சுற்றுச்சூழலுக்கு எதிரான கனிம சுரங்க அனுமதியை ரத்து செய்க! கனிமொழி எம்.பி வலியுறுத்தல்..

டங்ஸ்டன் கனிம சுரங்கம் சுற்றுச் சூழலுக்கு எதிரானது எனவும், மதுரையில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைத்தால், கலாச்சார மற்றும் பாரம்பரிய சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இச்சுரங்கத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்கும் முன்பு, மாநில அரசிடம் ஆலோசிக்கவில்லை. எனவே கனிம சுரங்கத்திற்கான அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்! என்றும் மக்களவையில் கனிமொழி எம்பி வலியுறுத்தியுள்ளார்.  மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கப் பிரச்சினை தொடர்பாக மக்களவையில் கனிமொழி எம்.பி பேசியதாவது: “தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் […]

கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு 05 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை; தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு..

சாம்பவர் வடகரை பகுதியில் கொலை முயற்சி வழக்கின் குற்றவாளிக்கு 05 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 10,000 அபராதம் விதித்து தென்காசி தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை காவல் நிலைய எல்கைகுட்பட்ட பகுதியில், கடந்த 2014 ஆம் ஆண்டு குடும்ப பிரச்சனையில் அரிவாளால் வெட்டி கொலை முயற்சி செய்த வழக்கில் சாம்பவர் வடகரை மூக்கன் என்பவரின் மகன் மாடசாமி @ சங்கிலி மாடன் (48)  என்பவரை சாம்பவர் வடகரை காவல் […]

இறப்பிலும் இணை பிரியாத தம்பதியினர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கவணம்பட்டியைச் சேர்ந்தவர்கள் சுப்பிரமணியன் – பாண்டியம்மாள் தம்பதி., சுப்பிரமணியன் கட்டிட தொழிலாளியாகவும், பாண்டியம்மாள் இல்லத்தரசியாகவும் வாழ்ந்து வந்தனர்.,இவர்களுக்கு திருமணமான நாளிலிருந்து 35 ஆண்டுகளாக குழந்தை இல்லாத சூழலில் கணவருக்கு குழந்தையாக மனைவியும், மனைவிக்கு குழந்தையாக கணவனும் அதிக அளவு பாசத்துடன் இருந்துள்ளனர்.,இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி சுப்பிரமணியனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நேற்று 10ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்., கணவர் உயிரிழந்த நொடி முதல் மீளமுடியாத சோகத்தில் இருந்து வந்த […]

பேவர் பிளாக் சாலையின் தரம் ராமநாதபுரம் ஆட்சியர் ஆய்வு..

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோயில் ஒன்றியம்  பெருங்களூர் ஊராட்சியில் ரூ.2.97 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலையின் தரத்தன்மை குறித்து ஆய்வு செய்து சாலையின் இரு புறத்தையும் பலப்படுத்தி நன்கு அமைக்க வேண்டுமென பொறியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அறிவுறுத்தினார். நயினார்கோயில் வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு, ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் கணபதி சுப்ரமணியன், ஜெயந்தி உடனிருந்தனர்.

காரைக்குடியில்சம்பை ஊற்று நீர் , பாதுகாக்க கோரி தாசில்தார் அலுவலகம் முற்றுகை போராட்டம்…

காரைக்குடியில் சம்பை ஊற்று நீரை சட்டவிரோதமாக பயன்படுத்தும் ,நீர் நிலைகளை மாசுபடுத்தும் கெமிக்கல் மற்றும் ஒர்க் ஷாப், கார், பைக் கம்பெனிகளை மூட கோரியும் சம்பை நீர் நீரோட்ட பகுதியில் கட்டிடம் கட்ட தடை செய்யக்கோரியும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே. எம்.சரீப் தலைமையில் காரைக்குடியில் தாசில்தார் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.  விடுதலை தமிழ் புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன் மற்றும் தோழமைக் கட்சிகள் உள்ளிட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரால் […]

தாயாரை மீட்டு தரக்கோரி மகள் கண்ணீர் மல்க மனு..

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா ஆ. புனவாசல் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி பத்ரகாளி. இவரை வீட்டு வேலைக்காக ஏஜன்ட்கள் கொக்கா டி இருளாண்டி, திருச்சி நாசர் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மஸ்கட் நாட்டிற்கு அனுப்பினர். அங்கு பத்ரகாளி தொடர் சித்ரவதையால் தற்போது மிகவும் உடல் நலம் பாதித்துள்ளார். இதனால் பத்ரகாளியை மீட்டு தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது மகள் நபியா மக்கள் குறை தீர் […]

கண்காணிப்பு கேமரா சேவை : எஸ்பி தொடங்கி வைத்தார்..

