தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சுரண்டை பகுதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு.. தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு வாகன ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சுரண்டை பகுதியில் நடந்தது. நிகழ்ச்சியில் தென்காசி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் நிலை 1 கனகவல்லி தலைமை வகித்து டிராக்டர் மற்றும் பின்பகுதியில் எச்சரிக்கை விளக்கு பொறுத்தாத வாகனங்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டி இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைகவசம் அணிதல் […]
Category: மாநில செய்திகள்
நிலக்கோட்டையில் தேமுதிகவின் உறுப்பினர்களாக ஆர்வமாக தங்களை இணைத்துக் கொள்ளும் இளைஞர்கள்.
நிலக்கோட்டையில் தேமுதிகவின் உறுப்பினர்களாக ஆர்வமாக தங்களை இணைத்துக் கொள்ளும் இளைஞர்கள். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தெற்கு ஒன்றியத்தின் செயலாளர் எம்.வெள்ளைச்சாமி, தான் சார்ந்திருக்கும் கட்சிப் பணிகளில் அதிகளவில் ஈடுபாடு கொண்டு செயலாற்றி வருபவர். கேப்டனின் மறைவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து சிறப்பாக பணியாற்றி வருகிறார். மேலும் கட்சித் தலைமையின் வேண்டுகோளுக்கிணங்க மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு நிலக்கோட்டை பகுதியில் சிலை வைப்பதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செயலாற்றி வருகிறார். இந்நிலையில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ். ஜவகர் அறிவுறுத்தலின் […]
சங்கரன் கோவிலுக்கு ஆலங்குளம் சுரண்டை வழியாக புதிய ரயில் பாதை; மீண்டும் வலுப்பெறும் மக்கள் கோரிக்கை..
திருநெல்வேலியில் இருந்து ஆலங்குளம் சுரண்டை வழியாக சங்கரன் கோவிலுக்கு புதிய ரயில் பாதை; மீண்டும் வலுக்கும் மக்கள் கோரிக்கை.. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவிருப்பதை முன்னிட்டு மீண்டும் திருநெல்வேலியில் இருந்து சங்கரன் கோவிலை இணைக்கும் வகையில் ஆலங்குளம், சுரண்டை, சேர்ந்தமரம் வழியாக சங்கரன்கோவிலுக்கு புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழும்ப துவங்கியுள்ளது. திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவிலை இணைக்கும் வகையில் ஆலங்குளம், சுரண்டை வழியாக சங்கரன்கோவிலுக்கு புதிய ரயில் பாதை அமைத்திட வேண்டும் […]
புல்டோசர் அராஜகத்தை நிறுத்துங்கள்..! – தேசிய துணைத் தலைவர், எஸ்.டி.பி.ஐ.
புல்டோசர் அராஜகத்தை நிறுத்துங்கள்..! – தேசிய துணைத் தலைவர், எஸ்.டி.பி.ஐ. உத்தரகாண்டில் உள்ள ஹல்த்வானியில் உள்ள ஒரு மதரஸாவையும், அதை ஒட்டியுள்ள மஸ்ஜிதையும் புல்டோசர் கொண்டு இடித்ததை கண்டித்துள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் முகமது ஷஃபி, தங்கள் எஜமானர்களை மகிழ்விக்கும் அதீத உற்சாகமான அதிகாரத்துவ செயல்பாட்டின் விளைவே இதுவாகும் என கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது அறிக்கையில், “சமீபகாலமாக, பாசிஸ்டுகளால் தேசவிரோதி என்று முத்திரை குத்தப்பட்ட சமூகத்தின் சொத்துக்களை, சட்டவிரோதமாக புல்டோசர் செய்வது […]
எஸ்.ஆர்.எம் நர்சிங் கல்லூரியில் 8வது தேசிய நர்சிங் மாநாடு!-சுகாதார விநியோகத்தில் முன்னணியிலும், கருணை மற்றும் நிபுணத்துவம் வழங்குவதில் சிறந்தவர்கள் செவிலியர்கள் – பேராசிரியர் டி.சாமுவேல் ரவிக்குமார் பெருமிதம்.!
எஸ்.ஆர்.எம் நர்சிங் கல்லூரியில் 8வது தேசிய நர்சிங் மாநாடு!-சுகாதார விநியோகத்தில் முன்னணியிலும், கருணை மற்றும் நிபுணத்துவம் வழங்குவதில் சிறந்தவர்கள் செவிலியர்கள் – பேராசிரியர் டி.சாமுவேல் ரவிக்குமார் பெருமிதம்.! செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் நர்சிங் கல்லூரியில் 8வது தேசிய நர்சிங் மாநாடு நடைபெற்றது. இதில் எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் இணை துணை வேந்தர் டாக்டர் லெப்டினெண்ட் கர்னல் ஏ.ரவிக்குமார் இந்த மாநாட்டினை குத்துவிளக்கு ஏற்றிவைத்து துவக்கி வைத்தார். எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை […]
செங்கல்பட்டில் சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார்..
