பழனி முருகன் கோவிலுக்கு மாவட்ட நீதிபதி என கூறி சாமி தரிசனம் செய்ய வந்த போலி நீதிபதியை பழனி நீதிமன்ற ஊழியர்கள் புகாரின் அடிப்படையில் அடிவாரம் போலீசார் கைது செய்தனர். அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். இதில் மாவட்ட ஆட்சியர்கள் காவல்துறையினர் முக்கிய அரசியல் பிரமுகர்கள் அமைச்சர்கள் இவர்களுக்கு […]
Category: மாநில செய்திகள்
கோடை விடுமுறை, பயணிகளுக்கு வசதியாக சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் நீட்டிப்பு..
பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் தெற்கு ரெயில்வே சார்பில் பல்வேறு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. எனவே, பல்வேறு வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.அந்த வகையில், சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வாரந்திர வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் மற்றும் வாரத்தில் 3 நாள் மட்டும் இயக்கும் வகையில் வந்தே பாரத் […]
கோடைகால பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..
‘கோடை காலத்தில் தண்ணீரின் தேவையும் அதிகம். கோடையில் தண்ணீர் கிடைப்பதும் குறைவு. இதனை மனதில் வைத்து மக்களுக்காக அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’ ‘அனைத்துத் துறை அலுவலர்களும் கவனமாக செயல்பட்டு குடிநீர் பிரச்சனை நிலவக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் சென்று, பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்’ தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்..
பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்டிபிஐ கட்சி முற்றுகை -500க்கும் மேற்பட்டோர் கைது!
இராஜஸ்தானில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி அவர்கள், மக்களிடையே மதவெறுப்பைத் தூண்டும் வகையில் பேசினார். தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய இந்திய தேர்தல் ஆணையம், உரிய நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்து வருகின்றது. ஆகவே, தேர்தல் ஆணையம் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பிரதமர் மோடி பதவி விலகக் கோரியும், சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் இன்று (ஏப்.27) இந்திய தேர்தல் […]
சுட்டெரிக்கும் கோடை வெயில் -இளநீர் விலை ரூ.90 வரை உயர்வு! நடுத்தர மக்கள் கடும் அவதி..
சுட்டெரிக்கும் கோடை வெயில் -இளநீர் விலை ரூ.90 வரை உயர்வு! நடுத்தர மக்கள் கடும் அவதி.. தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்கள், இளநீர் உள்ளிட்டவற்றை அதிக அளவில் வாங்கி குடித்து வருகிறார்கள். இந்த நிலையில் சென்னையில் இளநீர் விலை ரூ.90 ஆக உயர்ந்துள்ளது. ரூ.60-க்கு விற்பனையான பெரிய இளநீர் மற்றும் செவ்விளநீர் ஆகியவற்றின் விலையே அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் இவற்றின் விலை ரூ.60-ல் இருந்து 70 […]
DREAM -11 ஆப் சாப்ட்வேர் மூலமாக புதுவிதமான மோசடி நடக்கிறதா.? மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார்..
DREAM -11 ஆப் சாப்ட்வேர் மூலமாக புதுவிதமான மோசடி நடக்கிறதா.? மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார்.. உள்ளூர் கிரிக்கெட் தொடங்கி சர்வதேச போட்டிகள் வரையிலும் மற்றும் கபாடி லீக் ,புட்பால் லீக் உள்ளிட்டபோட்டிகளின் போது ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல்ஐ குறிவைத்து பல்வேறு மொபைல் ஆஃப் மூலமாக போட்டி நடத்தி பணம் செலுத்தி அதில் கலந்துகொண்டு வெற்றிபெறும் நபர்களுக்கான அதிகபரிசுத்தொகை வழங்கப்பட்டுவருகிறது. இதில் விளையாட தொடங்கும்போதே ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் பெறப்படுகிறது. […]
சென்னையில் மெரினா கடற்கரை எதிரே பிரமாண்டமாக அமைகிறது சுதந்திர தின அருங்காட்சியகம்! முதலமைச்சர் அறிவிப்பு..
சென்னையில் மெரினா கடற்கரை எதிரே பிரமாண்டமாக அமைகிறது சுதந்திர தின அருங்காட்சியகம்! முதலமைச்சர் அறிவிப்பு.. ஹுமாயூன் மாஹாலில் 80,000 சதுரஅடியில் அருங்காட்சியகம் அமைகிறது – தமிழக அரசு அருங்காட்சியகத்தில் வைக்க பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழங்கால பொருட்களை வழங்கலாம் – தமிழக அரச கையெழுத் பிரதி, பழங்கால ஆவணம், செய்தித்தாள்கள், ஜெயில் வில்லைகள், இராட்டைகளை வழங்க அரசு கோரிக்கை பொருட்கள் நன்கொடை வழங்குவோரின் பெயர்கள் அருங்காட்சியகத்தில் இடம்பெறும் எனவும் அரசு அறிவிப்பு. 75 வது சுதந்திர தினவிழாவில் […]
தந்தையை கொடூரமாக தாக்கி கொலை செய்த மகன்! சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய சூழ்நிலையில் வழக்கு பதிவு..
