EB தொடர்பான புகார்களை இனி வீட்டில் இருந்தே தெரிவிக்க மின்சார வாரியம் மொபைல் ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு முழுவது உள்ள குடியிருப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மின்சாரம் வழங்கி வருகிறது. அதுமட்டுமன்றி மின்தடை, மீட்டர் பழுது, கூடுதல் கட்டணம் வசூல் உள்ளிட்ட புகார்களையும் கண்காணித்து வருகிறது. இதுவரை நேரில் சென்றோ அல்லது தொலைபேசி மூலமாகவோ புகார் அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக […]
Category: மாநில செய்திகள்
ரெயில் பயணிகள் கவணிக்க! நாளை (ஞாயிற்றுக்கிழமை) 44 மின்சார ரெயில்கள் ரத்து..
சென்னை கோடம்பாக்கம்- தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதே போல, தாம்பரத்தில் இருந்து காலை 10.05 மணி முதல் மாலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.சென்னை கடற்கரையில் இருந்து காலை 11 மணி முதல் மதியம் […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -2 கப்ளிசேட் அப்பாஸிய பேரரசு -20 (கி.பி 750-1258) சலாவுதீன் அய்யூபி அவர்களின் எதிரியான இங்கிலாந்து மன்னர் ரிச்சர்ட் ,ரம்லாவில் நோயுற்று ஒரு மாளிகையில் தங்கி இருந்தார். அவர் இருக்கும் பகுதிகளில் போர் பதற்றம் இருந்ததால், அவருக்கு மருத்துவர்களை அழைத்து வந்து சிகிச்சை அளிக்க முடியவில்லை. ஆகவே மாறுவேடம் பூண்டு சலாவுதீன் அய்யூபி அவர்கள் ரம்லா சென்று நோயுற்று இருந்த இங்கிலாந்து மன்னரை சந்தித்து உதவிகள் புரிந்தார். தன்னுடன் அழைத்து வந்திருந்த மருத்துவர்கள் […]
தென்காசியில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..
தென்காசியில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.. தென்காசியில் ஒன்றிய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும், 100 விழுக்காடு ஒப்புகை சீட்டுகளை எண்ணித்தான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் நம்பிக்கை இல்லை எனவும், மக்களை ஏமாற்றும் வகையில் பாஜக அரசு செயல்பட்டு வருவதாகவும் கூறி தமிழகம் […]
பஞ்சாப் மாகாணத்தின் முதல் பெண் முதல் மந்திரியாக மரியம் நவாஸ்..
பாகிஸ்தான் பாராளுமன்றம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட 5 மாகாண சட்டசபைகளுக்கும் பொதுத்தேர்தல் கடந்த 8-ம் தேதி நடந்தது. இதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பஞ்சாப் மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் சுயேட்சைகள் மரியம் நவாஸ் ஷெரீபுக்கு ஆதரவு தந்தனர்.பஞ்சாப் மாகாண சட்டசபையானது முதலில் கூட்டத்தொடரை தொடங்க உள்ளது. பஞ்சாப் சட்டசபையை வெள்ளிக்கிழமை கூட்டும்படி கவர்னர் பலிகுர் ரகுமான் அழைப்பு விடுத்திருந்தார்.மூன்று […]
நிலக்கோட்டையில் ஓடும்போதே ஒடிந்த ஸ்டேரிங்க்! அரசு பேருந்தின் அவல நிலை-பயத்தில் பயணிகள்! கலக்கத்தில் ஓட்டுநர்கள்..
நிலக்கோட்டையில் ஓடும்போதே ஒடிந்த ஸ்டேரிங்க்! அரசு பேருந்தின் அவல நிலை-பயத்தில் பயணிகள்! கலக்கத்தில் ஓட்டுநர்கள்.. நிலக்கோட்டையில் இருந்து காமலாபுரம், சின்னாளபட்டி வழியாக திண்டுக்கல்லுக்கு செல்லக்கூடிய அரசு பேருந்து இன்று (வியாழக்கிழமை) மாலை நிலக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு செம்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது வளைவு ஒன்று வந்துள்ளது அது சமயம் ஸ்டேரிங்க்கை ஓட்டுநர் திருப்பி உள்ளார். திடீரென ஸ்டேரிங்க் உடைந்து பேருந்து தாறுமாறாக ஓடி அங்கிருந்து ரைஸ் மில் ஒன்றில் மோதியது. ஓட்டுநர் சமயோசிதமாக செயல்பட்டு […]
மேட்டுப்பாளையத்தில் மகளிர் காவல் ஆய்வாளருக்கு பாராட்டு !
