திண்டுக்கல்லில் உள்ள தபால் நிலையங்களில் நாளை முதல் (12/02/2024) தங்க பத்திரம் விற்பனை தொடக்கம்..

திண்டுக்கல்லில் உள்ள தபால் நிலையங்களில் நாளை முதல் (12/02/2024) தங்க பத்திரம் விற்பனை தொடக்கம்.. திண்டுக்கல் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை நாளை தொடங்குகிறது. இந்திய அஞ்சல் துறை, ரிசர்வ் வங்கியுடன் இணைந்து குறிப்பிட்ட தேதிகளில் தங்க பத்திரம் விற்பனை செய்து வருகிறது. இந்த மாதத்திற்கான தங்க பத்திரம் விற்பனை நாளை துவங்கி வரும் 16ம் தேதி வரை நடக்கிறது. ஒரு கிராம் தங்க பத்திரத்தின் விலை ரூ.6263. இதன்மூலம் […]

சென்னையில் கல்லூரிகளுக்கிடையிலான நட்சத்திரக் கலைவிழா நடிகர்கள் பங்கேற்பு ..

சென்னையில் கல்லூரிகளுக்கிடையிலான நட்சத்திரக் கலைவிழா நடிகர்கள் பங்கேற்பு .. சென்னை, சைதாப்பேட்டை, அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரியில் ASTRAL2K24எனும் தலைப்பில் கல்லூரிகளுக்கிடையிலானகலைவிழா இருநாட்கள் நடைபெற்றன. இவ்விழாவினை கல்விக் குழுமத்தின் நிறுவனர் டாக்டர் ச. தேவராஜ், துணைநிறுவனர் டாக்டர் டெல்பின் தேவராஜ், செயலர் முனைவர்தே. தேவ் ஆனந்த் இணைச் செயலர் டாக்டர் தேஸ்ரீதேவி தேவ் ஆனந்த், கல்லூரி முதல்வர் முனைவர் த.விமலா ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். சிறப்பு விருந்தினராக பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர் தொலைக்காட்சி […]

உழைக்கும் மகளிர் சங்கம் மற்றும் இந்திய மகளிர் கூட்டுறவு இணைப்பு மையம் பங்கு பெறும் மகளிருக்கான நியூயார்க் ஐநா தலைமையகத்திலிருந்து காணொளி காட்சி மூலம சர்வதேச மகளிர் நலன் ஆர்வலர்களின் 62வது அமர்வு கூட்டம்..

உழைக்கும் மகளிர் சங்கம் மற்றும் இந்திய மகளிர் கூட்டுறவு இணைப்பு மையம் பங்கு பெறும் மகளிருக்கான நியூயார்க் ஐநா தலைமையகத்திலிருந்து காணொளி காட்சி மூலம சர்வதேச மகளிர் நலன் ஆர்வலர்களின் 62வது அமர்வு கூட்டம்.. இந்த அமர்வில் சென்னையிலிருந்து உழைக்கும் மகளிர் சங்கத் தலைவர் நந்தினி ஆசாத் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவரது உரையில் .உலக மக்கள் தொகையில் சரி பாதியாக இருக்கும் மகளிருக்கு அதற்கான உரிமைகள் கிடைப்பதில்லை. பொருளாதரததிலும் , விவசாய தொழில் செய்வதிலும் […]

கியான்வாபி பள்ளிவாசலில் பூஜை செய்ய அனுமதித்ததை கண்டித்து; சென்னை உயர்நீதிமன்றம் முற்றுகை போராட்டம்! 500 க்கும் மேற்பட்ட மஜகவினர் கைது..

கியான்வாபி பள்ளிவாசலில் பூஜை செய்ய அனுமதித்ததை கண்டித்து; சென்னை உயர்நீதிமன்றம் முற்றுகை போராட்டம்! 500 க்கும் மேற்பட்ட மஜகவினர் கைது.. பலநூறு ஆண்டுகளாக இஸ்லாமிய மக்கள் தொழுகை நடத்தி வந்த உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி பள்ளிவாசலை பூஜைக்கு திறந்து விட்டு அநியாயத் தீர்ப்பு வழங்கிய வாரணாசி நீதிமன்ற தீர்ப்பை கண்டித்தும், வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991-ஐ பாதுகாக்க வலியுறுத்தியும், இன்று 10.02.2024 சென்னை உயர்நீதிமன்றம் முற்றுகை போராட்டம் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நடைபெற்றது. முற்றுகை […]

சிறை கைதிகள் படிக்க இலவசமாக புத்தகங்கள் வழங்கிய செங்கோட்டை நூலக புரவலர்; வாசகர் வட்டத்தினர் பாராட்டு..

