வாசன் கண் மருத்துவ மனையில் அதி நவீன வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை வசதிகள் துவக்கம்..

திருப்பரங்குன்றம் அருகே ஹார்வி பட்டியில் செயல்படும் வாசன் கண் மருத்துவமனையில் அதி நவீன வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்கு புதிதாக நிறுவப்பட்டுள்ளது. இங்கு இரத்த அழுத்த நோய், சர்க்கரை நோயாளிகளுக்கு புதிய அதிநவீன லேசர் இயந்திரம் மூலம் 2 மணி நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹார்வி பட்டி வாசன் ஐ கேர் மருத்துவமனை உள்ளது. இந்த புதிய அதி நவீன லேசர் வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்கை […]

மாநில அளவிலான புதிய அறிவியல் கண்டுபிடிப்பு; அரசு பள்ளி மாணவர்கள் சாதனை..

திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் நடந்த மாநில அளவிலான அறிவியல் கண்டுபிடிப்புகளில் விருதுகளை தட்டிச் சென்ற அரசுப் பள்ளி மாணவர்கள்; டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான அறிவியல் போட்டிகளுக்கும் 8 மாணவர்கள் தேர்வு.. மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான மாணவர்களில் அறிவியல் கண்டுபிடிப்புகள் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மைய நிர்வாக இயக்குநர் லெனின் தமிழ்க்கோவன் பரிசுகளை வழங்கினார். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம், கல்லூரி முதல்வர் […]

நெல்லை தென்காசி உள்ளிட்ட தென் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி; அரசாணை வெளியீடு..

நெல்லை தென்காசி உள்ளிட்ட தென் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி; தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.. தென் மாவட்டங்களில் ஏற்பட்ட அதி கனமழையால் பாதிக்கப்பட்ட மொத்தம் 2,60,909 விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி வழங்கிட தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது பற்றிய செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் வரலாறு காணாத அதிகனமழைப் பொழிவு ஏற்பட்டது. தென் மாவட்டங்களின் பல பகுதிகளில் […]

தென்காசி மாவட்டத்தில் ரூ.28 கோடியே 60 இலட்சம் மதிப்பில் கட்டடங்கள் மற்றும் திட்டப் பணிகள்; தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்து அடிக்கல் நாட்டினார்..

தென்காசி மாவட்டத்தில் ரூ.28 கோடியே 60 இலட்சம் மதிப்பில் புதிய கட்டடங்கள் மற்றும் திட்டப் பணிகள்; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்து அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு முதலமைச்சர் தென்காசி மாவட்டத்தில் ரூ.28 கோடியே 60 இலட்சம் மதிப்பிலான புதிய கட்டடங்கள் மற்றும் புதிய திட்டப்பணிகளை 24.02.2024 அன்று செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலை, நெம்மேலியில் காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்து அடிக்கல் நாட்டினார். தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை நகராட்சியில் […]

மேட்டுப்பாளையத்தில் இலவச பல் சிகிச்சை முகாம் !

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ராமப்பா ரோடு உழைப்பாளர் மார்க்கெட் அருகில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷின் வித்யாலயா பல் மருத்துவமனை மற்றும் கோயம்புத்தூர் CITU பொது தொழிலாளர் சங்கம் இணைந்து இலவச பல் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமில் பல் மருத்துவர்கள் கலந்து கொண்டு நவீனமுறையில் சிகிச்சை அளித்தனர். தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -2 கப்ளிசேட் அப்பாஸிய பேரரசு -21 (கி.பி 750-1258) சிலுவைப் போருக்கான காரணங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும். சிலுவைப்போர் என்பது இரண்டு நூற்றாண்டுகள் நடந்த மிக நெடிய போராகும். கி.பி 1097 துவங்கி 1291 வரை கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் தொடர்ந்து நடந்த நீண்ட நெடிய போராகும். இந்தப் போர்களுக்கு சமூக ரீதியான, சமய ரீதியான, அரசியல் ரீதியான, பொருளாதார ரீதியான, காரணங்கள் இருந்தது. முஸ்லீம்களின் ஆட்சி ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா என்று […]

முத்தரையர் சங்கம் மருத்துவ உதவி !

இராமநாதபுரம் மாவட்டத்தில் முத்தரையர் சங்கம் மற்றும் சிகரம் வளர்ச்சி குழு சார்பாக தம்பி ரங்கீஷ் மருத்துவ செலவிற்காக வசூல் செய்த பணம் ரூபாய் 2,70,000 (இரண்டு லட்சத்தி 70 ஆயிரம்) அவர்களின் பெற்றோரிடம் கொடுக்கப்பட்டது. இதற்கு பண உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், இராமநாதபுரம் மாவட்ட முத்தரையர் சங்கத்தின் சார்பாக நன்றியை கலந்த வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளர்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு !

