தென்பொதிகை வியாபாரிகள் நலசங்கத்தின் ஆலோசனை கூட்டம்..

தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள முதலியார் பட்டியில் தென் பொதிகை வியாபாரிகள் நலச் சங்கத்தின் ஆலோசனை கூட்டம், சங்கத் தலைவர் கட்டி அப்துல் காதர் தலைமையில் நடைபெற்றது. சங்க செயலாளர் நவாஸ்கான் வரவேற்பு உரையுடன் துவங்கிய இந்த கூட்டத்தில், வியாபாரிகள் நல வாரியத்தில் உறுப்பினராக அனைத்து வியாபாரிகளும் பதிவு செய்து கொள்ள ஏதுவாக, சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் இலவச பதிவு முகாமில் கலந்து கொண்டு, அனைத்து வியாபாரிகளும் உறுப்பினர்களாக பதிவு செய்து பயன் பெற வேண்டும் […]

ஆன்லைனில் டாஸ்க் மோசடி; சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை..

ஆன்லைனில் மோசடிகள் பெருகி வரும் நிலையில், வாட்ஸப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலை தளங்கள் மூலமாக தற்போது review task fraud எனும் ஆன்லைன் மோசடிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருவதாக திருநெல்வேலி சைபர் கிரைம் காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது பற்றிய காவல் துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, Telegram/WhatsApp வாயிலாக அறிமுகம் இல்லாத எண்களிலிருந்து வீட்டில் இருந்த படியே மொபைல் போன் மூலமாக online part […]

இலஞ்சி பி.எட் கல்லூரிக்கு பள்ளி கல்வித் துறை அலுவலர் பாராட்டு..

தென்காசி மாவட்டத்தில் ஆசிரியர் கல்வி கற்பிப்பதில் சிறப்பிடம் பெற்றுள்ள இலஞ்சி டி.எஸ்.டேனியல் பிஎட் கல்லூரியை பள்ளி கல்வித் துறை மாவட்ட திட்ட அலுவலர் பாராட்டினார். தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் விளையாட்டு விழா, இளைஞர் தின விழா மற்றும் உணவுத் திருவிழா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்வில், கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார். முதல்வர் முனைவர் கலா வின்சிலா முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் ஷீலா நவரோசி […]

கீழக்கரையில் போதை பொருள் வைத்திருந்தவர் கைது.! சட்டவிரோதமாக செயல்படும் நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எஸ்பி அறிவிப்பு.!!

இராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் கடத்தல்கள் குறித்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல்துறையினருக்கு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் 11.07.2025-ம் தேதி அன்று சட்டவிரோத போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக கீழக்கரை சார்பு ஆய்வாளர் தலைமையில் குழு ரோந்து மேற்கொண்டபோது கீழக்கரை தாசிம்பீவி மகளிர் கல்லூரி அருகே சங்குளிகார தெருவை சார்ந்த செய்யது கருணை மகன் முகைதீன் ராசிக் அலி என்பவர் சந்தேகிக்கும்படி நின்று கொண்டிருந்த அவரை சோதனை செய்தபோது அவரிடமிருந்து சுமார் […]

மேட்டுப்பாளையம் சி ஐ டி யு பொதுத் தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை ஆய்வு  மேற்கொண்ட ரயில்வே கோட்ட மேலாளரிடம் சி ஐ டி யு பொதுத் தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளராக ஸ்ரீபன்னா லால் ஆய்வில் ஈடுபட்டார். இவரிடம், ரயில்வே சம்பந்தமான கோரிக்கைகளை சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனுவில் மேட்டுப்பாளையம்- கோவை இடையேயான பய ணிகள் ரயில் சேவையினை தினமும் ஏழு முறை இயக்க வேண்டும், கூட்ட நெரிசலை […]

கீழக்கரையில் நுகர்வோர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்

கீழக்கரையில் நுகர்வோர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்: பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நுகர்வோர் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், சங்கத் தலைவர் செய்யது இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2024–2025 ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும், கீழக்கரை நுகர்வோர் நலச்சங்கம் மாநில முகவரிப் பட்டியலில் இடம் பெற்றதை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட அனைவருக்கும் கூட்டத்தில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன. முக்கிய தீர்மானங்கள்: 1. […]

