலர் ரமேஷ் தலைமை ஏற்று சிறப்புரையாற்றினார் நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக கர்ப்பிணி பெண்கள் பின்பற்ற […]

போராட்டத்தை கைவிட்ட ஆணைகுடி கிராம மக்கள் ! தேர்தலில் வாக்களிப்பதாக உத்தரவாதம் !!

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் ஆணைகுடி கிராமத்தில் உப்பளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் கிராம பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவிப்பு தொடர்ந்து இன்று கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் நேரடியாக கிராமங்களுக்கு சென்று கிராம பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து இருதரப்பின் பேச்சு வார்த்தையில் சுமுகமான தீர்வு ஏற்பட்டதால் போராட்டங்களை கைவிட்டனர். மேலும் பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் முழுமையாக வாக்களிப்போம் என்று தெரிவித்தனர் […]

உச்சிப்புள்ளியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ் கனி ஆதரித்து ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் தீவிர வாக்கு சேகரிப்பு !

இன்னும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கான கால அவகாசமாக ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் அதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் உச்சிப்புளி பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார் மேலும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக […]

ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு !

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக போட்டியிடும் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். இன்னும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கான கால அவகாசமாக ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் அதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாக மண்டபம் ஒன்றிய செயலாளர் டி ஜி எஸ் அழகர்சாமி பிஜேபி ஆத்மா கார்த்தி பிஜேபி முருகன் […]

கீழக்கரையில் கீழை கிழக்குநகர் பொதுநல சங்கம் புதிய உதயம் !

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடற்கரை பீச் பார்க் லைட்ஹவுஸ் அருகில் கீழக்கரை இளைஞர்கள் ஒன்றிணைந்து போதை புழக்கம் இல்லாத கீழக்கரையை உருவாக்கிட கீழை கிழக்குநகர் பொதுநல சங்கம் என்ற பெயரில் புதிதாக உருவாக்கியுள்ளனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் எம் கே இ உமர் கலந்து கொண்டு பேசுகையில் . இன்றைய காலகட்டத்தில் போதை பொருள் பழக்கம் அதிகரித்து வருவதாகவும் கீழக்கரையில் இதன் மூலம் குற்ற செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுவதாக தெரிகிறது. கீழக்கரை […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!