தமிழ்நாட்டில் பல்வேறு ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதை தொழிலாக செய்து வந்த முதியவர் அதிரடி கைது.. சென்னை, மதுரை, இராமநாதபுரம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் பல்வேறு ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முதியவரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை பழங்காநத்தத்தை சேர்ந்த 60 வயதுடைய குமரேசன் எனும் முதியவர் கடிதம் வாயிலாக ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து மதுரை ரயில்வே காவல்துறையினர் நடத்திய விசாரணையில் குமரேசன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிய […]
Category: மாநில செய்திகள்
பழனியில் அதிமுக துணை பொது செயலாளர் நத்தம் விஸ்வநாதன் காரை வழிமறித்து முற்றுகையிட்ட அதிமுக பிரமுகர்கள்!ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு..
பழனியில் அதிமுக துணை பொது செயலாளர் நத்தம் விஸ்வநாதன் காரை வழிமறித்து முற்றுகையிட்ட அதிமுக பிரமுகர்கள்!ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு.. பழனியில் அதிமுக சார்பில் பட்டத்து விநாயகர் கோவில் அருகே நீர்பந்தல் திறக்கும் விழா அதிமுக துணை பொது செயலாளரும் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளருமான நத்தம் விஸ்வநாதன் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு நத்தம் விஸ்வநாதன் தனது காரில் கிளம்பிய போது அதிமுக நகர செயலாளர் முருகானந்தம் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் […]
பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய தென்காசி மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்..
தென்காசியில் குடிநீர் வழங்கல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்; சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்.. தென்காசி மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் குடிநீர் வழங்கல் தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் அறிவுறுத்தினார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் குடிநீர் வழங்கல் தொடர்பான […]
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரியில் வெடி விபத்து – 4 பேர் உடல் சிதறி உயிரிழப்பு..
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரியில் வெடி விபத்து – 4 பேர் உடல் சிதறி உயிரிழப்பு.. ஆவியூர் – கீழஉப்பிலிக் குண்டு சாலையில் உள்ள தனியார் கல்குவாரியில் வெடி விபத்து. பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளை, குவாரி அருகே உள்ள அறையில் இறக்கியபோது வெடிமருந்துகள் வெடித்து சிதறின. வெடி விபத்தில் 4 பேர் உடல் சிதறி பலி, 8 பேர் காயம்; 2 வாகனங்கள் முற்றிலும் சேதம். மேலும் மனித உடல்கள் காட்டுப் பகுதியில் […]
தென்காசி வாக்கு எண்ணிக்கை மையத்தில் 93 சிசிடிவி கேமராக்களும் ஒருமித்து பழுதானது எப்படி?; கேள்வி எழுப்பிய டாக்டர் கிருஷ்ணசாமி..
தென்காசி வாக்கு எண்ணிக்கை மையத்தில் 93 சிசிடிவி கேமராக்களும் ஒருமித்து பழுதானது எப்படி?; கேள்வி எழுப்பிய டாக்டர் கிருஷ்ணசாமி.. தென்காசி வாக்கு எண்ணிக்கை மையத்தில் 93 சிசிடிவி கேமராக்களும் ஒருமித்து பழுதானது எப்படி? என புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 19 ஆம் தேதி தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவு […]
அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் பணி பாதுகாப்பு மற்றும் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்து ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்!- மே தின வாழ்த்துச் செய்தியில் WJUT கோரிக்கை..
WJUT WORKING JOURNALISTS UNION OF TAMILNADU உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் பணிப்பாதுகாப்பு மற்றும் அவர்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும்! -WJUT யின் மே தின வாழ்த்துச் செய்தி!!! “தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின்” மாநிலத் தலைவர் அ.ஜெ.சகாயராஜ், மாநிலப் பொதுச்செயலாளர் பா. பிரதீப்குமார், மாநிலப் பொருளாளர் இரா.ராம்ஜி ஆகியோர் வெளியிட்டுள்ள “மே” தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது; உலகெங்கும் உள்ள உழைக்கும் தொழிலாளர் அனைவருக்கும் தொழிலாளர் தின (மே தினம்) வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். […]
சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில்தனியார் பேருந்து தலைகீழாக கவிழ்ந்ததில் உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்வு..
தமிழகத்தில் தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வெயிலில் இருந்து தப்பிக்க ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில், ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பஸ் மலைப்பாதையின் 11வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி 50 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் ஒரு சிறுவன் உட்பட 6 பேர் […]
முதுகுளத்தூரில் மாவட்ட ஊராட்சி செயலரை கண்டித்து ஆர்ப்பாட்டம் !