திருவாடானை அருகே குடிநீர் குழாய் உடைப்பு: பல மாதங்களாகியும் நடவடிக்கை இல்லை!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே பல இடங்களில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு மாதக்கணக்கில் குடிநீர் வீணாகி வருகிறது. இது குறித்து குடிநீர் வடிகால் வாரியத்திற்கு பலமுறை தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். திருவாடானையில் இருந்து பாண்டுகுடிக்கு பாரதிநகர் பகுதியில் இருந்து குடிநீர் நீரேற்றம் செய்யப்படுகிறது. இந்தக் குடிநீர் குழாய் திருவாடானை, பண்ணவயல், எல்.கே. நகர், அஞ்சுகோட்டை, வாணியேந்தல், டி. கிளியூர் வழியாகச் செல்கிறது. இதில் எல்.கே. நகர் பகுதியில் […]

அடிப்படை வசதிகள் இல்லாத திருவாடானை சந்தை ரூ. 65 லட்சத்திற்கு ஏலம்!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குச் சொந்தமான வாரச் சந்தை, போதிய அடிப்படை வசதிகள் இல்லாமலேயே ரூ. 65.11 லட்சத்திற்கு 2025-26 ஆம் ஆண்டிற்கான ஏலத்தில் விடப்பட்டுள்ளது. இந்தச் சந்தை மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முக்கிய வணிக மையமாக இருந்தாலும், மின்சார வசதி, கொட்டகைக் கட்டிடம், கழிப்பறை, மற்றும் குடிநீர் வசதிகள் போன்ற அத்தியாவசிய அடிப்படை வசதிகள் இன்றி செயல்பட்டு வருகிறது. இதனால் வியாபாரிகளும் பொதுமக்களும் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, மழைக் […]

தொண்டி அருகே தென்னந்தோப்பில் தீ விபத்து: பத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நாசம்!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டி அருகே உள்ள படப்புவயல் கிராமத்தில் கிழக்கு கடற்கரைச் சாலை ஓரம் அமைந்துள்ள ஒரு தென்னந்தோப்பில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அபுல்ஹசம் என்பவரின் மகன் அக்பர்அலி (67) என்பவருக்குச் சொந்தமான இந்தத் தோப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், பத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் ஐந்துக்கும் மேற்பட்ட பனை மரங்களும் எரிந்து நாசமாகின. தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் […]

திருப்புல்லாணி மாரியம்மன் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா.!

ராமநாதபுரம் அருகே பிரசித்தி பெற்ற திருப்புல்லாணி மாரியம்மன் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வடக்கு தெரு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ புல்லாணி மாரியம்மன் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது கோவை ரவி சாஸ்திரி குருக்கள் தலைமையில் யாக பூஜைகள் துவங்கப்பட்டு சிறப்பு வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடு துவங்கியது அதனை தொடர்ந்து ஆன்மீக பக்தர்கள் குழுவையிட்டு மேள தாளத்துடன் கடம் […]

தென்காசி மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்”..

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டம் ஜீலை 15 முதல் அக்டோபர் மாதம் வரை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்து உள்ளார். முதலமைச்சர் அறிவிப்பின் படி, தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டம் துவக்கப்படுகிறது. இத்திட்டதின் கீழ் மொத்தம் 282 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இத்திட்டம் ஜீலை 15 முதல் […]

வீரவநல்லூர் நூலகத்தில் தமிழால் இணைவோம்! சிறப்பு நிகழ்வு..

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் நூலக வாசகர் வட்டம் சார்பில் “தமிழ் பேசுவோம் தமிழால் இணைவோம்” நிகழ்ச்சி வாசகர் வட்ட தலைவர் பீ. ஆதம் இல்யாஸ் தலைமையில் நூலக அரங்கில் வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சியில், வாசகர் வட்ட சாதனை பொன் விழா மலர் நூல் திறனாய்வு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு வாசகர் வட்ட தலைவர் பீ. ஆதம் இல்யாஸ் தலைமை தாங்கினார். வாசகர் வட்ட நிர்வாகிகள் மருத்துவர் மா. முத்து ராமலிங்கம், சொ.துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாத்திலிங்கம் வரவேற்றார். […]

முதல்வருக்கு நன்றி பாராட்டு சிறப்பு மலர்..

முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் புதிய பல்கலைக் கழகம் அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு, நன்றி பாராட்டு சிறப்பு மலரினை தமிழக உயர்கல்வி அமைச்சர் கோவி. செழியனிடம் பொதிகை தமிழ்ச் சங்க நிறுவுநர் கவிஞர் பேரா வழங்கினார். தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியனை நெல்லை பொதிகைத் தமிழ்ச் சங்க நிறுவுநர் கவிஞர் பேரா, செயற்குழு உறுப்பினர் பா.இராமகிருஷ்ணன் ஆகியோர் அரசு விருந்தினர் மாளிகையில் 05.07.2025 அன்று சந்தித்தனர்.   அப்போது, பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பாக தயாரிக்கப்பட்ட […]

அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறை..

தென்காசி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அரவிந்த் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் காவல் துறையினரால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மாணவ மாணவரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பேருந்து நிலையங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்குதல், மேலும் விழிப்புணர்வு பேரணி நடத்துதல் போன்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கொண்டலூர் அரசு […]

மாதாந்திர மின் பராமரிப்பு பணி; ஜூலை.05 மின் தடை..

திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள உபமின் நிலையங்களில் 05.07.2025 (நாளை) சனிக்கிழமை மாதந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.   திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற் பொறியாளர் G.குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஊத்துமலை, ஆலங்குளம் உப மின் நிலையங்களில் 05/07/2025 சனிக் கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற […]

நெல்லையில் “ஓரணியில் தமிழ்நாடு” பரப்புரை..

நெல்லையில் “ஓரணியில் தமிழ்நாடு” பிரச்சாரம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில் நடந்தது. தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ’ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்பை திராவிட முன்னேற்றக் கழகம் செயல்படுத்தி வருகிறது. ஜூலை 1 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை தொடங்கி வைத்தார் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின். அதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் “ஓரணியில் தமிழ்நாடு” என்ற பிரச்சார பரப்புரை மற்றும் […]

தனிநபர் மற்றும் குழுக்களுக்கு கடனுதவி..

தென்காசி மாவட்டத்தில் பிற்படுத்தப் பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம், செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுகடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப் பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.   இது பற்றிய செய்திக் குறிப்பில், பிற்படுத்தப் பட்டோர், மிகப் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் […]

திருச்செந்தூர் கோவில் பணி; கனிமொழி எம்.பி ஆய்வு..

திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு இறுதி கட்டப் பணிகளை கனிமொழி எம்.பி நேரில் ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா வருகின்ற ஜூலை 7 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு திருக் கோயில் வளாகத்தில் நடைபெற்று வரும் திருப்பணிகள், யாகசாலை அமைக்கும் பணிகள், பக்தர்கள் பாதுகாப்பான முறையில் சுவாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக தடுப்பு அமைக்கும் பணிகள், பக்தர்கள் வாகன நிறுத்துமிடம் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், […]

தென்காசியில் போதைக்கு எதிராக உறுதி மொழி ஏற்பு..

தென்காசியில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தென்காசி ஈஸ்வரன் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில், தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் ஆகியோர் தலைமையில் பள்ளி மாணவர்கள் உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர். பின்னர், தென்காசி மாவட்ட காவல் துறையின் சார்பாக பள்ளி மாணவர்களின் சர்வதேச […]

கீழக்கரையில் நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர் வெளிநடப்பு.! காரசார விவாதம் .!! சட்டமன்ற உறுப்பினர் நிதி ஒதுக்கீடு .!!!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி வளாகத்தில் நகர்மன்ற சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபீதா தலைமையில் துணைத் தலைவர் ஹமீது சுல்தான் மற்றும் ஆணையாளர் ரங்கநாயகி முன்னிலையில் நடைபெற்றது .  கூட்டத்தில் 21 வார்டுகளுக்கு உட்பட்ட அடிப்படை பிரச்சனைகளான குடிநீர் குழாய் பதித்தல் பேவர் பிளாக் அமைத்தல் வார்க்கால் அமைத்தல் கழிவு நீர் குழாய் உட்பட அடிப்படை தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.    கடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு நகர்மன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரிடம் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!