செங்கல்பட்டில் சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.. செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையின் சார்பாக சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு பிரச்சார பேரணியானது செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கி ராட்டினம் கிணறு வரை நடைபெற்றது. இப்பேரணியை செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத், கொடி அசைத்து துவக்கி வைத்தார். மேலும் செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், செங்கல்பட்டு உட்கோட்டை காவல் துணை […]
நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் 40 க்கும் மேற்பட்ட மின்சார இரயில்கள் ரத்து!- தெற்கு ரயில்வே அறிவிப்பு..
ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் 44 மின்சார ரெயில்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது.சென்னை எழும்பூர்- விழுப்புரம் ரெயில்வே வழித்தடத்தில் கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு மற்றும் என்ஜினீயரிங் பணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி சென்னை கடற்கரை- தாம்பரம், கடற்கரை- செங்கல்பட்டு, தாம்பரம்- கடற்கரை, செங்கல்பட்டு- கடற்கரை, காஞ்சிபுரம்- கடற்கரை, திருமால்பூர்- கடற்கரை இடையே இயக்கப்படும் 44 மின்சார […]
கோவை மாவட்டம் முழுவதும் 12 இடங்களில், அதிகாலை முதல் NIAஅதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை காா் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையின் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் ரகுமான் வீடு உள்பட 12 இடங்களில் இன்று அதிகாலை முதல் தேசிய முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரா் கோயில் அருகே கடந்த 2022 அக்டோபா் 23-ஆம் தேதி காரில் இருந்த குண்டு வெடித்தது. இதில், அந்த காரை ஓட்டி வந்த ஜமேஷா முபீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த வழக்கை என்ஐஏ (தேசிய புலனாய்வு முகாமை) அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், […]
முதலியார்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் ஓவியப்போட்டி; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கல்..
முதலியார்பட்டி அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் ஓவியப்போட்டி; வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கல்.. தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள முதலியார்பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்திய எழுத்தறிவு திட்டம் மூலம் அறிவியல் கண்காட்சி மற்றும் ஓவியப்போட்டி நடைபெற்றது. அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை முத்துலட்சுமி நாச்சியார், தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தென்பொதிகை வியாபாரிகள் நலச் சங்க தலைவர் கட்டி அப்துல் காதர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்திப்பேசினார். […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -2 கப்ளிசேட் அப்பாஸிய பேரரசு-6 (கி.பி 750- 1258) மன்னர் ஹாரூன் அர்ரஷீத் அவர்கள் அழுகுரல் வந்த அந்த வீட்டின் கதவை தட்டிவிட்டு அனுமதி கிடைத்தவுடன் உள்ளே நுழைந்தார்கள். வீட்டினில் இருந்த அந்த மூதாட்டி உள்ளே வந்து நிற்பவரை யாரெனத் தெரியாமல்,தனது கவலையை எடுத்துரைத்தார். தனது பாரம்பரியமான வீட்டின் பெரிய பகுதியை தனது ஒப்புதல் இல்லாமல் அருகிலிருக்கும் பள்ளிவாசலோடு கவர்னர் இணைத்து விட்டார். அதை கேட்டால் மிரட்டுகிறார்கள் என்பதை நினைத்து அழுகிறேன் என்று […]
கீழப்பாவூரில் ஆதார் சிறப்பு திருத்த முகாம்; பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்..
கீழப்பாவூரில் ஆதார் சிறப்பு திருத்த முகாம்; பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.. தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பகுதியில் ஆதார் சிறப்பு திருத்த முகாம் நடந்தது. குருசாமி கோவில் திருமண மஹாலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத் தலைவர் லட்சுமி சேகர் தலைமை தாங்கினார். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க முன்னாள் பொருளாளர் பரமசிவம், பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க உறுப்பினர் ஜேக்கப் சுமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க […]
தென்காசியில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்; இந்தியா கூட்டணி கட்சிகள் பங்கேற்பு..
தென்காசியில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்; இந்தியா கூட்டணி கட்சிகள் பங்கேற்பு.. தென்காசியில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். தென்காசியில் மாநில அரசின் உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தியும், ஆளுநரின் அரசியல் அத்துமீறல்கள் மற்றும் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசின் பாரபட்சத்தை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா கூட்டணியில் அங்கம் […]
தென்காசி தலைமை மருத்துவமனையில் கொத்தடிமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு..
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தலைமையில் ஏற்கப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாய பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளது. கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9ஆம் நாள் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு […]
தென்காசி மாவட்டத்தில் கொத்தடிமை ஒழிப்பு தின உறுதி மொழி; கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்..
தென்காசி மாவட்டத்தில் கொத்தடிமை ஒழிப்பு தின உறுதி மொழி; கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்.. தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதி மொழியினை 09.02.2024 அன்று அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். உறுதிமொழியின் விவரம் பின்வருமாறு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் […]
வரும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க 96.88 கோடி பேர் தகுதி!- இந்திய தேர்தல் ஆணையம்..
