பத்திரதரவா கிராமத்தில் விவசாயிகளுக்கு வேளாண்துறை சார்பில் பயிற்சி முகாம்

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட பத்திரதரவா கிராமத்தில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின கீழ் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தின் மூலம் கிராம வேளாண் முன்னேற்றக் குழு என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது .இப்பயிற்சியில் துணை வேளாண்மை அலுவலர் சையது முஸ்தபா கலந்து கொண்டு தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றுவது எப்படி என்றும் சாகுபடி பரப்பை அதிகரிக்க செய்வது எப்படி என்று விளக்க உரை விவசாயிகளுக்கு வழங்கினார். தவமுருகன் உதவி வேளாண்மை அலுவலர் […]

நிலக்கோட்டை அருகே புதூர் கிராமத்தில் சாக்கடை நீர் தேக்கம்! நோய் பரவும் அபாயம்! எஸ்டிபிஐ பரபரப்பு குற்றச்சாட்டு..

நிலக்கோட்டை அருகே புதூர் கிராமத்தில் சாக்கடை நீர் தேக்கம்! நோய் பரவும் அபாயம்! எஸ்டிபிஐ பரபரப்பு குற்றச்சாட்டு.. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை கோட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட புதூர் கிராமத்தில் சுமார் 500 -க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த கிராமத்தில் சாக்கடை நீர் செல்வதற்கு போதிய வழியில்லாமல் தேக்கம் அடைந்து பல வீடுகளின் வாசலில் தேங்கி கிடக்கிறது. இதனால் சிலர் நோய் வாய்ப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இம்ரான் என்பவரின் குடும்பமே சிகிச்சை […]

கும்பரம் கிராமத்தில் வேளாண்மைத் துறையின் பயிற்சி முகாம் 

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே கும்பரம் கிராமத்தில் வேளாண்மைத் துறையின் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்ட  2024-25ஆம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ்  வேளாண் முன்னேற்றக் குழு காரீப்பருவ  பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் உதவி வேளாண்மை அலுவலர் மோகன்ராஜ் விலை ஆதரவுத் திட்டத்தின் (Price Support Scheme)கீழ்  கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது இத்திட்டத்தின் கீழ் கொள்முதல்  செய்யப்படும் விளை பொருட்களுக்கு உரிய தொகையானது […]

திருப்பரங்குன்றம் ஒன்றிய அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட ஒன்றிய கவுன்சிலரால் பரபரப்பு..

திருப்பரங்குன்றம் ஒன்றிய அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட ஒன்றிய கவுன்சிலரால் பரபரப்பு.. மதுரை திருப்பரங்குன்றம் ஒன்றிய அலுவலகத்தில் வாயில் கருப்பு துணியுடன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட ஒன்றிய கவுன்சிலரால் பரபரப்பு ஏற்பட்டது. விரகனுார் ஊராட்சி  பகுதியில் காவேரி கூட்டு குடிநீர், சாலை, சாக்கடை போன்ற முக்கிய பிரச்சனைகள் குறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை. இது குறித்து விரகனூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட வட்டார […]

பெரியபட்டினத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு !

ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் கெட்டுப்போன மீன்கள் வியாபாரம் செய்வதாக வந்த புகாரியின் அடிப்படையில் மாவட்ட நியமன அலுவலர் விஜயகுமார் அறிவுறுத்தலின் பேரில் கீழக்கரை உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ் மற்றும் மீன்வள ஆய்வாளர் சாகுல் ஹமீது. சாகர் மித்ரா பணியாளர் இலக்கிய வேந்தன் ஆகியோர் இணைந்து பெரியபட்டினம் மீன் மார்க்கெட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது கெட்டுப்போன மீன்கள் சுமார் 11 கிலோ கண்டறியப்பட்டு அவற்றை பினாயில் ஊற்றி அளிக்கப்பட்டது. மேலும் மீன் விற்பனை செய்யும் […]

ராமநாதபுரத்தில் நுகர்வோர் உரிமைகள் தின விழா ! மாவட்ட ஆட்சியருக்கு நினைவு பரிசு !!

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு முன்னிலையில் தேசிய நுகர்வோர் தினம் மற்றும் நுகர்வோர் உரிமைகள் தின விழா நடைபெற்றது. மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்  மாரிச்செல்வி வரவேற்புரை வழங்கினார் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் பாலசுப்பிரமணியம் , கீழக்கரை நுகர்வோர் நலச்சங்கம் செயலாளர் செய்யது இப்ராஹீ ஆகியோர்  சிறப்புரையாற்றினார், அதனைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் […]

சாமானிய மக்களும் மருத்துவம் படித்து சாதனைகள் பல படைக்கலாம்: டாக்டர் ஏகலவைன்..

