இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று காலை தொழிலுக்குச் சென்றனர். இலங்கை யாழ். மாவட்டம் நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று நள்ளிரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக மண்டபம் கார்த்திக் ராஜா, தங்கச்சிமடம் ஆஸ்டின் ஆகியோரது விசைப்படகுகளில் இருந்த சேசு 47, காளி 50, கண்ணன் 55, முத்துராஜ் 45, பத்தரப்பன் 55 உள்பட 8 மீனவர்களை […]
Category: மாநில செய்திகள்
மண்டபம், திருப்புல்லாணி வட்டாரத்தில் உலக மண் வள பாதுகாப்பு தின விழா..
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், திருப்புல்லாணி வட்டாரங்களில் தமிழ்நாடு அரசு வேளாண் துறை, ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் உலக மண்வள தினம் கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் வேளாண் இணை இயக்குனர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், மண்ணை மலடு ஆக்காமல், அதன் வளம் காக்க வேண்டும் மண் மாசடைவதை தடுக்க வேண்டியது அனைவரின் கடமை என்றார். மண் பராமரிப்பு குறித்து திருப்புல்லாணி வேளாண் உதவி இயக்குனர் செல்வம் விளக்கம் அளித்து துவக்கி வைத்தார். […]
ஆன்லைனில் முதலீடா? மோசடி!! காவல்துறை எச்சரிக்கை..
மொபைல் மூலம் இணைய பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைனில் இணையதளம், டெலிகிராம் மற்றும் வாட்ஸப் உள்ளிட்ட ஆன்ட்ராய்டு செயலி வாயிலாக முதலீடு எனும் பெயரில் பல்வேறு நிதி மோசடிகள் நடைபெற்று வருகிறது. சமூக ஊடகங்களான வாட்ஸப் மற்றும் டெலிகிராம் மற்றும் யூடியூப் சேனல்கள் மூலம் “உங்கள் முதலீடு இரட்டிப்பாகும், வீட்டிலிருந்து கொண்டே ஆன்லைன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம்” இது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் பொதுமக்களை முதலீடு செய்ய வைத்து ஏமாற்றி வருகின்றனர். இதனை […]
ராமநாதபுரத்தில் 991 பேருக்கு ரூ.2.66 கோடி மதிப்பில் நலத்திட் உதவிகள் பால் வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்..
இராமநாதபுரம் : இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்பில் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதையொட்டி, ராமநாதபுரத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு ராமநாதபுரத்தில் நடந்தது மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமை […]
ராமநாதபுரம் சுற்றுச்சூழல் தன்னார்வலருக்கு சேவை செம்மல் விருது..
இராமநாதபுரம் : தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு சார்பில் சென்னை ஐஐடி வளாகத்தில் சேவை செம்மல் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழகத்தில் 38 மாவட்டங்கள், புதுச்சேரி உள்பட 39 மாவட்டங்களில் கடந்த ஓராண்டில் தன்னலமற்ற சேவை செய்து வந் தோரை அடையாளம் கண்டு, அவர்களின் சேவைகளை அங்கீகரித்து 39 பேருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி வளாகங்களில் நிழல், பலன் மரக்கன்றுகள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, பசுமை கிராமம் […]
வலையில் சிக்கிய அரிய வகை நட்சத்திர ஆமை:கடலில் பத்திரமாக விட்ட மீனவர்கள்..!
தொண்டி கடலில் சிக்கிய அரிய வகை நட்சத்திர ஆமையை, மீட்டு மீண்டும் பத்திரமாக கடலில் விட்ட மீனவர்களுக்கு பாராட்டு குவிகிறது. ராமநாதபுரம் மாவட்டம்,தொண்டி புதுக் குடியை சேர்ந்த மீனவர் ராமகிருஷ்ணன், பாலமுருகன், மணிகண்டன் ஆகியோர் தொண்டி புதுக்குடி கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, அவர்களது வலையில் 15 கிலோ எடை கொண்ட அதிசய நட்சத்திர ஆமை ஒன்று சிக்கியது. உடன் அதை பத்திரமாக வலையில் இருந்து எடுத்து உயிருடன் கடலில் மீண்டும் விட்டனர். தடை செய்யப்பட்ட கடல் ஆமையை […]
இராமநாதபுரத்தில் தமுமுக ஆர்ப்பாட்டம்..
