பாராளுமன்ற உறுப்பினரை கொலை செய்து தோலை உரித்து துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூரம்! விசாரிக்க விசாரிக்க அதிர்ச்சி தகவல்கள்.

வங்காள தேசம் நாட்டின் ஆளும் கட்சி எம்.பி. அன்வாரூல் அஷீம் அனார் கொலை செய்யப்பட்ட விதம் பதைபதைக்க வைத்துள்ளது. போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.வங்காள தேசம் நாட்டின் ஆளுங்கட்சியான அவாமி லீக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அன்வாரூல் அஷீம் அனார். இவர் அடிக்கடி கொல்கத்தா வருவதும், நண்பர்களை சந்திப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.இந்நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 12-ந்தேதி கொல்கத்தா வந்திருந்தார். கொல்கத்தாவில் தனது நண்பர் கோபால் பிஸ்வாஸ் உடன் தங்கியிருந்தார். பின்னர் மே 13-ந்தேதி முதல் […]

பழனி அருகே தனியார் தோட்டத்தில் நரபலியா.? சம்பவ இடத்தில் போலிசார் தீவிர விசாரணை..

பழனி அருகே தனியார் தோட்டத்தில் நரபலியா.? சம்பவ இடத்தில் போலிசார் தீவிர விசாரணை.. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மேல்கரைப்பட்டியில் குமரவேல் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நடுவில் இன்று காலை பூஜை செய்து மர்மமான ஏதோ ஒன்று புதைக்கப்பட்டு உள்ளதாக நிலத்தின் உரிமையாளர் கீரனூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். புதைக்கபட்ட இடத்தின் அருகிலேயே தனியார் பள்ளி மாணவியின் சீருடையும் இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டது. வேறு ஏதாவது பூஜை செய்து மர்மமாக புதைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய பழனி […]

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து தொடர்பாக; சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளதால் வழக்கு 3வது நீதிபதி விசாரணைக்கு செல்கிறது..

யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். பெண் காவலா்களை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி குண்டா் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையா் கடந்த 12-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தாா். இ ந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சவுக்கு சங்கரின் […]

இந்திய விமானப் படையில் இசைக்கலைஞர் பணியிடத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்; தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்..

இந்திய விமானப் படையில் இசைக்கலைஞர் பணியிடத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்; தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்.. இந்திய விமானப்படையில் அக்னி வீர்வாயு இசைக்கலைஞர் பணியிடத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், இந்திய விமானப்படை சார்பில் பெங்களுரில் அமைந்துள்ள 7வது விமானப்படை தேர்வு மையத்தில் அக்னி வீர்வாயு இசைக் கலைஞர் பணியிடத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் 03.07.2024 முதல் 12.07.2024 வரை நடைபெற இருக்கிறது. இதில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று […]

பனை மர ஓலையில் திருமண அழைப்பிதழ்; கவனத்தை ஈர்த்த சமூக ஆர்வலர் திருமாறன்..

பனை மர ஓலையில் திருமண அழைப்பிதழ்; கவனத்தை ஈர்த்த தென்காசி மாவட்ட சமூக ஆர்வலர் திருமாறன்.. தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சமூக நல ஆர்வலர் வெங்கடாம்பட்டி பூ.திருமாறன் தனது மகளின் திருமணத்திற்கான அழைப்பிதழை பனை மர ஓலையில் அழகாக வடிவமைத்து வழங்கி வருவது முதல் இரத்ததானம், விதைப்பந்து உள்ளிட்ட புதுமைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள வெங்காடம்பட்டி பகுதியை சேர்ந்த சமூகநல ஆர்வலர் பூ. திருமாறன். இவரது மகள் மருத்துவர் தமிழ் அருவி. […]

பாஜகவை விட குறைந்த வாக்குகள் பெற்றால், கட்சியை கலைத்துவிடுகிறேன்!- சீமான் பகிரங்கமாக சவால்..

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு நாளான இன்று சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அப்போது செய்தியாளர்கள் அவரிடம், தமிழகத்தில் 3-வது பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும் என்று அண்ணாமலை சொல்லி இருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சீமான், தைரியம் இருந்தால் தனித்து நின்று போட்டியிட்டு காட்டுங்கள். ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு தனியாக நீங்கள் பெற்ற வாக்குகள் எத்தனை என்று பார்ப்போம். […]

முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட முயற்சிப்பதா?; கேரள அரசிற்கு வைகோ கண்டனம்..

முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட முயற்சிப்பதா?; கேரள அரசிற்கு வைகோ கண்டனம்.. முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு, புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றிய அவரது அறிக்கையில், கேரளா மாநில அரசு முல்லை பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையை தயார் செய்ய ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் விண்ணப்பித்து […]

சோழவந்தான் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி..

