தென் மாவட்டங்களில் பலத்த காற்று: செங்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்பு; தென்காசி வெதர்மேன் ராஜா தகவல்..

தென் மாவட்டங்களில் இன்று (02.12.2024) பலத்த காற்று வீசும் எனவும், செங்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய அவரது வானிலை அறிவிப்பில், புயல் சின்னமானது அரபிக்கடல் ஈரப்பதத்தை இழுப்பதால் கேரளா மற்றும் தமிழக மலை மாவட்டங்களில் மேற்கு திசை காற்று வலுவடைந்துள்ளது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ள காலத்தில் காற்று வீசுவது போல இன்று தென் மாவட்டங்களில் பலத்த காற்று வீசும். குறிப்பாக கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மணிக்கு 55 […]

பகுதி நேர வேலை (PART TIME JOB) எனும் பெயரில் மோசடி; இருவர் கைது..

ஆன்லைன், சமூக வலைதளங்கள் மற்றும் போலியான இணையதளங்கள் மூலம் ஆஃபர் எனும் பெயரில் தினமும் பல்வேறு வகையான மோசடிகள் நடைபெற்று வருகிறது. ஆன்லைன் விளம்பர ஆஃபர்களை நம்பி பலர் மோசடி கும்பல்களிடம் சிக்கிக் கொள்வதும், தொடர்ந்து சைபர் கிரைம் பிரிவில் புகாரளிப்பதும் தொடர்கிறது. இந்நிலையில், சைபர் கிரைம் காவல்துறை சார்பில், பொதுமக்கள் அளிக்கும் மோசடி குறித்த புகார்களை விசாரித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், பகுதி நேர வேலை என்ற பெயரில் முதலீடு செய்ய […]

சட்ட விதிகளை மீறி கால்நடைகளை கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை; தென்காசி மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை..

சட்ட விதிமுறைகளை மீறி கால்நடைகளை கடத்துவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் கால்நடைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்லும் போதும் இறைச்சிக் கூடங்களில் கால்நடைகள் வெட்டப்படும் போதும் பின்பற்றப்பட வேண்டிய சட்டப்பூர்வமான விதிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி மாவட்டத்தில் ஆறு கால்நடை சந்தைகளும், இரண்டு சோதனை சாவடிகள் புளியரை மற்றும் மேக்கரை பகுதிகளில் அமைந்துள்ளன. இம்மாவட்டத்திலுள்ள கால்நடை சந்தைகளில் விற்கப்படும் மற்றும் வாங்கப்படும் […]

பல கோடி மதிப்புமிக்க திருமங்கை ஆழ்வார் சிலை லண்டனில் இருந்து விரைவில் மீட்கப்பட உள்ளது..

பலகோடி மதிப்புள்ள திருமங்கை ஆழ்வார் சிலையானது, தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்புப் பிரிவினரின் அயராத முயற்சியால் லண்டனில் இருந்து விரைவில் மீட்கப்பட உள்ளது. இது குறித்த தமிழ்நாடு காவல்துறையின் செய்திக்குறிப்பில், கடந்த 1957 மற்றும் 1967 ஆண்டுகளுக்கு இடையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சௌந்திரராஜ பெருமாள் கோவிலில் இருந்து நான்கு விலை மதிப்பில்லாத சிலைகள் திருடுபோனது. இது சம்பந்தமாக சென்ற 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்பு பிரிவினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருடுபோன சிலைகள் […]

செங்கோட்டை பகுதியில் அரசு பள்ளி வகுப்பறை கட்டிடத்தை ஆர்வத்துடன் திறந்து வைத்த பள்ளிக் குழந்தைகள்..

செங்கோட்டை பகுதியில் சமூக நல ஆர்வலர்களால் புணரமைப்பு செய்யப்பட்ட அரசு பள்ளி வகுப்பறை கட்டிடம் பள்ளி குழந்தைகளால் ரிப்பன் வெட்டி திறந்து வைக்கப்பட்டது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை கச்சேரி காம்பவுண்ட் அரசு நடுநிலைப் பள்ளியில் வகுப்பறை கட்டிட புணரமைப்புப் பணி முடிவுற்று அவ்வகுப்பறை மாணாக்கர் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா நடைபெற்றது.  விழாவிற்கு தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர் ஜான் பிரிட்டோ, ஆசிரியர் பயிற்றுனர் சுப்புலெட்சுமி, குழு ஒருங்கிணைப்பாளர் வெங்காடம்பட்டி […]

தென்காசி மாவட்டத்தில் இந்திய அரசியலமைப்பு தின உறுதி மொழியேற்பு..

இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் இந்திய அரசியலமைப்பு முகப்புரை உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினை உள்ளடக்கி இந்தியத் திருநாட்டினை வளமான பாதையில் முன்னெடுத்துச் செல்லும் ஓர் உன்னத உருவாக்கம், அண்ணல் அம்பேத்கர் வடிவமைத்துத் தந்த நமது அரசியலமைப்புச் சட்டமாகும். அந்த வகையில், ஆண்டுதோறும் நவம்பர் […]

பாலம் கட்டச் சொன்னால் பாம்பு கிடக்கும் என்று பயப்படுகிறாரா?; கேள்வி எழுப்பிய காந்தியவாதி..

