மேட்டுப்பாளையத்தில் மக்கள் இரவு நேரத்தில் திடீர் போராட்டம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் யு பி எல் பிளீச்சிங் தனியா நிறுவனம் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிறுவனத்தில் இருந்து வெளியாகும் கழிவு புகையால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் காற்றுடன் கலந்து பல துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது இந்த நிலையில் இன்று இரவு வெளியான கழிவு புகையால் மிகவும் சிரமத்திற்கு உள்ளான பொதுமக்கள் திடீரென்று தனியார் நிறுவனத்தின் முன்பு நிறுவனத்தை மூடக்கோரி திடீர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். இதனால பகுதியில் சிறிது […]
Category: மாநில செய்திகள்
தமிழக ஆளுநர் ஆர்என் ரவி போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை சந்திப்பு.!
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், கிடப்பில் போடப்பட்டுள்ள இருநாட்டு மீனவர் பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் மீனவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மீனவர்களின் காத்திருப்பு போராட்ட பந்தலுக்கு வந்த தமிழக ஆளுநர் ஆர்என் ரவி மீனவர்களின் கோரிக்கை மனுவை பெற்று உடனடியாக […]
மீனவர்கள் போர்வையில் சிலர் கடத்தலில் ஈடுபடுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.!
ராமநாதபுரத்தில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசு எந்தவித அறிவிப்பும் செய்யாத நிலையில் அது குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக முதல்வர் கூட்டுவது தேவையில்லாதது இதனால் தான் பாஜக இக்கூட்டத்தில் பங்கேற்பதில்லை என கடிதம் எழுதியுள்ளேன் எனவும் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்வது தொடராமல் இருக்க. வரும் 10ம் தேதி இரு நாட்டு உயர்மட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை […]
தஞ்சாவூரில் ஆரோக்கிய நடைப்பயணம்.!
தஞ்சாவூரில் சத்யா நடைப்பயிற்சியாளர்கள் சங்கத்தின் சார்பிலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆதரவுடனும் நடந்த பெரும் 8 கி. மீ.ஆரோக்கிய நடை பயணம் (Health walk) மிகச் சிறப்பாக இன்று நடைபெற்றது. சங்கத் தலைவர் கோ. சீனிவாசன் அவர்கள் தலைமையில், சங்க செயலாளர் ஜெ. ஜெயக்குமார் முன்னிலையில் ஆசிரியர் கோவிந்தராஜ் அவர்கள் அன்னை சத்யா ஸ்டேடியத்திலிருந்து துவக்கி வைத்தார். அவர் உடல் மன அரோக்யத் தைப்பற்றி எடுத்துரைத்தார். நடைப்பயிற்சியின் முக்கியத்துவத்தை விளக்கினார். சங்கத்தின் பணிகளை பாராட்டினார். 50க்கும் […]
அரோபனா இந்தியன் பள்ளியின் 3வது ஆண்டு விழா.!
மதுரை, அரோபனா இந்தியன் பள்ளியின் 3வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் ஸ்ரீ அரபிந்தோ மீரா கல்விக்குழுத் தலைவர் முனைவர் C.சந்திரன் தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாக இயக்குநர் MC. அபிலாஷ், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை வரவேற்றுப் பேசினார். இணை இயக்குநர் நிக்கிபுளோரா கலந்து கொண்டு பரிசு வழங்கினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்பட இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதனைத் தொடர்ந்து […]
சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ ராக்கப்பெருமாள் திருக்கோவிலில் பாரிவேட்டை பெரு விழா.!
பொங்கல் வைத்தும் கரும்பால் தொட்டி கட்டியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாம்பு விழுந்தான் சாலை அருகே அமைந்துள்ளது ஸ்ரீ ராக்கப்பெருமாள் திருக்கோவில் இங்கு சிவராத்திரியை முன்னிட்டு பாரிவேட்டை பெருவிழாவானது வெகு விமர்சையாக நடைபெற்றது இதனை அடுத்து பெண்கள் ஆலயத்தைச் சுற்றிலும் பொங்கல் வைத்து சுவாமிக்கு படையலிட்டும் கரும்பால் தொட்டிக்கட்டியும் நேர்த்திக்கடன் கடனை செலுத்தினர் முன்னதாக மூலவருக்கு முன் அமைந்துள்ள அக்னி குண்டத்தில் அக்னி வார்த்து சிறப்பு யாகசாலை நடத்தப்பட்டு பூர்ணாகுதி சமர்ப்பிக்கப்பட்டது பின்னர் பூஜிக்கப்பட்ட […]
சிறுமுகை லிங்காபுரம் பகுதி பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு உபயோக பொருட்கள் வழங்கும் விழா.!
