மாலங்குடி கிராமத்தில் விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கும் விழா

ராமநாதபுரம் மாவட்டம்  திருப்புல்லாணி அருகே மாலங்குடி கிராமத்தில் ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் வேளாண்மை துறை இணைந்து டிஜிட்டல் பண்ணைப்பள்ளி விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கும் விழா வேளாண் இணை இயக்குனர் ச.கண்ணையா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ம.தி.பாஸ்கரமணியன்,  மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் பேசினார். வேளாண்மை துணை இயக்குனர் மாநிலத் திட்டம் எம். கே. அமர்லால் மாநில அரசின் திட்டங்கள் குறித்தும், மண்வளங்களை பாதுகாப்பது குறித்தும் பேசினார். உதவி வேளாண் […]

தென்காசியில் நடந்த மாற்றுத் திறனாளிகள் கடனுதவி முகாம்..

தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் வங்கி கடன் மேளா மற்றும் தேசிய மாற்றுத்திறனாளிகள் நிதி வளர்ச்சி கழகத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு கட்ட கடன் பெறும் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வதாரத்தை மேம்படுத்த வங்கிகடன் மானியம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தல் தொடர்பாக வங்கி கடன் மேளா மற்றும் தேசிய மாற்றுத்திறனாளிகள் நிதி வளர்ச்சி கழகத்தின் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்ட கடன் பெறும் முகாமில் 25.07.2024 அன்று […]

மின் கட்டண உயர்வை கண்டித்து,திருவாடானையில் தேமுதிகவினர் ஆர்பாட்டம்..!

திருவாடானையில் தேமுதிக சார்பில் மின் கட்டணத்தை உயர்த்தியை கண்டித்து  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை நான்கு ரோடு சந்திப்பு சாலை பகுதியில் தேமுதிக  சார்பில் அதன் மாவட்டச் செயலாளர் சிங்கை ஜின்னா தலைமையில தமிழக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும், மின் கட்டணத்தை குறைக்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். பெண்கள் கையில் மண்ணெண்ணெயில் எரியும் விளக்குகளை […]

உத்தரகோசமங்கையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: கீழக்கரை வட்டாட்சியர் பங்கேற்பு.!

பொதுமக்கள் இணையவழி வாயிலாக தற்போது பெற்று வரும் சேவைகளை விரைவாகவும் பல்வேறு துறைகள் மூலம் பெற்றுவரும் வெவ்வேறு சேவைகளை ஒரே இடத்திலும் பெறுவதற்கு தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி “மக்களுடன் முதல்வர்” திட்டம் தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட ‘உத்தரகோசமங்கை’ யில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்ற ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் கீழக்கரை வட்டாட்சியர் ஜமால் முகமது வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோர் […]

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்.!

ராமநாதபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் ராமநாதபுரம் தாலுகா குழு சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தினர். எளிய மக்களை பாதிக்கும் மின் கட்டண உயர்வை கைவிடு, மின்சாரத் துறையை அரசே தொடர்ந்து நடத்திடுக, தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் மாதம்தோறும் மின் அளவு கணக்கிடும் முறையை நடைமுறைபடுத்திடுக’ என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டது. இதில் ராமநாதபுரம் தாலுகா குழு பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

போலீசார் அபராதத்திற்கு பயந்து ஹெல்மெட் திருடி சென்ற இளைஞர்கள்; சிசிடிவி காட்சி..

மதுரையில் போலீசார் அபராதத்திற்கு பயந்து ஹெல்மெட்டை திருடி சென்ற இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. மதுரை மாநகர் பகுதிகளில் சாலை விபத்துகளின் போது உயிரிழப்பை தவிர்க்கும் பொருட்டு வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என போக்குவரத்து காவலர்கள் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தலைக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பது நடைமுறையில் இருப்பதால் பெரும்பாலானோர் முறையாக தலைக்கவசம் அணிந்து பயணம் மேற்கொள்கின்றனர்.  இந்த நிலையில் […]

நெல்லையில் இந்தோ-தைமூர் சிறப்பு விருது வழங்கும் விழா; தைமூர் நாட்டின் துணை பிரதமர் பங்கேற்பு..

நெல்லையில் இந்தோ-தைமூர் சிறப்பு விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில் தைமூர் நாட்டின் துணை பிரதமர் மரியானோ அசானமி சாபினோ பங்கேற்று, தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தின் இராமகிருஷ்ணன் உள்ளிட்ட 100 சாதனையாளர்களுக்கு சிறப்பு விருதுகளை வழங்கினார். தமிழ்நாடு, புதுவை மாநிலங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 100 சாதனையாளர்களுக்கு சிறப்பு விருது வழங்கும் நிகழ்ச்சி நெல்லை ஸ்ரீராம் கிராண்ட் இன் ஹோட்டலில் திங்கள் கிழமையன்று நடைபெற்றது. இந்த விருது நிகழ்ச்சியில் தைமூர் நாட்டின் துணை பிரதமர் மரியானோ […]

தென்காசியில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்..

