மதுரை-தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 100-வது ஆண்டு நிறைவு விழா .!தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்பு .!!

மதுரையில் நடைபெற்ற மதுரை-தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 100-வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா எந்த நிகழ்ச்சிக்கு அழைத்தாலும் அதை தட்டாமல், கட்டாயமாக கலந்துகொள்ளக்கூடிய வாய்ப்பை நான் பெறுவதுண்டு. ஏனென்றால், விக்கிரமராஜா ஒரு சங்கத்தின் தலைவர் மட்டுமல்ல, வணிகர்களின் நலனுக்காக செயல்படுகின்ற ஒரு தோழர் மட்டுமல்ல; இந்தப் பொறுப்புகளை எல்லாம் கடந்து, நம்முடைய திராவிட மாடல் அரசின் நல்லெண்ணத் தூதுவராக […]

மதுரையில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் விழா .!

தமிழகம் முழுவதும் அதிமுக மறைந்தமுன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் அதிமுகவினர் அவர்திருவுருவ சிலைக்கும் திருவுருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக மதுரை சிந்தாமணி பகுதியில்அதிமுக கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள்எம்ஜிஆர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர் மதுரை சிந்தாமணி 89 ஆவது வார்டுவட்டச் செயலாளர் வழக்கறிஞர் செல்வம் ஏற்பாட்டில் 108 வது மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் திருவுருவப்படத்தை வைத்து […]

மதுரை விக்கிரமங்கலம் கிராமத்தில் ஸ்ரீ அங்காள ஈஸ்வரி, கருப்புசுவாமி, பரிவார தேவதைகள் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் விழா .!

மதுரை, விக்கிரமங்கலத்தில், ஐந்துபேர் ஆண்டித்தேவர் வகையறா நமச்சிவாய பிள்ளைகள் வகையறா நல்ல பிள்ளைத்தேவர் வகையறாகளுக்கு பாத்தியப்பட்ட, ஸ்ரீ அங்காள ஈஸ்வரி, கருப்புசுவாமி, பரிவார தேவதைகள் ஆலய வீரணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விக்கிரமங்கலம் கிராமத்தில் நானூறு ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற, ஐந்துபேர் ஆண்டித்தேவர் வகையறா நமச்சிவாய பிள்ளைகள் வகையறா நல்லபிள்ளைத்தேவர் வகையறாகளுக்கு பாத்தியப்பட்ட, ஸ்ரீ […]

திருச்சி நீதிமன்றத்தில் டிஐஜி வருண் குமார் தொடர்ந்த வழக்கு சீமான் ஆஜராக வேண்டும் நீதிமன்றம் உத்தரவு.!

திருச்சி நீதிமன்றத்தில் டிஐஜி வருண் குமார் தொடர்ந்த வழக்கு சீமான் ஆஜராக வேண்டும் நீதிமன்றம் உத்தரவு.  திருச்சி மாவட்ட எஸ்பி யாக இருந்த வருண்குமார், புதுக்கோட்டை எஸ்பி யாக இருந்த வருண்குமாரின் மனைவியுமான வந்திதா பாண்டே ஆகியோரை சில சமூக வலைதள எக்ஸ் கணக்குகளில் இருந்து ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து வருண்குமார் ஐபிஎஸ் தரப்பு சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் அது தொடர்பாக 15 விளக்கத்தை சீமான் அளித்திருந்தார். ஆனால் […]

அரசு பேருந்துகள் இரவு நேரத்தில் பார்த்திபனூர் பேருந்து நிலையத்துக்குச் செல்லாமல் பயணிகளை பைபாஸில் இறக்குவதால் அவதி.! மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை .!!

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் பேருந்து நிலையத்திற்கு கமுதி அருப்புக்கோட்டை பெருநாழி பசும்பொன் போன்ற ஊர்களுக்கு செல்லும் பிரதான அரசு பேருந்துகள் வந்து செல்கின்றது. அவ்வூர்களுக்கு செல்லக்கூடிய கிராம மக்கள் மற்ற மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாகவும் ராமநாதபுரம் வழியாகவும் பார்த்திபனூர் பேருந்து நிலையத்துக்கு அரசு பேருந்தில் பயணிக்கின்றனர். ஆனால் இரவு நேரங்களில் ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு செல்லக்கூடிய அரசு பேருந்துகள் மற்றும் மதுரையில் இருந்து பரமக்குடி வழியாக ராமநாதபுரம் செல்லக்கூடிய அரசு பேருந்துகள் பார்த்திபனூர் பேருந்து நிலையத்திற்கு […]

பட்டாவில் பெயர் மாற்ற லஞ்சம்; VAO கைது..

தென்காசி மாவட்டத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டு உள்ளார். தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் தாலுகா கலிங்கப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் S.குமாரவேல் (52), த.பெ.சுப்பையா. தனக்கு பூர்வீக பாத்தியமான தனது தந்தையின் பெயரில் உள்ள இராஜ கோபாலப்பேரி கிராம நத்தம் சர்வே எண்.30-ல் உள்ள 1.27 ஏர் பரப்பில் உள்ள வீட்டிற்கு பட்டா பெயர் மாற்றம் செய்வது சம்பந்தமாக 06.01.2025 ஆம் தேதி அன்று குமாரவேல் இராஜகோபாலப் பேரி […]

கடம்பன்குடி கிராமத்தில் சுடுகாட்டிற்கு சாலை வசதி செய்து தரக் கூடிய மாவட்ட ஆட்சியரிடம் மனு .!

