இராமேஸ்வரத்தில் தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தெருமுனை கூட்டம்.!

இராமேஸ்வரத்தில் தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தெருமுனை கூட்டம் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தந்தை பெரியாரின் 51 ஆவது நினைவு நாள் மற்றும் அண்ணல் அம்பேத்கரின் 68 வது நினைவு நாளை முன்னிட்டு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் தோழர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார் . ஆதித்தமிழர் கட்சியின் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் பாஸ்கரன் வரவேற்புரை […]

பெரியாரை கொச்சைப்படுத்தும் சீமானுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் வைகோ அறிக்கை.!

.திராவிடர் இயக்கம் குறித்தும், திராவிட இயக்கத் தலைவர்கள் குறித்தும், அவதூறுகளையும், இழிவுகளையும் தொடர்ந்து அள்ளி வீசி வருகிற நாம்தமிழர் கட்சித் தலைவர் சீமான், எல்லை மீறி, வெறி உணர்ச்சியோடு, மனம் போன போக்கில் தந்தை பெரியார் எனும் மாமனிதரை கொச்சைப்படுத்தி பத்திரிகையாளர்களிடம் பேசி உள்ளார். தந்தை பெரியார் அவர்களைப் பற்றி பேசிய கருத்துகளுக்கு ஆதாரம் என்ன? என்று கேட்டால், சிறிதும் பொறுப்பின்றி கோமாளித்தனமாகவும், ஆணவமாகவும், அநாகரிகமாக மேலும் மேலும் நடந்து கொள்கிறார். இதற்கு எதிரிவினையாக கட்சி வேறுபாடு […]

கல்வியின் தரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி திருச்சியில் தமீமுன் அன்சாரி பேட்டி.!

திருச்சியில் மனிதநேய மக்கள் ஜனநாயக கட்சியின் வேர்கள் இணையும் விழா திருச்சி அரசு மருத்துவமனை எதிரில் உள்ள ஹோட்டலில் நடந்தது நிகழ்ச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவரும், முன்னால் எம்எல்ஏ வுமான தமிமுன் அன்சாரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது  ஈரோடு இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு என்னுடைய முழுமையான ஆதரவை தெரிவித்து களப்பணி ஆற்றுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.திராவிட மாடல் அரசு செய்து வரக்கூடிய மக்கள் நல பணிகளுக்கு கிடைக்கக்கூடிய மற்றொரு அங்கீகாரமாக வெற்றி […]

பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பினை வழங்கிய அமைச்சர் .!

தை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு இலவச பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி வருகிறது மேலும் இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குண்டூர் ஊராட்சியில் பர்மா காலனி பகுதியில் அமைந்துள்ள நியாய விலை கடையில் 953 குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச பொங்கல் பரிசு தொகுப்பினை பொதுமக்களுக்கு […]

தஞ்சாவூரில் துப்புரவு பணியாளர்களுக்கு சீர்வரிசையுடன் பொங்கல் பரிசு.!

  தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை சார்பில் தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் சீர்வரிசை கரும்பு , புத்தாடை , பழங்கள் உள்ளிட்ட பொருட்களுடன் 500 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது  தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக எடுத்து சென்று வழங்கினார்கள் .  தஞ்சை மாநகராட்சியில் நிரந்தர துப்புரவு பணியாளர்கள் 263 பேர் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் 347 பேர் என மொத்தம் 610 பேர் தினமும் தஞ்சை மாநகர் முழுவதும் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . […]

தஞ்சாவூரில் நரிக்குறவர் குடும்பங்கள் சமத்துவ பொங்கல் விழா.!

விழிம்பு நிலை நரிக்குறவர் குடும்பங்கள் சமத்துவ பொங்கல் கொண்டாடி மகிழ தஞ்சையை அடுத்துள்ள பூதலூர் நரிக்குறவர் காலனியில் கோலப்போட்டியுடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை. தஞ்சை மாவட்டம் பூதலூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் குடும்பத்தினருடன் வசித்து வரும் நிலையில் மற்றவர்களை களை போல் விழிம்பு நிலை நரிக்குறவர் இன மக்களும் பொங்கல் கொண்டாட தஞ்சை ஜோதி அறக்கட்டளை ஏற்பாடில் கோலப்போட்டி நடைபெற்றது 30 பேர் கோலப்போட்டியில் பங்கேற்று வண்ணக்கோலமிட்டு அசத்தினர். […]

மதுரை மாநகராட்சி அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.471.89 கோடி மதிப்பீட்டில் புதிய பாதாள சாக்கடை திட்டப்  பணி அடிக்கல் நாட்டு விழா.!