தென்காசி மாவட்டத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.3,28,404 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் பயனாளிகளுக்கு வழங்கினார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் (22.07.2024) திங்கள் கிழமை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார்.    தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் இயற்கை மரணம் […]

இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் கல்லூரியில் மாணவ ஆசிரியர்களுக்கு வரவேற்பு..

தென்காசி மாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் கடந்த 19 ஆம் தேதியன்று புதிய கல்வியாண்டு துவங்கியதை முன்னிட்டு 22-ஆம் தேதி மாணவ ஆசிரியர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கரவொலி எழுப்பி இனிப்பு மற்றும் பரிசுகள் வழங்கி மாணவ ஆசிரியர்கள் அனைவரும் வரவேற்கப்பட்டனர். நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார். முதல்வர் (பொ) ஷீலா வரவேற்றார். ஒய்எப்சி ஊழியர் பிச்சையா வாழ்த்துரை வழங்கினார். சுரண்டை பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் […]

பாசிப்பட்டினம் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா.!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா பாசிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற மகான் சர்தார் நைனா முகமது ஒலியுல்லா தர்கா உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த தர்காவின் 313 ஆம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா இன்று நடைபெற்றது. இதனையொட்டி ஸ்தானிகன் வயல் மாணவநகரி கிராமத்தில் இருந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு வாணவேடிக்கை, மேளதாளங்களுடன் சுமார் […]

வாகன காப்பகத்தில் அடாவடி வசூல் செய்வதாக புகார்: முறைப்படுத்த கோரிக்கை..!

.. வாகன காப்பகத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு 24 மணி நேரத்துக்கு கட்டணமாக பத்து ரூபாய் வாடகை என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் 12 மணி நேரத்திற்கு பத்து ரூபாய் என அடாபடியாக வசூல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் வாகன காப்பகத்தில் 12 மணி நேரத்துக்கு மட்டும் பத்து ரூபாய் என அடாவடியாக வசூல் செய்வதால், பயணிகள் வரும் இரு சக்கர வாகனங்களை வெளியே நிறுத்த வேண்டிய அவலநிலையில் உள்ளனர். இதுகுறித்து இன்று […]

மின்கட்டணம் மற்றும் வரி உயர்வு – ராமநாதபுரத்தில் அமமுக கண்டன ஆர்பாட்டம்.!

அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், திமுக அரசு ஆட்சிப்பொறுப்பேற்று 3 ஆண்டு காலத்தில் ஏற்பட்ட நிர்வாக தோல்விகளை மறைக்க மின்கட்டணத்தை அடிக்கடி உயர்த்தியும், சொத்துவரி, குடிநீர்வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளையும், கட்டணங்களையும் உயர்த்தி மக்கள் மீது சுமைகளை ஏற்றும் திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து இன்றையதினம் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் கண்டண ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். அதன்படி, ராமநாதபுரம் மாவட்ட அமமுக சார்பில், […]

மதுரையில் வாலிபர் கொலை; போலீசார் விசாரணை..

மதுரை வில்லாபுரம் பராசக்தி நகர், சிந்தாமணி வயல் வெளி பகுதியில் வாலிபர் கொலை. அவனியாபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மதுரை அவனியாபுரம் வில்லாபுரம் பராசக்தி நகர் வயல் வெளி பகுதியில் பகுதியில் வாலிபர் தலை சிதைந்த நிலையில் காணப்பட்டது. அருகில் உள்ளவர்கள் அவனியாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.  இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு அவனியாபுரம் போலீசார் சென்று பார்த்தபோது தலை நசுங்கி கைதுண்டான நிலையில் உடலை கைப்பற்றினர். இறந்த வாலிபரின் செல்போனில் வந்த அழைப்பை […]

தமிழ்நாட்டில் பூரண மது விலக்கு; தவ்ஹீத் ஜமாத் மாநில செயற்குழுவில் தீர்மானம்..

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் அப்துல் கரீம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு மற்றும் போதைப் பொருட்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மாநில பொருளாளர் காஞ்சி இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு கூட்டத்தின் துவக்க உரையாக மாநில செயலாளர் காரைக்கால் யூசுப் இறையச்சம் குறித்து பேசினார். […]

வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் தமிழ் வாசிப்பு பயிற்சி புத்தகங்கள் வழங்கல்..