தந்தையை கொடூரமாக தாக்கி கொலை செய்த மகன்! சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய சூழ்நிலையில் வழக்கு பதிவு.. சொத்து பிரச்சினையில் தந்தையை மகன் கொடூரமாக தாக்கும் ‘சிசிடிவி’ வீடியோ காட்சி வைரலான நிலையில், 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பெரம்பலுார் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே கட்டராங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேல் (68). இவருக்கு ஹேமா (65) என்ற மனைவியும், சக்திவேல் (34) எனும் மகனும், சங்கவி (32) எனும் மகளும் உள்ளனர். குழந்தைவேலுக்கு […]
எரியோடு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு! லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் போக்சோவில் கைது..
எரியோடு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு! லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் போக்சோவில் கைது.. திண்டுக்கல், எரியோடு அருகே கோவிலூர் பகுதியை சேர்ந்த பாலுபாரதி(45) இவர் குஜிலியம்பாறை வட்ட லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஆவார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன. இவருக்கு D.கூடலூரை சேர்ந்த பெண்ணிடம் தொடர்பு ஏற்பட்டது. கணவருடன் பிரிந்து அந்தப் பெண் 2 குழந்தைகளுடன் பாலுபாரதியின் தோட்டத்தில் வீட்டில் வசித்து வருகிறார். நிலையில் அந்தப் பெண்ணின் 10 வயது மகளுக்கு […]
டெல்லியில் ஸ்பைடர் மேனாக கெத்து காட்டிய ஜோடி.!சூப்பர் மேனாக தட்டித் தூக்கிய போலிஸ்..
டெல்லியில் ஸ்பைடர் மேனாக கெத்து காட்டிய ஜோடி.!சூப்பர் மேனாக தட்டி தூக்கிய போலிஸ்.. டெல்லி – துவாரகா பகுதியில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட, ஸ்பைடர் மேன் உடை அணிந்து பைக்கில் வித்தை காட்டிய ஜோடி. வீடியோ வைரலானதை அடுத்து ஸ்பைடர் மேன் மற்றும் அவரது பெண் நண்பரை கைது செய்த போலீசார் ரூ.21,500 அபராதம் விதித்தனர்.
ஆட்டுக்குட்டிகளை மோத விட்டு இரத்தம் குடிக்கும் ஓநாயின் குரூர மனப்பான்மையேமோடியின் பேச்சில் வெளிப்படுகிறது! பிரதமர் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்!- சீமான் அறிக்கை..
இசுலாமியர்களை இழிவுப்படுத்தி, இந்து – இசுலாம் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதற்கு பிரதமர் மோடி பொதுமன்னிப்பு கேட்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையின்போது இசுலாமியப் பெருமக்களை இழிவுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பேசியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. இந்துக்களுக்கும் இசுலாமியர்களுக்கும் இடையே கலவரத்தைத் தூண்டும் வகையிலான பிரதமர் மோடியின் பேச்சு மதவெறியின் உச்சமாகும். இந்தியப் பெருநாடு விடுதலையடைவதற்கு முன்பிருந்தே இசுலாமியப் […]
பாலக்காடு – திருச்செந்தூர் ரயிலுக்கு ஸ்ரீவைகுண்டம் நிறுத்தம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு..
பாலக்காடு – திருச்செந்தூர் ரயிலுக்கு ஸ்ரீவைகுண்டம் நிறுத்தம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு.. பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூருக்கு தினசரி முன்பதிவில்லா விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு சோதனை அடிப்படையில் கடந்த ஜனவரி 26ம் தேதி முதல் ஏப்ரல் 25ம் தேதி வரை ஸ்ரீவைகுண்டம் நிறுத்தம் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த ரயில் இரு மார்க்கத்திலும் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் 1 நிமிடம் நின்று சென்றது. […]
இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த இறைச்சிகளை விற்பனை செய்ய வேண்டும்: நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தல்! புகார் எண்கள் அறிவிப்பு..
இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த இறைச்சிகளை விற்பனை செய்ய வேண்டும்: நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தல்! புகார் எண்கள் அறிவிப்பு.. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழி வாத்து மற்றும் காடை இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த இறைச்சிகளை விற்பனை செய்ய வேண்டும். நோயுற்றது பேயல் அறிகுறிகள் உள்ள பறவைகளை இறைச்சிக்காக பயன்படுத்தக் கூடாது. உணவகங்களில் பயன்படுத்தப்படும் இறைச்சிகள் சுத்தமாகவும். சுகாதாரமாகவும் இருப்பதை உறுதி செய்து பின்பு பயன்படுத்த வேண்டும். இறைச்சி கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மருத்துவர் சான்று […]
முதல்முறையாக தமிழகத்தில் அதிக மாவட்டங்களுக்கு ஒரேநேரத்தில் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை..
