திருநங்கைகளுக்கு அறிவுரைகள் வழங்கிய தென்காசி மாவட்ட எஸ்.பி

தென்காசி மாவட்ட எஸ்.பி V.R.ஸ்ரீனிவாசன் திருநங்கைகளுக்கு அறிவுரைகள் வழங்கினார். தென்காசியில் பேருந்து நிலையம், சுற்றுலாத்தலங்கள் போன்ற அதிக பொதுமக்கள் கூடும் பகுதிகளில் திருநங்கைகள் தங்களிடம் பிரச்சனை செய்வதாகவும், மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதாகவும், அசிங்கமாக பேசுவதாகவும் தொடர் புகார்கள் வந்த நிலையில், இதை தடுக்கும் பொருட்டு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஶ்ரீனிவாசன் தலைமையில் தென்காசி பகுதியில் உள்ள திருநங்கைகளை அழைத்து அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.  திருநங்கைகள் மீது காவல் நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகள் […]

தென்காசி மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிகளுடன் கலந்தாய்வு கூட்டம்..

தென்காசி மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் இறந்தவர்கள் பெயர் நீக்குதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத்திருத்தம் 2025க்கு 01.01.2025-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்களை (அதாவது 31.12.2006 அல்லது அதற்கு முன்னர் பிறந்தவர்கள்) புதிய வாக்காளராக சேர்ப்பது தொடர்பான நடவடிக்கையாக 28.11.2024 வரை மனுக்கள் […]

வாட்ஸப் மூலம் போலி வர்த்தக முதலீடு செய்ய வைத்த மோசடி நபர் அதிரடி கைது..

போலியான வர்த்தக வாய்ப்புகளை முன்வைத்து, whatsapp மூலம் பெரிய லாபம் திரும்ப கிடைக்கும் என எதிர்பார்ப்பை உருவாக்கி முதலீட்டாளர்களை ஏமாற்றிய மோசடி நபர் சைபர் குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து சைபர் கிரைம் காவல்துறை செய்திக்குறிப்பில் சைபர் கிரைம் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சமீபகாலமாக, சைபர் குற்றவாளிகள் இணைய வழி வர்த்தகத்தின் (ஆன்லைன்) வாயிலாக மக்களை ஏமாற்றுவதற்கான புதிய வழிமுறைகளை பயன்படுத்தி வருகின்றனர். போலியான வர்த்தக வாய்ப்புகளை முன்வைத்து, whatsapp மூலம் பெரிய லாபம் […]

நெல்லையில் சினிமா தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; போலீசார் விசாரணை..

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் உள்ள அலங்கார் சினிமா தியேட்டரில் இன்று அதிகாலையில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.  அதில் அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் தியேட்டரை நோக்கி பெட்ரோல் குண்டு வீசும் காட்சி பதிவாகி உள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், போலீசார் விசாரணை முடிவுகள் வருவதற்கு முன்னதாகவே, […]

இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா..

தென்காசி மாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்டமாக மாவட்டம் முழுவதும் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் வட்டார அளவில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட உள்ளனர். இக்கலை விழா நிகழ்ச்சிகளை மாவட்ட முதன்மை […]

தமிழ்நாடு துணை முதலமைச்சர் தலைமையில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்..

தூத்துக்குடி மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக மினி டைடல் பார்க், இன்டர்நேஷனல் பர்னிச்சர் பார்க், ரூ.300 கோடி மதிப்பீட்டில் திருச்செந்தூர் மாஸ்டர் பிளான் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வருகின்றார் என தமிழ்நாடு துணை முதலமைச்சர உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் 14.11.2024 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அரசு துறைகளின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு […]

தென்காசி மாவட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு..

தென்காசி மாவட்டத்தில் சுற்றுலா தொடர்பான பணிகளை மேம்படுத்துவதற்காகவும், வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்காகவும் கடனாநதி அணை, பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல், குற்றாலம் நீர்வீழ்ச்சி மற்றும் கீழப்பாவூர் பெரியகுளம் போன்ற பகுதிகளில் சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தென்காசி மாவட்டத்தில் சுற்றுலா தொடர்பான பணிகளை மேம்படுத்துவதற்காகவும், வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்காகவும் கடனாநதி அணை, பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல், குற்றாலம் நீர்வீழ்ச்சி மற்றும் கீழப்பாவூர் பெரியகுளம் போன்ற பகுதிகளில் 13.11.2024 அன்று மாவட்ட […]

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் நடந்தது என்ன?; விளக்கம் அளித்த மருத்துவமனை நிர்வாகம்..