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சியில் பேரூராட்சிகள் நிர்வாகத்துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன், செய்தியாளர் பயணத்தின்போது பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த செய்தியாளர் பயணத்தின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட நகர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.85 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக சாலை அமைக்கப்பட்டு வரும் பணியினை பார்வையிட்டு பணி நடைபெறும் பொழுது பொறியாளர்கள் ஆய்வு செய்ததுடன் தரம் மற்றும் அதன் தன்மை […]

திருக்கோஷ்டியூர் ஶ்ரீ சவுமியநாராயணப்பெருமாள் கோயில் மாசித் தெப்ப உற்சவ விழா

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் மாசிமக தெப்ப உற்சவம் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் கோலாகலமாக நடைபெற்றது உலகப் புகழ் பெற்ற திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் திருக்கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். இக்கோயிலில் நடைபெறும் விழாக்களுள் மாசி மகத் தெப்பத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான மாசி மக தெப்ப திருவிழா […]

தி.மு.க கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொ.ம.தே.க.,வுக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு..

தி.மு.க கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொ.ம.தே.க.,வுக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் காதர் மொய்தீன் கூறியதாவது: தி.மு.க கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.திமுகவிடம் ஒரு மாநிலங்களவை இடம் கேட்டிருந்தோம். தற்போது மக்களவை தேர்தல் தொடர்பாக மட்டுமே பேச்சு என்று தி.மு.க கூறி உள்ளது. கட்சியின் சார்பில் நவாஸ் கனி மீண்டும் வேட்பாளராக களம் காண […]

ட்ரூ காலர்லாம் ஓரமா போங்க! விரைவில் வருகிறது அரசு காலர் ஐடி..

செல்போன் அழைப்பாளர் அடையாளத்தை காண்பிக்கும் வசதியை நடைமுறைப்படுத்த இறுதி பரிந்துரையை அரசிடம் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) சமர்ப்பித்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அழைப்பாளர் அடையாளத்தை (காலர் ஐடி) பயனாளர்களுக்கு வழங்க வேண்டும் என தொலைத்தொடர்புத் துறை (டிஓடி) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முன்மொழிவை வெளியிட்டது. இந்த முன்மொழிவு வெளியிடப்பட்டு சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு டிராய் தற்போது இறுதி பரிந்துரையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அதன்படி, அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும், வாடிக்கையாளர்களின் வேண்டுகோளின் பேரில், […]

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போட்டி!-மம்தா பானர்ஜி அதிரடி! என்ன செய்ய போகிறது காங்கிரஸ்.??

இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் சுமூகமாக தொகுதியுடன் செய்து வருவதாக தகவல் வெளியாகிய நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் தங்கள் கட்சி போட்டியிட போவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் மேற்குவங்க மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டதாகவும் காங்கிரஸ் கட்சிக்கு சில தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியது. ஆனால் தற்போது […]

தேனி தொகுதியில் எம்பி எலெக்ஷனில் தனித்துப் போட்டியிடுவேன் – ஜெயலலிதா மகள் என்று கூறும் ஜெயலட்சுமி பேட்டி.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் அழகு சிறை கிராமத்தில் அமைந்துள்ள குழந்தைகள் காப்பதத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஜெயலலிதா மகள் என்று கூறிக்கொள்பவரும் அகில இந்திய எம்ஜிஆர் முன்னேற்றக்கழகத் தலைவருமான ஜெயலட்சுமி கலந்து கொண்டு குழந்தைகளுக்கு அன்னதான நிகழ்ச்சி மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது அம்மாவுக்கு ஏழை குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும்.இங்குள்ளவர்கள் அழைத்ததின் பேரில் இங்கு வந்தேன்.அம்மா வழியில் ஏழைகளுக்கு நானும் உதவிகள் […]

நெல்லை சட்டவிரோத கல்குவாரிகள் மூலம் ரூ.700 கோடிக்கு கனிமவளக் கொள்ளை! – வெளிப்படையான விசாரணை நடத்த எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்..

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; நெல்லை மாவட்டத்தில் உள்ள 54 கல்குவாரிகளில், அரசியல் பெரும் புள்ளிகள், அரசு உயர் அதிகாரிகள் துணையுடன் நடந்த சட்டவிரோத கனிமவளக் கொள்ளை குறித்தும், அதன்மூலம் நடைபெற்ற சுமார் ரூ.600 கோடிக்கும் அதிகமான ஊழல் முறைகேடுகள் குறித்தும் அறப்போர் இயக்கம் வெளிக்கொண்டு வந்துள்ள ஆதாரங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளத்தில் நடந்த கல்குவாரி விபத்தினை தொடர்ந்து, […]

நான் ஏன் பாஜகவில் இணைந்தேன்!- விளவங்கோடு எம்எல்ஏ, விஜயதாரணி பரபரப்பு பேட்டி.

