100 கிராம் அமுல் தயிரின் கொள்முதல் விலை ரூபாய் 972/-மட்டுமே-தகவல் அறியும் சட்டம் மூலம் மும்பை ரயில்வே கேன்டீன் ஊழல் அம்பலம்…

மும்பையை சார்ந்த சமூக ஆர்வலர் அஜய் போஸ் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரயில்வே சமையல் பிரிவுக்காக கொள்முதல் செய்யப்பட்ட தயிர், உப்பு, பருப்பு போன்ற பொருட்களின் விலையை அறியும் நோக்கில் தாக்கல் செய்த மனுவின் மூலம் மெகா ஊழல் அம்பலமாகியுள்ளது. கடந்த வருடம் ஜூலை 2016 ல் அஜய் போஸ் செய்த மனுவுக்கு ரயில்வே கேன்டீன் அதிகாரிகள் எந்த வித பதில் அளிக்காத நிலையில் மேல் முறையீடு செய்தார். அதனை தொடர்ந்து 15 […]

விலை குறைவான ‘ஜெனரிக்’ மருந்துகளை மருந்து சீட்டில் எழுத தவறினால் கடும் நடவடிக்கை – இந்திய மருத்துவக் கவுன்சில் மருத்துவர்களுக்கு எச்சரிக்கை

இந்திய மருத்துவ கழகம் MEDICAL COUNCIL OF INDIA விதிமுறைகளின் படி நோயாளிகளுக்கான மருந்து சீட்டில் மருத்துவர்கள் அனைவரும் ‘ஜெனரிக்’ பெயரில் தான் மருந்துகளை எழுத வேண்டும். எந்த ஒரு நிறுவனங்களின் ‘பிராண்ட்’ பெயரிலும் எழுத கூடாது. ஜெனிரிக் GENERIC பெயர் என்பது நீங்கள் உபயோகிக்கும் மருந்துகளின் உண்மையான மூலப் பொருளின் CHEMICAL வேதியியல் பெயர். உதாரணம் : PARACETAMOL பிராண்ட் BRAND பெயர் என்பது உங்களுக்கான மருந்துகளை 500 சதவீதத்திற்கும் மேல் கொள்ளை இலாபம் வைத்து […]

அதிரடி விசாரனையில் இந்திய தொலைதொடர்பு ஆணையம்..

வெளிநாட்டில் குறைந்த வருமானத்தில் வேலைபார்த்து வரும் பெரும்பாலான மக்களுக்கு தொலைபேசியில் சொந்தங்களுடன் உரையாடுவதே அவர்களுக்கு கிடைக்கும் சந்தோசமாகும். ஆனால் பல நபர்கள் அவர்களுடைய தேவையை குறைந்த செலவில் செய்து தருவதாக கூறி இந்தியாவில் இருந்து முறைகேடான வழியில் தொலைபேசி வசதிகளை செய்து வந்தார்கள். சமீப காலத்தில் இது போன்ற செயல்பாடுகளை இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ( TRAI – Telecommunication Regulatory Authority of India) மிகவும் உன்னிப்பாக கவனித்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு […]

பொது சிவில் சட்டத்தை எதிர்த்து அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் சார்பாக 4கோடி பேருக்கு மேலானோர் கையெழுத்துடன் எதிர்ப்பு மனு..

கடந்த வியாழன் (13-04-2017) அன்று அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் சார்பாக இந்திய சட்ட கமிசனிடம் 4 கோடி பேருக்கு மேலானோர் கையெழுத்துடன் எதிர்ப்பு மனு சமர்பிக்கப்பட்டது. இந்த மனு முஸ்லிம் சட்ட வாரியத்தின் செயலாளர். மெளலானா முஹம்மது வாலி ரஹ்மத் சாஹிப் அவர்களின் தலைமையில் இந்திய சட்ட வாரியத்தின் தலைவர் நீதிபதி பல்பர் சிங் செளதான் அவர்களை சந்தித்து கையெழுத்து பிரதிகளுடன் கூடிய மனு வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட மனுவில் பொது சிவில் […]

இராமேஸ்வரம் – கோயம்புத்தூர் – இராமேஸ்வரம் புதிய சிறப்பு விரைவு ரயில் ஆரம்பம்..

