தென்காசி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை; பாதுகாப்பு முறைகளை பின்பற்ற மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்..

தென்காசி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்; உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றிட மாவட்ட கலெக்டர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்.. தென்காசி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் பின்வரும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்றிட வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஏ.கே. கமல்கிஷோர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில், சென்னை வானிலை மையத்திலிருந்து தென்காசி மாவட்டத்திற்கு 15.05.2024, 18.05.2024, 19.05.2024 ஆகிய தினங்களில் கனமழை மற்றும் மிக கனமழையும், 16.05.2024 மற்றும் 17.05.2024 ஆகிய தினங்களில் கனமழையும் பெய்ய […]

கொம்பூதி கிராமத்தில் விவசாயிகளுக்கு செயலிகள் பற்றி வேளாண்மை கல்லூரி மாணவியின் விழிப்புணர்வு நிகழ்ச்சி !

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொம்பூதி கிராமத்தில் கிராமப்புற பணி வேளாண்மை அனுபவ திட்டத்தின் கீழ் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை இறுதி ஆண்டு படிக்கும் மாணவி அ.சுகந்தி தலைமையில் விவசாயிகளுக்கு செயலியின் முக்கியத்துவம் பற்றியும் செயலியை பதிவிறக்கம் செய்து அதனை பயன்படுத்தும் முறை பற்றியும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். மேலும் மாணவி அ.சுகந்தி தெரிவிக்கையில் ; இன்றைய காலகட்டத்தில் கிராமமக்கள் டிஜிட்டலை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டு இருககிறார்கள். அரசால் […]

யூ டியூபர் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் மீது கோவையில் மேலும் ஒரு வழக்கு! திருச்சி அழைத்து செல்லப்படுகிறார் சவுக்கு சங்கர்..

யூ டியூபர் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் மீது கோவையில் மேலும் ஒரு வழக்கு! திருச்சி அழைத்து செல்லப்படுகிறார் சவுக்கு சங்கர்.. பெலிக்ஸின் யூ டியூப் சேனலில், முத்துராமலிங்க தேவர் பற்றி சவுக்கு சங்கர் அவதூறு கருத்து தெரிவித்ததாக புகார். வழக்கறிஞர் முத்து என்பவர் அளித்த புகாரில் கோவை மாநகர பந்தய சாலை காவல் நிலையத்தில், சவுக்கு சங்கர், பெலிக்ஸ் மீது வழக்குப்பதிவு. இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு. சவுக்கு […]

மோடியிடம் வேட்பு மனுவை பெற்ற தென்காசி மாவட்டத்தை சேர்ந்த தேர்தல் அதிகாரி; புகைப்படம் வைரல்..

இந்திய பிரதமர் மோடியிடம் வேட்பு மனுவை பெற்ற தென்காசி மாவட்டத்தை சேர்ந்த தேர்தல் அதிகாரி ராஜலிங்கம்.. இந்தியப் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி மக்களவைத் தொகுதியில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக தென்காசி மாவட்டத்தை சேர்ந்த எஸ்.ராஜலிங்கம் என்பவர் பணியில் உள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடி தனது வேட்பு மனுவினை தேர்தல் அதிகாரி தென்காசி எஸ்.ராஜலிங்கம் என்பவரிடம் நேற்று தாக்கல் செய்தார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் […]

தென்காசி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி; மாவட்ட கலெக்டர் தகவல்..

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி; தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்.. தென்காசி மாவட்டத்தில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் உயர் கல்வி வழிகாட்டுதல் இரண்டாம் கட்ட நிகழ்ச்சி 16.05.2024 வியாழக்கிழமை சங்கரன்கோவில், […]

எல்லா ஆவணமும் இருக்கு  எதுக்கு ஃபைன்! சென்னையில் வாக்குவாதம் செய்த டிரைவர் மீது  வழக்கு பதிவு செய்த போலீசார்..

எல்லா ஆவணமும் இருக்கு  எதுக்கு ஃபைன்! சென்னையில் வாக்குவாதம் செய்த டிரைவர் மீது  வழக்கு பதிவு செய்த போலீசார்.. சென்னை: அனைத்து ஆவணங்களும் தன்னிடம் இருந்த போதிலும் ஏன் 500 ரூபாய் அபராதம் விதிக்கிறீர்கள் என்று போக்குவரத்து போலீசாரிடம் வாக்குவாதம் செய்த வாகன ஓட்டுனர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை கொளத்தூர் செந்தில் நகர் சிக்னல் அருகே கடந்த 6 ஆம் தேதி போக்குவரத்து தலைமைக் காவலர் ராமச்சந்திரன் மற்றும் காவலர் […]

ஒருவர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்டமின் இணைப்புகள் இருந்தால் அவற்றைஇணைப்பதா? மக்களை சுரண்டக்கூடாது!- டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்..