தென்காசி தலைமை அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரேவுக்கு பதிலாக ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்ததாகவும், கையில் எலும்பு முறிவு என வந்த நோயாளிக்கு எக்ஸ்ரே பிலிம்க்கு பதிலாக ஜெராக்ஸ் எடுத்து கொடுத்ததாகவும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகியது. இந்த செய்தி முற்றிலும் தவறானது என தென்காசி தலைமை மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தென்காசி அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தெரிவித்துள்ளதாவது, தென்காசி அரசு மருத்துவமனையில் டிஜிட்டல் எக்ஸ்ரே வசதி 15 வருடங்களுக்கும் […]

10 ரூபாய் நாணயங்களை மறுக்க கூடாது; தென்காசி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..

இந்திய அரசால் வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பு தெரிவிக்கக்கூடாது என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் பெட்ரோல் எரிபொருள் நிலையங்கள், வணிக நிறுவனங்கள், அனைத்து வங்கிகள், மளிகைச் சாமான் கடைகள், காய்கறி கடைகள், திரையரங்கங்கள், உணவகங்கள், மருத்துவமனைகள் மற்றும் பலவிதமான பொருட்களை விற்கும் கடைகள், பலவித சேவைகள் வழங்கும் நிறுவனங்கள் அனைத்திலும் இந்திய அரசால் வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயங்களை வாங்க […]

ரைஸ்மில் உரிமையாளரை காரில் கடத்தி சென்ற நான்கு நபர்கள் அதிரடி கைது..

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில், ரைஸ்மில் உரிமையாளரை காரில் கடத்திச் சென்ற நான்கு நபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவிலூத்து பகுதியில் ரைஸ்மில் வைத்து நடத்தி வருகிறார் உதயகுமார். இவர் கடந்த வருடம் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த சூரியகுமார் என்ற நபரிடம் நெல் கொள்முதல் செய்து விட்டு, அதில் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் திருப்பி கொடுத்து பாக்கி பணம் கொடுக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை […]

குருக்கள்பட்டி அருகே நடந்த கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்..

தென்காசி மாவட்டம் குருக்கள்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட ஆயாள்பட்டி டிடிடிஏ துவக்க பள்ளியில் கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் புற்றுநோய் கண்டறிதல் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா, தலைமை வகித்தார். தென்காசி எம்பி ஸ்ரீ ராணி குமார் முகாமை துவக்கி வைத்தார். மேலநீலிதநல்லூர் ஒன்றிய திமுக செயலாளர் பெரியதுரை, ஊராட்சி மன்ற தலைவர் கோதையம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேர்ந்தமரம் நிலையம் வட்டார மருத்துவ அலுவலர் புரோஸ்கான் தலைமையில், […]

தென்காசி தலைமை மருத்துவமனையில் தேசிய குருதி கொடையாளர் தின விழா..

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தென்காசி மற்றும் சங்கரன்கோவில் குருதி மையங்கள் சார்பாக குருதி கொடையாளர் தினம் 08.11.2024 வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணி அளவில் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ஆம் தேதி தேசிய தன்னார்வ இரத்ததான தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் “இந்தியாவில் இரத்த மாற்ற மருத்துவத்தின் தந்தை” என்று கருதப்படும் ஒரு இந்திய மருத்துவர் டாக்டர் ஜெய் கோபால் ஜாலியின் பிறந்தநாளை நினைவு கூறுகிறது. அக்டோபர் மாதம் முழுவதும் […]

அலிகர் பல்கலைக் கழக சிறுபான்மை அந்தஸ்து வழக்கு; உச்சநீதி மன்ற தீர்ப்பிற்கு மமக வரவேற்பு..

அலிகர் பல்கலைக் கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்து வழக்கில், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்பதாக கூறி மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா இத்தீர்ப்பை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்த அவரது அறிக்கையில், சர் சையத் அகமது கான் அவர்களின் மாபெரும் முயற்சியினால் 1875ல் உருவாக்கப்பட்டது ஆங்கிலோ ஓரியெண்டல் கல்லூரி. பிறகு அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் என மாறி, 150 ஆண்டுகளுக்கு மேல் செயல்படுகிறது. இப்பல்கலைக் கழகத்தில் மாணவர் சேர்க்கை, வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்காகத் […]

நெல்லை அறிவியல் மையத்தில் “வேதிவினைகள்” எனும் தலைப்பில் பணிமனை மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு சிறப்பு போட்டி..