இராமேஸ்வரம் – கோயம்புத்தூர் – இராமேஸ்வரம் புதிய விரைவு ரயில் ஏப்ரல் 22ம் தேதி முதல் ஆரம்பம் செய்யப்படுகிறது. இந்த விரைவு ரயில் வாரத்தில் இரண்டு நாட்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சேவை ஜூலை மாதம் வரை செயல்படும் என்று அறியப்படுகிறது. எண். 06062 கோயம்பத்தூர் – இராமேஸ்வரம் விரைவு ரயில் திங்கள் மற்றும் வெள்ளி மட்டும் இயக்கப்படும். இந்த ரயில் பாலக்காடு, பாலக்காடு டவுன், பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, இராமநாதபுரம் […]

தமிழகத்தில் ‘மக்கள் நீதி மன்றம்’ மூலம் ஒரே நாளில் 83000 வழக்குகள் விசாரணை – 52000 வழக்குகளுக்கு தீர்வு

இந்தியா முழுமையும் அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை விரைவாக முடிவுக்கு கொண்டு வர உச்ச நீதி மன்றத்தின் உத்தரவின்படி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, இரண்டாவது சனிக்கிழமை ‘லோக் அதாலத்’ என்கிற பெயரில் ‘மக்கள் நீதிமன்றம்’ நடத்தப்படுகிறது. இந்த லோக் அதாலத்தில் இரு தரப்பினரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வழக்கை முடிவுக்கு கொண்டு வருவதால், இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது. அதே நேரம், வழக்குகளும் நீண்ட காலத்துக்கு இழுத்தடிக்கப்படாமல், விரைவாக முடிவுக்கு வரும். […]

மிதியுங்கள்.. எரிவாயு சேமியுங்கள்… – சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தல்

புவியின் வெப்பம் அதிகரித்து வருவதை கண்டு சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். வருடந்தோரும் நடத்தப்படும் மாநாட்டில் பல நாடுகளிலிருந்து சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள் கலந்து கொண்டு உலக வெப்பமயமாதல் (Global Warming) குறித்த ஆய்வுகளையும், பாதிப்புகளையும் விவாதித்து வருகிறார்கள். நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் காற்று மாசுபட்டு வருவதால் ஓசோன் மண்டலத்தில் (Ozone Layer) பாதிப்புகள் ஏற்பட்டு வெப்ப நிலையில் மாறுதல் நிகழ்கிறது. தட்ப வெப்ப நிலை அதிகரிப்புக்கு விஞ்ஞான வளர்ச்சி ஒரு முக்கிய காரணமாக […]

இனி கைதானால் ரத்த சொந்தங்களின் மொபைலுக்கு SMS வரும் – சைபர் நெட்வொர்க்கில் வெற்றி கண்டு வரும் தமிழக காவல் துறை

நீதித்துறை, காவல்துறை, சிறைத்துறை மற்றும் தடயஅறிவியல் ஆகிய துறைகளை சைபர் நெட்வொர்க்கில் ஒருங்கிணைக்கும் புதுவித முயற்சியில் தமிழக காவல் துறை தொடர்ந்து வெற்றி கண்டு வருகிறது. நாடு முழுவதும் குற்றம் மற்றும் குற்றவாளிகளைக் கண்காணிக்கும் ‘CCTNS’ எனப்படும் கிரைம் அண்ட் கிரிமினல் ட்ராக்கிங் நெட் வொர்க் சிஸ்டத்தை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் இத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் […]

“நாளைய உலகம் நமதாகட்டும்”- தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் நடத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி..

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்  சார்பாக முஸ்லிம் முஹல்லாக்களில்  உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் நோக்கம் வளரும் தலைமுறைக்கு முறையான வழிமுறைகளை வழங்கி, வழிகாட்டுமலும் கொடுத்து சிறந்த முஸ்லிம் சமுதாயமாக உருவாக்குவதாகும். இந்நிகழ்ச்சி மிக குறிப்பாக 12ம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கும் மாணவச் செல்வங்களுக்கு பலன் உள்ளதாக இருக்கும். ஆகையால் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி “நாளைய உலகம் நமதாகட்டும்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக நடத்தப்படுகிறது. இத்துடன் நடைபெற […]

நெடுஞ்சாலை டாஸ்மாக் கடைகள் மூடுவது சம்பந்தமாக இன்று உச்ச நீதிமன்றம் விசாரணை – கீழக்கரை நெடுஞ்சாலை டாஸ்மாக் இழுத்து மூட உத்தரவு வருமா..?

