ஒன்றிய அரசால் மக்களவையில் கொண்டு வரப்பட்டுள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதா அரசியலமைப்பு சாசனத்திற்கும், மக்களுக்கும், கூட்டாட்சிக்கும் எதிரானது என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதா டிசம்பர் 17ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்நிலையில் இந்த சட்ட மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து திமுக […]
Category: மாநில செய்திகள்
தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தென்காசி மாவட்ட அரசு பள்ளி மாணவிகள் சாதனை..
பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் பங்கேற்ற தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவிகள் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். ஸ்கூல் கேம்ஸ் பெட்ரேஷன் ஆப் இந்தியா சார்பில் 2024-25ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் மாநில அளவில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நடந்தது. சிவகங்கையில் நடந்த போட்டியில் தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் ஒளவையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மு.சந்தியா மற்றும் சி.யோக தர்ஷினி […]
ராமநாதபுரத்தில் 25 வது மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி : வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு..
ராமநாதபுரம், டிச.16 – ராமநாதபுரம் மாவட்ட சதுரங்க கழகம் செய்யதம்மாள் கலை அறிவியல் கல்லூரி சார்பில் 25 வது மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி செய்யதம்மாள் கலை அறிவியல் கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. செய்யதம்மாள் கலை அறிவியல் கல்லூரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். செய்யதம்மாள் அறக்கட்டளை உறுப்பினர் பாத்திமா சானாஸ் பரூக், ராமநாதபுரம் மாவட்ட சதுரங்க கழக தலைவர் சுந்தரம் செய்யதம்மாள் கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை […]
ராமேஸ்வரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் பிறந்தநாளை முன்னிட்டு சிற்ப்பு பிரார்த்தனை..
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரனின் 61 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு இன்று (13/12/2024) ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சியின் நகர கழகச் செயலாளர் சுதாகர் ஏற்பாட்டில் டிடிவி தினகரன் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு ஆயுஷ் ஹோமம் நடைபெற்றது வேதாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க நடைபெற்ற ஆயுஷ் ஹோம விழாவில் ராமநாதபுரம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் முருகன் […]
இருமேனி ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடம் திறப்பு..
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் இருமேனி ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டட திறப்பு விழா இன்று நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ திறந்து வைத்தார். மண்டபம் வட்டார வளர்ச்சி ஆணையர் சோமசுந்தர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஷங்கர பாண்டியன், ஊராட்சி தலைவர் சிவக்குமார், துணைத்தலைவர் ஐனுல் அரபியா, ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பிரபாகரன், ஊராட்சி தலைவர்கள் கார் மேகம் […]
ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடியில் 19 பேருக்கு ரூ.59.50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் : அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் வழங்கினார்…
இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடியில் தமிழ்நாடு மாநிலத் தலைமை மீனவளக் கூட்டுறவு இணையம் (டாப்கோபெட்), மீன்வளம், மீனவர் நலத்துறை சார்பில் மீனவர்களுக்கு வரிவிலக்கு அளித்த டீசல் விற்பனை, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் டீசல் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையம் திறப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் மீன்வளம், மீனவர் நலத்துறை இயக்குநர் கஜலட்சுமி, மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தனர். சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம் (இராமநாதபுரம்), கருமாணிக்கம் (திருவாடானை) முருகேசன் (பரமக்குடி) […]
ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடியில் மீனவர்களுக்கு விலக்கு அளித்த டீசல் விற்பனை மையம் திறப்பு…
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடியில் தமிழ்நாடு மாநிலத் தலைமை மீனவளக் கூட்டுறவு இணையம் (டாப்கோபெட்), மீன்வளம், மீனவர் நலத்துறை சார்பில் மீனவர்களுக்கு வரிவிலக்கு அளித்த டீசல் விற்பனை, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் டீசல் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையம் திறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மீன்வளம், மீனவர் நலத்துறை இயக்குநர் கஜலட்சுமி, மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தனர். சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் (இராமநாதபுரம்), கருமாணிக்கம் (திருவாடானை) […]
இலங்கை வாலிபர் தன்னை இலங்கைக்கு அனுப்பக் கோரி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மண்டியிட்டு தர்ணா.. வீடியோ..