சோழவந்தான் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி.. சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் வடக்கு தெருவை சேர்ந்த விவசாயி ஆலடி (65). இவர் முள்ளிப்பள்ளம் குருவித்துறை சாலையில் உள்ள தோப்பிற்கு காலையில் சென்றுள்ளார். எதிர்பாராத விதமாக அங்கு குறுக்கே சென்ற மின் வயர் தென்னை மரத்தில் உரசியதில் ஆலடிமீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இது குறித்து முள்ளிப்பள்ளம் கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன், கிராம உதவியாளர் ராமமூர்த்தி ஆகியோர் காடுபட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். […]

மனைவி கொடுத்த புகார்! முன்னாள் டி.ஜி.பி. ராஜேஸ் தாஸ் அதிரடி கைது..

தமிழக போலீஸ் துறையில் சிறப்பு டி.ஜி.பி.யாக பணியாற்றியவர் ராஜேஷ் தாஸ். பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், இவருக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த ஆண்டு உத்தரவிட்டது.இந்த தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டும் உறுதி செய்தது. இதைத்தொடர்ந்து ராஜேஷ் தாஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ராஜேஷ் தாசை கைது செய்வதற்கு இடைக்கால தடை விதித்தது.பாலியல் புகாரில் ராஜேஷ் […]

இனி டிரைவிங் லைசென்ஸ் எடுக்க ஆர்.டி.ஓ., ஆபிஸ் செல்ல தேவை இல்லை! பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்த மத்திய அரசு..

இனி டிரைவிங் லைசென்ஸ் எடுக்க ஆர்.டி.ஓ., ஆபிஸ் செல்ல தேவை இல்லை! பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்த மத்திய அரசு. ஓட்டுனர் உரிமம் பெறும் முறையை மத்திய அரசு எளிதாக்கியுள்ளதை அடுத்து, இதற்கான தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்கள் இனி மண்டல போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்லும் நிலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர் உரிமம் எடுக்கும் நடைமுறையை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது. வரும் 1ம் தேதி முதல் இந்த முறை அமலுக்கு வருகிறது. புதிய நடைமுறைக்காக, ஓட்டுனர் பயிற்சி அளிக்கும் மையங்களுக்கான விதிகளும் […]

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி; குடிபோதையில் குளிக்க அனுமதி இல்லை..

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி; குடிபோதையில் குளிக்க அனுமதி இல்லை; மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.. குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி குளிப்பதற்கான தடை விலக்கப்பட்டுள்ளதாகவும், குடிபோதையில் அருவிகளில் குளிக்க அனுமதி இல்லை எனவும் தென்காசி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அருவிகளில் குளிக்க செல்லும் போது சுற்றுலா பயணிகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், குற்றால அருவிகளில் நீர்பிடிப்பு பகுதிகளில் […]

ஏர்வாடி தர்கா ஆக்கிரமிப்பு அகற்றிய கீழக்கரை வட்டாட்சியர்.! குவியும் பாராட்டுக்கள்..!

ஏர்வாடி தர்கா ஆக்கிரமிப்பு அகற்றிய வட்டாட்சியர் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட தர்கா பகுதியில் சர்வே எண் 502 , 504 இல் எந்த ஒரு கடைகளும் அமைக்க கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அந்த உத்தரவை மீறி சிலர் அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து யாத்திரைகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்து வருவதாக வந்த புகாரியின் அடிப்படையில் கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. மேலும் அப்பகுதியை சுற்றி ஆக்கிரமிப்பு செய்யாதவாறு கற்கள் […]

கீழக்கரையில் மலேரியா தடுப்பு மருந்து தெளிப்பு பணி !ஒத்துழைப்பு வழங்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்..!

ராமநாதபுரம் மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,கீழக்கரை, உச்சிப்புளி, புதுமடம், பெரியபட்டினம் மற்றும் தேவிபட்டினம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வீடுவீடாகச் சென்று தற்போது மலேரியா கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த மருந்து வீடுகளின் உட்புறங்களில் அடிப்பதன் மூலம் மலேரியா கொசுக்களை பரப்புகின்ற முதிர் கொசுக்கள் முற்றிலுமாக அழிந்துவிடும். அதனால், மலேரியா பரவாமல் தடுக்க முடியும்.எனவே, அரசு சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக முழுவதாக மருந்து தெளிக்க வரும்போது, பொதுமக்கள் தங்களின் வீடுகளில் […]

திருப்புல்லாணி அருகே நெல்லின் ரகம் பற்றிய விழிப்புணர்வு !

