திருச்சி விமான நிலையத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை சோதனை செய்வதா? துரை வைகோ. திருச்சியில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் குருவிகள் என நினைத்து பயணிகள் குறிப்பிட்ட நபர்களை தொடர்ந்து பரிசோதிக்கும் வகையில் நடந்து கொள்வதாக கூறப்படுகிறது. இது அவர்களின் பணி என்றாலும் கூட சிலரை டார்க்கெட் செய்து சோதிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில் தான் திருச்சி சர்வதேச விமான நிலைய வளர்ச்சி ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. […]
Category: மாநில செய்திகள்
தேவகோட்டை அருகே அரசுப் பள்ளியில் பொங்கல் விழா .!
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம் மங்களம் அரசு நடுநிலைப்பள்ளியில் பொங்கல் விழா . தலைமையாசிரியர் சுப.கவிதா தலைமையில் நடைபெற்றது. மாணவர்கள் பட்டாம்பூச்சி போல் உடையணிந்து பங்கேற்றனர். இதில் ஆசிரியர்கள் ஸ்ரீகலா, ச.கவிதா, பாண்டிச்செல்வி, ராணி, ஷீபா விண்ணரசி, சங்கீதா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். சத்துணவு அமைப்பாளர் ஞானப்பிரகாசம், உதவி அமைப்பாளர் நாச்சம்மை மற்றும் ஆசிரிய பெருமக்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து குதூகலமாக கொண்டாடினர்.
பரமக்குடி அருகே வாளுடன் புகைப்படத்தை வலைத்தளங்களில் பதிவிட்ட இளைஞர் கைது .! வலைத்தளங்களில் பிரச்சினையை ஏற்படுத்தும் விதமாக பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை .!! மாவட்ட எஸ்பி எச்சரிக்கை .!!!
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூர் மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த ஆஞ்சிநேயர் என்பவர் சமூகவலைதளத்தில் (Instagram) சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் விதமாக வாள் உடன் தனது புகைப்படத்தை ஸ்டேட்டஸாக பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக கடந்த 31.12.2024-ம் தேதி பார்த்திபனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு வைக்கப்பட்டுள்ளார். மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் இது போன்று சட்டம்-ஒழுங்கு மற்றும் இரண்டு மதங்களுக்கிடையே பிரச்சினைகளை ஏற்படுத்தும் விதமான பதிவுகளை பதிவிடும் இளைஞர்களுடைய சமூக […]
குழந்தைகள் பராமரிப்பு இல்ல வளாகங்களில் மரக்கன்றுகள் நடும்பணி..
இராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வண்ணம் குழந்தைகள் இன்பமாக வளர இயற்கையோடு இணைக்க வேண்டும் என்ற முன்னெடுப்புக்காக “யாதும் உயிரே” என்ற முன்னெடுப்பின் மூலம் அனைத்து குழந்தைகள் காப்பகத்திலும் உள்ள குழந்தைகளை மரக்கன்று நட்டு புத்தாண்டை துவங்க வைத்தல் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 7 அரசு, அரசு சாரா குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் ஒவ்வொரு இல்ல வளாகத்திற்குள், தலா 10 மரக்கன்றுகள் குழந்தைகளால் நடப்பட்டு, மரக்கன்றுகளை சுற்றி மரக்கன்று […]
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் மருத்துவ முகாம்.!
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்P. V. வெங்கட் அறிக்கை. தமிழகத்திலே முதல் முறையாக துளசி பார்மசி உடன் இணைந்து இனி வரும் காலங்களில் அனைத்து மாதங்களிலும் முதல் வாரத்தில் கட்டாயமாக இலவசமாக BP மற்றும் SUGAR பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கும் முகாம் சென்ற வருடம் 2024 நவம்பர் மாதம் மாண்புமிகு நீதிபதிகளால் தொடங்கி வைக்கப்பட்டன அதன் தொடர்ச்சியாக இரண்டாம் மாத BP /SUGAR (ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு)பரிசோதனை முகாம் வரும் […]
திருச்சியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கிழக்கு மாநகர கலைஞர் பகுதி சார்பில் பொதுக்கூட்டம்.!
திருச்சியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கிழக்கு மாநகர கலைஞர் பகுதி சார்பில் பொதுக்கூட்டம். திமுக கழக இளைஞரணிச் செயலாளர் – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி திருச்சி தெற்கு மாவட்டம், திருச்சி கிழக்கு மாநகரம், கலைஞர் பகுதி தி.மு.க சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் சிறப்புரையாற்றி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பகுதிச் செயலாளர் மணிவேல் அவர்கள் தலைமை வகித்தார் இந்தக் கூட்டத்தில் […]
தென்காசி வெதர்மேன் ராஜா தமிழக அரசுக்கு கோரிக்கை..