இராமநாதபுரம் : பள்ளிவாசல் சொத்துகளை கபளிகரம் செய்ய கொண்டு வரப்பட்டுள்ள வக்ப் திருத்த மசோதாவை முழுமையாக திரும்ப பெற கோரியும், வழிப்பாட்டு தலங்கள் பாதுகாப்புச் சட்டம் 1991 முழுமையாக கடைப்பிடிக்க கோரி ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக பணி மனை முன் தமுமுக சார்பில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. தமுமுக துணை பொதுச்செயலாளர் சலிமுல்லாஹ்கான் தலைமை வகித்தார். மே 17 இயக்கம் தலைவர் திருமுருகன் காந்தி கண்டன உரை ஆற்றினார். தமுமுக மாநில செயலாளர் சாதிக் […]
சிறுபான்மையினர் நல ஆணையம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம்; நலத்திட்ட உதவிகள் வழங்கல்..
தென்காசி மாவட்டத்தில் சிறுபான்மையினர் கலந்துரையாடல் கூட்டம் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண் சே.ச தலைமையில் நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் 05.12.2024 அன்று தென்காசி மாவட்டத்திலுள்ள சிறுபான்மையினர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவர் எம்.எம். அப்துல் குத்தூஸ் (எ) இறையன்பன் குத்தூஸ், அரசு கூடுதல் செயலாளர் / பிற்படுத்தப்பட்டோர் மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முனைவர் […]
பட்டா பெயர் சேர்ப்பு விவகாரம்; தென்காசி கோட்டாட்சியர் விளக்கம்..
பட்டாவில் பெயர் சேர்க்கும் விவகாரத்தில், தன் மீது அடிப்படை ஆதாரமற்ற மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தென்காசி கோட்டாட்சியர் லாவண்யா விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளதாக கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம், ஊத்துமலை பகுதியை சேர்ந்த விவசாயி கண்ணையா பட்டாவில் தனது மனைவி பெயரை சேர்ப்பது தொடர்பாக ரூ.50 ஆயிரம் கேட்டதாக கூறி கோட்டாட்சியர் மீது மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு அளித்திருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக தென்காசி […]
உலக சாதனை விருது பெற்ற நான்கு மாத குழந்தை; தென்காசி மாவட்ட எஸ்.பி பாராட்டு..
ஐந்து உலக சாதனை விருதுகளை பெற்று சாதனை படைத்த நான்கு மாத குழந்தைக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். தென்காசியை சேர்ந்த தம்பதியினரின் லயா என்ற குழந்தையானது தனது 4 மாதத்தில் 5 உலக சாதனை விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளது. அந்த குழந்தையிடம் இரண்டு புகைப்படங்களை காட்டி அதில் உள்ள பெயர்களை சொல்லி எடுக்க சொல்லும் போது சரியாக எடுத்தும், உலக அதிசயங்கள், காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான புகைப்படங்களை […]
தென்காசி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய விவசாயி..
பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறி விவசாயி கண்ணையா தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், ஊத்துமலை பகுதியை சேர்ந்தவர் கண்ணையா. விவசாயியான இவர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் தன்னுடைய மனைவியான கோமதி அம்மாள் பெயரை பட்டாவில் சேர்ப்பதற்காக மனுநீதி நாள் முகாமில் மனு அளித்ததாகவும், அந்த மனு மீதான விசாரணையானது தற்போது […]
அரசு தடை செய்ய புகையிலை பொருள் விற்பனை : 3 கடைகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம்…
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் உத்தரவிற்கு இணங்க, மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார் வழிகாட்டல் படி ராமேஸ்வரம் நகரில் அரசு தடை செய்த புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் விதமாக உணவு பாதுகாப்பு அலுவலர் லிங்கவேல், சார்பு ஆய்வாளர் மணிகண்டன், சிறப்பு சார்பு ஆய்வாளர் கதிர்வேல், காவலர்கள் சரவணன், முனியசாமி பாண்டி, விநாயகம், கோபி, திக்விஜயன் உள்ளிட்டோர் ராமேஸ்வரம் நகர் முழுவதும் 38 […]
குயவன்குடி ஊராட்சி பகுதியில் கொசுப்புழு ஒழிப்பு தீவிர பணி..
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவு படி, மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் அர்ஜுன் குமார் ஆலோசனை படி குயவன்குடி ஊராட்சி சமயன்வலசை, சாய்பாபா நகர், முல்லை நகர், முத்தமிழ் நகர், சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் தோறும் கொசுப்புழு ஒழிப்பு பணி நேற்று (டிச.3) தொடங்கி 2 வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. இப்பணியை மாவட்ட மலேரியா அலுவலர் வேலுச்சாமி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் […]
ரூ.5000/- லஞ்சமாக வாங்கிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பால்பாண்டி கையும் களவுமாக பிடிபட்டார்..
