ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி வளாகத்தில் நகர்மன்ற சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபீதா தலைமையில் துணைத் தலைவர் ஹமீது சுல்தான் மற்றும் ஆணையாளர் ரங்கநாயகி முன்னிலையில் நடைபெற்றது . கூட்டத்தில் 21 வார்டுகளுக்கு உட்பட்ட அடிப்படை பிரச்சனைகளான குடிநீர் குழாய் பதித்தல் பேவர் பிளாக் அமைத்தல் வார்க்கால் அமைத்தல் கழிவு நீர் குழாய் உட்பட அடிப்படை தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு நகர்மன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரிடம் […]
Category: மாநில செய்திகள்
ஜிம் மற்றும் பார் உரிமையாளர் மீது நடந்த கொலை வெறி தாக்குதல்.!
ஜிம் மற்றும் பார் உரிமையாளர் மீது நடந்த கொலை வெறி தாக்குதல்: உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு! ராமநாதபுரம் அருகே சூரங்கோட்டை பகுதியைச் சேர்ந்த நிர்மல் (34) என்பவர், கிருஷ்ணா நகர் பகுதியில் ஜிம் மற்றும் பார் நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு, அவரது பாரில் மது அருந்த வந்த ஆர்.எஸ்.மடை பகுதியைச் சேர்ந்த சிலருக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று மதியம், நிர்மல் தனது பாரிலிருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் […]
சசிவர்ண முத்துவடுகநாத தேவரின் 253வது குருபூஜை விழா .!
சசிவர்ண முத்துவடுகநாத தேவரின் 253வது குருபூஜை விழா இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் ஆங்கிலேயருக்கு எதிராக முதன்முதலில் சுதந்திர பிரகடனம் செய்து உயிர் நீத்த வீரரும் சிவகங்கை சமஸ்தானத்தின் இரண்டாவது மன்னரும் சுதந்திர போராட்ட வீராங்கனை வீரப்பேரரசி வேலுநாச்சியாரின் கணவருமான சசிவர்ண முத்து வடுகநாதரின் 253 வது நினைவு நாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் உள்ள அவரது நினைவிடத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள், பால்குடம் எடுத்துச் சென்று மரியாதை செலுத்தினர். விழாவில் சிவகங்கை […]
தேவகோட்டை அருகே கண்டதேவி குங்கும காளியம்மன் திருக்கோவில் தேரோட்டம்.!
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கண்டதேவி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ குங்கும காளியம்மன் திருக்கோவில் ஆணி உற்சவ திருவிழா ஜீன்- 17 ஆம் தேதி காப்பு கட்டுடன் திருவிழா தொடங்கப்பட்டு தினந்தோறும் மாலையில் அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு வாகனங்களில் எழுந்தருள செய்யப்பட்டு புறப்பாடு நடைபெற்று வந்தது இன்று ஒன்பதாம் திருநாளில் மூலவர் அம்மனுக்கு அபிஷேக பூஜை நடைபெற்றது உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் செய்தி தேரில் எழுந்தருள செய்யப்பட்டு பக்தர்கள் பொதுமக்கள் தேர் வடத்தை […]
கீழக்கரை முழுவதும் மலேரியா மருந்து தெளிக்கும் பணி.!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி மற்றும் நோய் தடுப்பு மற்றும் பொது சுகாதார துறை இணைந்து நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா காய்ச்சல் வராமல் தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் வீடுகளிலும் தெருக்களிலும் மலேரியா டெங்கு போன்ற கொசுக்கள் மற்றும் முதிர் கொசுக்களை ஒழிக்க வீட்டின் உட்புறங்களிலும் மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் நோய் பரவலை தடுப்பதற்காக நகராட்சி பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்கள் வீடுகளிலும் தெருக்களிலும் மருந்துகள் […]
அழகன்குளம் கிராமத்தில் நாவாய் அருங்காட்சியம் அமைக்க கோரிக்கை.!
ராமநாதபுரம் அடுத்துள்ள அழகன்குளம் கிராமத்தில் நாவாய் அருங்காட்சியம் இடம் மாற்றம் செய்ய உள்ளதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு அரசு அறிவித்து இடத்திலே அமைக்க கோரி ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர் ராமநாதபுரம் மாவட்டம்,திருவாடானை சட்டப்மன்ற தொகுதிக்கு உட்பட்ட அழகன் குளம் ஊராட்சியில் உள்ள அரசுப்பளியில் பழங்கால பொருட்கள் கிடைத்து. இதனைதொடர்ந்து 1984 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை 8 கட்டங்களாக ஆகழ்வாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், ரோமானிய நாட்டுமது குடுவைகள், மீன், […]
ராமநாதபுரம் மீன்வளத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை.! மீன் வளத்துறை ஆய்வாளர் விசாரணை.!!
இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் பகுதியை சேர்ந்த மீனவர் தனது இயந்திரம் பொறுத்திய நாட்டு படகுகிற்கான உரிமம் மற்றும் கடலில் மீன் பிடிப்பதற்கான அனுமதியை பெற மீன் வளத்துறை ஆய்வாளர் சகுபர் சாதிக் என்பவரிடம் கடந்த வாரம் மனு கொடுத்துள்ளார். அதற்கு மீன் வளத்துறை ஆய்வாளர் புகார்தாரரிடம் இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகிற்கான உரிமம் மற்றும் கடலில் மீன் பிடிப்பதற்கான அனுமதி பெறவேண்டுமெனில் ரூ.5100/- கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு புகார்தாரர் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.3500/- […]
கீழக்கரையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியினர் நலத்திட்ட உதவி .!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஸ்லிம் பஜாரில் தமிழக வெற்றி கழகம் தலைவர் நடிகர் விஜய் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் மலர்விழி ஜெயபாலா தலைமையில் கீழக்கரை நகர் செயலாளர் அகமது ஜலாலுதீன் மற்றும் நிர்வாகிகள் பரோஸ்கான், சதாம் உசேன், நிஹாதா, ஹாபீஸ், நிஷார் ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அரிசி, பருப்பு, சேலை, வேஷ்டி உள்ளடக்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலாளர் நைனா முகம்மது, […]
ராமேஸ்வரத்தில் சுதந்திர போராட்ட தியாகி விஸ்வநாத தாஸ் 139 பிறந்த நாள் விழா.!
ராமேஸ்வரத்தில் சுதந்திர போராட்ட தியாகி விஸ்வநாத தாஸ் 139 பிறந்த நாள் விழ சுதந்திர போராட்ட தியாகி விஸ்வநாத தாஸ் 139 பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மருத்துவ சமுதாய மக்கள் சார்பில் இராமேஸ்வரம் கொண்டேஸ்வர் மடத்தில் நடைபெற்ற விழாவில் நகர் மன்ற தலைவர் நாசர் கான் கலந்து கொண்டு விஸ்வநாததாஸ் திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கொண்டேஸ்வர் மடத்தில் இந்திய சுதந்திரத்திற்காக தனது பாடல்கள் மூலம் சுதந்திர போராட்டத்தின் போது […]
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பேச்சு போட்டி..
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி கல்லூரி மாணவ மாணவியருக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது என தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்து உள்ளார். இது குறித்த செய்திக் குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கும், அனைத்து கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கும் பேச்சுப் போட்டிகள் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி 30.06.2025 அன்றும், முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளையொட்டி 01.07.2025 […]
ராமநாதபுரம் நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கு இடையே சலசலப்பு.!
ராமநாதபுரத்தில் ஜல் ஜீவன் திட்டப் பெயர் மாற்றம் குறித்த சர்ச்சை: கொடுமையாக எதிர்த்த பாஜக நகர்மன்ற உறுப்பினர்! ராமநாதபுரம் நகராட்சி கூட்டத்தில், மத்திய அரசின் ‘ஜல் ஜீவன்’ குடிநீர் திட்டத்தின் பெயரை ‘சிறப்பு கூட்டு குடிநீர் திட்டம்’ என மாற்றியதற்கு நகராட்சி கவுன்சிலர்கள் கண்டனம் தெரிவித்தனர். ராமநாதபுரம் நகராட்சித் தலைவர் ஆர்.கே. கார்மேகம் தலைமையில், துணைத் தலைவர் பிரவீன் தங்கம் மற்றும் ஆணையாளர் அஜிதா பர்வீன் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மொத்தம் 63 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. இந்த […]
கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதலுக்கு படாத பாடுபடும் சுற்றுவட்டார பொதுமக்கள்!
கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதலுக்காக பதிவு செய்துள்ள பொதுமக்கள் நீண்டகால காத்திருப்புக்கு ஆளாவதாக புகார் தெரிவித்துள்ளனர். மேலும் இணையதளத்தில் பதிவேற்ற மிகவும் காலதாமதம் செய்து வருவதாக குற்றச்சாட்டு வைக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் பட்டா வழங்குவதில் முறைகேடுகள் நடப்பதாகவும், இணையதள பதிவேற்றம் மிகவும் தாமதமாக நடப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. கீழக்கரை தாலுகாவில் தில்லையேந்தல், காஞ்சிரங்குடி, மாயாகுளம், ஏர்வாடி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகள் அடங்கியுள்ளன. ஆனால் பட்டா உள்ளிட்ட அரசு ஆவணங்கள் பெறவும் சான்றிதழ்கள் […]
கோவிந்தமங்கலம் ஊராட்சியில் 100 நாள் வேலை மறுப்பு: ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை.!
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோவிந்தமங்கலம் ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டப் பணிகள் வழங்கப்படாததை கண்டித்து, 100க்கும் மேற்பட்ட பெண்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மற்ற ஊராட்சிகளில் பணிகள் நடைபெறும் நிலையில், கோவிந்தமங்கலம் ஊராட்சி செயலாளர் மட்டும் பணி வழங்க மறுப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து ஆர்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பெண்கள் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் உடனடியாகத் […]
திருப்புல்லாணியில் திமுக இளைஞர் அணி சார்பில் நான்காம் ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம்!