பாஜகவில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதாகவும், நாட்டின் நன்மைக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காவும் தன்னாலான அனைத்து பணிகளை செய்வதாகவும் விஜயதரணி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி பாஜகவில் இணைந்தார். டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் விஜயதரணி. இதனைத்தொடர்ந்து, விஜயதரணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிறு வயது முதலே காங்கிரஸின் ஒரு அங்கமாக இருந்தேன்.தற்போது வேறு ஒரு தேசிய கட்சியில் இணையும் சூழல் ஏற்பட்டுள்ளது.மேலும் பிரதமரின் செயல்பாடு, திட்டங்களால் […]

இந்திய பக்தர்களின்றி தொடங்கியது கச்சத்தீவு ஆலய திருவிழா!- ராமேசுவரத்தில் இருந்து படகு சேவை ரத்து..

இந்திய பக்தர்களின்றி தொடங்கியது கச்சத்தீவு ஆலய திருவிழா!- ராமேசுவரத்தில் இருந்து படகு சேவை ரத்து.. கச்சத்தீவில் இந்திய பக்தர்கள் இல்லாமல், இலங்கை பக்தர்கள் மட்டுமே கலந்துகொண்ட அந்தோணியார் ஆலயத் திருவிழா நேற்று மாலை தொடங்கியது. ராமேசுவரத்திலிருந்து படகு சேவை ரத்து செய்யப்பட்டதால், பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். கச்சத்தீவில் அந்தோணியார் ஆலயத் திருவிழாவை, நெடுந்தீவு பங்குத்தந்தை பத்திநாதன் நேற்று மாலை 4 மணியளவில் ஆலயத்தின் கொடியை ஏற்றி தொடங்கி வைத்தார். யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம். யாழ்ப்பாணம் […]

காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் எம்.எல்.ஏ. விஜயதரணி..

சிறு வயது முதலே காங்கிரஸின் ஒரு அங்கமாக இருந்தேன். தற்போது பாஜகவில் இணையும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளும், திட்டங்களால் பாஜகவில் இணைந்துள்ளேன். தமிழ்நாட்டில் பாஜகவை வலுபெற வைப்போம். தமிழ்நாட்டில் அண்ணாமலை தலைமையில் பாஜக சிறப்பாக வளர்ந்து வருகிறது; பாஜகவில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. டெல்லியில் காங்.கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விளவங்கோடு எம்.எல்.ஏ விஜயதரணி பேட்டி.

TNPSC -Gr(IV)&VAO, திருமா பயிலகத்தின் சார்பில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்!-தொல்.திருமாவளவன் அறிக்கை..

TNPSC -Gr(IV)&VAO, திருமா பயிலகத்தின் சார்பில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்!-தொல்.திருமாவளவன் அறிக்கை.. சென்னை, அசோக்நகர், அம்பேத்கர் திடலில் இயங்கிவரும் ‘திருமா பயிலகத்தின்’ மூலம் அரசு வேலை வாய்ப்புகளுக்கான பயிற்சி வகுப்புகளைக் கட்டணமின்றி கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். இப்பயிலகத்தின் மூலம் ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள் பலர், அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்று வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர். திறன் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு இயங்கும் இப்பயிலகத்தில் 25.02.2024 (ஞாயிறு) காலை 9 மணிக்கு TNPSC -Gr(IV)&VAO […]

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் அதிமுக சார்பில் முப்பெரும் விழா; 1008 தேங்காய் உடைத்து வழிபாடு..

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் அதிமுக சார்பில் முப்பெரும் விழா 1008 தேங்காய் உடைத்து வழிபாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராகவும் ,சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் அங்கீகாரம் செய்யப்பட்டதை முன்னிட்டும் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் முப்பெரும் விழாவாக கொண்டாடும் வகையில் அதிமுகவினர் 1008 தேங்காய் உடைத்து வழிபாடு செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். தமிழகத்தில் ஐந்து முறை […]

கோ – ஆப் டெக்ஸில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் திட்டம் அறிமுகம்..

கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் திட்டம் அறிமுகம்.. கோ-ஆப்டெக்ஸில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற திட்டம் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என கோ-ஆப்டெக்ஸ் திருநெல்வேலி மண்டல மேலாளர் நா. ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார். இது பற்றிய செய்திக் குறிப்பில், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற திட்டம் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இரண்டு பொருட்களின் விலையில் மூன்று பொருட்களை வாடிக்கையாளர்கள் பெற்று கொள்ளலாம். இத்திட்டமானது கோ-ஆப்டெக்ஸ் அனைத்து […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!