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் காவல் ஆய்வாளர் கற்பகம் சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக பணி மாறுதல் பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் கற்பகத்திற்கு நம்ம மேட்டுப்பாளையம் சமூக நலக்குழு சார்பாகவும் சிஐடியு பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பாகவும் நேரில் சென்று கௌரவித்து வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் காவல் நிலைய காவலர்கள் உடன் இருந்தனர்.
அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை; தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு..
அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை; தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு.. அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளின் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிக கட்டண வசூல் தொடர்பாக அடிக்கடி சோதனைகள் நடத்திட வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வகை […]
திருவண்ணாமலை மாவட்ட சாரண, சாரணியர் இயக்கத்தின் சார்பில் சாரண தந்தை பேடன் பவல்166 வது பிறந்த நாளை முன்னிட்டு மெகா பேரணி..
உலக சாரண, சாரணிய இயக்கத்தை தோற்றுவித்த சாரண தந்தை பேடன் பவல் பிறந்த நாள் ஆண்டுதோறும் சிந்தனை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி அறிவுறுத்தலன்படி திருவண்ணாமலை மாவட்ட சாரண, சாரணியர் இயக்கத்தின் சார்பில் சாரணதந்தை 166 வது பிறந்த நாளை முன்னிட்டு மெகா பேரணி மற்றும் சாரண சாரணிய ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது . மாவட்ட பயிற்சி மையத்தில் இருந்து தொடங்கிய பேரணிக்கு மாவட்ட கல்வி […]
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்றும் வாக்குப்பதிவில் தில்லு முல்லு நடைபெறாமல் கண்காணிக்க வேண்டும் என்றும் அனைத்து கட்சியினர் வலியுறுத்தல்..
சென்னை விமான நிலையத்துக்கு எதிரே உள்ள ‘டிரைடண்ட்’ நட்சத்திர ஓட்டலில் தங்கிய இந்திய தேர்தல் கமிஷனர்கள் இன்று காலையில் அதே ஓட்டலில் தேர்தல் தொடர்பாக ஆய்வு கூட்டத்தை நடத்தினார்கள்.முதலில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அளவிலான அரசியல் கட்சிகளை தனித்தனியாக அழைத்து ஆலோசனை மேற்கொண்டனர்.இதில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பாரதிய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, தே.மு.தி.க., ஆம் ஆத்மி கட்சி, தேசிய மக்கள் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய 10 கட்சிகளின் பிரதிநிதிகள் […]
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை இதற்காக தான் மாற்றினேன்!- பல நாள் ரகசியத்தை உடைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
சென்னை நந்தம்பாக்கத்தில் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை நிதித்துறையில் இருந்து தகவல் தொழில்நுட்ப துறைக்கு மாற்றியது ஏன் என்பது தொடர்பாக விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை நான் பாராட்டுகிறேன். மூன்று தலைமுறையாக நாட்டுக்கு தொண்டாற்றி வரும் குடும்பத்துக்கு சொந்தக்காரர் அமைச்சர் பி.டி.ஆர்.இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான திருச்சி என்ஐடியிலும், உலகின் […]
கட்டுமான பொருட்களின் அதிகப்படியான விலை உயர்வை கண்டித்து பழனி நகர பொறியாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
கட்டுமான பொருட்களின் அதிகப்படியான விலை உயர்வை கண்டித்து பழனி நகர பொறியாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.. தமிழகம் முழுவதும் கட்டுமான பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரிக்கப்படுகிறது. முன் விற்பனை செய்ததில் இருந்து தற்போது வரை எம்.சாண்ட் ஒரு யூனிட் 2700 இல் இருந்து 4000 ருபாயாகவும்,பி.சாண்ட் 3700 இல் இருந்து 5000 ருபாயாகவும் , மேலும் ஜல்லி,கிரசர் மண் ,வெட்மிக்ஸ் ,டஸ்ட் உள்ளிட்ட பொருட்கள் 50% முதல் 100% வரை கட்டுமான பொருட்கள் விலை கடுமையாக […]
சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை:- பல்வேறு அரசியல் கட்சிகள் பங்கேற்பு..
சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை:- பல்வேறு அரசியல் கட்சிகள் பங்கேற்பு.. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆலோசனை நடத்தி வருகிறார். அ வர் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இன்று மக்களவை தேர்தல் தொடர்பான ஆலோசனை நடத்துகிறார். அதன்படி, திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக, ஆம் […]
போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ 1 கோடி இழப்பீடு!-அரசு வேலை அறிவித்த பஞ்சாப் முதல்வர்..
போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ 1 கோடி இழப்பீடு!-அரசு வேலை அறிவித்த பஞ்சாப் முதல்வர்.. விவசாயிகளின் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் மற்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி அரசின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில், விவசாயியை சுட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். விவசாயிகளின் […]
செய்யாறு சிப்காட் விரிவாக்கம்: முதல்வரிடம் மனு அளிக்க வந்த 19 பெண்கள் உள்ளிட்ட 21 விவசாயிகள் கைது! – எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்..
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் தொழிற்பேட்டை 3-வது அலகு விரி வாக்கத்துக்காக, மேல்மா உட்பட 11 கிராமங்களில் 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை கைப்பற்ற தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் மேல்மா கூட்டுச்சாலையில் 225 நாட்களுக்கும் மேலாக அறவழியில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது. செய்யாறு சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்திற்காக […]
மனு கொடுக்க சென்ற 21 விவசாயிகள் கைது – திமுக அரசுக்கு சீமான் கடும் கண்டனம்..
மனு கொடுக்க சென்ற 21 விவசாயிகள் கைது – திமுக அரசுக்கு சீமான் கடும் கண்டனம்.. மேல்மா சிப்காட் ஆலைக்காக வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுப்பதற்காக சென்னை தலைமைச்செயலகத்தை நோக்கி சென்ற 19 பெண்கள், 2 ஆண்கள் உட்பட 21 விவசாயிகளை காவல்துறை மூலம் திமுக அரசு கைது செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. அறவழியில் அமைதியான முறையில் மனு அளிக்க சென்ற விவசாயிகள் பெருமளவில் பெண்கள் என்றும் பாராமல் அடக்குமுறையை […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -2 கப்ளிசேட் அப்பாஸிய பேரரசு -19 ( கி.பி 750-1258) அப்போதைய இஸ்லாமிய ஆட்சிப்பீடம் மூன்று தலைமைகளை பிரதானமாக கொண்டு இருந்தது. பாக்தாத்தை தலைநகராக கொண்டு அப்பாஸிய மன்னர்களும், ஸ்பெயின் கொரடோவாவை தலைமை இடமாக கொண்டு உமைய்யாக்களும், எகிப்தை தலைமை இடமாக கொண்டு பாத்திமியாக்களும் ஆட்சி புரிந்தனர். பாத்திமிய அரசு வீழ்ந்த பிறகு சலாவுதீன் அய்யூபி அவர்கள் எகிப்தை கைப்பற்றினார். சலாவுதீன் அய்யூபி அவர்கள் ஈராக்கில் நஜுமுத்தீன் அய்யூபி என்பவரது மகனாக பிறந்தார். […]
பெங்களூரு – நாகர்கோவில் ரெயில் திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கம்..
பெங்களூரு – நாகர்கோவில் ரெயில் திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கம்.. சேலம் கோட்ட ரெயில்வே சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது; திருநெல்வேலி-மேலப்பாளையம் ரெயில் பாதையை இரட்டிப்பாக்கும் பணி நடக்கிறது. இதனால் நாகர்கோவில் கோவை முன்பதிவற்ற ரெயில் இயக்கம் நாளை (23-ந் தேதி) முதல் 28-ந் தேதி வரை நாகர்கோவில்-திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கத்தில் கோவையில் இருந்து இயக்கப்படும் ரெயில் திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும். பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 27-ந் […]
மனித – விலங்கு மோதலைத் தடுக்க சிறப்புப் படை அமைக்க வேண்டும்!-பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை..
மனித – விலங்கு மோதலைத் தடுக்க சிறப்புப் படை அமைக்க வேண்டும்!-பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை.. தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ஒரு மாதத்தில் யானை தாக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் 152 பேர் யானைகளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் மனித & விலங்குகள் மோதல் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைத் தடுப்பதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை என்பது வருத்தமளிக்கிறது. தமிழ்நாட்டில், அதிலும் […]
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் பூண்டு விலை குறைந்தது;கிலோ ₹150 முதல் ₹250 வரை விற்பனை..
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் பூண்டு விலை குறைந்தது;கிலோ ₹150 முதல் ₹250 வரை விற்பனை.. வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் பூண்டு விலை குறைந்து கிலோ ₹150 முதல் ₹250 வரை விற்பனை செய்யப்படுகிறது. வேலூர் நேதாஜி காய்கறி மொத்த வியாபாரிகளுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு, வெண்டை, கத்தரிக்காய், முட்டைகோஸ், கேரட், பீட்ரூட், காலிபிளவர் என காய்கறிகள் வருகின்றன. தக்காளியை பொறுத்தவரை ஓசூர், […]