“சாமானிய மக்களும் மருத்துவம் படிக்கலாம், சாதாரணமானவரும் சரித்திரம் படைக்கலாம்”; டாக்டர் ஏகலவைன் கூறும் தகவல். “தைமூர் நாட்டில் சாமான்யரும் மருத்துவம் படிக்க வாய்ப்புள்ளதாகவும், மருத்துவ துறைகளில் சாதனைகள் பல படைத்து உயர முடியும் எனவும் டாக்டர் ஏகலைவன் தெரிவித்துள்ளார். தைமூர் நாட்டின் மரூத்துவ கல்வி விவரங்களை டாக்டர் ஏகலைவன் விவரித்துள்ளதாவது; இந்தியாவில் நீட் மதிப்பெண்கள், மிகப்பெரிய நன்கொடை என பல்வேறு காரணங்களால் மருத்துவராகும் கனவு பலருக்கு துளிரிலேயே பட்டுப்போகும் நிலை காணப்படுகிறது. மிகச் சாமான்ய குடும்பத்திலிருந்தும் மருத்துவர் […]

மகமாயி பாட்டிக்கு மறுவாழ்வு அளித்த பசியில்லா தமிழகம் தன்னார்வலர்கள்; பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டு..

மகமாயி பாட்டிக்கு மறுவாழ்வு அளித்த பசியில்லா தமிழகம் தன்னார்வலர்கள்; பொதுமக்கள் பாராட்டு.. செங்கோட்டை அருகே ஆதரவற்ற நிலையில், கால்களில் புழுக்கள் நிறைந்த புண்களுடன் சாலையோரம் வாழ்ந்து வந்த மகமாயி பாட்டியை மீட்டு மறுவாழ்வு அளித்த பசியில்லா தமிழகம் குழுவினரை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே சாலையோரம் ஆதரவு இல்லாமல் கால்கள் முழுக்க புண்களில் புழுக்கள் வைத்த நிலையில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க மகமாயி என்ற பெண் வெயிலிலும் மழையிலும் […]

கீழக்கரை நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசாரமான விவாதம் !

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியின் நகர்மன்ற கூட்டம் நகராட்சி வளாகத்தில் நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா தலைமையில் தற்காலிக ஆணையாளர் நஜிதா பர்வீன் மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் ஹமீது  சுல்தான் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடிநீர் கழிவுநீர் சாலை உட்பட அடிப்படைத் தேவைகளை பற்றி விவாதிக்கப்பட்டது. நகராட்சி நிர்வாகம் சில மாதங்களாக அதிகாரிகள் பணிகளை முறையாக செய்யவில்லை என்றும் நகராட்சியில் பணியாளர்கள் குறைவாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் தில்லையேந்தல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் […]

தென்காசியில் குரூப்-।। மற்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு; மாவட்ட கலெக்டர் தகவல்..

தென்காசியில் குரூப்-।। மற்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு; மாவட்ட கலெக்டர் ஏ.கே. கமல் கிஷோர் தகவல்.. தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தொகுதி II தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தொகுதி II-ல் உள்ள உதவி […]

குற்றாலத்தில் ஸ்பா என்ற பெயரில் விபச்சாரம்; 3 பேர் அதிரடி கைது..

குற்றாலத்தில் ஸ்பா என்ற பெயரில் விபச்சாரம்; கேரள மாநிலத்தை சேர்ந்த மூவரை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறை.. குற்றாலத்தில் ஸ்பா என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஐந்தருவி சாலையில் அமைந்துள்ள RGB ரிசாட்டில் ஸ்பா என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடைபெறுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய மாவட்ட […]

தென்காசி மாவட்ட எஸ்.பி தலைமையில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

தென்காசி மாவட்ட எஸ்.பி தலைமையில் நடந்த போதை பொருள் ஒழிப்பு தின பேரணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி.. தென்காசியில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின பேரணி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் நடந்தது. இதில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி மாவட்ட எஸ்.பி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் […]

விருதுநகரில் இளைஞர் ஆணவப் படுகொலை? – குற்றமிழைத்த அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்..

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; விருதுநகர் மாவட்டம் கோவிலாங்குளம் பகுதியைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர் அழகேந்திரன், மற்றொரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்த காரணத்திற்காக ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெண்ணின் பெற்றோரின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்துள்ளனர். ஆனால், அவர்கள் பெண்ணின் உறவினர் ஒருவரால் மிரட்டப்பட்டு பெண்ணை மட்டும் அவர்கள் தனியாக அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் இளைஞர் அழகேந்திரனை பெண்ணின் […]

நிரம்பியது பில்லூர் அணை! வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி நீர் திறப்பு! பவானி ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..