திருப்புல்லாணியில் திமுக இளைஞர் அணி சார்பில் நான்காம் ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பேருந்து நிறுத்தம் அருகே திமுக இளைஞர் அணி சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் திருப்புல்லாணி கிழக்கு ஒன்றியம் இளைஞர் அணி அமைப்பாளர் விவேக் ஆதித்தன் தலைமையில் கழக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சம்பத் ராஜா மற்றும் ஒன்றிய கழக […]
திருவாடானை அருகே அரசு பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்.!
திருவாடானை அருகே பாண்டுகுடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் திருவாடானை வட்ட சட்ட பணிகள் குழுவின் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாம் ராமநாதபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் – முதன்மை மாவட்ட நீதிபதி மெஹபூப் அலிகான் அறிவுறுத்தலின் படியும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர்- சார்பு நீதிபதி சரவண பாபு ஆலோசனையின் படி திருவாடானை வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவர் தலைவர் அன்டோனி ரிஷந்தேவ் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் […]
தேவர் கல்லூரியில் மலேரியா விழிப்புணர்வு..
தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் மலேரியா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஹரிகெங்காராம் தலைமை வகித்தார். முனைவர் மு. சிவக்குமார் முன்னிலை வகித்தார். மாணவி கலைச் செல்வி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக மருத்துவர் ராஜேஸ்வரி, குருக்கள்பட்டி மருத்துவ அலுவலர் விஷ்ணு, சேர்ந்தமரம் மருத்துவ அலுவலர் முகமது ஜாஃபர் அலி ஆகியோர் பங்கேற்று மலேரியா தடுக்கும் முறைகளை விளக்கி கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மலேரியா அலுவலர், ராமலிங்கம் […]
திமுக கூட்டணி வெற்றி பெறும்; IUML தேசிய தலைவர் பேட்டி..
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன், மணிச்சுடர் சாகுல் ஹமீது இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்ள தென்காசி மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். அப்போது திருமண நிகழ்வை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், திமுக தலைமையிலான கூட்டணி வருகின்ற சட்டப் பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும், திமுக-முஸ்லிம் லீக் இடையே இருப்பது கொள்கை ரீதியான கூட்டணி எனவும் IUML தேசிய தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்தார். தென்காசி […]
நல்லிருக்கை மற்றும் வண்ணாகுண்டு ஆகிய கிராமங்களில் உழவரைத்தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்ட முகாம்.!
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்துக்கு உட்பட்ட நல்லிருக்கை மற்றும் வண்ணாகுண்டு ஆகிய கிராமங்களில் ”உழவரைத்தேடி வேளாண்மை உழவர்நலத்துறை” திட்டம் முகாம் நடைபெற்றது. வேளாண்மை உழவர்நலத்துறை மற்றும் சார்புத்துறைகளின் புதிய தொழில்நுட்பங்கள், திட்டங்கள், வேளாண் விலைபொருட்கள் மதிப்புக்கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல், இடுபொருட்கள் குறித்த விழிப்பணர்வு ஏற்படுத்துதல், பயிர் காப்பீடு செய்வதால் ஏற்படும் நன்மைகள், வீட்டு காய்கறி தோட்டம் அமைத்தல், கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் மேலாண்மை முறைகள், பண்ணைக்குட்டைகளில் மீன்கள் வளர்த்தல், உயிர்ம வேளாண்மையின் அவசியம், உழவர் செயலி […]
கீழக்கரை கடற்கரை அருகே உயர் ரக கஞ்சா பறிமுதல்: ராமநாதபுரம் சுங்கத்துறை அதிரடி நடவடிக்கை:
ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் சமீப காலமாக தனுஷ்கோடி, மரைக்காயர்பட்டினம் வேதாளை, களிமண்குண்டு, கீழக்கரை, நரிப்பையூர் உள்ளிட்ட தெற்கு கடற்கரை கிராமங்களில் இருந்து கஞ்சா, மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் நாட்டுப்படகில் கடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே சட்டவிரோதமான முறையில் போதைப் பொருட்கள் சாலை மார்க்கமாக கடத்தி வந்து பின்னர் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்திச் செல்லப்படுவதற்கும், இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக வரும் கடத்தல் தங்கத்தை சாலை மார்க்கமாக திருச்சி, மதுரை […]
IUML மகளிர் அணி சார்பில் பரிசளிப்பு விழா..
கடையம் அருகே உள்ள ரவண சமுத்திரம் பகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி சார்பில், முதலியார் பட்டி, திருமலையப்பபுரம், பொட்டல் புதூர், ஆகிய அரசுப் பள்ளி, மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி ரவண சமுத்திரம் ஹிதாயத்துல் முஸ்லிமீன் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. IUML மகளிர் அணி மாவட்ட செயலாளர் நாகூர் அலி பாத்திமா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, கடையம் ஒன்றிய […]