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியம் சின்னஉடப்பங்குளம் கிராமத்தில் மாவட்ட கவுன்சிலர் வாசுதேவன் ஏற்பாட்டில் பொருத்தி கண்காணிப்பு கேமராக்களின் சேவையையும் மாவட்ட கண்காணிப்பாளர் சந்தீஷ் இன்று துவங்கி வைத்தார். அபிராமம் அருகே பாப்பனம் கிராமத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய 4 CCTV கேமராக்களின் சேவையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் பொதுமக்கள் முன்னிலையில் இன்று தொடங்கி வைத்தார்.

காசநோய் இல்லா தமிழகம் விழிப்புணர்வு பிரச்சாரம்; தென்காசி மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்..

தென்காசியில் “NIKSHAY SHIVIR” எனும் தொடர்ச்சியான 100 நாள் காசநோய் இல்லா தமிழகத்திற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் துவக்கி வைத்தார். தென்காசி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் 07.12.2024 அன்று “NIKSHAY SHIVIR” எனும் தொடர்ச்சியான 100 நாள் காசநோய் இல்லா தமிழகத்திற்கான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பை கடைநிலை மக்கள் வரை கொண்டு சேர்க்கும் வகையில் […]

கீழக்கரை 18 வாலிபர்கள் ஜக்காத் கமிட்டிக்கு தன்னார்வலர் விருது..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் செயல்பட்டு வரும் 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளை (ஜகாத் கமிட்டி) சமூக சேவை, மருத்துவ சேவை, கல்வி சேவை, வட்டியில்லா கடன் உதவிகள், பேரிடர் காலத்து உதவிகள், மரக்கன்று நடுதல் போன்ற பல்வேறு சேவைகளை செய்து வருகின்றது. மேலும் கோவையில் தனியார் கல்லூரியில் தமிழக குரல் இணையதளம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவப்படுத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் […]

கடையம் அருகே இலவச சித்தா மற்றும் கண் மருத்துவ முகாம்..

தென்காசி மாவட்டம் கடையம் அருகே திருமலையப்பபுரத்தில் இலவச சித்தா மற்றும் கண் மருத்துவ முகாம் நடந்தது. இம்முகாமில் 5 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் மற்றும் திருநெல்வேலி அரசு சித்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து திருமலையப்பபுரம் திரு கைலாசம் நினைவு உயர்நிலைப் பள்ளியில் இலவச சித்த மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்க தலைவர் […]

இட ஒதுக்கீடு அரசியல் சாசனப் பிரிவு 16(4-A) ஐ மீண்டும் அமல்படுத்தக்கோரி ஆலோசனை கூட்டம்..

இராமநாதபுரம் பட்டியல் & பழங்குடி வகுப்பினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கும் அரசியல் சாசனப் பிரிவு 16(4-A) ஐ மாநில அரசு அமல்படுத்த கோருவது தொடா்பான ஆலோசனனக் கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது. தமிழ்நாடு அரசுப் பணிகளில் அமலிலிருந்த இனச்சுழற்சி அடிபடையில் பதவி வழங்கும் நடைமுறை உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு பெண்கள், பட்டியல் & பழங்குடி வகுப்பைச் சார்ந்த பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் பதவி உயர்வு […]

மண்டபம் மீனவர் 8 பேர் 2 விசைப்படகு களுடன் கைது:இலங்கை கடற்படை நடவடிக்கை..

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று காலை தொழிலுக்குச் சென்றனர். இலங்கை யாழ். மாவட்டம் நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று நள்ளிரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக மண்டபம் கார்த்திக் ராஜா, தங்கச்சிமடம் ஆஸ்டின் ஆகியோரது விசைப்படகுகளில் இருந்த சேசு 47, காளி 50, கண்ணன் 55, முத்துராஜ் 45, பத்தரப்பன் 55 உள்பட 8 மீனவர்களை […]

மண்டபம், திருப்புல்லாணி வட்டாரத்தில் உலக மண் வள பாதுகாப்பு தின விழா..

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், திருப்புல்லாணி வட்டாரங்களில் தமிழ்நாடு அரசு வேளாண் துறை, ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் உலக மண்வள தினம் கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் வேளாண் இணை இயக்குனர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், மண்ணை மலடு ஆக்காமல், அதன் வளம் காக்க வேண்டும் மண் மாசடைவதை தடுக்க வேண்டியது அனைவரின் கடமை என்றார். மண் பராமரிப்பு குறித்து திருப்புல்லாணி வேளாண் உதவி இயக்குனர் செல்வம் விளக்கம் அளித்து துவக்கி வைத்தார். […]

ஆன்லைனில் முதலீடா? மோசடி!! காவல்துறை எச்சரிக்கை..