கோவை மாவட்டம் சிறுமுகை ரோட்டரி சங்கம் மற்றும் திருப்பூர் சுமார் சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து சிறுமுகை லிங்கபுரம் அருகே உலியூர் வனப்பகுதியில் வசிக்கும் 20க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் குடிநீர் ட்ரம் தார்பாய்கள் சமையல் பாத்திரங்கள் பள்ளி குழந்தைகளுக்கு தேவையான உடைகளையும் வழங்கினார்கள் இந்த நிகழ்ச்சிகள் கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு உறுப்பினர் கவிதா கல்யாண சுந்தரம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ் எம் டி […]
திருவாடானைப் பகுதியில் திடீர் மழை: மகிழ்ச்சியுடன் வரவேற்ற பொதுமக்கள்..!
திருவாடானை பகுதியில் சற்று முன் பெய்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த தாங்க முடியாத வெப்பம் மற்றும் புழுக்கத்தால் மக்கள் மிகவும் சோர்வடைந்து காணப்பட்டனர். வெளியில் செல்ல முடியாமல், அன்றாடப் பணிகளைச் செய்வதிலும் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். இந்த நிலையில், இன்று காலை திடீரென அரை மணி நேரம் நல்ல மழை பெய்தது. இதனால் வறண்டு கிடந்த […]
அதிகாரிகளை நம்பி காத்திருந்தது போதும்: தானாக முன் வந்த தலைமை ஆசிரியருக்கு பாராட்டு..!
புதிய கழிப்பறைகள் கட்டி மாணவ மாணவிகளையே திறக்க வைத்து அசத்தல்… அதிகாரிகளின் அலட்சியத்தை முறியடித்து மாணவ மாணவிகளுக்கு சொந்த செலவில் கழிப்பறை கட்டிக் கொடுத்த தலைமை ஆசிரியர்.. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 60 மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் கழிப்பறைகள் சிதரமடைந்து மாணவ மாணவிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் என தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் உடனே அப்பள்ளியின் கழிப்பறைகளை இடித்து […]
மதுரை ஶ்ரீ அரபிந்தோ மீரா யூனிவர்சல் பள்ளி 9வது ஆண்டு விழா.!
மதுரை ஶ்ரீ அரபிந்தோ மீரா யூனிவர்சல் பள்ளி 9வது ஆண்டு விழா அரோபனா இந்தியன் பள்ளி வளாகத்திலநடைபெற்றது. விழாவுக்கு அரபிந்தோ மீரா பள்ளிக் குழுமம் தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். இயக்குனர் அபிலாஷ் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் ஐஐடியில் தேர்வான மாணவர்கள் மற்றும் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், எல்லோரும் […]
கிராம உதவியாளரை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தாலுகாவில் ‘ஆழிகுடி’ குரூப் கிராம உதவியாளராக பணிவாற்றி வருபவர் சுதாகர். இவரை கடந்த சில நாட்களுக்கு முன்புதொண்டி அருகே வீர சங்கிலி மடம் அருகில் இருசக்கர வாகனத்தில் வரும்போது சின்னத் தொண்டியை சேர்ந்த நல்லசிவம், முத்து, பொன்னையா, மாரியப்பன், ஆகியோர்முன் விரோதம் காரணமாக சேர்ந்து கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இதில் படுகாயம் அடைந்த சுதாகர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய […]
அரசமகன் ஆலய மாசிக் களரி பெருவிழா .!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கலையூர் க.புத்தனேந்தல் கிராமத்தில் அருள் பாலிக்கும் அருள்மிகு அரசமகன்,சிவகாளி, சப்த கன்னிகள்,அரவான், உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மாசிக் களரி பெருவிழாவானது சிறப்பாக நடைபெற்றது முன்னதாக அரச மகனுக்கு பலகாரம் நவதானியங்கள் படைத்து வழிபாடு செய்தனர் தொடர்ந்து பூஜை பெட்டிகள் புறப்பாடு செய்யப்பட்டு வீதி உலாவும் நடைபெற்றது பின்னர் பக்தர்கள் பால் பொங்கல் வைத்தும் ஆடுகள் பலியீட்டும் நேர்த்திக்கடனை செலுத்தினர் மேலும் பேச்சிஅம்மனுக்கு ஞானப் புல்லால் தோரணம் கட்டி பாலால் செய்யப்பட்ட கரும்பு […]
மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் கருத்து கேட்கும் நிகழ்ச்சி.!
