ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வட்டாரம் ஆனைய்குடி கிராமத்தில் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் கூட்டாய்வு நடைபெற்றது, இதில் திருப்புல்லாணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் எம்.கே.அமர்லால் தெரிவித்ததாவது, விவாசாயிகளிடம் பருத்தியில் தாக்கும் வாடல்நோய்களின் பாதிக்கப்பட்ட இளஞ்செடியின் விதையிலைகள் மஞ்சளாகவும் பழுப்பாகவும் மாறுவதுடன் இலைக்காம்புகளின் மீது பழுப்பு வளையம் காணப்படும் என்றும்நாளடைவில் இளஞ்செடிகள் காய்ந்துவிடும் என்றும் வளர்ந்த செடியில் நோய் தொற்றினால் அடிப்பாகத்திலுள்ள முதிர்ந்த இலைகள் ஆரம்பத்தில் மஞ்சளாக மாறி பின் வாடி உதிர்ந்து விடும் என்றும் தண்டின் அடிப்பகுதி […]
Category: மாநில செய்திகள்
இரயில் விபத்தை தடுத்து நிறுத்திய தம்பதிகளை பாராட்டி ஐந்து லட்சம் வெகுமதி; தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு..
இரயில் விபத்தை தடுத்து நிறுத்திய தென்காசி மாவட்ட தம்பதிகளை பாராட்டி வெகுமதி; தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு.. இரயில் விபத்து ஏற்படாமல் தடுத்தி நிறுத்திய தென்காசி மாவட்டம், புளியரை கிராமத்தைச் சேர்ந்த தம்பதியரை பாராட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெகுமதி அறிவித்துள்ளார். தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், புளியரை கிராமம், எஸ்-வளைவு என்ற தமிழக-கேரள எல்லைப் பகுதியில் 25.02.2024 அன்று நள்ளிரவு 1.00 மணி அளவில் திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி ஒன்று நிலை […]
கீழக்கரையில் வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி முகாம் !
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் மஹாலில் உணவு பாதுகாப்புத் துறை சம்பந்தமாக உணவு கடைகள் பேக்கரிகள் ஹோட்டல் பெட்டிக்கடைகள் மளிகை கடைகள் ஆகியோர்க்கு உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார் தலைமையில் கீழக்கரை உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ் , பரமக்குடி உணவு பாதுகாப்பு அலுவலர் கருணாநிதி ராமநாதபுரம் உணவு பாதுகாப்பு அலுவலர் தர்மர் ஆகியோர் முன்னிலையில் உணவு பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வியாபாரத்தின் அளவுகள் பற்றியும் வாடிக்கை யாளர்களின் அணுகுமுறை பற்றியும் பொருட்களின் […]
இராமநாதபுரம் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை விற்பனைக்குழு விபரம் ! விவசாயிகள் பயன்பெற வேண்டுகோள் !!
இராமநாதபுரம் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் இராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், இராஜசிங்கமங்கலம், மற்றும் திருவாடானை ஆகிய ஆறு (6) ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக விவசாயிகளின் விளை பொருட்களை அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று தேசிய வேளாண்மை சந்தை திட்ட பண்ணை வாயில் முறையில் (Farm Gate) நேரடியாக வியாபாரிகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.விவசாயிகள் விளைவித்த விளைபொருளின் தரநிர்ணயம் ஆனது ஒழுங்குமுறை விற்பனைக்கூட தரம்பிரிப்பு ஆய்வாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் பகுப்பாய்வு செய்து அதனை e-NAM திட்ட […]
நிலக்கோட்டையில் வழக்கறிஞர்கள் சங்க கூட்டம், ஓய்வூதியர் சங்க மீட்டிங் ஹாலில் நடைபெற்றது..
நிலக்கோட்டையில் வழக்கறிஞர்கள் சங்க கூட்டம், ஓய்வூதியர் சங்க மீட்டிங் ஹாலில் நடைபெற்றது.. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஓய்வூதியர் சங்க மீட்டிங் ஹாலில் நடந்த இந்த கூட்டம் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் எம். இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் முக்கிய அம்சமாக “வட்டார வழக்கறிஞர் சங்கம்” என இருந்த பெயருக்கு பதிலாக”வழக்கறிஞர்கள் சங்கம் நிலக்கோட்டை” என பெயர் மாற்றம் செய்து ஏக மனதாக முடிவெடுக்கப்பட்டது. மேலும் பல்வேறு முக்கிய அம்சங்களை பற்றி விவாதித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு […]
வாகன ஓட்டிகளே உஷார்!-வீடு தேடி வரும் அபராத தொகை ரசீது..
போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளின் வீடு தேடிச்சென்று அபராத ரசீது கொடுக்கும் திட்டத்தை, போலீசார் அமல்படுத்தி உள்ளனர். சென்னையில், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு, போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை கண்காணித்தும் அபராதம் விதிக்கப்படுகிறது. இதுகுறித்து, விதிமீறலில் ஈடுபடுவோரின் மொபைல் போன் எண்ணிற்கு, போலீசார் தகவல் அனுப்புகின்றனர். கட்டத் தவறினால், கால்சென்டர் வாயிலாக நினைவூட்டுகின்றனர். இந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக, விதிமீறலில் ஈடுபடுவோரின் வீட்டிற்கே சென்று, அபராத ரசீது […]
தேர்தல் பணிகளை முடுக்கி விட பிரேமலதா விஜயகாந்த் திட்டம்..
பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார்.எந்த கட்சியுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திப்பது என்பது பற்றி மாவட்ட செயலாளர்கள் கருத்துக்களை கூறினார்கள். சிலர் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கலாம் என்றும் ஒரு சிலர் பா.ஜ.க. உடன் இணைந்து தேர்தலில் போட்டியிடலாம் எனவும் தெரிவித்திருந்தனர்.ஆனாலும் அது பற்றி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. தே.மு.தி.க.வை அ.தி.மு.க.வும் பாரதீய ஜனதாவும் தங்கள் பக்கம் இழுக்க மறைமுகமான வேலைகளில் ஈடுபட்டனர். தங்கள் கட்சிகளின் முக்கிய […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -2 கப்ளிசேட் அப்பாஸிய பேரரசு -23 (கி.பி 750-1258) ஜெருசலேம் என்பது ஒரு டைனமைட் போல எப்போது வெடிக்குமோ என்ற சூழலில் இன்று மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் நிர்வாகம் சர்வதேச ஒப்பந்தப்படி முஸ்லீம்களின் கையில் இருந்தாலும், சுற்றியுள்ள பகுதிகளில் இஸ்ரேலிய ராணுவம் சூழ்ந்திருக்கிறது. ஈசா ( அலை) அவர்கள் பிறந்த “பெத்லஹேம்”நகரம் ஜெருசலேம் அருகில் இருப்பதால் கிறிஸ்தவர்கள் தங்கள் புனித இடமாக கருதுகின்றனர். யூதர்களின் இறைத்தூதர்களானநபி தாவூது (அலை) அவர்களும்,அவரது மகன் நபி […]
கீழக்கரை பி.எஸ்.எஸ்.ஜே நாடார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் கல்வி திறன் போட்டி !
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பி.எஸ்.எஸ்.ஜே நாடார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவ மாணவிகளின் கல்வி திறனை மேம்படுத்தும் வகையில் வாரந்தோறும் வினாடி வினா போட்டி நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து தாளாளர் கார்த்திக் தலைமையில் முதல்வர் சுரேஸ் கண்ணன் முன்னிலையில் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருப்புல்லாணி ஒன்றிய துணைத் தலைவர் சிவலிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். இதில் சுந்தரபாண்டி […]
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் !
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் அவசர மத்திய செயற்குழு முடிவின்படி வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (27.2.2024) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்குவதாக தெரிவித்துள்ளனர். இதில் தமிழகத்தின் 38 மாவட்டங்கள், 315 வட்டங்களில் உள்ள வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 14,000க்கு மேற்பட்ட அலுவலர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மேலும் அவர்கள் தெரிவிக்கையில் : 10 மாதங்களுக்கு முன்னதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 3 […]
ராமநாதபுரத்தில்ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !
இராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் வளாகத்தின் முன்பாக இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண் 311- சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை விரைந்து நிறைவேற்றக் கோரியும் , தொடர் முற்றுகைப் போராட்டத்தில் ஆசிரியர்களைக் கைது செய்வதைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆசிரியர் இயக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டு கண்டனத்தை தெரிவித்தனர்.
சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..
சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.. மதுரை கோட்டத்தில் இரயில் நிலையம் மேம்பாட்டிற்கான அடுக்கல் நாட்டப்படும் விழா நடந்தது. இதில் சாலை வாகன போக்குவரத்து பாதுகாப்பிற்கும் ரயில் கடந்து செல்லும் வரை நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கவும், சோழவந்தான் ரயில் நிலையம் அருகே ரயில்வே மேம்பாலம் சுமார் 49 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ரயில்வே மேம்பாலத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதற்கான காணொளி நிகழ்ச்சி விழா சோழவந்தான் […]
மதுரை அருகே அரசு பேருந்து மீது கல் வீசி தாக்குதல்; போலீசார் தடியடி..
அரசு பேருந்து மீது கல் வீசி தாக்குதல்; மதுரை அருகே பரபரப்பு.. கரூரில் கொலை செய்யப்பட்ட ராமர் பாண்டியன் உடல் இறுதி ஊர்வலம் மதுரை, சிந்தாமணி 4 வழி சாலையிலிருந்து சிந்தாமணி திரும்பும் போது அரசு பேருந்து மீது திடீரென கல் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சொட்ட தட்டி சென்ற சென்ற 47 எண் கொண்ட அரசு பேருந்து மதுரை சிந்தாமணி அருகே சென்ற போது ராமர் பாண்டியன் […]
மழைவெள்ள பாதிப்பு ஏற்பட்டவுடன் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு உடனடியாக விடுவித்த தொகை பைசாக் கணக்கில் சேராதா என வானதி சீனிவாசன் கேள்வி..