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சேவாலயம் மாணவர் விடுதியில் தமிழ் மொழி வாசித்தல் பயிற்சி மற்றும் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை வகித்து புத்தகங்கள் வழங்கிய அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் பேசுகையில், மாணவர்கள் அறிவு மேம்பட அதிகமாக புத்தகங்கள் வாசித்தல் மிகவும் அவசியம். பள்ளி பாடங்களோடு நூலக புத்தகங்களை தொடர்ந்து வாசிப்பது எதிர்கால முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்றார். நிகழ்ச்சியில் ஹைக்கூ கவிஞர் இரா.இரவி, தமிழ்நாடு அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்றதை வாழ்த்தி […]

தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்; தென்காசி மாவட்ட ஆட்சியர் தகவல்..

தென்காசி மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான “தமிழ்ச்செம்மல்” விருதிற்கு தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்தில் விண்ணப்பங்கள் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்களின் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்தி ஊக்கப்படுத்தும் வகையில் “தமிழ்ச்செம்மல்” என்னும் பெயரில் மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் இவ்விருது வழங்கப்பெறுகிறது. இவ்விருதுக்கு தெரிவு செய்யப்படுவோர் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூ.25,000 (ரூபாய் இருபத்து ஐந்தாயிரம் மட்டும்) தகுதியுரையும் வழங்கப்பெறும். இவ்வகையில் […]

சமூகங்களிடயே நல்லிணக்கம் ஏற்படுத்துவோம்; பன்னாட்டு மத சுதந்திர கூட்டமைப்பு தீர்மானம்..

சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவோம் என பன்னாட்டு மத சுதந்திர கூட்டமைப்பு நிகழ்ச்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகில் உள்ள இருதயகுளத்தில் வைத்து, சமய உணர்வுகளின் பரிமாற்றம் நிகழ்ச்சி நடந்தது. இயேசுவின் புனித இருதய சகோதரர்கள் சபை, காசனல் சபை, இணைந்து, ஏற்பாடு செய்த (ஐ.ஏ.ஆர்.எஃப்) பன்னாட்டு மத சுதந்திர அமைப்பின், சமய உணர்வுகளின் பரிமாற்றம் கலந்துரையாடல் நிகழ்ச்சி, காசனல் சபை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. இந்தியப் பிரிவின் முன்னாள் தலைவர் சுப்பிரமணிய ராஜா தலைமையில் […]

நெல்லையில் ஜூலை 23 (நாளை) மின்தடை..

நெல்லையில், 110/33-11KV மேலப்பாளையம் துணை மின் நிலையம், 33/11 KV புதிய பஸ் நிலையம் மற்றும் 33/11 KV ரொட்டியார்பட்டி உப மின் நிலையங்களில் 23.07.2024 (நாளை) மாதாந்திர பணி மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதால் கீழ்காணும் பகுதிகளில் காலை 9.00 முதல் மதியம் 5.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் (நகர்ப்புற கோட்டம் திருநெல்வேலி) செ. முருகன் அறிவித்துள்ளார். மேலப்பாளையம், கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குல வணிகர் புரம், மத்திய […]

ராமநாதபுரத்தில் காங்கிரஸ் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்

ராமநாதபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை கலந்து கொண்டு உரையாற்றினார் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் மற்றும் காங்கிரஸ் கட்சியினுடைய சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை யுபிஎஸ்சி தலைவர் எதற்காக ராஜினாமா செய்திருக்கிறார் அவர் பதவியேற்று ஓராண்டு கூட ஆகவில்லை அவர் பதவியை ராஜினாமா செய்ததற்கான […]

மேட்டுப்பாளையத்தில் மத்திய இணை அமைச்சரிடம் ரயில்வே மேம்பாடு சம்பந்தமாக சி ஐ டி யு தொழிற்சங்கத்தினர் கோரிக்கை மனு

 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ரயில் நிலையத்தில் இன்று தூத்துக்குடி வாராந்திர ரயில் மேட்டுப்பாளையம் போத்தனூர் புதிய ரயில்கள் சேவை துவக்கம் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த மத்திய இணை அமைச்சர் எல் முருகன் அவர்களிடம் மேட்டுப்பாளையம் தாலுக்கா சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மேட்டுப்பாளையம் கோவை ரயில்வே பாதையை இருவழிப் பாதையாக அமைக்க வேண்டும் மேட்டுப்பாளையம் கோவை பாசஞ்சர் ரயிலை மேலும் இரண்டு முறை நீட்டிக்க வேண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து கேரளா உள்ளிட்ட வட […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!