சிறை கைதிகள் படிப்பதற்கு இலவசமாக புத்தகங்கள் வழங்கிய செங்கோட்டை நூலக புரவலர்; வாசகர் வட்டத்தினர் பாராட்டு.. செங்கோட்டை நூலக புரவலர் அகஸ்டியன் சிறை கைதிகள் படிப்பதற்கு 154 புத்தகங்களை இலவசமாக வழங்கினார். நெல்லை புத்தகக் கண்காட்சியில் சிறை கைதிகள் படிப்பதற்கு இலவசமாக புத்தகங்கள் வழங்கும் பெட்டியில், செங்கோட்டை நூலக புரவலர் மற்றும் சமூக நலத்துறை கண்காணிப்பாளருமான ஸ்ரீஅகஸ்டியன் தனது மகளுடன் சென்று ரூ. 14,500 மதிப்பிலான 154 புத்தகங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் வழங்கினார். சிறை […]

தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் இழுபறி! நீயா நானா என போட்டி போடும் கட்சிகள்.போராட்ட களத்தில் பாகிஸ்தான்..

பாகிஸ்தானில் கடந்த வியாழக்கிழமை பொதுத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த உடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதல் சுற்று முடிவில் இம்ரான் கான் கட்சி அதிக இடங்களில் முன்னிலைப் பெற்றதாக கூறப்படுகிறது.அதேவேளையில் முடிவுகளை தேர்தல் ஆணையம் அறிவிக்காமல் காலம் தாழ்த்தியது. இதனால் நவாஸ் ஷெரீப்புக்கு ஆதரவாக தேர்தல் முடிவுகள் மாற்றப்படுவதாக இம்ரான் கான் கட்சியினர் குற்றம்சாட்டினர்.அதன்பின் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு முதற்கட்ட தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்பின் மெல்ல மெல்ல முடிவுகள் அறிவிக்கப்பட்டு […]

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -2 கப்ளிசேட் அப்பாஸிய பேரரசு-7 (கி.பி 750-1258) அன்றைய அரசர்கள் பல காரணங்களால் பல திருமணங்களை செய்தனர். பாதுஷா ஹாரூன் அர்ரஷீத் அவர்கள் முதல் மனைவியாக‌ ஒரு அரேபிய பெண்ணை திருமணம் செய்து இருந்தார். இரண்டாவது மனைவியாக ஒரு பாரசீக பெண்ணை திருமணம் செய்து இருந்தார். இதுபோன்ற பல திருமணங்களுக்கு பலமான அரசியல் காரணங்களும் இருந்தன. பேரரசர் தனது இறுதி காலத்தில் தனது மூன்று மகன்களையும் வாரிசுகளாக நியமித்துவிட்டு மரணமடைந்தார். அதில் முதல் […]

சுரண்டை காமராஜர் கலை கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட முகாம்; சீருடைகள் வழங்கல்

சுரண்டை காமராஜர் அரசு கலை கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட முகாமில் மாணவ மாணவியர்களுக்கு சீருடைகள் வழங்கல்.. சுரண்டை காமராஜர் அரசு கலை கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட முகாமில் மாணவ மாணவியர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது. தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அணி எண் 201 சார்பில் சுரண்டை ஆலடிப்பட்டி சமுதாய நலக்கூடத்தில் முகாம் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் சிறு சேமிப்பு குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் […]

தென்காசி தலைமை மருத்துவ மனையில் குடற்புழு நீக்கத்திற்கு மாத்திரைகள் வழங்கும் முகாம்..