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளமோர்க்குளம் கிராமத்தில் விவசாயிகளுக்கு வறட்சி மற்றும் உப்புத்தன்மையை தாங்கும் நெல்லின் இரகங்கள் குறித்து கிராமப்புற வேளாண்மை பணி அனுபவதிட்டத்தின் கீழ் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை இறுதி ஆண்டு படிக்கும் மாணவி பா. சிந்துபிரியா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார். பொதுவாகவே இம் மாவட்ட மண் வகைகள் நைட்ரஜன் சத்து குறைவானதாகவே காணப்படுகின்றன. மேலும் திருப்புல்லாணி, கமுதி மற்றும் கடலாடி வட்டாரங்களில் நடுத்தரத்திலும் இதர வட்டாரங்களில் குறைவாகவும் […]

பிரப்பண்வலைசை கிராமத்தில் விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவி விழிப்புணர்வு நிகழ்ச்சி !

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிரப்பண்வலைசை கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு பயிர்களுக்கு திரவ உயிர் உரம் பயன்படுத்துவன் முக்கியத்துவம் மற்றும் அதன் நன்மைகளை பற்றி மதுரை வேளாண் கல்லூரி மாணவி அ. ஆஷிகா விழிப்புணர்வு நிகழ்ச்சி வழங்கினார். மேலும் மாணவி கூறுகையில் மெத்திலோ பாக்டீரியம் (Methylobacterium) மூலம் இயற்கை முறைகள் சத்துக்களைச் சேர்த்து, வளர்ச்சி ஊக்குவிக்கும் பொருட்களை உருவாக்கி அதன் மூலம் தாவர வளர்ச்சியைத் தூண்டுகிறது.இதனால் இரசாயன உரங்கள் பயன்பாட்டை உயிர் உரங்கள் குறைகிறது […]

பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்ட உள்ளதால்… பவானி ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..

பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்ட உள்ளதால்… பவானி ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டம் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பில்லூர் அணையின் முழு கொள்ளளவான 100 அடியில் இன்று 22.05.2024 மதிய நிலவரப்படி94.50 அடியை எட்டி உள்ளது இதனால் கடந்த 90 நாட்களுக்கு பிறகு மாலை 6:00 மணிக்கு பில்லூர் அணையில் இருந்து 3000 கன அடி நீர் […]

பாரதி நகர் கிராமத்தில் மாணவ மாணவிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி !

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாரதி நகர் கிராமத்தில் தமிழ்நாடு கிராமப்புற  இயக்கத்தின் கீழ் அரசமைப்பு உரிமைக் கல்வி (CRE) மூலம் வான்முகில் தன்னார்வலர் இயக்கம் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பள்ளி பயிலும் மாணவ மாணவிகளுக்கு  அரசியல் அமைப்பு , கிராம சபைகள் , அரசின் சட்ட திட்டங்கள் உட்பட இளம் வயதிலேயே ஜாதி மத பாகுபாடு இன்றி விளையாட்டு மூலமாகவும் கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவும் இலகுவாக கற்றுக் கொடுக்கின்றனர் இதனை […]

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே இரண்டு போலி மருத்துவர்கள் கைது..

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே இரண்டு போலி மருத்துவர்கள் கைது.. திண்டுக்கல்லை அடுத்த சாணார்பட்டி பகுதியில் மருத்துவமனைகள் நடத்தி வந்த சாணார்பட்டியை சேர்ந்த துரைப்பாண்டி(67), மலைச்சாமி(62) ஆகிய 2 பேரின் மருத்துவமனைகளில் திண்டுக்கல் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் பூமிநாதன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது 10 வகுப்பு மட்டுமே படித்த துரைப்பாண்டி மருந்து, மாத்திரை கொடுத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தெரிய வந்தது. இதே போல் மலைச்சாமி முறையாக மருத்துவம் பயிலாமல் சிகிச்சை அளித்து […]

குழந்தையின் பாலினத்தை அறிவித்த இர்ஃபானின் சர்ச்சை செயல் முடிவுக்கு வந்தது; மன்னிப்பு கோரி நேரிடையாக கடிதம் வழங்கினார்..

பிரபல யூடியூபரான இர்பான் ‘இர்பான் வியூஸ்’ எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவியூ செய்வதன் மூலம் பிரபலமான இவர் திரைப்பிரபலங்களுடன் உணவருந்தியவாரே நேர்காணல்களும் எடுத்து வருகிறார்.யூடியூபர் இர்பானுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தோடு சேர்ந்து சமையல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை அவர் தன்னுடைய ரசிகர்களிடமும் பகிர்ந்து கொண்டார்.இந்நிலையில் யூடியூபர் இர்பான் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் […]

கள்ளக்குறிச்சியில் உயிர் இழந்த பள்ளி மாணவியின் தாய் செல்வி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சவுக்கு சங்கர் மீது புகார்..

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கள்ளக்குறிச்சியில் உயிர் இழந்த பள்ளி மாணவியின் தாய் செல்வி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பெண் காவலர்கள் குறித்தும், காவல்துறை உயரதிகாரிகள் குறித்தும் அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு தற்போது கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது தேனி போலீசார் கஞ்சா வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும், சென்னையில் இதுவரை மூன்று வழக்குகள் உட்பட பல்வேறு […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!