தானியங்கி மழைமானிகளில் ஏற்படும் பழுதுகளை விரைந்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி வெதர்மேன் ராஜா தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது பற்றிய அவரது செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் அரசு சார்பில் 1300-க்கும் மேற்பட்ட இடங்களில் தானியங்கி மழைமானி அமைக்கப்பட்டு குறு வட்டங்கள் அளவில் மழை அளவுகளை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப் பட்டது. இந்நிலையில், 1300-க்கும் மேற்பட்ட தானியங்கி மழை மானிகள் மூலம் ஒரு மாவட்டத்தில் எந்த பகுதியில் அதிகமழை, எந்த பகுதியில் […]
வடகரை பேரூராட்சி பகுதியில் எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டம்..
பொது மக்களுக்கான அடிப்படை வசதிகள் சரிவர செய்து தரப்படவில்லை எனக்கூறி வடகரை பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரக் கணக்கான மக்கள் வசித்து வரும் வடகரை பகுதியில் சாலை வசதி, கழிவுநீர் வாய்க்கால், தெரு விளக்கு, குப்பைத் தொட்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர செய்து தரப்பட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில் 50-க்கும் மேற்பட்ட […]
நான்கு பேருந்தில் மூன்று பேருந்து ‘கட்’ – கோவையில் 3 கிராம மக்கள் கடும் அவதி*
*நான்கு பேருந்தில் மூன்று பேருந்து ‘கட்’ – கோவையில் 3 கிராம மக்கள் கடும் அவதி* கோவை மாதம்பட்டி அருகே உள்ள மத்திப்பாளையம் கிராமத்திற்கு நான்கு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்றுக்குப் பிறகு ஒரே ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. குறிப்பாக மத்திப்பாளையம், சென்னனூர், கிருஷ்ணராயம்புதூர் கிராமத்தில் இருந்து வேலைக்கு செல்லும் பெண்கள் ஆண்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பேருந்து வசதி இல்லாததால் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இயக்கப்படும் ஒரு பேருந்தும் […]
திருச்சியில் தொழிலதிபர் வீட்டில் நகை பணம் கொள்ளை.! போலீஸ் விசாரணை .!!
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் (65). தொழிலதிபா் மற்றும் ஒப்பந்ததாரரான இவா் திருச்சி, பொன் நகா் 2ஆவது பிரதான சாலையில் உள்ள வீட்டில் வசிக்கிறாா். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் ஒரத்தநாட்டில் உறவினரின் துக்க நிகழ்வுக்கு குடும்பத்துடன் சென்ற சண்முகம் புதன்கிழமை காலை திரும்பினாா். அப்போது வீட்டின் காவலாளி முருகேசனை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை இரவு தாக்கி கட்டிப்போட்டு விட்டு வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் […]
ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு வரும் 10ம் தேதி திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.!
திருச்சி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடந்து கொண்டிருக்கிறது இதன் தொடர்ச்சியாக வருகிற பத்தாம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நடைபெற இருக்கிறது. 21 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் (சொர்க்க வாசல்) வருகின்ற ஜனவரி 10 ஆம் தேதி அதிகாலை 5.15 மணிக்கு திறக்கப்பட உள்ளது. இதையொட்டி, ஸ்ரீரங்கத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வைகுண்ட ஏகாதசி விழாவிற்கு போதுமான பாதுகாப்பு அளிப்பதற்காக உள்ளுர் மற்றும் […]
திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் ஆறு நகரும் படிக்கட்டுகள் ஆறு மின் தூக்கிகளும் இணைக்கப்படுகின்றன ஆட்சியர் ஆய்வு.!
தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு அமைந்த பிறகு மீண்டும் திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைக்க அனுமதியளிக்கப்பட்டு, கடந்தாண்டு செப்டம்பர் முதல் பணிகள் தொடங்கின. தற்போது, கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில், கட்டுமானப் பணிகளை ஆட்சியர் மா.பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் வே. சரவணன், கோட்டாட்சியர் கே. அருள், நகரப் பொறியாளர் சிவபாதம் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்விற்குப் பின் […]
பெங்களூர் கார்மேலாராம் ரெயில் நிலையத்தில் நிற்காமல் செல்லும் ரெயில்கள் .! தவிக்கும் தமிழ்நாடு பயணிகள் .!!
நாகர்கோவில் பெங்களூர் ரயிலை குறிப்பிட்ட நிறுத்தத்தில் நிறுத்தாமல் ரத்து செய்துவிட்டனார் இதனால் பெங்களூர் தமிழ்நாடு தென் மாவட்ட பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர் பெங்களூர் கார்மேலராம் ரயில்வே நிலையம் அருகே ஐ.டி கம்பெனிகள் தனியார் நிறுவனங்கள் ஸ்கூல் வணிக நிறுவனங்கள் என ஏராளமான தனியார் துறை அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன இப்பகுதியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர் அதேபோல் அண்டை மாநிலமான தமிழகத்திலிருந்து படித்த பல்வேறு நபர்கள் இங்கு உள்ள தனியார் நிறுவனங்களில் […]
நேர்மையுடன் செயல்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்த சலவை தொழிலாளி..