இராமநாதபுரம் : தன்னை தனது சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் இல்லையேல் உரிய அடையாள அட்டை வழங்கக் கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இலங்கை வாலிபர் மண்டியிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இலங்கையில் கடந்த 1983 ல் ஏற்பட்ட உள் நாட்டு போர் காரணமாக 1997 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜாய் (30) தனது 9 வயதில் இலங்கையில் இருந்து கடல் வழியாக தனுஷ்கோடி வந்தார். இதையடுத்து மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு […]
சுற்றுச்சூழலுக்கு எதிரான கனிம சுரங்க அனுமதியை ரத்து செய்க! கனிமொழி எம்.பி வலியுறுத்தல்..
டங்ஸ்டன் கனிம சுரங்கம் சுற்றுச் சூழலுக்கு எதிரானது எனவும், மதுரையில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைத்தால், கலாச்சார மற்றும் பாரம்பரிய சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இச்சுரங்கத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்கும் முன்பு, மாநில அரசிடம் ஆலோசிக்கவில்லை. எனவே கனிம சுரங்கத்திற்கான அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்! என்றும் மக்களவையில் கனிமொழி எம்பி வலியுறுத்தியுள்ளார். மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கப் பிரச்சினை தொடர்பாக மக்களவையில் கனிமொழி எம்.பி பேசியதாவது: “தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் […]
கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு 05 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை; தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு..
சாம்பவர் வடகரை பகுதியில் கொலை முயற்சி வழக்கின் குற்றவாளிக்கு 05 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 10,000 அபராதம் விதித்து தென்காசி தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை காவல் நிலைய எல்கைகுட்பட்ட பகுதியில், கடந்த 2014 ஆம் ஆண்டு குடும்ப பிரச்சனையில் அரிவாளால் வெட்டி கொலை முயற்சி செய்த வழக்கில் சாம்பவர் வடகரை மூக்கன் என்பவரின் மகன் மாடசாமி @ சங்கிலி மாடன் (48) என்பவரை சாம்பவர் வடகரை காவல் […]
இறப்பிலும் இணை பிரியாத தம்பதியினர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கவணம்பட்டியைச் சேர்ந்தவர்கள் சுப்பிரமணியன் – பாண்டியம்மாள் தம்பதி., சுப்பிரமணியன் கட்டிட தொழிலாளியாகவும், பாண்டியம்மாள் இல்லத்தரசியாகவும் வாழ்ந்து வந்தனர்.,இவர்களுக்கு திருமணமான நாளிலிருந்து 35 ஆண்டுகளாக குழந்தை இல்லாத சூழலில் கணவருக்கு குழந்தையாக மனைவியும், மனைவிக்கு குழந்தையாக கணவனும் அதிக அளவு பாசத்துடன் இருந்துள்ளனர்.,இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி சுப்பிரமணியனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நேற்று 10ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்., கணவர் உயிரிழந்த நொடி முதல் மீளமுடியாத சோகத்தில் இருந்து வந்த […]
பேவர் பிளாக் சாலையின் தரம் ராமநாதபுரம் ஆட்சியர் ஆய்வு..
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோயில் ஒன்றியம் பெருங்களூர் ஊராட்சியில் ரூ.2.97 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலையின் தரத்தன்மை குறித்து ஆய்வு செய்து சாலையின் இரு புறத்தையும் பலப்படுத்தி நன்கு அமைக்க வேண்டுமென பொறியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அறிவுறுத்தினார். நயினார்கோயில் வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு, ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் கணபதி சுப்ரமணியன், ஜெயந்தி உடனிருந்தனர்.
காரைக்குடியில்சம்பை ஊற்று நீர் , பாதுகாக்க கோரி தாசில்தார் அலுவலகம் முற்றுகை போராட்டம்…
காரைக்குடியில் சம்பை ஊற்று நீரை சட்டவிரோதமாக பயன்படுத்தும் ,நீர் நிலைகளை மாசுபடுத்தும் கெமிக்கல் மற்றும் ஒர்க் ஷாப், கார், பைக் கம்பெனிகளை மூட கோரியும் சம்பை நீர் நீரோட்ட பகுதியில் கட்டிடம் கட்ட தடை செய்யக்கோரியும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே. எம்.சரீப் தலைமையில் காரைக்குடியில் தாசில்தார் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. விடுதலை தமிழ் புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன் மற்றும் தோழமைக் கட்சிகள் உள்ளிட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரால் […]
தாயாரை மீட்டு தரக்கோரி மகள் கண்ணீர் மல்க மனு..
