தென்காசி நகராட்சியில் பணியாற்றும் தூய்மை காவலர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா மற்றும் சமபந்தி விருந்து அளிக்கும் நிகழ்ச்சி நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர் தலைமையில் நடைபெற்றது. சமாதான சமூக சேவை அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சமபந்தி விருந்தினை நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், சமாதான சமூக சேவை அமைப்பின் அறங்காவலர் ராபின், நடிகர் (திருப்பாச்சி) பெஞ்சமின், சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில், நகர்மன்ற உறுப்பினர்கள் ராம கிருஷ்ணன், […]
Category: மாநில செய்திகள்
“டாம்ப்கால்” நடமாடும் சித்தா மருந்துகள் விற்பனை நிலையம்; கலெக்டர் கமல் கிஷோர் துவக்கி வைத்தார்..
தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பயன்படும் விதம் “டாம்ப்கால்” நடமாடும் சித்தா ஆயுர்வேதா யுனானி மருந்துகள் விற்பனை நிலையத்தினை (24.12.2024) அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, பொது மக்கள் பயன்பாட்டிற்கு இந்த நடமாடும் டாம்ப்கால் விற்பனை நிலையம் குற்றால அருவிகளின் அருகில் செயல்படும். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், தரமற்ற, உரிமம் பெறப்படாத மருந்துகளை பொதுமக்கள் வாங்க வேண்டாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் […]
தஞ்சாவூர் மாவட்டத்தில் இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட வளர் இளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி..
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம், செங்கிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட வளர் இளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்டின் சார்பாக நடைபெற்றது . இந்நிகழ்ச்சிக்கு செங்கிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார். பாளையப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர்,மருந்தாளுநர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் 90க்கும் மேற்பட்ட ரத்தசோகை நோயினால் பாதிக்கப்பட்ட வளர் இளம் பெண்களுக்கு சில்ட்ரன் சாரிட்டபிள் […]
தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தஞ்சையில் உள்ள எம்ஜிஆர் மற்றும் பெரியார் சிலைக்கு மாலை..
தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தஞ்சையில் உள்ள எம்ஜிஆர் மற்றும் பெரியார் சிலைக்கு மாலை அணிந்து அஞ்சலி செலுத்தினர். தந்தை பெரியாரின் 51 ஆண்டு நினைவு தினம் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சையில் தமிழக வெற்றி கழகம் சார்பாக மாவட்ட தலைவர் விஜய் சரவணன் தலைமையில் வருகை தந்த தொண்டர்கள் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கும், வடக்கு வீதியில் […]
நெல்லையில் மின்வாரிய இணைப்பு பணி; பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக மஜகவினர் கலெக்டரிடம் மனு..
நெல்லை மாவட்டத்தில் ஒரே முகவரியில் உள்ள மின் இணைப்புகளை இணைக்கும் பணிகளால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மாநிலத் துணைச் செயலாளர் பிலால் ராஜா தலைமையில் கலெக்டரிடம் அளித்துள்ளனர். அந்த மனுவில், நெல்லை மாவட்டத்தில் மின்வாரியம் ஒரே முகவரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு உள்ள வீடுகளில் மின் இணைப்புகளை ஒரே இணைப்பாக மாற்றும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதனால் நடுத்தர மக்கள் ஏழை மக்கள் கடும் மின் கட்டண உயர்வுக்கு […]
ஆதரவற்ற பெண்ணை மீட்டு மறுவாழ்வு அளித்த பசியில்லா தமிழகம் அமைப்பினர்; பொதுமக்கள் பாராட்டு..
குற்றாலம் பகுதியில் பேருந்து நிலையத்தில் வசித்து வந்த ஆதரவற்ற பெண் மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு தேவையான முதலுதவி, கவுன்சலிங் மற்றும் மறுவாழ்வு அளிக்கும் பணிகளை முன்னெடுத்து வரும் தென்காசி பசியில்லா தமிழகம் குழுவினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே சாலையில், ராகிணி என்ற 55வயது பெண் ஆதரவற்ற நிலையில் குற்றாலம் பேருந்து நிலையத்தில் வசித்து வந்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஆதரவற்று இருந்த இந்த பெண்மணி மீட்கப்பட்டு குற்றாலம் கலைவாணர் […]
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அடைப்பு : இணை ஆணையர் அறிவிப்பு..