ஒருவர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால் அவற்றை இணைப்பதா? மக்களை சுரண்டக்கூடாது!- டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்.. தமிழ்நாட்டில் ஒருவரின் பெயரில் ஒரே வளாகத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால் அவற்றை ஒன்றாக இணைக்க முடிவு செய்திருக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம், அத்தகைய மின் இணைப்புகளை கணக்கெடுக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளது. ஒருவரின் பெயரில் எத்தனை மின் இணைப்புகள் இருந்தாலும் அவை இணைக்கப்படாது; அவற்றுக்கான இலவச மின்சாரம் நிறுத்தப்படாது என்று வாக்குறுதி அளித்திருந்த தமிழக […]

வார இறுதி நாட்கள் மற்றும் முகூர்த்த தேதிகளையொட்டி வரும் 17ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்..

தமிழகத்தில் வாரயிறுதி நாட்களையொட்டி, வரும் 17ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகளை இயக்கு உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- 17/05/2024 (வெள்ளிக்கிழமை) 18/05/2024 (சனிக்கிழமை) மற்றும் 19/05/2024 (ஞாயிற்றுக்கிழமை) முகூர்த்தம் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் […]

சேலம் ஏற்காட்டில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்டத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் கூட்டம்..

சேலம் ஏற்காட்டில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்டத் தலைவர்கள்,பொதுச் செயலாளர்கள் கூட்டம்.. எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள் பொதுச் செயலாளர்கள் கூட்டம் சேலம் ஏற்காட்டில் இன்று (மே.14) நடைபெற்றது. எஸ்டிபிஐ கட்சியின்  மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் இலியாஸ் தும்பே, அகில இந்திய செயற்குழு உறுப்பினர்கள் தெகலான் பாகவி, முஹம்மது பாரூக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக […]

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் (எல்டிடிஇ) மீதான தடையை இந்திய உள்துறை அமைப்பு மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்துள்ளது..

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் (எல்டிடிஇ) மீதான தடையை இந்திய உள்துறை அமைப்பு மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.. கடந்த 1991 மே 21ஆம் தேதி முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இந்தியா தடை விதித்தது. அத்தடை குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், கடந்த 2019ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா நீட்டித்திருந்த நிலையில், இப்போது மீண்டும் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “விடுதலைப் […]

கேரளாவில் அடிச்சு வெளுக்க போகும் “கன” மழை! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..

கேரளாவில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு அதி கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2 மாவட்டமங்களுக்கு அதி கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் 8 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படிக், இன்று (மே 14) இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் உள்ள பட்டினம்திட்டா மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம்,எர்ணாகுளம், மாலப்புரம், கோழிக்கோடு, வயநாடு […]

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்; தென்காசி மாவட்ட பயனாளிகள் முதல்வருக்கு நன்றி..

தமிழ்நாட்டில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்; தென்காசி மாவட்ட பயனாளிகள் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி.. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற்று வரும் தென்காசி மாவட்ட பயனாளிகள் தமிழ்நாடு முதலைமச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். “காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மானப் பெரிது (குறள் -102) என்னும் வள்ளுவன் வாக்கிற்கிணங்க, தகுந்த சமயத்தில் செய்த உதவி சிறிதாக இருந்தாலும் அது உலகத்தை விட பெரிதாக மதிக்கப்படும். மகளிருக்கு சொத்துரிமையும் உள்ளாட்சி அமைப்புகளில் தனி […]

நிதியுதவி கிடைக்காமல் 2 லட்சம் தாய்மார்கள் அவதி!மகப்பேறு நிதியுதவியை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!- டாக்டர். ராமதாஸ் அறிக்கை..

நிதியுதவி கிடைக்காமல் 2 லட்சம் தாய்மார்கள் அவதி!மகப்பேறு நிதியுதவியை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!- டாக்டர். ராமதாஸ் அறிக்கை.. தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள் மற்றும் இளம் தாய்மார்களுக்கான மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் கூடுதலான பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.14,000 நிதி மற்றும் ரூ.4000 மதிப்புள்ள ஊட்டச்சத்துப் பெட்டகம் பல மாதங்களாக வழங்கப்படவில்லை என்று வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. மகப்பேறு நிதியுதவி வழங்கப்படுவதில் செய்யப்படும் தாமதம் கண்டிக்கத்தக்கது. மகப்பேறு […]

யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு கைதை தொடர்ந்து, அவரது வீட்டில் போலீசார் அதிரடி சோதனை..

பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சவுக்கு சங்கர் கைதை தொடர்ந்து, அவரது பேட்டியை ஒளிபரப்பு செய்த தனியார் யூடியூப் சேனலின் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்ட் என்பவர் மீது கோவை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து, பெலிக்ஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனக்கு முன் ஜாமீன் வழங்க மனு அளித்திருந்தார். ஆனால் மனு மீதான […]

தமிழ்நாடு முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி..

தமிழ்நாடு முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு (2024) எனும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி.. தமிழ்நாடு முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், 12 ஆம் வகுப்பு முடித்த மாணாக்கர்களுக்கு உயர்கல்வி பயில கல்லூரி கனவு (2024) எனும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி (Career Guidance), தென்காசியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல்கிஷோர் தலைமையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் 843 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகளுக்கு உயர் […]

தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்த கடையநல்லூர் எம்எல்ஏ குட்டியப்பா..

பண்பொழி திருமலைக்குமார சுவாமி திருக்கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்த கடையநல்லூர் எம்எல்ஏ.. கடையநல்லூர் எம்எல்ஏ கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா பண்பொழி திருமலைக்குமார சுவாமி திருக்கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்தார். அதிமுக பொதுச்செயலாளர், எடப்பாடியாரின் 70வது பிறந்ததினத்தை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலைக்குமார சுவாமி திருக்கோவிலில் மாவட்ட கழகம் சார்பில் எம்எல்ஏ கிருஷ்ணமுரளி @ குட்டியப்பா தலைமையில், கழக மகளிரணி துணைச் செயலாளர் வி.எம்.ராஜலட்சுமி மற்றும் முன்னாள் எம்பி முருகேசன் […]

சமயநல்லூர் அருகே மின்சாரம் பாய்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு !

மதுரை ஆண்டாள்புரம் பகுதியைச் சேர்ந்த தனியார் மில் தொழிலாளி திரவியம் இவர் தனது நிறுவனத்தின் குப்பைக் கழிவுகளை ஏற்றி கொண்டு சமயநல்லூர் அருகே தேனூர் பகுதியில் உள்ளதனியார் அப்பார்ட்மெண்ட் பகுதிகளில் கொட்ட வந்த போது அங்கிருந்த மின்விளக்கு இல்லாத மின்கம்பத்தில் தவறுதலாக கை வைத்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சமயநல்லூர் போலீசார் இறந்த உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் […]

மதுரை பாலமேடு அருகே கல்குவாரியில் உள்ள நீரில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு !

.மதுரை மாவட்டம், பாலமேடு அருகே ராஜக்கால்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்சந்திரசேகர் (23).கூலி தொழிலாளி. இவரை காணவில்லை என குடும்பத்தார் தேடிய நிலையில், அப்பகுதியில் உள்ள கல்குவாரியில் குளம் போல் தேங்கியிருந்த நீரில் மிதந்ந நிலையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று சந்திரசேகரின் சடலத்தை மீட்டு உடற் கூறாய்வுக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சந்திரசேகர் கல்குவாரி பள்ளத்திற்கு எதற்காக வந்தார் என்றும், இறப்புக்கான காரணம் குறித்து அவரது குடும்பத்தினர் மற்றும் அப் பகுதியை […]

பெரியப்பட்டிணம் கிராமத்தில் வெற்றிலை கொடியில் வரும் பூச்சி குறித்து செய்முறை விளக்கம் ! விவசாயிகள் பங்கேற்பு !!

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியப்பட்டிணம் கிராமத்தில் வெற்றிலை கொடியில் வரும் பூச்சி மேலாண்மை குறித்து மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் இறுதி ஆண்டு மாணவி சுவாதி கிருஷ்ணன் விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கத்தை வழங்கினார். மேலும் விவசாயிகளிடம் மஞ்சள் மற்றும் நீல நிறப் பொறித்த பூச்சிகள் குறித்து விளக்கம் அளித்து அதன் செய்முறையை பற்றியும் அதன் பயன்களையும் விளக்கினார். எந்தெந்த பூச்சிகளுக்கு பயன்படுத்த வேண்டு மென்ற தகவல்களையும் எடுத்துக் கூறினார். இந்நிகழ்வில் […]

4-ம் கட்ட தேர்தல் நிறைவு: மாலை 5 மணி நிலவரப்படி 62.31 சதவீத வாக்குப்பதிவு..

பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 19-ம் தேதியும், 2-ம் கட்டமாக 88 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ம் தேதியும் வாக்குப்பதிவு நடந்தது.மூன்றாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.இதற்கிடையே, 4-வது கட்டமாக 96 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வாக்குப்பதிவு மாலை 6 […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!