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் “வேதி வினைகள்” எனும் தலைப்பில் பணிமனை (workshop) மற்றும் குழந்தைகளுக்கு “Still life painting” உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெற உள்ளதாக நெல்லை மாவட்ட அறிவியல் மையம் அறிவித்துள்ளது. இது பற்றிய செய்திக்குறிப்பில், சர்வதேச அறிவியல் மையம் மற்றும் அறிவியல் அருங்காட்சியக தினத்தை (International Science Centre & Science Museum Day) முன்னிட்டு வருகின்ற 10.11.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் 8ஆம் வகுப்பு முதல் 10ஆம் […]

தென்காசியில் 3-வது புத்தக திருவிழா; இலச்சினை வெளியீடு..

தென்காசி மாவட்டத்தில் 3-வது பொதிகை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு அதற்கான இலச்சினை மாவட்ட ஆட்சித்தலைவரால் வெளியிடப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் 15.11.2024 முதல் 24.11.2024 வரை தென்காசி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ள 3-வது பொதிகை புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு பொதிகை புத்தகத் திருவிழாவின் இலச்சினையை 07.11.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் வெளியிட்டார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, தமிழ் சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில் புத்தக வாசிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. […]

ரியாத்தில் மரணித்த கட்டுமான பணியாளர் ஐயப்பன்; உடலை தாயகம் அனுப்பி வைத்த இந்தியன் வெல்ஃபேர் ஃபோரம் மற்றும் தமுமுகவினருக்கு உறவினர்கள் நன்றி..

ரியாத்தில் மரணம் அடைந்த கட்டுமான பணியாளர் ஐயப்பன் உடலை தாயகம் அனுப்பி வைத்த ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் நிர்வாகிகளுக்கு அவரது உறவினர்கள் நன்றி தெரிவித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் வட்டம் புக்கலம் கிராமம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ஐயப்பன். இவர் சவுதி அரேபியா ரியாத்தில் கட்டுமான பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த 27.10.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மரணம் அடைந்தார். இந்த தகவலை இறந்து போன ஐயப்பனின் உறவினர் கஜேந்திரன், ரியாத் மண்டல இந்தியன்ஸ் […]

தென்காசியில் புறவழி ரயில் பாதை அமைக்க வேண்டும்; தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் தீர்மானம்..

கூடுதல் ரயில்கள் இயக்குவதில் உள்ள சிக்கலை போக்க தென்காசியில் புறவழி ரயில்பாதை அமைக்க வேண்டும் என தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் மூன்றாவது முக்கிய ஆலோசனை கூட்டம் சங்க தலைவர் பாண்டியராஜா தலைமையில் பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், சங்க செயலாளர் ஜெகன் முன்னிலை வகிக்க தென்காசி மாவட்டம் சார்ந்த பல்வேறு ரயில்வே கோரிக்கைகள் மற்றும் குறைகள் குறித்து விவாதிக்கப்பட்டு பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. […]

செங்கோட்டை பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் வழங்கிய சமூக ஆர்வலர்கள்..

செங்கோட்டை நகர பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி சுமார் 1 லட்சம் மதிப்பிலான கண்காணிப்பு கேமராக்களை சமூக ஆர்வலர்கள் காவல் ஆய்வாளர் பாலமுருகனிடம் வழங்கினர். தென்காசி மாவட்டத்தில் மாவட்ட எஸ்.பி உத்தரவின் பேரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு முக்கிய பகுதிகளில் காவல் துறையினரால் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் சமூக நல ஆர்வலர்கள், கல்வி நிறுவனத்தினர் மற்றும் சமூக நல அமைப்புகள் உள்ளிட்ட பலரும் தங்களை இணைத்துக் கொண்டு தேவையான […]

அய்யாபுரம் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட தென்காசி மாவட்ட எஸ்.பி; பெண் காவலரின் செயலை பாராட்டி வெகுமதி..

அய்யாபுரம் காவல் நிலையத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்ட தென்காசி மாவட்ட எஸ்.பி V.R.ஸ்ரீனிவாசன், பெண் காவலரின் செயலை பாராட்டி வெகுமதி வழங்கி கெளரவித்த நிகழ்வு காவல் துறையினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தென்காசி மாவட்டம், அய்யாபுரம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் திடீர் ஆய்வினை மேற்கொண்டார். இதில் காவல் நிலையத்தின் முக்கிய கோப்புகள் மற்றும் ஆயுதம் வைப்பறை ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பொதுமக்களிடம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், பணியின் போது […]

தென்காசியில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்..

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடந்தது. தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 04.11.2024 திங்கள் கிழமையன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 01 மாற்றுத்திறனாளிக்கு ரூ.13,500 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிளை மாவட்ட […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!