தென்காசியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் சனிக்கிழமை நடந்தது. இம்முகாமினை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தொடங்கி வைத்து குடல் புழுக்களின் தாக்கம் பற்றியும் அதன் பின்விளைவு பற்றியும் எடுத்துக் கூறி குடற்புழு நீக்க மாத்திரைகளை எடுத்துக் கொள்வதின் அவசியம் குறித்தும் பொதுமக்கள் […]

கூட்டுறவு பண்டக சாலையின் புதிய பல்பொருள் அங்காடி; தென்காசி கலெக்டர் திறந்து வைத்தார்..

தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூராட்சி பகுதியில் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் புதிய பல்பொருள் அங்காடியை (சூப்பர் மார்க்கெட்) மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் திறந்து வைத்தார். தென்காசி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் புதிய பல்பொருள் அங்காடியை (சூப்பர் மார்க்கெட்) மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், திறந்து வைத்து பார்வையிட்டு தென்காசி மாவட்ட கூட்டுறவு நிறுவனங்கள் தயாரிக்கும் தென்றல் தேங்காய் எண்ணெய், வசந்தம் பினாயில் ஆகியவற்றின் […]

விருவீடு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் முதல் நிலை காவலருக்கு பொன்னாடை போர்த்தி பண முடிப்பு கொடுத்து கவுரவம்..

விருவீடு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் முதல் நிலை காவலருக்கு பொன்னாடை போர்த்தி பண முடிப்பு கொடுத்து கவுரவம்.. விருவீடு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வரும் ரபிக்ராஜா தான் பணியாற்றிய அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பாக பணியாற்றி மேலதிகாரிகள் மத்தியில் நன்மதிப்பு பெற்றவர். இதற்கு முன்னர் பணியாற்றிய பட்டிவீரன் பட்டி காவல்நிலையத்தில் நீதிமன்ற பணிகளை மிகவும் சிறப்பாக திறம்படச் செய்து வழக்குகளை உரிய முறையில் உரிய நேரத்தில் கையாண்டதற்காக நிலக்கோட்டை […]

சோழவந்தான் எம்விஎம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் அறிவியல் கண்காட்சி ஏராளமான பெற்றோர்கள் பார்வையிட்டனர்..

சோழவந்தான் எம்விஎம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் அறிவியல் கண்காட்சி ஏராளமான பெற்றோர்கள் பார்வையிட்டனர்.. சோழவந்தான் எம் வி எம் கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது இதில் பெற்றோர்கள் உட்பட பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகள் இக்கண்காட்சியை கண்டு களித்தனர் இந்த கண்காட்சி நிகழ்ச்சியை எம் வி எம் குழுமத் தலைவர் மணி முத்தையா தலைமை தாங்கி துவக்கி வைத்தார் நிர்வாகி கவுன்சிலர் வள்ளிமயில் முன்னிலை வகித்தார் பள்ளியின் தாளாளர் டாக்டர் […]

கொரோனா பேரிடரின்போது நிறுத்தப்பட்ட  இரயில்களை மீண்டும் இயக்க ரயில்வே அமைச்சரிடம் ராமநாதபுரம் எம்பி மனு..

கொரோனா பேரிடரின்போது நிறுத்தப்பட்ட  இரயில்களை மீண்டும் இயக்க ரயில்வே அமைச்சரிடம் ராமநாதபுரம் எம்பி மனு.. இராமநாதபுரம், பிப்.10- ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் இராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் ரயில் நிலையத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து ரயில்கள் நின்று செல்ல வேண்டும். இராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம், மற்றும் சூடியூர், சத்திரக்குடி, வாலாந்தரவை, மண்டபம் முகாம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும். இராமேஸ்வரம் – […]

அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்..

அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்.. திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட அவனியாபுரம் பகுதியில் இன்று புதிதாக கட்டி முடிக்கப்பட்ட 64 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் திறந்து வைத்து பயனாளிகளுக்கு குடியிருப்பு ஆணைகள் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மதுரை […]

தென்காசி நகராட்சி பகுதிகளில் வெறி நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும்; காங்கிரஸ் கவுன்சிலர் வலியுறுத்தல்..