மொபைல் மூலம் இணைய பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைனில் இணையதளம், டெலிகிராம் மற்றும் வாட்ஸப் உள்ளிட்ட ஆன்ட்ராய்டு செயலி வாயிலாக முதலீடு எனும் பெயரில் பல்வேறு நிதி மோசடிகள் நடைபெற்று வருகிறது. சமூக ஊடகங்களான வாட்ஸப் மற்றும் டெலிகிராம் மற்றும் யூடியூப் சேனல்கள் மூலம் “உங்கள் முதலீடு இரட்டிப்பாகும், வீட்டிலிருந்து கொண்டே ஆன்லைன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம்” இது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் பொதுமக்களை முதலீடு செய்ய வைத்து ஏமாற்றி வருகின்றனர்.  இதனை […]

ராமநாதபுரத்தில் 991 பேருக்கு ரூ.2.66 கோடி மதிப்பில் நலத்திட் உதவிகள் பால் வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்..

இராமநாதபுரம் : இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு  தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்பில் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதையொட்டி,  ராமநாதபுரத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு ராமநாதபுரத்தில் நடந்தது மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமை […]

ராமநாதபுரம் சுற்றுச்சூழல் தன்னார்வலருக்கு சேவை செம்மல் விருது..

இராமநாதபுரம் : தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு சார்பில் சென்னை ஐஐடி வளாகத்தில்  சேவை செம்மல் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழகத்தில் 38 மாவட்டங்கள், புதுச்சேரி உள்பட 39 மாவட்டங்களில் கடந்த ஓராண்டில் தன்னலமற்ற சேவை செய்து வந் தோரை அடையாளம் கண்டு, அவர்களின் சேவைகளை அங்கீகரித்து 39 பேருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி வளாகங்களில் நிழல், பலன் மரக்கன்றுகள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, பசுமை கிராமம் […]

வலையில் சிக்கிய அரிய வகை நட்சத்திர ஆமை:கடலில் பத்திரமாக விட்ட மீனவர்கள்..!

தொண்டி கடலில் சிக்கிய அரிய வகை நட்சத்திர ஆமையை, மீட்டு மீண்டும் பத்திரமாக கடலில் விட்ட மீனவர்களுக்கு பாராட்டு குவிகிறது. ராமநாதபுரம் மாவட்டம்,தொண்டி புதுக் குடியை சேர்ந்த மீனவர் ராமகிருஷ்ணன், பாலமுருகன், மணிகண்டன் ஆகியோர் தொண்டி புதுக்குடி கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, அவர்களது வலையில் 15 கிலோ எடை கொண்ட அதிசய நட்சத்திர ஆமை ஒன்று சிக்கியது. உடன் அதை பத்திரமாக  வலையில் இருந்து எடுத்து  உயிருடன் கடலில் மீண்டும் விட்டனர். தடை செய்யப்பட்ட கடல் ஆமையை […]

இராமநாதபுரத்தில் தமுமுக ஆர்ப்பாட்டம்..

இராமநாதபுரம் : பள்ளிவாசல் சொத்துகளை கபளிகரம் செய்ய கொண்டு வரப்பட்டுள்ள வக்ப் திருத்த மசோதாவை முழுமையாக திரும்ப பெற கோரியும், வழிப்பாட்டு தலங்கள் பாதுகாப்புச் சட்டம் 1991 முழுமையாக கடைப்பிடிக்க கோரி ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக பணி மனை முன் தமுமுக சார்பில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. தமுமுக துணை பொதுச்செயலாளர் சலிமுல்லாஹ்கான் தலைமை வகித்தார். மே 17 இயக்கம் தலைவர் திருமுருகன் காந்தி கண்டன உரை ஆற்றினார். தமுமுக மாநில செயலாளர் சாதிக் […]

சிறுபான்மையினர் நல ஆணையம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம்; நலத்திட்ட உதவிகள் வழங்கல்..

தென்காசி மாவட்டத்தில் சிறுபான்மையினர் கலந்துரையாடல் கூட்டம் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண் சே.ச தலைமையில் நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் 05.12.2024 அன்று தென்காசி மாவட்டத்திலுள்ள சிறுபான்மையினர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவர் எம்.எம். அப்துல் குத்தூஸ் (எ) இறையன்பன் குத்தூஸ், அரசு கூடுதல் செயலாளர் / பிற்படுத்தப்பட்டோர் மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முனைவர் […]

பட்டா பெயர் சேர்ப்பு விவகாரம்; தென்காசி கோட்டாட்சியர் விளக்கம்..

பட்டாவில் பெயர் சேர்க்கும் விவகாரத்தில், தன் மீது அடிப்படை ஆதாரமற்ற மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தென்காசி கோட்டாட்சியர் லாவண்யா விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளதாக கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம், ஊத்துமலை பகுதியை சேர்ந்த விவசாயி கண்ணையா பட்டாவில் தனது மனைவி பெயரை சேர்ப்பது தொடர்பாக ரூ.50 ஆயிரம் கேட்டதாக கூறி கோட்டாட்சியர் மீது மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு அளித்திருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக தென்காசி […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!