இராமநாதபுரம்: மார்கழி மாத அஷ்டமி பூப்பிரதட்சணத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை நாளை (23.12.2024) சாத்தப்படுகிறது. இதையொட்டி பூஜை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி நாளை அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 3:30 மணி முதல் 4 மணி வரை ஸ்படிக லிங்க பூஜை நடைபெற உள்ளது. காலை 7 மணிக்கு சுவாமி – அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி ராமேஸ்வரம் நகர் முக்கிய வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு […]
நெல்லையில் பழிக்கு பழி நடந்த கொலை; காவல்துறை விசாரணையில் தகவல்..
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை நீதிமன்ற வாசலில் வாலிபர் ஒருவர் நேற்று சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் துறையினர் விசாரணையில், பழிவாங்கும் விதமாக இந்த கொலை நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, திருநெல்வேலி மாநகரம் பாளையங் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு 20.12.2024 ஆம் தேதி […]
இராமநாதபுரத்தில் ஓய்வூதியர் தின கருத்தரங்கு..
தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஓய்வூதியர் தின கருத்தரங்கு நடந்தது. மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மணிக்கண்ணு வரவேற்றார். ஓய்வூதியர்களும் மருத்துவமும் குறித்து டாக்டர் சந்திரசேகரன் பேசினார். மூத்தோர் 3 பேர் கவுரவிக்கப்பட்டனர். மாநில துணைத்தலைவர் குப்பன் சிறப்புரை ஆற்றினார். ஓய்வூதியர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், செயலாளர் விஜயராகவன், முதுகுளத்தூர் வட்ட தலைவர் சிவனுபூவன், மாநில செயற்குழு உறுப்பினர் பிச்சை, போக்குவரத்து ஓய்வூதியர் சங்க உறுப்பினர்கள் கேசவன், […]
ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் போராட்டம்..
ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை அவமதிக்கும் கருத்துகளை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்த நிலையில், இந்தியா கூட்டணி தலைவர்கள் அவரின் கருத்துக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான […]
தென்காசியில் புதிய இ-சேவை மையம் திறப்பு..
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் ஆதார் சேவை மைய கட்டிடத்தில், தமிழ்நாடு அரசின் புதிய இ-சேவை மையம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. புதிய இ-சேவை மையத்தினை 18.12.2024 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் துவக்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது, தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்றைய தினம் புதிய இ-சேவை துவங்கி வைக்கப்பட்டுள்ளது. புதிய இ-சேவை மையத்தில், சாதிச் சான்றிதழ், […]
திமோர் நாட்டிற்கு தமிழக மாணவ மாணவியர் கல்விப்பயணம்..
திமோர் நாட்டில் மருத்துவம் படிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவ மாணவியர்கள் ஆர்வத்துடன் கல்விப் பயணம் மேற்கொண்டனர். அப்போது சிறப்பாக மருத்துவ கல்வி பயின்று முழுமையான மருத்துவராக தாயகம் திரும்பி மக்களுக்கு மருத்துவ சேவை புரிய வேண்டுமென பீஸ் மருத்துவப் பல்கலைக்கழக இயக்குனர் ஐசக் பாஸ்கர், சமூக நல ஆர்வலர் திருமாறன், தினமலர் தினேஷ் ஆகியோர் மாணவ மாணவியரிடம் அறிவுறுத்தினர். நமது நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர்கள் உருவாகும் உன்னத நோக்கத்துடன் தமிழக மாணவ […]
90 ஆடுகள் உயிரிழந்த பெரும் சோகம்; நிவாரணம் வழங்க வலியுறுத்தல்..
தென்காசி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக ஆட்டுப் பண்ணைக்குள் தண்ணீர் புகுந்து 90 ஆடுகள் உயிரிழந்ததால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. ஆடுகளை இழந்துள்ளவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பேரூராட்சி கம்பிளி கிராமத்தில் கிருஷ்ணசாமி என்பவரின் தோப்பில், கம்பிளி பகுதியை சேர்ந்த மாரியப்பன், சாம்பவர் வடகரையை சேர்ந்த குத்தால ராமன் ஆகிய இருவரும் ஆட்டு பண்ணைகள் அமைத்து பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் இரண்டு […]
ஒன்றிய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அரசியல் சாசனத்திற்கு எதிரானது; கனிமொழி எம்.பி பேட்டி..