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா ஆ. புனவாசல் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி பத்ரகாளி. இவரை வீட்டு வேலைக்காக ஏஜன்ட்கள் கொக்கா டி இருளாண்டி, திருச்சி நாசர் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மஸ்கட் நாட்டிற்கு அனுப்பினர். அங்கு பத்ரகாளி தொடர் சித்ரவதையால் தற்போது மிகவும் உடல் நலம் பாதித்துள்ளார். இதனால் பத்ரகாளியை மீட்டு தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது மகள் நபியா மக்கள் குறை தீர் […]
கண்காணிப்பு கேமரா சேவை : எஸ்பி தொடங்கி வைத்தார்..
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியம் சின்னஉடப்பங்குளம் கிராமத்தில் மாவட்ட கவுன்சிலர் வாசுதேவன் ஏற்பாட்டில் பொருத்தி கண்காணிப்பு கேமராக்களின் சேவையையும் மாவட்ட கண்காணிப்பாளர் சந்தீஷ் இன்று துவங்கி வைத்தார். அபிராமம் அருகே பாப்பனம் கிராமத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய 4 CCTV கேமராக்களின் சேவையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் பொதுமக்கள் முன்னிலையில் இன்று தொடங்கி வைத்தார்.
காசநோய் இல்லா தமிழகம் விழிப்புணர்வு பிரச்சாரம்; தென்காசி மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்..
தென்காசியில் “NIKSHAY SHIVIR” எனும் தொடர்ச்சியான 100 நாள் காசநோய் இல்லா தமிழகத்திற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் துவக்கி வைத்தார். தென்காசி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் 07.12.2024 அன்று “NIKSHAY SHIVIR” எனும் தொடர்ச்சியான 100 நாள் காசநோய் இல்லா தமிழகத்திற்கான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பை கடைநிலை மக்கள் வரை கொண்டு சேர்க்கும் வகையில் […]
கீழக்கரை 18 வாலிபர்கள் ஜக்காத் கமிட்டிக்கு தன்னார்வலர் விருது..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் செயல்பட்டு வரும் 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளை (ஜகாத் கமிட்டி) சமூக சேவை, மருத்துவ சேவை, கல்வி சேவை, வட்டியில்லா கடன் உதவிகள், பேரிடர் காலத்து உதவிகள், மரக்கன்று நடுதல் போன்ற பல்வேறு சேவைகளை செய்து வருகின்றது. மேலும் கோவையில் தனியார் கல்லூரியில் தமிழக குரல் இணையதளம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவப்படுத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் […]
கடையம் அருகே இலவச சித்தா மற்றும் கண் மருத்துவ முகாம்..
தென்காசி மாவட்டம் கடையம் அருகே திருமலையப்பபுரத்தில் இலவச சித்தா மற்றும் கண் மருத்துவ முகாம் நடந்தது. இம்முகாமில் 5 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் மற்றும் திருநெல்வேலி அரசு சித்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து திருமலையப்பபுரம் திரு கைலாசம் நினைவு உயர்நிலைப் பள்ளியில் இலவச சித்த மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்க தலைவர் […]
இட ஒதுக்கீடு அரசியல் சாசனப் பிரிவு 16(4-A) ஐ மீண்டும் அமல்படுத்தக்கோரி ஆலோசனை கூட்டம்..
இராமநாதபுரம் பட்டியல் & பழங்குடி வகுப்பினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கும் அரசியல் சாசனப் பிரிவு 16(4-A) ஐ மாநில அரசு அமல்படுத்த கோருவது தொடா்பான ஆலோசனனக் கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது. தமிழ்நாடு அரசுப் பணிகளில் அமலிலிருந்த இனச்சுழற்சி அடிபடையில் பதவி வழங்கும் நடைமுறை உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு பெண்கள், பட்டியல் & பழங்குடி வகுப்பைச் சார்ந்த பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் பதவி உயர்வு […]
மண்டபம் மீனவர் 8 பேர் 2 விசைப்படகு களுடன் கைது:இலங்கை கடற்படை நடவடிக்கை..
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று காலை தொழிலுக்குச் சென்றனர். இலங்கை யாழ். மாவட்டம் நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று நள்ளிரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக மண்டபம் கார்த்திக் ராஜா, தங்கச்சிமடம் ஆஸ்டின் ஆகியோரது விசைப்படகுகளில் இருந்த சேசு 47, காளி 50, கண்ணன் 55, முத்துராஜ் 45, பத்தரப்பன் 55 உள்பட 8 மீனவர்களை […]
You must be logged in to post a comment.