 மதுரை மாநகராட்சி உத்தங்குடியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம், மதுரை வடக்கு, மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதிகளில் ரூ.471.89 கோடி மதிப்பீட்டில் புதிய பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்கு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்கள்.  இந்நிகழ்வில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தலைமையேற்றனர். மேயர் இந்திராணி பொன்வசந்த் நகராட்சி […]

பாப்பாகுடி கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா.!

ராமநாதபுரம் மாவட்டம் பாப்பாகுடி கிராமத்தில் பாவை பவுண்டேசன் சார்பாக சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில் தமிழர்களின் கலாச்சார போட்டிகள் மற்றும் நடனங்கள் நடைபெற்றன. போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பெண்கள் சேவை மையம் ஒருங்கிணைந்த நிர்வாகி மோகனப்பிரியா கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். விழாவில் மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை பாவை பவுண்டேசன் மண்டல ஒருங்கிணைப்பாளர் கோபுதாஸ் ஏற்பாடு செய்திருந்தார்.

இதயா மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா.!

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையத்தில் இதயா மகளிர் கலை கல்லூரியில் சமத்துவ பொங்கல் திருவிழா கல்லூரி செயலாளர் அருட்சகோதரி சம்பூர்ணமேரி தலைமையில் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் லூர்துமேரி , அருட்சகோதரி மேரிசந்தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக செங்கம் வழக்கறிஞர் சென்னம்மாள் பங்கேற்று தமிழ் பாரம்பரிய குறித்தும் சட்டங்கள் பற்றியும் மாணவிகளிடம் சிறப்புரையாற்றினார்

தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் மற்றும் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் .!

 மதுரை உத்தங்குடி பகுதியில் உள்ள ரோஜாவனம் முதியோர் இல்லத்தில், தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் மற்றும் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளையின் தலைவர் ஸ்டார் குரு அவர்கள் தலைமையிலும், சமூக ஆர்வலரும், வழக்கறிஞர் கரும்மான முத்துக்குமார் அவர்கள் முன்னிலையிலும் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது, இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மதுரை காவல்துறை குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் ஐஸ்டின்பிரபாகரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார், மேலும் இந்நிகழ்ச்சியில் ரோஜாவனம் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு ஸ்டார் குரு அவர்களால் நலத்திட்ட […]

தஞ்சாவூரில் சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் மாபெரும் பேரணி .!

தஞ்சாவூரில், சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் மாபெரும் பேரணி .புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டத்தின் சார்பில் மாபெரும் பேரணி தஞ்சை சிவகங்கை பூங்காவில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக தஞ்சை பனகல் பில்டிங் சென்றடைந்தது. அங்கு நடைபெற்ற கூட்டத்தில், திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 309 ன் படி புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய […]

சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் பொங்கல் விழா கொண்டாட்டம்.!

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம் ,செங்கிப்பட்டி கிராமத்தில் சில்ட்ரன் சாரிட்டபிள் ட்ரஸ்டின் சார்பாக சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மூலம் நடத்தப்படும் இலவச கற்கை மையத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.    பொங்கல் விழாவில் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் பொங்கல் மற்றும் கரும்பு வழங்கப்பட்டது.    பொங்கல் கொண்டாட்டத்தை சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இன் சார்பாக மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அந்தோணி ராஜ் ஏற்பாடு செய்திருந்தார்.

“போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” மொபைல் செயலி துவக்கம்..