கோவை மாவட்ட மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பொது இடங்கள், நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் தற்காலிகமாக மற்றும் நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், சமூகம், மதம், சங்கம், சார்ந்த அனைத்து கொடிக்கம்பங்களும் உடனடியாக அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையின் மூலம் உத்தரவிட்டுள்ளது இதற்கான அறிவுறுத்தல் மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் கேட்பு கூட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது இக் கூட்டத்தில் மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் அமுதா, மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சின்ன […]
மேட்டுப்பாளையத்தில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழா…
அஞ்சல் சமூக வளர்ச்சி விழா… மேட்டுப்பாளையம் தலைமை அஞ்சலகத்தில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவானது தலைமை அஞ்சலக அதிகாரி நாகஜோதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக காந்தியடிகள் காவலர் விருது பெற்ற மேட்டுப்பாளையம் நகர காவல் ஆய்வாளர் சின்னக்காமன் கலந்து கொண்டு பேசுகையில் இன்றைய தலைமுறை பணம் சம்பாதிப்பதோடு மட்டுமின்றி சேமிக்கவும் வேண்டும், அஞ்சல் துறையின் காப்பீடு மற்றும் செல்வமகள் சேமிப்பு திட்டம் மேலும் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு முறைமைகள் குறித்தும் குழந்தைகளுக்கு ஏற்படும் […]
பழைய வழித்தடங்களில் இயங்கும் மினி பஸ்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் புதிய வழித்தடங்களை மாற்றி அமைக்க வேண்டும்: மினி பஸ் உரிமையாளர்கள் வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் மினி பஸ்கள் இயங்கி வருகிறது. மதுரை மாநகர் மற்றும் கிராமங்களுக்கு இடையே மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழக அரசு சமீபத்தில் மினி பங்களுக்கான புதிய வழித்தடங்களுக்கான அங்கீகாரம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து மதுரை மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மினி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:- பழைய மினி பஸ் உரிமையாளர்களுக்கு ஏற்கனவே வழங்கியுள்ள வழித்தடத்தில் எவ்வித இடையூறு இல்லாமல் […]
சில நிமிடங்களுக்குள் உயிரிழப்பை ஏற்படுத்தும் பாதிப்பை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து மதுரை மீனாட்சி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை . !
மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஆபத்தான அடிவயிற்றுக் குருதிக்குழாய் வீக்கத்திலிருந்து முதியவர் உயிரை காப்பாற்றிய உள்நாள அறுவை சிகிச்சை என்ற சிக்கலான சிகிச்சையை வெற்றிகரமாக செய்து உள்ளார்கள். அடிவயிற்று பெருந்தமனியில் கண்டறியப்பட்ட குருதிநாள அழற்சி 7.2.செ.மீ அளவுடன் இருந்த வீக்கத்தை சில நிமிடங்களுக்குள் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய இந்த பாதிப்பை வழக்கமான எவர் செயல்முறையில் நோயாளிக்கு காயத்தை குறைக்கும் சருமத்தின் வழியாக குருதிக்குழாய்களை அணுகி அறுவை சிகிச்சை நிபுணர்கள் இரண்டு நாட்களில் 70 வயது முதியவருக்கு […]
பொது தேர்வில் மாணவ மாணவிகள் அதிக மதிப்பெண் பெற ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் சிறப்பு பூஜை.!
பொது தேர்வில் மாணவ மாணவிகள் அதிக மதிப்பெண் பெற ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் சிறப்பு பூஜை தலைமை குருசாமி மோகன் சாமி Another வழங்கினார்! பொதுத்தேர்வில் மாணவ மாணவிகள் அச்சமின்றி சிறப்பாக தேர்வு எழுதி நல் மதிப்பெண் பெறுவதற்காக10-ம் வகுப்பு 11-ம் வகுப்பு 12-ம் வகுப்பு பள்ளி மாணவ மாணவியருக்கு சிறப்பு பூஜை ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் ரகுநாதபுரம் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் இன்று […]
மதுரையில் ஜி-ஸ்கொயர் நிறுவனம்.!
ஜி ஸ்கொயர் பார்ச்சூன் சிட்டி புதிய டவுன்ஷிப் உதயம் இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனம் ஜி ஸ்கொயர் பாரம்பரியம் கலாச்சாரம் நிறைந்த ஆன்மீக நகரமான மதுரையில் தனது ஜி ஸ்கொயர் பார்சூன் சிட்டி என்னும் டவுன்ஷிப் திட்டத்துடன் கால் பதித்துள்ளது .நடுத்தர மக்களின் வீட்டுமனைகள் கனவை நினைவாக்கும் விதமாக இந்நிறுவனம் குறைந்த விலையில் சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது மேலும் ரியல் எஸ்டேட் துறையில் தனது சிறப்பான வளர்ச்சியுடன் மக்களுக்காக தரமான வீடுகளை சிறந்த வசதிகளுடன் […]
போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் திறப்பு விழா.!
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 15 கோடியே 81 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 25 ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை திறந்து வைத்தார். மதுரை அரசு இராசாசி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்வில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் […]
குழந்தை உயிரிழப்பு; மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்..
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 1.5 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து தென்காசி தலைமை மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பின்வருமாறு விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது. தற்போது மருத்துவ மனையில் இறந்த குழந்தைக்கு கடந்த புதன் கிழமை அன்று 1.5 வயது நிறைவடைந்ததும் வழக்கமாக செலுத்தும் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. அதன் பின் குழந்தைக்கு காய்ச்சல் மூன்று தினங்களாக இருந்த நிலையில், குழந்தையின் பெற்றோர் ஒரு […]