வரும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க 96.88 கோடி பேர் தகுதி!- இந்திய தேர்தல் ஆணையம்.. மக்களவைத் தோ்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முழுவீச்சில் தயாராகி வருகிறது. வரும் தோ்தலில் நாடு முழுவதும் 12 லட்சத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. 1.5 கோடி தோ்தல் பணியாளா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 91.20 கோடி போ் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனா். இந்த எண்ணிக்கை 6% […]
திருமங்கலம் – ராஜபாளையம் நான்கு வழி சாலை சந்திப்பில், மலைபோல் தேங்கியுள்ள குப்பை கூளங்கள்! அடிக்கடி பற்றி எரிவதால் பொதுமக்கள் கடும் அவதி..
திருமங்கலம் – ராஜபாளையம் நான்கு வழி சாலை சந்திப்பில், மலைபோல் தேங்கியுள்ள குப்பை கூளங்கள்! அடிக்கடி பற்றி எரிவதால் பொதுமக்கள் கடும் அவதி.. மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் உள்ள குப்பைகளை , நகராட்சி வாகனங்களில் சேகரித்து திருமங்கலம் – ராஜபாளையம் நான்கு வழிச்சாலையில் ஆலம்பட்டி பகுதியில், நகராட்சிக்கு சொந்தமான கிடங்கில் டன் கணக்கில் குப்பைகளை ஒட்டுமொத்தமாக மலை போல் தேக்கமடைய செய்வதுடன், அக்குப்பைகளை தரம் பிரிக்கும் இயந்திரங்கள் பழுது ஏற்பட்டுள்ளதாகவும் , […]
சோழவந்தான் அருகே வீட்டிற்குள் புகுந்த மலைப்பாம்பு! தீயணைப்புத் துறையினர் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்..
சோழவந்தான் அருகே வீட்டிற்குள் புகுந்த மலைப்பாம்பு! தீயணைப்புத் துறையினர் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.. மதுரை மாவட்டம்சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கணேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த தங்கப்பாண்டி இவரது வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார் நேற்று அதிகாலை நாலு மணி அளவில் வீட்டுக்குள் பாம்பு புகுந்து உள்ளது இதை பார்த்த தங்கபாண்டி மற்றும் அருகில் இருந்தவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டனர் இதனால் அக்கம் பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்களும் எழுந்து வந்து வேடிக்கை பார்த்தனர் இதனைத் […]
அய்யப்பநாயக்கன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி அருகில் நடைபெறும் சமூக விரோத செயல்களால் மாணவர்கள் அச்சம்..
அய்யப்பநாயக்கன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி அருகில் நடைபெறும் சமூக விரோத செயல்களால் மாணவர்கள் அச்சம்.. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ஐயப்பன் நாயக்கன்பட்டியில் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளியில் ஐயப்பன் நாயக்கன்பட்டி குருவித்துறை கோவில் குருவித்துறை மன்னாடிமங்கலம் கண்ணுடையாள்புரம் தாமோதரன்பட்டி ஆகிய கிராமங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் இந்த பள்ளிக்கு அருகில் மிகவும் பழுதடைந்த நிலையில் மன்னாடிமங்கலம் ஊராட்சிக்கு சொந்தமான குடிநீர் மேல்நிலைத் […]
கொலை முயற்ச்சி உள்ளிட்ட 5 பிரிவுகளில் 4 வருடங்களாக சிவகங்கை போலீஸாரால் தேடப்பட்டவர் மதுரை விமானநிலையத்தில் கைது..
கொலை முயற்ச்சி உள்ளிட்ட 5 பிரிவுகளில் 4 வருடங்களாக சிவகங்கை போலீஸாரால் தேடப்பட்டவர் மதுரை விமானநிலையத்தில் கைது.. சிவகங்கை மாவட்டம் நெடுமரம் கிராமத்தைச் சேர்ந்த தெற்கு வளைவு தெரு சின்ன கருப்பன் மகன் கலையரசன் (வயது 50, ) இவர் மீது கடந்த 2020ஆம் ஆண்டு சிவாநாச்சியாபுரம் போலீஸ் காவல் நிலையத்தில் கொலை முயற்ச்சி உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் தலைமறைவானார். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனைத்து […]
என்னம்மா இப்படி பன்றீங்களேமா: நீயா நானா மோதி பார்ப்போம் வா! கட்டுப்படுத்துமா காவல்துறை..
மதுரை- நத்தம் மேம்பாலத்தில் வேகத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்களை பின்தொடர்ந்து சென்று முந்த முயன்ற இளைஞர்கள் விபத்துக்குள்ளான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல். மதுரை- நத்தம் பறக்கும் மேம்பாலம் திறக்கப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் மேம்பாலத்தில் அதிகமாக பைக் ரேஸர்கள் அதிவேகத்தில் பைக்குகளை இயக்குவதால் மெதுவாக செல்லக்கூடிய பைக் வாகன ஓட்டிகளுக்கு கடும் அச்சுறுத்தறலாக இருந்து வருகிறது. இதனால் நத்தம் மேம்பாலத்தில் வாகனங்கள் செல்வதற்கு அச்சமடைந்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பாக நத்தம் மேம்பாலத்தில் […]
You must be logged in to post a comment.