தென்காசி நகராட்சி பகுதிகளில் வெறி நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்; காங்கிரஸ் கவுன்சிலர் வலியுறுத்தல்.. தென்காசி நகராட்சி பகுதிகளில் தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் வெறிநாய்களை கட்டுப்படுத்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தி 20வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலரும், தென்காசி நகர காங்கிரஸ் துணைத் தலைவருமான M.A. ரஃபீக் நகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தார். தென்காசி நகராட்சி பகுதிகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் வெறி நாய்க்கடியினால் ஏற்படும் பாதிப்பால் பெரியவர்கள், பெண்கள் குழந்தைகள் […]

சோழவந்தானில் இலவச கண் சிகிச்சை முகாம்; ஏராளமானோர் பயனடைந்தனர்..

சோழவந்தானில் இலவச கண் சிகிச்சை முகாம்; ஏராளமானோர் பயனடைந்தனர்.. மதுரை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சங்கரா மருத்துவமனை மற்றும் சோழவந்தான் தேங்காய் கடை எஸ் வி எஸ் டி கௌதம ராஜா இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் சோழவந்தான் ஆர் சி பள்ளி அருகில் நடைபெற்றது. முகாமினை பேரூராட்சி துணைத் தலைவர் லதா கண்ணன் பேரூர் துணைச் செயலாளர் ஸ்டாலின் துவக்கி வைத்தனர் முகாமில் பணி நியமனக்குழு ஈஸ்வரி ஸ்டாலின் பேரூராட்சி […]

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் ஆதியோகி ரத யாத்திரை!-சேலத்தில் ஈஷாவின் மஹாசிவராத்திரி விழா நேரலைக்கு ஏற்பாடு..

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் ஆதியோகி ரத யாத்திரை!-சேலத்தில் ஈஷாவின் மஹாசிவராத்திரி விழா நேரலைக்கு ஏற்பாடு.. மஹாசிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பிப் 11 ஆம் தேதி முதல் பிப்19 ஆம் தேதி வரை வலம் வர உள்ளது. மேலும், கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 8 ஆம் தேதி நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழாவை சேலத்தில் நேரலையாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. […]

திருமங்கலம் அருகே கோயில் உண்டியலில்  ஊழல்! கேள்வி கேட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டல்! பரபரப்பு குற்றச்சாட்டு.. 

திருமங்கலம் அருகே கோயில் உண்டியலில்  ஊழல்! கேள்வி கேட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டல்! பரபரப்பு குற்றச்சாட்டு.. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மேல கோட்டை பாரதிநகர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த செருவலிங்க அய்யனார் கோவில் நிதி பணத்தை ஊழல் செய்ததை, எதிர்த்து கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்த கோயில் நிர்வாகஸ்தர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி,மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம்,இக்கோயிலின் வடக்கம்பட்டி மற்றும் புளியம்பட்டி வகையறாவினரை சார்ந்த கர்ணன் என்பவர் அளித்த புகாரின் […]

முள்ளி பள்ளம் அரசு மேல்நிலை பள்ளியில் ஆண்டு விழா மற்றும் இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது..

முள்ளி பள்ளம் அரசு மேல்நிலை பள்ளியில் ஆண்டு விழா மற்றும் இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம்முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா மற்றும் இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார் துணைத் தலைவர் கேபிள்ராஜா முன்னிலை வகித்தார் ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகா ஞானசேகரன் உதவி தலைமை ஆசிரியர் தீபா தமிழ் ஆசிரியர்கள் சாந்தி உமா உதவி ஆசிரியர் […]

வழிபாட்டு தலங்களை பாதுகாக்க வலியுறுத்திதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்..

வழிபாட்டு தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்.. கியான்வாபி பள்ளிவாசலின் கீழ்த்தளத்தில் பூஜை செய்து கொள்ள சங் பரிவார் சக்திகளுக்கு வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்து வழங்கிய தீர்ப்பு இஸ்லாமியர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமிய தரப்பிடமிருந்து பாபர் மசூதி பறித்தது போன்று காசி, மதுராவில் உள்ள பள்ளிவாசல்களை பறிப்பதற்கான நடவடிக்கைகளை அரசியல், சட்டரீதியாக சங் பரிவார் சக்திகள் முன்னெடுத்து வருகின்றன. இந்திய நாடு சுதந்திரம் பெறும் போது வழிபாட்டுத்தலங்கள் எவ்வாறு […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!