தமிழ்நாடு அரசால் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற புதிய அலைபேசி செயலி (Mobile App) தொடங்கப்பட்டு உள்ளது. இச்செயலியை தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் துவங்கி வைத்து அதன் இலட்சினையை (Logo) அறிமுகப்படுத்தினார். இது பற்றிய தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, தமிழ்நாடு அரசு போதைப் பொருட்கள் புழக்கத்தினை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. 10 ஆகஸ்ட் 2022 அன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாநாடு […]

மூளைச்சாவில் உயிரிழந்து உடல் உறுப்புக்களை தானம் வழங்கிய வாலிபரின் உடலுக்கு அரசு மரியாதை

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட நரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தவசிபாண்டி மகன் தங்கப்பாண்டி வயது 27 இவர் 2 நாட்களுக்கு முன்பாக நண்பர்களுடன் காரில் திருச்சி பகுதியிலுள்ள கோவிலுக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பும் வழியில் கார் கதவு திறந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயம்பட்டு தங்கப்பாண்டி சம்பவ இடத்திலே இறந்தார் இவர் உடல் உறுப்பு தானம் செய்ததால் மதியம் கிராமத்தில் நல்லடக்கம் செய்யும் பொழுது உசிலம்பட்டி கோட்டாட்சியர் சண்முக வடிவேல் தாசில்தார் பாலகிருஷ்ணன் […]

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா.!

இராமநாதபுத்தில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தில் தமிழர் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு இராமநாதபுரம் மாவட்ட மீன்வளத் துறை உதவி இயக்குனர்கள், கோபிநாத், ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகுத்தனர். அலுவலகத்தின் முன்பகுதியில் தமிழர் திருநாளாம் தைபெங்கல் திருநாளை முன்னிட்டு செங்கரும்புகள் கட்டி வைத்து சமத்துவ பொங்கலிட்டு பால் பொங்கியது போல் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும் என கூறி ஒருவருக்கு ஒருவர் தங்களின் […]

ரயில்வே துறையை கண்டித்து முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்..

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ரவணசமுத்திரம் பகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ரயில்வே துறையை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட அமைப்பாளர் கட்டி அப்துல் காதர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ரவண சமுத்திரம் மஸ்ஜிர் ரஹீம் பள்ளிவாசல் தலைவர் செய்யது நாகூர் ஹாஜி தலைமை தாங்கினார். ரவணசமுத்திரம் பிரைமரி தலைவர் முகமது இக்பால், செயலாளர் காசியார், பொருளாளர் பீர் முகம்மது, துணைச் செயலாளர் […]

கடையநல்லூர் காவலர்களுக்கு விருது வழங்கி பாராட்டு..

கடையநல்லூரில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்கள் விருதுகள் வழங்கி பாராட்டப்பட்டனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலையத்தில் புளியங்குடி டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் பொது நல சேவை அமைப்பு சார்பில் கடையநல்லூர் காவல் நிலையத்தில் 2024 ஆம் ஆண்டு சிறப்பான முறையில் பணியாற்றிய சிறந்த காவலர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காவல் ஆய்வாளர் ஆடிவேல் தலைமை தாங்கினார். அப்துல் கலாம் பொது நல அமைப்பின் தலைவர் சின்னராஜ், செயலாளர் பாக்யராஜ், பொருளாளர் காந்தி, ஆலோசகர் […]

போதை ஒழிப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்.!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் ஸ்மைல் பவுண்டேஷன் இணைந்து போதை ஒழிப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார் போதை பழக்கத்தில் தாக்கங்கள் குறித்து சத்திரப்பட்டி சுகாதார ஆய்வாளர் ஹரிஹரசுதன் விளக்க உரை ஆற்றினார் மாவட்ட நீதிபதி சேர்மன் திலகம் குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் போதை […]

கீழக்கரையில் தொழில்நுட்ப திறன் மேம்பாடு பயிற்சி முகாம்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில், தொழில் துறை தேவைகளுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறன் மேம்பாடு’ என்ற தலைப்பில் தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் (TNSCST) சார்பாக மூன்று நாட்கள் நடைபெற்ற பயிற்சி முகம் நடைபெற்றது. கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் கணேஷ் குமார் ஆகியோர் வரவேற்புரை வழங்கினார். இதில் இராமநாதபுரம். சிவகங்கை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இறுதியாண்டு பயிலும் பாலிடெக்னிக் மாணவர்கள் பங்கேற்றார்கள். . விழாவில் […]

கள்ளக்குறிச்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு. ! மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு.!!

கள்ளக்குறிச்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு. ! மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு.!! *தமிழ்நாடு முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு சென்னையில் வழங்கி தொடங்கி வைத்ததை தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் பொங்கல் பரிசு தொகுப்பை மாவட்ட ஆட்சியர்  பிரசாந்த் குடும்ப அட்டைக்காரர்களுக்கு வழங்கினார்  கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் உடன் இருந்தார் கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் பாபு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!