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவை சேர்ந்த ஒப்பந்ததாரர் முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட புளியங்குடி கிராமத்தில் உள்ள அருந்ததியர் காலணியில் ரூ.7.50 லட்சம் மதிப்பில் நாடகமேடை அமைக்கும் பணியை தனது நண்பர் பெயரில் வேலை எடுத்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு முழூவேலையும் முடித்துள்ளார். மேற்படி வேலைக்கான தொகையில் பகுதி தொகையாக ரூ. 3.36 லட்சம் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது, மீதிதொகையான ரூ.4.2 லட்சம் நீண்ட நாட்களாக விடுவிக்கப்படாமல் இருந்துள்ளது. எனவே புகார்தாரர் இன்று 04.12.2024 ஆம் தேதி காலை […]
தாமோதரன் பட்டினத்தில் பாமக கிளைகள் துவக்க முடிவு..
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியம் தாமோதரன்பட்டினம் கிளை பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருவாடானை ஒன்றிய செயலாளர் தர்மராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சந்தானதாஸ் முன்னிலை வகித்தார். தாமோதரன் பட்டினத்தில் 2 கிளைகள் அமைக்கவும், பொறுப்பாளர்கள் நியமனம் செய்யவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டிச.6 ல் கட்சி கொடியேற்றுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய துணைச் செயலாளர் அஜித், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் அய்யப்பன், மீனவர் அணி ஒன்றிய தலைவர் ராகவேந்திரன், […]
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தமிழ்நாடு காவல் துறையின் வழிகாட்டுதல்கள்..
தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் பின்வரும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சபரிமலை பக்தர்கள் அதிக கூட்ட நெரிசலை தவிர்க்க தரிசன வரிசைக்கான டிஜிட்டல் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும், மேலும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும், இதனால் சபரிமலையில் அதிக நெரிசலைத் தவிர்க்கலாம் என்றும் கேரள காவல்துறை அறிவித்துள்ளது. நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்து […]
தமிழகத்திற்கு இடைக்கால நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்; காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தல்..
தமிழ்நாட்டிற்கான இடைக்கால நிவாரண நிதியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெஞ்சல் புயலால் செங்கற்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் தஞ்சை டெல்டா மாவட்டங்கள் கடும் மழையினால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு குடியிருப்பு பகுதிகளில் விழுந்ததால் ஒரே குடும்பத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது. […]
திருப்புல்லாணி அருகே 705 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்:3 பேர் கைது..
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே தினைக்குளம் அருகே அத்தியட்சபுரம். பகுதியில் திருப்புல்லாணி போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 705 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. தமிழக அரசு தடை செய்த அப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பெரியப்பட்டினத்தைச் சேர்ந்த செய்யது இப்ராஹிம் 42, செய்யது ஜமால் 38, சரக்கு வாகன டிரைவர் சேலத்தைச் சேர்ந்த ராஜா(39) ஆகியோரை போலீசார் […]
ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் “KEELAI COMMUNITY CENTRE” அறிமுக நிகழ்ச்சி..
ஜக்கிய அரபு அமீரகம் துபாயில் தேராவில. உள்ள கராச்சி தர்பார் உணவகத்தில் “KEELAI COMMUNITY CENTRE’ ரின் அறிமுக நிகழ்ச்சி 01/12/2024 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கீழக்கரையை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வேலை வாய்ப்பு, இறந்தவர்களுக்கான உதவி மற்றும் பல விஷயங்களை வருங்காலங்களில் எவ்வாறு கையாளரவது மற்றும் கீழக்கரை சமுதாய மக்களுக்கு எப்படி உதவிக்கரம் நீட்டுவது போன்ற விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வினை கீழக்கரையைச் சார்ந்த அப்துர் ரஹ்மான், SKV ஷேக், ஜெய்னுலாப்தீன், ஃபயாஸ், […]
தென் மாவட்டங்களில் பலத்த காற்று: செங்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்பு; தென்காசி வெதர்மேன் ராஜா தகவல்..
தென் மாவட்டங்களில் இன்று (02.12.2024) பலத்த காற்று வீசும் எனவும், செங்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய அவரது வானிலை அறிவிப்பில், புயல் சின்னமானது அரபிக்கடல் ஈரப்பதத்தை இழுப்பதால் கேரளா மற்றும் தமிழக மலை மாவட்டங்களில் மேற்கு திசை காற்று வலுவடைந்துள்ளது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ள காலத்தில் காற்று வீசுவது போல இன்று தென் மாவட்டங்களில் பலத்த காற்று வீசும். குறிப்பாக கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மணிக்கு 55 […]
You must be logged in to post a comment.