பாலம் கட்டச் சொன்னால் பாம்பு கிடக்கும் என்று பயப்படுகிறாரா? என வடகரை பகுதி சமூக செயற்பாட்டாளர் வாவாமைதீன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து மனுநீதி நாளில் வழங்கப்பட்ட கோரிக்கை மனுவில், தென்காசி மாவட்டம் வடகரை பகுதியில் கல்குளம் சாலை மற்றும் ஒச்சான்  ஓடையில் பாலம் கட்டுவதற்காக 2018 இல் இருந்து ஆறு ஆண்டுகளாய் பல மனுக்கள் கொடுத்திருக்கிறேன். 2019-ல் தென்காசி கோட்டாட்சியர் நேரில் ஆய்வு செய்து வருவாய்த்துறை பொதுப்பணித்துறை நில அளவு துறை அனைத்து துறைகளும் களப்பணி […]

தென்காசியில் பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சார பேரணி; மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் துவக்கி வைத்தார்..

தென்காசி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சார பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், தென்காசி மாவட்டத்தில் பாலின பாகுபாடு மற்றும் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம் 3.0 நிகழ்வு 25.11.2024 முதல் 24.12.2024 வரை மாவட்ட அளவிலும், வட்டார அளவிலும், அனைத்து ஊராட்சிகளிலும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பாலியல் வன்முறைக்கு எதிரான மாபெரும் கையெழுத்து இயக்கம் மற்றும் பாலியல் வன்முறைக்கு […]

சாம்பவர் வடகரை பகுதியில் கழிவுகள் அகற்றும் சுத்திகரிப்பு நிலையம் அமைத்திட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..

தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பேரூராட்சியில் கழிவுகளை அகற்றும் சுத்திகரிப்பு நிலையம் அமைத்திட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாம்பவர் வடகரை ஊரின் மேற்கில் அனுமன் நதி ஆற்றுப்படுகை அமைந்துள்ளது. இந்த ஆற்றுப்படுகையில் குப்பை கழிவுகள், பிளாஸ்டிக் பைகள் அனைத்தும் கொட்டப்பட்டு வருவதாகவும், இதனால் சுகாதாரக்கேடு மற்றும் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் இப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். எனவே சாம்பவர் வடகரை பகுதியில் கழிவுகளை அகற்றும் சுத்திகரிப்பு நிலையம் […]

தமிழ்நாடு முதலமைச்சரின் ஊட்டச்சத்தினை உறுதி செய் திட்டம்; தென்காசி மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி..

“ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் தென்காசி மாவட்ட பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறையின் மூலம் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் நம் தாய் திருநாடாம் தமிழக மண்ணில் பிறந்தது முதல் ஆறு வயது வரை உள்ள ஒவ்வொரு குழந்தையின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தி அனைவரும் சரியான ஊட்டச்சத்து நிலையில் உள்ளனர் என்பதை உறுதி செய்கிறது. ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் […]

பூமியின் பசுமையை பாதுகாக்க பல லட்சம் விதைப் பந்துகளை உருவாக்கி பள்ளி குழந்தைகள் சாதனை..

பூமியின் பசுமையை பாதுகாக்கும் விதமாக பல லட்சம் விதைப் பந்துகளை உருவாக்கி நெல்லை மற்றும் நாகர்கோவில் பள்ளி குழந்தைகள் சாதனை படைத்துள்ளனர். விதைப்பந்துகள் மூலம் பூமியில் பசுமையை விதைக்கும் பணியை தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பூ. திருமாறன் முன்னெடுத்து வருகிறார். விதைப்பந்துகள் பற்றியும் அதனை தயாரிக்கும் முறைகள் குறித்தும் பள்ளி குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களையும் விதைப்பந்து தயாரிக்கும் பணியில் இணைத்து வருகிறார். அந்த வகையில் சமூக ஆர்வலர் பூ.திருமாறன் வழிகாட்டுதலின் படி, […]

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை; பாதுகாப்பு உபகரணங்களை நேரில் ஆய்வு செய்த தென்காசி எஸ்.பி..

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R. ஶ்ரீனிவாசன் உத்தரவின் பேரில், மாவட்டத்திலுள்ள கடனாநதி, ராமாநதி, கருப்பாநதி, குண்டாறு மற்றும் அடவிநயினார் அணைகள் மற்றும் முக்கிய ஆறு, குளம் ஆகிய இடங்களில் காவல்துறையினர் தொடர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தின் போது பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கும் விதமாக மாவட்டத்தில் 22 தங்கும் விடுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு தேவையான உதவிகளை செய்யும் விதமாக அங்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் […]

நெல்லை மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு..