தமிழகத்தின் 19 மாவட்டங்களில் நாளை வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி,சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர். திருப்பூர், கோவை, சிவகங்கை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் நாளை வெப்ப அலை வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தாண்டில் தமிழகத்தில் அதிக மாவட்டங்களுக்கு ஒரேநேரத்தில் வெப்ப அலைக்கான மஞ்சன் அலர்ட் விடுக்கப்பட்டது இதுவே […]
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 3 மணி நிலவரப்படி 50 சதவீதம் வாக்குகள் பதிவு..
இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது.இதைத்தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மணிப்பூர், திரிபுரா, காஷ்மீர் […]
மதுரையில் பட்டபகலில் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இளைஞர் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை: பழிக்கு பழி என தகவல்..
மதுரையில் பட்டபகலில் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இளைஞர் கொடூரமான முறையில் வெட்டிப்படுகொலை: பழிக்கு பழி என தகவல்.. மதுரை மாநகர் மேல அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் அருள்முருகன் (29) இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தையுடன் வசித்துவருகிறார் மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் லோடுமேனாக பணிபுரிந்துவரும் அருள்முருகன் இன்று மதியம் விளாங்குடி பகுதியில் நடந்துசென்றபோது திடிரென அங்குவந்த மர்ம கும்பல் ஒன்று அருள்முருகனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்னர். மேலும் அருள்முருகனின் கையை தனியாக வெட்டியதோடு முகத்தில் 20க்கும் […]
நடந்து சென்ற மூதாட்டி மீது அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலி: போலீசார் விசாரணை..
நடந்து சென்ற மூதாட்டி மீது அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே மூதாட்டி பலி: போலீசார் விசாரணை.. மதுரை பைபாஸ் ரோடு காளவாசல் பிபி சாவடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மதுரை மேலக்கல் பகுதியைச் சேர்ந்த குப்பாயி வயது 70 என்பவர் மீது விக்கிரமங்கலத்தில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மோதியது. இதில் முன்சக்கரம் மற்றும் பின் சக்கரம் இரண்டும் மூதாட்டி மீது ஏறி இறங்கியது. ஆகையால் சம்பவ இடத்திலேயே […]
திரு உத்தரகோசமங்கையில் 10 ஆம் நாள் சித்திரை பெருவிழா ! வானவேடிக்கையுடன் கோலாகல கொண்டாட்டம் !!
ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் மங்களநாதர் மங்களீஸ்வரி ஆலயம் பாண்டியர்களால் கட்டப்பட்டு இங்குள்ள சுவர்களில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருப்பதும் ஒவ்வொரு தூண்களிலும் சிற்பத்தால் பாண்டியர்களின் ரகசியம் புதைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா பத்து நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம்.இந்த ஆலயத்தில் உலகத்திலேயே எந்த முருகனுக்கும் இல்லாத ஒரு தனி சிறப்பு முருகப்பெருமானுக்கு முன்பு வெள்ளை யானை இருப்பதே ஆகும் இந்திரன் மகளான தெய்வானையை மணம் முடித்த முருகப்பெருமானுக்கு இங்குதான் இந்திரன் சீதனமாக வெள்ளை யானையை வழங்கியதாக சொல்லப்படுகிறது. […]
இலஞ்சி டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்லூரியில் உலக புத்தக தின விழா..
இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் உலக புத்தக தின விழா.. தென்காசி மாவட்டம், இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் உலக புத்தக தின விழா கல்லூரி தாளாளர் ராஜ்குமார் தலைமையில் நடந்தது. விழாவில், கல்லூரி முதல்வர் (பொ) தங்கம் முன்னிலை வகித்தார். நூலகர் முனைவர் ஏஞ்சலின் உலக புத்தகம் தினம் குறித்தும் மாணவ மாணவிகள் புத்தகம் வாசிப்பதின் அவசியம் குறித்தும், அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும், வாழ்வின் உயர்நிலைக்கு […]
தஞ்சையில் மாபெரும் கல்வி கண்காட்சி ! மாணவ மாணவிகளுக்கு பல்வேறு சலுகைகள் !!
தஞ்சாவூர் ராமநாதன் ரவுண்டானா அருகே தனியார் திருமண மண்டபத்தில் 40க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கல்வி கண்காட்சி நடைபெறுகிறது. இதில் தமிழ்நாட்டில் உள்ள எல்லா கல்லூரிகளுக்கும் மாணவர்கள் சென்று அங்கு இருக்கும் பாடத்திட்டங்கள், பாடபிரிவுகள், கல்விகட்டணம் தெரிந்து கொள்ளும் வகையில் வரும் ஏப்ரல் 27, 28 சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் நடைபெறுவதால் மாணவர்கள் கலந்து கொண்டு எல்லா விபரங்களையும் ஒரே இடத்தில் தெரிந்துகொள்ளலாம். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவ, மாணவியருக்கு ஸ்கூட்டர், […]