நிரம்பியது பில்லூர் அணை! வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி நீர் திறப்பு! பவானி ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் வினாடிக்கு 14000 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் […]

திண்டுக்கல்லில் 200 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள், 60 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்! 7 கடைகளுக்கு சீல், ரூ.1,55,000 அபராதம் – உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..

திண்டுக்கல்லில் 200 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள், 60 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்! 7 கடைகளுக்கு சீல், ரூ.1,55,000 அபராதம் – உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை.. திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் செல்வம், ஜாபர்சாதிக், சரவணகுமார், முருகன், வசந்தன் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் மேற்கு ரதவீதி பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு நேமாராம்(45) என்பவர் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட 200 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து ரூ.5 ஆயிரம் […]

ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடிய 13 அப்பாவிகளைத் துள்ள துடிக்கத்  சுட்டுக் கொன்றது உங்கள் ஆட்சியில்தானே. அப்போது நீங்கள் ராஜினாமா செய்தீர்களா? எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கே.என்.நேரு கேள்வி..

ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடிய 13 அப்பாவிகளைத் துள்ள துடிக்கத்  சுட்டுக் கொன்றது உங்கள் ஆட்சியில்தானே. அப்போது நீங்கள் ராஜினாமா செய்தீர்களா? எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கே.என்.நேரு கேள்வி.. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருக்கிறது அ.தி.மு.க. ‘சிபிஐ விசாரணை வேண்டும்’ என்ற கோரிக்கையையும் வைத்திருக்கிறது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகேதான் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டிருகிறது. 7 ஆண்டுகளுக்கு முன்பு இதே ராஜரத்தினம் மைதானம் அருகே […]

தமிழகத்தில் கனிமவள கொள்ளை! பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு..

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில், மணல் கொள்ளையின் மூலம் சுமார் 4,730 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக, அமலாக்கத்துறை விசாரணையின் மூலம் தெரிய வந்தது. சட்டவிரோதமாக மணல் கொள்ளையடித்த விவகாரத்தில், அரசு அதிகாரிகளின் உடந்தையோடு தனியார் மணல் ஒப்பந்ததாரர்கள் மோசடியில் ஈடுபட்டு உள்ளதாகவும், தமிழக அரசு, மணல் கொள்ளை தொடர்பாக, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்தது. தற்போது, அமலாக்கத்துறை, தமிழக காவல்துறை இயக்குனருக்கு எழுதிய ஜூன் 14 தேதியிட்ட […]

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கண்டிப்பாக சிபிஐ விசாரணை வேண்டும்!  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி..

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கண்டிப்பாக சிபிஐ விசாரணை வேண்டும்!  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.. கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாக பேரவையில் பேச அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்தும், சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏ-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை ராஜரத்தினம் அரங்கம் முன்பு அதிமுக சார்பில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.ல்.ஏக்கள் அனைவரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மாலை […]

தென்காசி வடக்கு மாசி வீதி குடிநீர் தொட்டியினை மாற்றியமைக்க கூடாது; நகராட்சி துணைத் தலைவர் பரபரப்பு மனு..

தென்காசி வடக்கு மாசி வீதி குடிநீர் தொட்டியினை நகராட்சி நிர்வாகம் மாற்றியமைக்க கூடாது; நகராட்சி துணைத் தலைவர் அனுப்பிய பரபரப்பு மனு.. தென்காசி வடக்கு மாசி வீதியில் அமைந்துள்ள குடிநீர் தொட்டியினை நகராட்சி நிர்வாகம் மாற்றியமைக்க கூடாது என தென்காசி நகராட்சி துணைத்தலைவர் கே.என்.எல். சுப்பையா வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அரசு முதன்மை செயலர் D.கார்த்திகேயன் IAS, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகம் சென்னை, மாவட்ட ஆட்சியர் தென்காசி, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர், […]

கழிவு நீர் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணா  போராட்டம் 

ராமநாதபுரம் மாவட்டம்  மேலக்கோட்டை ரமலான் நகர் அருகாமையில் அமைந்துள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கழிவு நீர் குழாய் பதிப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் அப்பகுதி கிராம மக்கள்  தெரிவிக்கையில் .ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கழிவுநீர்கள் குழாய் மூலம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு செல்கின்றது. இந்த நிலையத்திலிருந்து கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளிப்பகுதியில் திறந்து விடுவதால் அதை சுற்றியுள்ள கிராமப்புற மக்களுக்கு துர்நாற்றம் வீசுவதாலும் தொற்று நோய் பரவுவதாலும் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!