ராமநாதபுரம் மாவட்டம் திரு உத்திரகோசமங்கையை அடுத்த  கடம்பன்குடி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருவதாகவும் இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை எனவும் அதுமட்டுமல்லாது தங்களது கிராமத்தில் உயிரிழந்த நபர்களை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல மயான சாலை வசதி இல்லாததால் தனியார் வயல்களுக்குள் தூக்கிச் செல்ல வேண்டிய அவல நிலை இருப்பதாகவும் குறிப்பாக தற்போது விவசாயக் காலம் இறுதி கட்டத்தை எட்டி பயிர்கள் விளைந்து முற்றி அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில் அந்த […]

பயிர்களுக்கு இழப்பீடு வழங்க கோரி கருகிய பயிரோடு மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த விவசாயிகள் .!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு லட்சத்து எழுபத்தி ஐயாயிரம் ஹெக்டேர் அளவிற்கு நெல் விவசாயம் சாகுபடி செய்யப்பட்டு இருந்த நிலையில், பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக 60 முதல் 70 விழுக்காடு விவசாயம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் விவசாயிகள் தரப்பில் தொடர் கோரிக்கைகள் இருந்து வருகின்றன. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலுவான கோரிக்கை இருந்து வரும் நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா சாம்பல் குளத்தை அடுத்த […]

திமுக ஒன்றிய செயலாளர் மீது மோசடி புகார் .! கீழக்குளம் கிராம பொதுமக்கள் ராமநாதபுரம் ஆட்சியரிடம் புகார் மனு .!! 

ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதுகுளத்தூர் தாலுகா கீழகுளம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் திமுக ஒன்றிய செயலாளர் மீது மோசடி புகார் மனு ஒன்றை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளனர். அந்த மனுவில் கீழக்குளம் அருந்ததியர் காலணியில் 50 குடும்பங்கள் வசித்து வருவதாகவும் கடந்த 2012 ஆம் ஆண்டு அருந்ததிய மக்களுக்கு 36 பேருக்கு தலா 1.80 லட்சம் மதிப்புள்ள இலவச காலனி வீடுகள் அரசால் ஒதுக்கப்பட்டதாகவும் இந்த திட்டத்தின் படி […]

ராமநாதபுரத்தில் கேண்டி கஃபே திறப்பு விழா.! ராமநாதபுரம் எம்பி மற்றும் எம்எல்ஏ பங்கேற்பு .!!

ராமநாதபுரம் மாவட்டம் பட்டின காத்தான் பகுதியில் திருச்சி செல்லும் இ சி ஆர் சாலை அருகே கேண்டி கஃபே மற்றும் கேண்டி ஆட்டோ மொபைல் சர்வீஸ் திறப்பு விழா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜஹான் தலைமையில் அமீரக காயிதே மில்லத் பேரவை துணைத்தலைவர் அபுதாஹிர் ஃபைஜி , முகம்மது அபூபக்கர், ஹசன், ஆரிஃப் , அஹமது அப்துல் காதர் , சேக் இஸ்மாயில் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ராமநாதபுரம் […]

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இஸ்லாமியர்களின் தொழுகை கூடத்தை திறந்து வைத்த திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ.!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இஸ்லாமியர்களின் தொழுகை கட்டிடத்தை திறந்து வைத்த திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இஸ்லாமியர்கள் நடத்திய தொழுகையிலும் பங்கேற்று சிறப்பித்தார். இந்த தொழுகை இடமானது சர்வதேச நாடுகளுக்குச் செல்லும் இஸ்லாமியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தெரிவித்தார். திருச்சி செய்தியாளர் H.பஷீர்

திருச்சி மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண சாரணியர் வைர விழா நடக்கும் வளாகத்தை ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ்.!

திருச்சி மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண சாரணியர் வைர விழா நடக்கும் வளாகத்தை ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ்.  தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் / தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்க தலைவருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சிராப்பள்ளி மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி (JAMBOREE) மற்றும் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி விழா (28.01.2025) அன்று முதல் 03.02.2025) வரை நடைபெறுவதை முன்னிட்டு அங்கு […]

சட்டம் ஒழுங்கு நிர்வாகிப்பதில் திமுக அரசு முழு தோல்வி .!எஸ்டிபிஐ கட்சி ராமநாதபுரம் மாவட்ட தலைவர் பகிரங்க குற்றச்சாட்டு .!!