கீழக்கரை – இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் மின்சார வாரிய அலுவலகம் அருகே அமைந்திருக்கும் டாஸ்மாக் மதுபானக் கடையால் (கடை எண் : 6983), இந்தப் பகுதியில் அதிகளவில் சாலை விபத்துகள் நடைபெற்று வருகிறது. கடந்த 16.12.2016 அன்று உச்ச நீதிமன்றமும் மார்ச் 31 க்குள்  மாநில நெடுசாலைகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக அகற்ற ஆணை பிறப்பித்துள்ளது. அதே போல் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கடந்த ஐந்தாண்டுகளில் ஏராளமான மனுக்களை சமூக ஆர்வலர்கள் பலரும் செய்துள்ளனர். ஆனால் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை […]

வங்கிகளில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பண பரிவர்த்தனை செய்தால் ரூ. 2 லட்சம் அபராதம் – ஏப்ரல் 1 முதல் அமலாகிறது

இந்தியா முழுவதும் கருப்புப் பணப் புழக்கத்தை ஒழிக்க மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பரில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என திடீரென அறிவித்து திண்டாட்டத்தை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து ரொக்க பணப்பரிமாற்றத்திற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு தொடர்ந்து விதித்து வருகிறது. மத்திய பட்ஜெட் அறிவிப்பின் போது 3 லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்க பணப் பரிவர்த்தனையில் ஈடுபடக் கூடாது என நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்து இருந்தார். அவ்வாறு பண […]

லட்சக்கணக்கான புத்தகங்களுடன் செயல்படும் ‘தேசிய மின்னணு நூலகம்’ – புத்தக பிரியர்கள் இனி தடையின்றி தரவிறக்கம் செய்யலாம்

மத்திய மனிதவள அமைச்சகத்தின் சார்பில் “தேசிய மின்னணு நூலகம்” துவங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் தொழிநுட்ப வசதிகளை பயன்படுத்தி அனைவருக்கும் கல்வி என்ற உயரிய நோக்கோடு லட்சக்கணக்கான புத்தகங்களை கொண்டு செயல் பட்டு வருகிறது. ஆரம்ப கல்வி நிலையிலிருந்து முதுநிலைக் கல்வி வரை கற்பவர்கள் பயனடையும் வகையில் புத்தகங்களை தொகுத்துள்ளனர். மேலும் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்பவர்களும், புத்தக பிரியர்களும் தங்களுக்கு தேவையான புத்தகங்களை விரைவாக, கால தாமதமின்றி வாசிக்க முடிகிறது. 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் எழுதிய 7 லட்சத்திற்கும் […]

புனித ஹஜ் பயணத்துக்கான மாநில வாரியான இட ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு – தமிழகத்தில் இருந்து ஹஜ் கமிட்டி மூலம் 3189 பேர் பயணிக்கலாம்

இந்திய அரசின் மத்திய சிறுபான்மை நல அமைச்சகத்தின் புனித ஹஜ் பயணத்துக்கான மாநில வாரியான இட ஒதுக்கீடு பட்டியல் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதனை இந்திய ஹஜ் கமிட்டி இணைய தளத்தில் பார்வையிடலாம். அந்த சுற்றறிக்கையில் மொத்த இந்திய மக்கள் தொகையில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 17,22,45,311 என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இந்திய மாநிலங்கள் அனைத்துக்கும் சேர்த்து, யூனியன் பிரதேசங்கள் உள்பட புனித ஹஜ் பயணத்திற்கான இந்த வருடத்திற்கான மொத்த இட ஒதுக்கீடு 1,23,700 என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் தமிகத்தில் இஸ்லாமியர்களின் […]

வங்கி மோசடியில் ஐசிஐசிஐ முதலிடம் பிடித்து சாதனை – பாரத ஸ்டேட் வங்கிக்கு இரண்டாமிடம் – ரிசர்வ் வங்கி பட்டியல் வெளியிட்டது

இந்தியா முழுவதும் வங்கி கொள்கைகளின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வங்கி கணக்கே வேண்டாம் என முடிவுக்கு கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் வங்கிகளில் நடந்த மோசடிகள் பட்டியலை ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஐசிஐசிஐ முதலிடத்தில் உள்ளது. நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) இரண்டாவது இடத்தில் உள்ளது. […]

ஆசியாவின் முதல் டீசல் இன்ஜின் ரயில் ஓட்டுநர் மும்தாஸுக்கு ‘மகளிர் சக்தி விருது’ – மகளிர் தினத்தில் ஜனாதிபதி வழங்கி கவுரவித்தார்.