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன்பாக மாவட்ட ஊராட்சி செயலாளர் சந்தோசத்தை கண்டித்து டி என் ஆர் ஓ ஏ சங்க பணியாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முதுகுளத்தூர் வட்ட கிளை தலைவர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஊராட்சி செயலாளரின் தொடர்ச்சியாக ஊழியர்கள் விரோதப் போக்கை கண்டித்தும், மாவட்ட ஊராட்சி அலுவலக பணியாளர் துர்கா மீது துரை ரீதியான நடவடிக்கை எடுக்காமல் அவர் மீது காவல்துறையில் புகார் அளித்ததை திரும்ப பெற […]
பனையடியேந்தல் கிராமத்தில் வேளாண்மை கல்லூரி மாணவி விழிப்புணர்வு நிகழ்ச்சி ! விவசாயிகள் பங்கேற்பு !!
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பனையடியேந்தல் கிராமத்தில் ஒருங்கிணைந்த பண்ணை நிர்வாகம் என்ற தலைப்பில் பாரம்பரியமான விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பம் மூலம் விவசாயம் செய்வது எப்படி என்று விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை இறுதி ஆண்டு படிக்கும் மாணவி மூ.சூரிய லட்சுமி தலைமையில் நடைபெற்றது. மேலும் ஒருங்கிணைந்த பண்ணை நிர்வாகம் முறையினை எவ்வாறு மானாவாரி நிலங்களில் (1 எக்டர்) அமைப்பது பற்றியும் , ஆடு மாடு வளர்ப்பு […]
நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை! ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்தவர் நிர்மலா தேவி.கடந்த 2018ம் ஆண்டு கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தாக நிர்மலாதேவி பேசிய ஆடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பரவியது. இதையடுத்து, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், விபச்சார தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் நிர்மலா தேவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.நிர்மலா தேவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவித்தனர்.இதற்கிடையே, […]
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36வது முறையாக நீட்டிப்பு..
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36வது முறையாக நீட்டிப்பு.. சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு. காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற காவலை ஜூன் 4ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். வங்கி சார்பில், அசல் ஆவணங்கள் முழுமையாக சமர்ப்பிக்கப்படும் வரை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கின் […]
திட்டமிட்டபடி 12 ம் வகுப்பு மற்றும் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 1-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை தமிழகம் முழுவதும் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினா்.பத்தாம் வகுப்புக்கான பொதுத்தோ்வு மாா்ச் 26-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 8-ந்தேதி நிறைவடைந்தது. இந்தத் தோ்வை சுமாா் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் எழுதினா்.பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு விடைத்தாள் திருத்தும் […]
உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் பணிப்பாதுகாப்பு மற்றும் அவர்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும்! – எஸ்டிபிஐ மாநில தலைவரின் மே தின வாழ்த்துச் செய்தி..
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; உலகெங்கும் உள்ள உழைக்கும் தொழிலாளர் அனைவருக்கும் தொழிலாளர் தின (மே தினம்) வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உழைக்கும் தொழிலாளர்களின் கடுமையான உழைப்பின் மூலம் நமது நாட்டில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நாட்டின் வளர்ச்சி ஒவ்வொன்றிலும் ஏராளமான தொழிலாளர்களின் வியர்வையும், பங்களிப்பும் அடங்கியுள்ளது என்பதை மறுக்க முடியாது. தொழிலாளர்களின் எட்டு மணி நேர வேலையையும், எட்டு மணி நேர ஓய்வையும், எட்டு மணி நேர உறக்கத்தையும், […]
COVISHIELD தடுப்பூசியால் சில அரிய பக்க விளைவுகள் ஏற்படும்: AstraZeneca நிறுவனம் பிரிட்டன் நீதிமன்றத்தில் அளித்த அதிர்ச்சி தகவல்..
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கொரோனா தடுப்பூசியை பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தன.இதில் இங்கிலாந்தைச் சேர்ந்த அஸ்ட்ராஜெனகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து தடுப்பூசியை உருவாக்கின. இந்த தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டது. பல நாடுகளில் கொரோனா காலத்தில் இந்த தடுப்பூசி தான் போடப்பட்டது.இந்தியாவில் சுமார் 175 கோடிக்கும் அதிகமாக கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது. […]
ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு இந்த E Pass நடைமுறை மூலம் கிடைக்கும் பலன்கள் என்ன? பாதிப்புகள் என்னென்ன.?
ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு இந்த E Pass நடைமுறை மூலம் கிடைக்கும் பலன்கள் என்ன? பாதிப்புகள் என்னென்ன.? யார் யார் வருகிறார்கள், எவ்வளவு பேர் வருகிறார்கள் என்கிற புள்ளி விவரங்கள் அரசாங்கத்திற்கு கிடைக்கும். அந்த தரவுகளின் அடிப்படையில் அதிக கூட்ட நெரிசல், போக்குவரத்து ஆகியவற்றை ஒழுங்குபடுத்தலாம். ஒரே குடும்பத்தில் தனி தனி வாகனங்களில் வருபவர்கள் ஒரே வாகனத்தில் வருவார்கள் இதன் மூலம் வாகனங்களின் எண்ணிக்கையும் சற்று குறையும். அரசு பேருந்து, ரயில்களில் கூட்டங்கள் அதிகரிக்கும். வசதி உள்ளவர்கள் […]
பழனியருகே கோவில் திருவிழாவில் 500 ஆட்டுகிடாய் வெட்டி ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பிரமாண்டமான அன்னதான விருந்து..
பழனியருகே கோவில் திருவிழாவில் 500 ஆட்டுகிடாய் வெட்டி ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பிரமாண்டமான அன்னதான விருந்து.. திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கோம்பைபட்டி கிராமத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பெரியதுரையான் கருப்பணசாமி கோவில் . பழமையான இந்த கோவிலில் சித்திரை மாதம் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு பெரியதுரையான் கோயில் சித்திரைத்திருவிழா தொடங்கி நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு பக்தர்களால் வழங்கப்பட்ட 500 ஆட்டு கிடாய்கள் மற்றும் 300கோழிகள் கருப்பணசாமிக்கு பலிகொடுக்கப்பட்டது. இன்று கிடாய் […]
மதுரையில் பெண் ரயில்வே கார்டை தலையில் வெட்டி செல்போன், மற்றும் பர்சை பறித்து, திருடர்கள் அட்டகாசம்:
மதுரையில் பெண் ரயில்வே கார்டை தலையில் வெட்டி செல்போன், மற்றும் பர்சை பறித்து , திருடர்கள் அட்டகாசம்: மதுரை ரயில்வே கோட்டத்தில் ரயில்வே கார்டாக வேலை பார்ப்பவர் ராக்கி (28)கேரளா மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் ரயில்வே காலனியில் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று பிற்பகல் திண்டுக்கலிருந்து திருநெல்வேலி செல்லும் காலி ரயில் பெட்டிகளின் கார்டாக திண்டுக்கல்லில் ஏறியுள்ளார்.ரயில் மதுரை கூடல்நகர் பகுதியில் சிக்னலுக்காக காத்து கொண்டிருந்த போது திடீரென்று ரயில் பெட்டியில் ஏறிய இருவர் ரயில்வே […]
மே 1 முதல் சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரைக் கிளைக்கு ஒரு மாதம் கோடை விடுமுறை! அவசர வழக்குளை மட்டும் விசாரிக்க நீதிபதிகள் நியமனம்..
சென்னை ஐகோர்ட்டு மற்றும் மதுரை கிளைக்கு ஆண்டு தோறும் மே மாதம் விடுமுறை விடுவது வழக்கம். அதன்படி வரும் மே 1-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடுமுறை காலத்தில் சென்னை ஐகோர்ட், ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதுதொடர்பாக, ஐகோர்ட் தலைமை பதிவாளர் எம்.ஜோதிராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:சென்னை ஐகோர்ட்டில் மே மாதம் 8, 9-ம் தேதிகளில் நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, கே.குமரேஷ்பாபு, ஆர்.கலைமதி ஆகியோரும், 15, […]
2024 ஆம் ஆண்டுக்கான விசிக_விருதுகள்:நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர் ‘ விருது!”காயிதேமில்லத் பிறை விருது” எஸ்.என். சிக்கந்தர், (மாநிலத் தலைவர், வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா) திருமாவளவன் அறிவிப்பு..
2024 ஆம் ஆண்டுக்கான விசிக_விருதுகள்:நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர் ‘ விருது!“காயிதேமில்லத் பிறை விருது” எஸ்.என். சிக்கந்தர், (மாநிலத் தலைவர், வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா) திருமாவளவன் அறிவிப்பு.. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்த சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம். சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு […]
மதுரை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் புகார்மனு அளிக்க கஞ்சாவுடன் வந்த பாஜக மாநில நிர்வாகி அதிரடி கைது..
மதுரை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் புகார்மனு அளிக்க கஞ்சாவுடன் வந்த பாஜக மாநில நிர்வாகி அதிரடி கைது.. முதல்வரின் பாதுகாப்பு விதிமீறல் ,கஞ்சா உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவனியாபுரம் போலீஸார் பாஜக நிர்வாகியை கைது செய்தனர். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விடுமுறை பயணமாக கொடைக்கானல் செல்வதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை இன்று காலை மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் முதல்வரிடம் மனு அளிப்பதற்காக வந்த […]