மழைவெள்ள பாதிப்பு ஏற்பட்டவுடன் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு உடனடியாக விடுவித்த தொகை பைசாக் கணக்கில் சேராதா என வானதி சீனிவாசன் கேள்வி.. குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் மக்கள் மருந்தகத்தை சென்னை நெசப்பாக்கத்தில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்கள் மருந்தகம் மூலம் 1950 க்கும் மேற்பட்ட மருந்துகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 10 ஆயிரத்து […]
நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பது எனக்கு உடன்பாடில்லை!- தனது கட்சி கொடியை அறிமுகம் செய்து நடிகர் மன்சூரலிகான் பேச்சு..
நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பது எனக்கு உடன்பாடில்லை!- தனது கட்சி கொடியை அறிமுகம் செய்து நடிகர் மன்சூரலிகான் பேச்சு.. சென்னை பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே இந்திய ஜனநாயக புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் மன்சூரலிகான் தலைமையில் முதல் முறையாக மாபெரும் அரசியல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேடையில் அமர்ந்திருந்த நடிகர் மன்சூரலிகான் திடிரென மேடையில் இருந்த குப்பைகளை தொடப்பதால் சுத்தம் செய்து விட்டு தன் உரையை ஆற்றினார். அதில் உங்களுக்காக கண்டிப்பாக உழைப்பேன் என உறுதிமொழி ஏற்றுக் கொண்டார் […]
தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டம்..
தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் கு. பத்மாவதி தலைமையில் நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று (26.02.2024) நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும், இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித் தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை மற்றும் […]
சமயநல்லூர் பகுதியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்..
சமயநல்லூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்; ஆர்பி உதயகுமார் சிறப்புரை.. முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட மேற்கு தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் சமயநல்லூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் அரியூர் கே ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சமயநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மலையாளம் ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன் […]
ரயில்வே துறையில் புது யுக்தியை கண்டுபிடித்து அசத்திய மாணவன்..
ரயில் பெட்டியில், மேலடுக்கில் முதியோர் படுக்கை இருக்கைக்கு செல்ல அறிவியல் கண்காட்சியில் புது யுக்தியை கண்டுபிடித்த மாணவன்.. தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில் நடைபெற்ற 38 மாவட்டங்களிலிருந்து வந்த 64 மாணவர்களின் அறிவியல் கண்காட்சி. (சிறந்து விளங்கிய 8 மாணவர்களை தேர்வு செய்து , தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டியில் பங்கேற்க தேர்வு – இதில் பெரும்பான்மையான மாணவர்கள் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களாவர்) மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரி […]
அனைவரும் நம் கட்சியில் உள்ளனர்; ஸ்டாலின் கூட நம் கட்சியில் உள்ளார் – அதிமுக கூட்டத்தில் ராஜேந்திர பாலாஜி பேச்சு..
இராஜபாளையம் அதிமுக வடக்கு ஒன்றியம் கழகம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 76 பிறந்தாள் விழா நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுகூட்டம்; முன்னாள் அமைச்சர் K.T. ராஜேந்திர பாலாஜி பங்கேற்பு.. அனைவரும் நம் கட்சியில் உள்ளனர், ஸ்டாலின் கூட நம் கட்சியில் உள்ளார் என இராஜபாளையம் அதிமுக பொதுக் கூட்டத்தில் கே.டி. ராஜேந்திர பாலாஜி நகைச்சுவையாக பேசினார். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் முகவூர் முத்துசாமிபுரத்தில் அதிமுக வடக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் குருசாமி ஏற்பாட்டில் முன்னாள் முதல்வர் […]
மதுரை சேர்மதாய் வாசன் கல்லூரியில் புற்று நோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்..
மதுரை பெரியார் நகர் சேர்மதாய் வாசன் கல்லூரியில் குழந்தை பருவ புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி மாணவிகளிடம் குழந்தை புற்று நோய் விழிப்புணர்வு கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களாக மதுரை மாவட்ட கூடுதல் ஆட்சியர் மோனிகா ராணா, மதுரை ராஜாஜி மருத்துவமனை புற்றுநோயியல் துறை தலைவர் Dr. ராஜ சேகர், குழந்தைகள் புற்றுநோய் மண்டல இயக்குநர் (Cankids) லலிதா மணி, சேர்மத்தாய் வாசன் கல்லூரி முதல்வர் கவிதா மற்றும் கல்லூரி இணைச் செயலாளர் பாலகுரு ஆகியோர் கலந்து […]