சட்டம் ஒழுங்கு நிர்வாகிப்பதில் திமுக அரசு முழு தோல்வி: எஸ்டிபிஐ கட்சி ராமநாதபுரம் மாவட்ட தலைவர் பகிரங்க குற்றச்சாட்டு தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் சட்ட ஒழுங்கு பிரச்னைகளுக்கு, காவல்துறையின் பணியை செய்ய விடாமல் தடுக்கும் ஆளும் கட்சியின் தலையீடே காரணமாக உள்ளது.  பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இன்றைய தமிழ்நாடு மாறியுள்ளது. சட்ட ஒழுங்கை கட்டுக்குள் வைப்பதிலும், மக்களை பாதுகாப்பதிலும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தோல்வியை சந்தித்துள்ளது. தமிழகத்தில் குறிப்பாக இராமநாதபுரம் மற்றும் பல இடங்களில், பெண்களுக்கு […]

அரசு பஸ் டெப்போ அமைத்திட பொதுமக்கள் கோரிக்கை..

தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் அரசு பஸ் டெப்போ அமைத்திட வேண்டும் என நீண்ட காலமாக பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தென்காசி தொகுதியின் 10 முக்கிய கோரிக்கைகளில் “சுரண்டையில் பஸ் டெப்போ” என்ற கோரிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது. சுரண்டை பகுதியில் பஸ் டெப்போ அமைத்திட ஏதுவாக சுரண்டை அரசு கல்லூரி சாலையில் போதிய அரசு புறம்போக்கு நிலம் உள்ளது எனவும், தேவையான வசதிகளை செய்து தருவதாகவும் தென்காசி எம்எல்ஏ எஸ். பழனி நாடார் […]

சுரண்டையில் இருந்து சிறப்பு பேருந்து..

தென்காசி மாவட்டம் சுரண்டையில் இருந்து சென்னை, கோவை, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு 18.01.2025 அன்று சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சுரண்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள், மாணவ, மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடி விட்டு தாங்கள் வசிக்கும் பகுதிக்கு திரும்பி செல்ல வசதியாக சுரண்டை மகாத்மா காந்தி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, கோவை, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு நவீன (பக்கெட் சீட்) அரசு போக்குவரத்து […]

சிறந்த மருத்துவ சேவைக்கான விருது பெற்ற தென்காசி தலைமை மருத்துவமனை..

தென்காசி தலைமை மருத்துவ மனைக்கு சிறந்த மருத்துவ சேவைக்கான விருது தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்ட செயல்பாடுகள் மற்றும் மருத்துவ சேவைகளில் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனை தமிழகத்தில் முதல் ஐந்து இடங்களில் ஒன்றாக திகழ்கிறது. கடந்த ஐந்து வருடங்களாக மருத்துவ மனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தலைமையில், தொடர்ந்து பல சாதனைகள் புரிந்து தமிழகத்தில் சிறந்த மருத்துவ மனைகளில் ஒன்றாக தென்காசி தலைமை மருத்துவ மனை உள்ளது. இந்நிலையில், கடந்த […]

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து துவக்கிய தமிழ்நாடு துணை முதலமைச்சர் .!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்மூர்த்தி தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் P.T.பழனிவேல் தியாகராஜன் மதுரைமாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா தேனி நாடாளுமன்ற உறுப்பினர்தங்க தமிழ்ச்செல்வன் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் அலங்காநல்லூர் சேர்மன் ரேணுகா ஈஸ்வரி திமுக கட்சி நிர்வாகிகள் […]

தமிழகத்தில் பனிப்பொழிவு அதிகரிக்கும்; வெதர்மேன் ராஜா தகவல்..

தமிழ்நாட்டில் கடுமையான குளிரும், பனிப் பொழிவும் அதிகரிக்கும் என தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்த வானிலை அறிக்கையில், கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் பெய்து வந்த தொடர் சாரல் மழை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.   இன்று தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும். ஓரிரு இடங்களில் மட்டும் சாரல் மழை பெய்யும். வறண்ட வாடைக் காற்றின் ஊடுறுவல் காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாட்டில் கடுமையான குளிரும் பனிப்பொழிவும் அதிகரிக்கும். வேலூர், […]

தென்காசியில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கல்..

தென்காசி மாவட்ட தலைமை மருத்துவ மனையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்ற பல விதமான சிறப்பு விளையாட்டுப் போட்டிகள் மருத்துவ மனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தலைமையில் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பரிசுகளையும், தற்காலிக பணியாளர்களுக்கு மஞ்சள் பையில் பொங்கல் பரிசு தொகுப்பினையும் மருத்துவ மனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் வழங்கினார். மஞ்சள் பை பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் உறைவிட மருத்துவர் […]

புதுமடம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா.!

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் புதுமடம் ஊராட்சிக்கு உட்பட்ட அருள் ஒளி நகரில் அமைந்துள்ள பூன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில்    அலங்கரித்து வண்ண கோலமிட்டு, கரும்பு தோரணம் கட்டி, பானையில் பச்சரியில் பொங்கல் வைத்து பால் பொங்கி வரும்போது பொங்கலோ, பொங்கல் என சத்தம் எழுப்பி உற்சாகமாக சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.   பள்ளி தலைமை ஆசிரியர் சரண்யா தலைமை தாங்கினார். பள்ளியின் நிர்வாக இயக்குனர் காதர் மைதீன் அனைவரையும் வரவேற்றார்.   அதனைத் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!