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைர் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தாமிரபரணி ஆற்றினை பொறுத்தவரை தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் இல்லை. இருப்பினும் பரவலாக பெய்து வரும் மழையால் சிறு ஓடைகள், கால்வாய்கள் மூலமாக ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து சுமார் 2100 கன அடி தண்ணீர் ஆற்றில் வந்து கொண்டு இருக்கிறது. மழையின் அளவை பொறுத்து […]

அனைத்து அரசு பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்; சமூக நல்லிணக்க கூட்டமைப்பு வலியுறுத்தல்..

அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என சமூக நல்லிணக்க கூட்டமைப்பு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்த பத்திரிகை செய்தியில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆங்காங்கே பாலியல் துன்புறுத்தல்கள், ஃபோக்ஸோ நடவடிக்கைகள் தினந்தோறும் நடந்து வருகிறது. மேலும் ஆசிரியர்கள் மாணவர்களை கடுமையாக தாக்குவது, மாணவர்கள் ஆசிரியர்களை தாக்கும் செயல்களும் ஆங்காங்கே நடைபெறுகிறது.  பள்ளியில் உள்ள துப்புரவு வேலைகளை, மாணவ மாணவிகளை […]

பிராங் மூலம் பொதுமக்களை தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை; தென்காசி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை..

பிராங்க் என்ற பெயரில் பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தும் வகையில் வீடியோக்கள் பதிவு செய்து வெளியிடும் போக்கு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சோஷியல் மீடியாக்களில் Like, Share மற்றும் Followers க்கு ஆசைப்பட்டு Prank செய்வதாக கூறி பொதுமக்களுக்கு தொந்தரவு செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட காவல்துறையினர் சார்பில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சமூக ஊடகங்களில் அதிகப்படியான Like, […]

மேக்கரை அருகே எருமைச்சாடி தனியார் நீர்வீழ்ச்சி மூடல்..

தென்காசி மாவட்டம் மேக்கரை அருகே செயல்பட்டு வந்த எருமைச்சாடி தனியார் நீர்வீழ்ச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மூடப்பட்டது. தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகாவிற்குட்பட்ட மேக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பல தனியார் நீர்வீழ்ச்சிகள் செயல்பட்டு வந்த நிலையில், மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பல நீர் வீழ்ச்சிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினர். இருப்பினும் ஒன்றிரண்டு நீர் வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளிடம் ரூ100, 200, 300 என கட்டணம் […]

திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்..

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் திமுக அரசு மற்றும் நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து, கையில் குடை பிடித்த நிலையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசியிலிருந்து திருநெல்வேலி செல்லும் (SH-39) நெடுஞ்சாலையில் தேவை இல்லாத இடத்தில் சாலையை கடந்து செல்ல திறந்தவெளி அமைத்தும், தேவைப்படும் இடங்களில் அமைக்காமல் இருப்பது பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பின்றி உள்ளதாகவும் கூறி அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், […]

தென்காசி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்; மாவட்ட கலெக்டர் தகவல்..

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 23.11.2024 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், அரசாணை (நிலை) எண்.245, ஊரக வளர்ச்சி (சி.1) துறை, நாள் 19.11.1998 மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 3-ன்படி, உள்ளாட்சிகள் தினமான 01.11.2024 அன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து, 23.11.2024 அன்று காலை 11.00 […]

காட்டு யானைகளை கட்டுப்படுத்த விவசாய நிலங்களுக்கு மின் வேலி; தென்காசி மாவட்ட கவுன்சிலர் அமைச்சரிடம் கோரிக்கை..

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய விவசாய நிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து பயிர்களை அழித்து வருவதை தடுக்க விவசாய நிலங்களில் மின் வேலி அமைத்து தர வேண்டும் என தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடியிடம் தென்காசி மாவட்ட கவுன்சிலர் கனிமொழி கோரிக்கை மனு அளித்துள்ளார். அமைச்சரிடம் அளித்துள்ள மனுவில், தென்காசி தெற்கு மாவட்டம், கடையநல்லூர் ஒன்றியம், திரிகூடபுரம் ஊராட்சி, மற்றும் சொக்கம்பட்டி ஊராட்சி ஆகிய பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ளது. […]

ஆன்லைனில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி 96 லட்சம் மோசடி; இருவர் கைது..

ஆன்லைனில் வீட்டிலிருந்து கொண்டே கை நிறைய சம்பாதிக்கலாம், ஆன்லைன் கேஷ்பேக் ஆஃபர், பொருட்கள் அனைத்தும் மிக குறைந்த விலையில் கிடைக்கும், குறிப்பிட்ட வங்கி கிரெடிட் கார்டு & டெபிட்கார்டு பயன்படுத்தி ஆஃபர் பெறலாம் என்பதாக சமூக வலைதளங்களில் விதவிதமாக விளம்பரம் செய்து பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆஃபர்களை நம்பி மோசடியில் சிக்கிக் கொண்ட பலர் தனது பணத்தை மீட்டுத் தரக்கோரி சைபர் கிரைமில் புகார் அளித்து வருகின்றனர். அந்த வகையில், சர்வதேச பங்குச் சந்தையில் ஆன்லைன் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!