ஒன்றிய அரசால் மக்களவையில் கொண்டு வரப்பட்டுள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதா அரசியலமைப்பு சாசனத்திற்கும், மக்களுக்கும், கூட்டாட்சிக்கும் எதிரானது என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதா டிசம்பர் 17ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்நிலையில் இந்த சட்ட மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து திமுக […]
தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தென்காசி மாவட்ட அரசு பள்ளி மாணவிகள் சாதனை..
பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் பங்கேற்ற தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவிகள் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். ஸ்கூல் கேம்ஸ் பெட்ரேஷன் ஆப் இந்தியா சார்பில் 2024-25ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் மாநில அளவில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நடந்தது. சிவகங்கையில் நடந்த போட்டியில் தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் ஒளவையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மு.சந்தியா மற்றும் சி.யோக தர்ஷினி […]
ராமநாதபுரத்தில் 25 வது மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி : வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு..
ராமநாதபுரம், டிச.16 – ராமநாதபுரம் மாவட்ட சதுரங்க கழகம் செய்யதம்மாள் கலை அறிவியல் கல்லூரி சார்பில் 25 வது மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி செய்யதம்மாள் கலை அறிவியல் கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. செய்யதம்மாள் கலை அறிவியல் கல்லூரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். செய்யதம்மாள் அறக்கட்டளை உறுப்பினர் பாத்திமா சானாஸ் பரூக், ராமநாதபுரம் மாவட்ட சதுரங்க கழக தலைவர் சுந்தரம் செய்யதம்மாள் கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை […]
ராமேஸ்வரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் பிறந்தநாளை முன்னிட்டு சிற்ப்பு பிரார்த்தனை..
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரனின் 61 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு இன்று (13/12/2024) ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சியின் நகர கழகச் செயலாளர் சுதாகர் ஏற்பாட்டில் டிடிவி தினகரன் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு ஆயுஷ் ஹோமம் நடைபெற்றது வேதாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க நடைபெற்ற ஆயுஷ் ஹோம விழாவில் ராமநாதபுரம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் முருகன் […]
இருமேனி ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடம் திறப்பு..
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் இருமேனி ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டட திறப்பு விழா இன்று நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ திறந்து வைத்தார். மண்டபம் வட்டார வளர்ச்சி ஆணையர் சோமசுந்தர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஷங்கர பாண்டியன், ஊராட்சி தலைவர் சிவக்குமார், துணைத்தலைவர் ஐனுல் அரபியா, ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பிரபாகரன், ஊராட்சி தலைவர்கள் கார் மேகம் […]
ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடியில் 19 பேருக்கு ரூ.59.50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் : அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் வழங்கினார்…
இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடியில் தமிழ்நாடு மாநிலத் தலைமை மீனவளக் கூட்டுறவு இணையம் (டாப்கோபெட்), மீன்வளம், மீனவர் நலத்துறை சார்பில் மீனவர்களுக்கு வரிவிலக்கு அளித்த டீசல் விற்பனை, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் டீசல் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையம் திறப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் மீன்வளம், மீனவர் நலத்துறை இயக்குநர் கஜலட்சுமி, மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தனர். சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம் (இராமநாதபுரம்), கருமாணிக்கம் (திருவாடானை) முருகேசன் (பரமக்குடி) […]
ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடியில் மீனவர்களுக்கு விலக்கு அளித்த டீசல் விற்பனை மையம் திறப்பு…
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடியில் தமிழ்நாடு மாநிலத் தலைமை மீனவளக் கூட்டுறவு இணையம் (டாப்கோபெட்), மீன்வளம், மீனவர் நலத்துறை சார்பில் மீனவர்களுக்கு வரிவிலக்கு அளித்த டீசல் விற்பனை, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் டீசல் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையம் திறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மீன்வளம், மீனவர் நலத்துறை இயக்குநர் கஜலட்சுமி, மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தனர். சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் (இராமநாதபுரம்), கருமாணிக்கம் (திருவாடானை) […]
You must be logged in to post a comment.