பொட்டல்புதூர் பகுதியில் சலவை தொழிலாளி ஒருவர் தனது நேர்மையான செயற்பாட்டால் அனைத்து சமுதாய மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள ஊர் பொட்டல் புதூர் பகுதியை சேர்ந்த சலவை தொழிலாளி குமார். தினமும் ஊர் மக்களின் துணியினை சலவை செய்து இஸ்திரி போட்டுக் கொடுக்கும் பணியினை செய்து வருகிறார். இந்த நிலையில், அருகில் உள்ள வெங்காடம் பட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பூ.திருமாறன் பெரிய தொகையை தவறுதலாக பேண்ட் பாக்கெட்டில் வைத்து அதனை […]
சாலை விதிகளை மதிக்கும் நாணயமானவர்களுக்கு நாணயம் பரிசு .!
தஞ்சையில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு 1 கிராம் தங்க நாணயம் பரிசு விபத்தில்லா 2025ம் ஆண்டை அனுசரிக்க வலியுறுத்தி ஜோதி அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு இருசக்கர வாகனம் இயக்கும்போது தலைக்கவசம் அணியாமல் செல்வதால் ஏற்படும் விபத்துகள் குறித்தும் , அணிந்து செல்வதால் உள்ள நன்மைகள், உயிர் பாதுகாப்பு குறித்தும் தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் தஞ்சை மாவட்ட காவல்துறையுடன் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது . அதன் ஒரு பகுதியாக பிறந்திருக்கும் 2025 […]
கீழக்கரையில் புகாரி ஷரிப் 10 ம் ஆண்டு நிறைவு விழா.! உலக நன்மைக்காக இறைவனிடம் கண்ணீர் மல்க கூட்டுப் பிரார்த்தனை செய்த இஸ்லாமியர்கள் ..!!
இராமாநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பழைய குஃத்பா பள்ளிவாசலில் புகாரி ஷாரிப் பத்தாம் ஆண்டு நிறைவு விழா பழைய குஃத்பா பள்ளி ஜமாத் தலைவர் ஹாஜா ஜலாலுதீன் , செயலாளர் சப்ராஸ் நவாஸ் , பொருளாளர் சுல்தான் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கீழக்கரை அனைத்து ஜமாத்தார்கள் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். முகமது சதக்கத்துல்லா ஆலின் கிராத் ஓதி துவங்கி வைத்தார் . கீழக்கரை புகாரி ஷெரிஃப் டிரஸ்ட் அல்ஹாஜ் பி எஸ் எம் ஹபிபுல்லா கான் […]
கருப்பாநதி அணையில் இருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி..
கருப்பாநதி நீர்த்தேக்கத்தில் இருந்து பிசான பருவ சாகுபடிக்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரால் தண்ணீர் திறந்து விடப்பட்டது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக முதல்வர் ஆணையின் படி தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம் கருப்பாநதி நீர்த்தேக்கத்தில் இருந்து பசலி பிசான பருவ சாகுபடிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் 31.12.2024 அன்று தண்ணீர் திறந்து வைத்தார். கருப்பாநதி பாசன திட்டத்தின் கீழுள்ள பெருங்கால், பாப்பான்கால், சீவலன் கால், இடைகால், கிளாங்காடு, ஊர்மேல் அழகியான் ஆகிய கால்வாய்களின் கீழ் […]
பரமக்குடியில் தேசிய நுகர்வோர் தின விழா.!
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தேசிய நுகர்வோர் தின விழாவை முன்னிட்டு பரமக்குடி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் பரமக்குடி அரசு கலைக் கல்லூரி மற்றும் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் இணைந்து இன்றைய தினம் காலை 10 மணிக்கு கல்லூரி கலை அரங்கில் விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் சிவகுமார் தலைமை தாங்கி நடத்தினார். குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் வரவேற்று பேசினார்கள். நிகழ்ச்சியில் பரமகுடி நுகர்வோர் சங்கத்தின் தலைவர் கே.ஜே மாதவன் செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை […]
நேர்மைமிக்க காவல் துறை டி.எஸ்.பிக்கு பதவி உயர்வு..
நேர்மை மிக்க காவல் துறை டி.எஸ்.பி குப்புசாமி ஏ.எஸ்.பியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இன்ஸ்பெக்டர், உளவுப் பிரிவு டி.எஸ்.பி, மின்வாரிய குற்றங்கள் தடுப்பு, என பல்வேறு பதவிகள் மற்றும் பணிகளில் சிறப்பாக பணியாற்றியவர் குப்புசாமி. மதுரை டி.எஸ்.பியாக உள்ள குப்புசாமிக்கு தீவிரவாத தடுப்பு ஏ.எஸ்.பி பதவியை தமிழக அரசு வழங்கியுள்ளது. கன்னியாகுமரி முதல் திண்டுக்கல் வரை உள்ள அனைத்து மாவட்டங்கள், நகரங்கள், முக்கிய பகுதிகள் அனைத்தும் இவரது நேரடி கண்காணிப்பில் வரும். தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், […]
புதுமைப் பெண் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை..
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை தூத்துக்குடியில் தொடங்கி வைத்து விழாப் பேருரை ஆற்றினார். இத்திட்டத்தின் படி அரசு உதவி பெரும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கப்படுகிறது.