பாம்பன் நான்கு வழிச்சாலை புதிய பாலத்தைமாற்றியமைக்க கோரி பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சருக்கு ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி கடிதம்.! ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் நான்கு வழிச்சாலை புதிய பாலத்தை குடியிருப்புகளை பாதிக்காத வகையில் மாற்றியமைக்க கோரி பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ வ வேலுவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி எம்பி ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் சந்தித்து கடிதம் வழங்கினார். இது […]
Category: மாநில செய்திகள்
கீழக்கரையில் கள்ளத்தனமாக மது விற்பனையை தடுக்க கோரி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.!
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பேருந்து நிலையம் அருகில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கீழக்கரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கள்ளதனமாக மது பாட்டில் மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடை செய்ய கோரியும் கள்ள சந்தையில் போதை பொருள் விற்பனை செய்யும் கும்பல்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் இதற்கு துணை போகும் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்ய கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் பொறுப்பாளர் ரவி தலைமை […]
மதுரையில் தலைமை ஆசிரியர்கள் நடத்திய குழந்தைகளுக்கான தற்காப்பு பாதுகாப்பு நிகழ்ச்சி.!
மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் HCL foundation மற்றும் OFERR நிறுவனமும் இணைந்து எனது பள்ளி நிகழ்ச்சி என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி கல்வி குழு தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். OFERR நிறுவனத்தின் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். மதுரை மாநகராட்சி கல்வி அதிகாரி ஜெய்சங்கர், HCL foundation program officer ராஜலட்சுமி, ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 24 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் […]
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு 40 சதவீதம் வரை நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் அமைதி பேச்சுவார்த்தையில் முடிவு !
சுரக்குடிப்பட்டி, வெண்டையம்பட்டி, இராயமுண்டான்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடும் மழை வெள்ள பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு 40 சதவீதம் வரை நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் அமைதி பேச்சுவார்த்தையில் முடிவு: தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தாலுக்காவிற்க்கு உட்பட்ட சுரக்குடிப்பட்டி, இராயமுண்டான்பட்டி, வெண்டையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதம் பெய்த கடும் மழை வெள்ளத்தால் நடவு செய்யப்பட்ட இளம் பயிர்கள் நீரில் மூழ்கி முற்றிலும் அழுகியது.இதனால் மீண்டும் நாற்று வாங்கி நடவு செய்யவேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.உரிய இழப்பீடு கேட்டு இந்திய கம்யூனிஸ்ட் […]
70 வயசுல டைவர்ஸ் பொய்யா ஏமாத்தி மோசடி எஸ்.பி. அலுவலகத்தில் புலம்பிய கமுதி மூதாட்டியின் சோகக் கதை.!
‘ ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் 70 வயசுல என் புருஷன் என்னை டைவர்ஸ் பண்ணிட்டாருன்னு பொய்யா ஏமாத்தி மோசடி செஞ்ச பாவிங்க.. 250 சவரன் நகையவும் பணத்தையும் ஏமாத்திட்டாங்க..- எஸ்.பி. அலுவலகத்தில் புலம்பித் தள்ளிய கமுதி மூதாட்டியின் சோகக் கதை… ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் போஸ் தேவர். இவருக்கு பஞ்சவர்ணம் மற்றும் பாக்கியம் என்ற இரண்டு மனைவிகள் உள்ளனர். போஸ் கடந்த 2022 டிசம்பர் 1ஆம் […]
கீழக்கரையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்க்கான பயிற்சி.!
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில் மன்றத்தின் நுடப (TNSCST) சார்பாக தொழில்துறை தேவைகளுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறன் மேம்பாடு என்ற தலைப்பில் ஆறு நாட்களில் இரண்டு கட்டங்களாக பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு கல்லூரியின் முதல்வர் ஷேக்தாவூது தலைமை தாங்கி பேசுகையில் பயிற்சி முகாமின் முக்கியத்துவத்தையும், தொழில் துறையில்அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் உதவியுடன் பயிற்சி முகாமின் மாணவர்கள் புதிய திறன்களைப் பெறும் அவசியத்தையும் […]
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் சிபிஎஸ்சி திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம்.! 50-க்கும் மேற்பட்டோர் கைது .!!
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் சிபிஎஸ் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சங்கத்தின் மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதைத் தொடர்ந்து சி பி எஸ் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சுமார் 50-க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் திடீர் சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது கேணிக்கரை […]
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ராமநாதபுரத்தில் மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் .!
ராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் டி பிளாக் அருகே தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் தமிழக ஆளுநர் ஆர். என். ரவியை கண்டித்தும், ஒன்றிய அரசு ஆளுநரை திரும்ப பெறக்கோரியும் மாவட்ட அவைத்தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில நிர்வாகிகள் சுப.த.திவாகர், குணகேசரன், ராமர், இன்பா ஏ.என்.ரகு, முன்னாள் அமைச்சர் சுந்தரராஜன், முன்னாள் எம்.பி பவானிராஜேந்திரன், மண்டபம் ஒன்றியம் பிரவீன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர் […]
ராமநாதபுரம் அரண்மனையில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் .!
ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா தலைமையில் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கை உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து உடனடியாக கைது செய்யக்கோரியும் போதை இல்லா தமிழகத்தை உருவாக்க கோரியும் நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசாக ஆண்டுதோறும் வழங்கப்படும் ரூபாய்1000 உடனே வழங்க கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. . இதில் ராமநாதபுரம் நகர செயலாளர் பாண்டி மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார் […]
இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்த முயன்ற தங்கம் பறிமுதல் .! 3 பேர் கைது.!!
இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்த முயன்ற தங்கம் பறிமுதல் : 3 பேர் கைது இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு கட்டதி வரப்பட்ட 11கிலோ 300 கிராம் தங்கத்தினை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து இலங்கையை சேர்ந்த 3 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர். தமிழகம் அருகே இலங்கை இருப்பதால் கடல் வழியாக தங்கம், போதை பொருட்கள், பீடியிலைகள், பலசரக்கு பொருட்கள் கடத்தல் அதிகமாக நடந்து வருகிறது. கடத்தல் குறித்து இந்திய, இலங்கை […]
மண்டபம் அருகே ஐயப்ப பக்தர்கள் வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே தலை குப்புற கவிழ்ந்து விபத்து.!
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே ஐயப்ப பக்தர்கள் வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே தலை குப்புற கவிழ்ந்து விபத்து: நால்வருக்கு காயம்: அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர்த்தப்பினர்: ஆந்திர மாநிலத்தில் இருந்து சபரிமலைக்கு யாத்திரையாக வந்த ஐயப்ப பக்தர்கள் ராமேஸ்வரத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊர் திரும்ப போது மண்டபம் அருகே பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே உள்ள பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. நால்வர் காயம் அதிர்ஷ்டவசமாக அனைவரும் […]
இலங்கை தமிழ் அகதிகளுக்கு தமிழகத்தில் எந்த வசதியும் செய்து தரப்படவில்லை என இலங்கை தமிழ் அகதிகள் கண்ணீர் விட்டு அழுது கெஞ்சி ஆட்சியரிடம் மனு
இலங்கையில் தான் கஷ்டம் என்று தமிழகத்துக்கு வந்தால் இங்கே அதைவிட கஷ்டமாக இருக்கிறது. இலங்கை தமிழ் அகதிகளுக்கு தமிழகத்தில் எந்த வசதியும் செய்து தரப்படவில்லை என இலங்கை தமிழ் அகதிகள் கண்ணீர் விட்டு அழுது கெஞ்சி கேட்கின்றனர். தங்களை இலங்கைக்கே மீண்டும் திருப்பி அனுப்பும்படி வேதனையுடன் ஆட்சியரிடம் மனு கொடுத்த இலங்கை தமிழ் அகதிகள். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் யுத்த காலத்திலும், அந்நாட்டில் பொருளாதார சிக்கல் ஏற்பட்ட போதும் அங்கிருந்து அகதிகளாக தஞ்சம் வந்த […]
பள்ளி கட்டிடத்தை சரி செய்து தரக்கோரி பாட்டுப்பாடி, ஆட்டம் ஆடி ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்த அரசு பள்ளி மாணவ மாணவிகள்..!
ராமநாதபுரத்தை அடுத்த வித்தானூர் பகுதியில் அரசு துவக்க பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த அரசு பள்ளிக்கு சரியான கட்டிட வசதி இல்லாததால் மகளிர்மன்ற கட்டிடத்தில் மாணவ மாணவிகளுக்கு பாடம் எடுக்கப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி பாதிக்கப்பட்ட கிராம பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சியிடம் மனு அளிக்க வந்தனர். அப்போது பள்ளிப் பாடத்தின் பாடலை பாட்டுப்பாடி ஆட்டம் போட்டு மாணவ மாணவிகள் […]
மயானத்துக்கு போக வழியில்லாம வயலுக்குள்ள பொணத்தை தூக்கிட்டு போறோம்”- புகைப்படங்களுடன் வந்து ஆட்சியர் அலுவலகத்தில் புலம்பிய பொதுமக்கள்..!
ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவிலை அடுத்த நெடுங்குறிச்சி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தங்களுக்கென ஒதுக்கப்பட்ட சுடுகாட்டு பகுதிக்கு செல்ல எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை என, குற்றம் சாட்டும் அந்த கிராம மக்கள் போதிய சாலை வசதி செய்து தரப்படாததால் சுடுகாட்டிற்கு, இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்வதில் கடும் சிரமம் ஏற்படுவதாகவும், வேறு வழியின்றி உடல்களை வயல்வெளிக்குள் தூக்கிச் செல்வதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளாக […]
முதலுதவி தாமதத்தால் முன்னாள் பேரூராட்சி தலைவர் உயிரிழப்பு..
தென்காசி மாவட்டத்தில் விபத்தில் சிகிச்சை பெற்று வந்த சுரண்டை பேரூராட்சி முன்னாள் தலைவர் முதலுதவி தாமதம் ஆகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம் சுரண்டை சிவ குருநாதபுரத்தை சேர்ந்தவர் டி.கே.எம். மாதாள பாண்டியன்.வயது (70). இவர் சுரண்டை பேரூராட்சியாக இருந்த போது 10 ஆண்டுகள் பேரூராட்சி மன்ற தலைவராக பணியாற்றினார். இவர் கடந்த 30ஆம் தேதி மாலை 6 மணி அளவில் கடையம் அருகே உள்ள மாதாபுரத்தில் அவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் […]
தென்காசி மாவட்ட புதிய எஸ்.பி பொறுப்பேற்பு..
தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட தென்காசி மாவட்ட புதிய எஸ்.பி அரவிந்த் இன்று பொறுப் பேற்றுக் கொண்டார். தென்காசி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக திருச்சி துணை கமிஷனராக பணியாற்றி வந்த அரவிந்த் தமிழ்நாடு அரசால் நியமனம் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து தென்காசி மாவட்டத்தின் 6-வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக S.அரவிந்த் இன்று (06.01.2025) ஆம் தேதி பதவி ஏற்றுக் கொண்டார். இவர் 21.07.2005 ஆம் ஆண்டு காவல் பணியில் இணைந்து துணை எஸ்.பியாக திருவாரூர், கரூர், திருநெல்வேலி, […]
விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக பாலியல் அத்துமீறல்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.!
விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக பாலியல் அத்துமீறல்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் எஸ் டி பி ஐ கட்சியின் பெண்கள் அமைப்பான விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக பாலியல் அத்துமீறல்களை கண்டித்தும் , பெண்களுக்கு எதிராக அரங்கேறி வரும் கொடுமைகளை கண்டித்தும் , திமுக அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விம் மாவட்ட தலைவி ரம்ஜான் பேகம் தலைமை தாங்கினார். விம் நகர் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். அரசுக்கு எதிராகவும் பெண்களுக்கு […]
பொங்கல் திருநாளை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்திற்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் நவாஸ்கனி எம்பி கோரிக்கை.!
பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் பணிபுரியும் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த மக்கள் சொந்த ஊருக்கு வந்து செல்லும் வகையில் மண்டபம் வரையிலான கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி எம்பி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள கோரிக்கையில் குறிப்பிட்டிருந்ததாவது., என்னுடைய இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மக்கள் பலரும் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் பணிபுரிவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பொங்கல் திருநாளை […]
புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.!
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஒன்றியம் மாறனேரி பஞ்சாயத்தில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இன் சார்பாக புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் பெண்கள் சுகாதார தன்னார்வலர் மகிமை ராகினி மாறனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பெண்களுக்கான புற்றுநோயின் அறிகுறிகள் என்ன என்றும் மார்பக புற்றுநோய் என்றால் என்ன என்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்றால் என்ன என்பதை பற்றி தெளிவாக உரையாற்றினார் குறிப்பிட்ட அறிகுறிகள் ஏதேனும் உங்களுக்கு இருக்கும் […]
திருச்சி தேசிய நூலக வார விழா அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு.!
.திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் இன்று (04.01.2025) நடைபெற்ற 57-வது தேசிய நூலக வார விழாவில் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 57-வது தேசிய நூலக வாரவிழா, இளைஞர் இலக்கிய திருவிழா மற்றும் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி, நன்கொடையாளர்களை பாராட்டி விழாப் பேருரையாற்றினார். முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் முத்தமிழறிஞர் கலைஞர் 2000 ஆம் ஆண்டு 133 அடி உயர […]