ஆண்கள் மட்டுமே கோலோய்ச்சும் பல்வேறு துறைகளில் பெண்களும் தங்கள் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றனர். ஆசியாவிலேயே முதல் பெண்மணியாக டீசல் இன்ஜின் ரயிலை இயக்கி சாதனை படைத்து வரும் முஸ்லீம் பெண்மணி மும்தாஸுக்கு மகளிர் சக்தி விருதினை மகளிர் தினமான மார்ச் 8 அன்று குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கி கவுரவித்தார். தற்போது 43 வயதை தொட்டு விட்ட மும்பை நகரத்தை சேர்ந்த மும்தாஸ் சிறுவயது முதலே […]

வங்கிகளில் இலட்சக்கணக்கில் பணம் டெபாசிட் செய்து முறையான பதில் அளிக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை உறுதி – வருமான வரித்துறை அறிவிப்பு

இந்திய அரசின் ரூ.500, ரூ.1000 செல்லாது என்கிற அதிரடி அறிவிப்பிற்கு பின்னர் வங்கிகளில் ஏகத்துக்கு இலட்சக்கணக்கில் பணம் டெபாசிட் செய்தவர்கள் முறையான பதில் அளிக்காமல் தவறும் போது அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இது சம்பந்தமாக வருமான வரித்துறை அலுவலகம் நேற்று 07.03.17 செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு வங்கிகளில் தங்கள் கணக்கில், பெருந்தொகையை செலுத்தியவர்கள் அது குறித்து வருமான வரித் துறைக்கு http://incometaxindiaefiling.gov.in என்ற […]

இனி 4 முறைக்கு மேல் பண பரிவர்த்தனை செய்தால் ரூ.150 வரை வசூலிக்கப்படும் – தனியார் வங்கிகள் அறிவிப்பு

கடந்த நவம்பர் 8-ஆம் தேதி நள்ளிரவு முதல் பழைய 500, 1000 ரூபாய்க்கு தடை விதிக்கப்பட்டது. இந்த பண மதிப்பிழப்பு பிரச்சனைக்கு பிறகு பணப்புழக்கம் மீண்டும் சீரடைய தொடங்கியுள்ளதால், தனியார் வங்கிகள் பரிவர்த்தணைகளுக்கு வசூலிக்கும் குறைந்தபட்ச அளவு கட்டணத்தை மீண்டும் வசூலிக்க தொடங்கியுள்ளது. அதன் படி, ஒரு மாதத்திற்கு ஒருவர் தனது கணக்கில் 4 முறை மட்டுமே வங்கிகளுக்கு சேவை கட்டணம் ஏதும் செலுத்தாமல், பணத்தை வங்கிகளில் வைப்பு வைக்கலாம் அல்லது பணத்தை எடுக்கலாம். அதற்கு மேல் […]

வெளிநாடு வாழ் இந்தியர்கள் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள கடைசி வாய்ப்பு – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வெளிநாடு வாழ் இந்தியர்கள் செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள கடைசி வாய்ப்பினை இந்திய ரிசர்வ் வங்கி அளித்து இருக்கிறது. இதற்கான கடைசி நாள் மார்ச் 31-ந்தேதி என தீர்க்கமாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:- கடந்த ஆண்டு நவம்பர் 9-ந்தேதியில் இருந்து டிசம்பர் 30-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் வெளிநாட்டில் இருந்த என்.ஆர்.ஐ.கள் மற்றும் அப்போது வெளிநாட்டுக்கு சென்றிருந்த இந்தியர்களுக்கு (இந்தியாவில் வசிப்பவர்கள்) செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை […]

ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார்..

இன்று ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார். கடந்த வாரங்களில் ஜல்லிக்கட்டுகாக இளைஞர் சமுதாயம் வீதி இறங்கி போராடிய போது பல சமூக அமைப்புகளும் களத்தில் இறங்கினர். அதில் சில சமூக அமைப்பினர் ஒரு படி மேல் சென்று தங்களுடைய கோரிக்கைகளை நேரடியாக இந்திய ஜனாதிபதிக்கு தபால் மூலம் அனுப்பி வைத்தனர்.  அந்த வகையில் கீழக்கரையில் மக்கள் நலப் பாதுகாப்பு கழகம் மூலம் கீழக்கரை மக்கள் களத்தின் சட்டப் போராளிகள் குழுமம் தங்களுடைய கோரிக்கையை […]

2017ம் ஆண்டுக்கான ஹஜ் விண்ணப்பம்-ஒரு அறிவிப்பு

🕋 *ஹஜ் 2017/1438* 🕋 ✈️ இவ் வருடம் அதாவது ஹிஜ்ரீ 1438 = 2017 க் கான ஹஜ் யாத்திரை விண்ணப்பங்கள் அதாவது Haj Application Form இன்ஷா அல்லாஹ் *2/1/2017 திங்கள்கிழமை* முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது . ✈️ அதாவது ஹஜ் விண்ணப்பங்களை 1- 13/7 ரோசி டவர் நுங்கம்பாக்கம் , சென்னை – யில் நேரிலோ …… அல்லது 2- www.hajcommittee.gov. in என்ற வெப்சைட் மூலம் பதிவிறக்கம் செய்தோ….. ……. […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!