பல்லாண்டு காலமாக முஸ்லிம்களுக்கு சொந்தமான பாபர் மசூதி இருந்த இடம் 2.77 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அந்த நிலத்தில் இருந்த பாபர் மசூதி ஹிந்துத்துவா அமைப்பினரால் ராமர் பிறந்த இடம் என கூறி இடிக்க முயன்ற போது அச்சமயம் ஆட்சியில் இருந்த மத்திய அரசு தடுக்கும் நடவடிக்கை எடுக்காததால், அந்த மசூதி டிசம்பர் 6 1992 அன்று இடிக்கப்பட்டு தரைமட்டம் ஆனது. அந்த நிகழ்வைத் தொடர்ந்து நிலத்திற்கு பல்வேறு தரப்பில் சொந்தம் கொண்டாடியதால் வழக்கை விசாரித்த அலகாபாத் […]
Category: தேசிய செய்திகள்
இந்தியாவில் இஸ்லாமிய வங்கி கோரிக்கை நிராகரிப்பு.
இந்தியாவில் இஸ்லாமிய வங்கிகள் அறிமுகப்படுத்துவதற்காக வைத்துள்ள கோரிக்கையை ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. வங்கி மற்றும் நிதி சேவைகள் சமமாகவும்,விரிவாகவும் அனைத்து குடிமக்கள் அடையும் வகையில் அமைத்து இருப்பதால் இஸ்லாமிய வங்கி கோரிக்கையை செயல்படுத்த போவதில்லை என்று தகவல் அறியும் சட்டத்தின் (RTI) கீழ் பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (PTI) சார்பாக செய்யப்பட்ட மனுவிற்கு மத்திய ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது. இது குறித்து இந்தியன் இஸ்லாமிக் பைனான்ஸ் செண்டரின் (ICFC) […]
மிரட்டலுக்கு பணிய போவதில்லை-பத்திரிக்கையாளர் ரோகிணி
சில தினங்களுக்கு முன்பாக தி வயர் (The wire) இணையத்தில் கோல்டன் டச் ஆஃப் ஜே ஷா (Golden Touch of Jay Shah) என்ற தலைப்பில் பத்திரிக்கையாளர் ரோகிணி கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த செய்தி நாட்டில் புயலை கிளப்பியதோடு பாஜக மீது கடும் விமர்சனங்களையும் உருவாக்கியுள்ளது. அமிட்ஷா வின் மகன் நடத்தி வரும் நிறுவனத்தில் 2014- 2015 ல் 50 ஆயிரம் வருவாயில் இருந்து 2015-2016 ல் 80.5 கோடியாக உயர்ந்துள்ளதாக அந்த செய்திக் […]
பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் இரண்டு நாள் உரிமை முழக்க மாநாடு சிறப்பாக நடந்தேறியது..
பாப்புலர் ஃபிரண்ட் அமைப்பு சார்பாக “நாங்கள் சொல்வது என்ன” என்கின்ற அடிப்படையில் நாடு முழுவதும் உரிமை முழக்க மாநாடு எற்பாடு செய்துள்ளனர். முதல்கட்டமாக 07.10.2017 அன்று மதுரையிலும் 08.10.2017 அன்று சென்னையிலும் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக தொல்.திருமாவளவன், திருமுருகன் காந்தி, வேல்முருகன், பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் தேசிய தவைவர்கள் மற்றும் பல இஸ்லாமிய அமைப்பைச் சார்ந்த பெரும்பாலான தலைவர்கள் கலந்து கொண்டு பாஸிசத்துக்கு எதிராக தங்கள் கருத்துகளை பதிவு செய்தார்கள். “நாங்கள் சொல்வது என்ன” என்கின்ற அடிப்படையில் […]
தீவிரவாதி என்று ஆசிரியர்கள் சித்தரித்ததால் “நான் தீவிரவாதி அல்ல நான் ஒரு மாணவன்” என்று முதல்வரிடம் கூறிய தற்கொலைக்கு முயற்சித்த முஸ்லிம் மாணவன்.
உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள டெல்லி பப்லிக் ஸ்கூலில் 11 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த சம்பவம் மிகுந்த பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் அந்த மாணவன் முஸ்லிம் என்ற ஒரே காரணத்தால் சக மாணவனுக்கு மத்தியில் தீவிரவாதி என்று தொடர்ச்சியாக சித்தரிக்கப்பட்டதால் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கடந்த செப் 23 ஆம் தேதி அன்று இரவு அந்த மாணவன் தற்கொலைக்கான காரணத்தை […]
*கீழக்கரை தாலுகா மருத்துவமனையில் பணி நேரத்தில் மாயமாகும் மருத்துவர்கள் – நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் நல பாதுகாப்புக் கழகம் மற்றும் பலர் மனு*
கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனையில் பணி நேரத்தில் வேலை செய்யாமல் மாயமாகும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல தனி நபர்கள் இணைந்து மக்கள் குறை தீர்க்கும் நாளான இன்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கீழக்கரை தாலுகா அரசு பொது மருத்துவமனையில் பெரும்பாலான வேலை நேரங்களில் மருத்துவர்கள் இல்லாததால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கடுமையான மன வேதனைக்கு உள்ளாகி […]
நடிகர் கமல் மற்றும் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் திடீர் சந்திப்பு..
சென்னையில் இன்று டில்லியின் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கெஜ்ரிவால் இன்று 21-09-207 அன்று நடிகர் கமலஹாசன் இல்லத்தில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது தேசிய தலைவர்கள் சஞ்சய் சிங், அசுதோஷ் சோம்நாத், பாரதி, பிரிதிவி ரெட்டி ஆகியோர் உடனனிருந்தனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடிகர் கமலஹாசனின் அரசியல் பிரவேசம் டிவிட்டர் தளம் மூலமாக தொடங்கி அன்றாட தமிழ்நாடு அரசியலையும் ஆளும் கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து வந்தார். அதைத் தொடர்ந்து தனியார் தொலைகாட்சியில் […]
சுற்று சூழலை பாதுகாக்குமாஅல்லது பாழாக்குமா? நதிகளை பாதுகாக்கும் பேரணி-
நதிகளை பாதுகாப்போம் என்ற அடிப்படையில் சத்குரு என்று அழைக்கப்படும் ஈஷா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கன்னியாகுமரி முதல் ஹிமாலய வரை வாகனம் மூலம் விழிப்புணர்வு பேரணி ஒன்றை மேற்கொண்டுள்ளார். தற்போதய சூழலில் இது போன்ற விழிப்புணர்வு பேரணி பாராட்டுக்குறியதாக இருந்தாலும் அவர் பேரணிக்காக தேர்ந்தெடுத்த நான்கு சக்கர பென்ஸ் (Benz G63 AMG) வாகனம் சுற்றுப்புறச்சூழலை அதிக அளவில் பாதிக்கும் அளவுக்கு எரிவாயு செலவாகும் என்பதால் மக்கள் மத்தியில் விமர்சனங்களும் எழுந்துள்ளது. நதிக்கரை ஓரத்தில் மரங்களை நடுவதன் மூலம் […]
*இராமேஸ்வரம் சென்னை இரயிலில் கல்வீச்சு*
இன்று (13-08-2017) இராமேஸ்வரத்தில் இருந்து சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்த அதிவிரைவு இரயிலில் கல் வீசப்பட்டது. விரைவு ரெயில் பரமக்குடி ஸ்டேஷன் தாண்டிய ஒரு சில வினாடிகளில் பயங்கர சப்தத்துடன் கல் வீசப்பட்டு S6 பெட்டியில் வந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இதுகுறித்து பயணசீட்டு பரிசோதகரிடம் கேட்டப்போது அவ்வப்போது இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதாகவும், சிலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது என்றும் காவல்துறை சிலரை கைது செய்துள்ளார்கள் என்றும் கூறினார் . —
ஒன்றுக்கு மேல் பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அபராதம்.
இந்தியாவில் தொழில் தொடங்கவும், பண பரிவர்த்தனை போன்ற காரியங்களுக்கு பான் கார்டு மிகவும் அவசியமான ஒன்றாக இருந்து வருகிறது. தற்போது பான் கார்டு எடுப்பதற்காக விண்ணப்பங்கள் குவிந்து வரும் நிலையில் நாடு முழுவதும் 11,44,211 லட்சம் போலி பான் கார்டு எண்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் சந்தோஷ் குமார் கேங்க்வார் ராஜ்ய சபாவில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார். ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகள் வைத்துக்கொள்ளக்கூடாது என்பதே பொது விதி என்பதால் உடணடியாக ஒப்படைக்க வேண்டும் என்று […]
ரயிலில் விற்க்கப்பட்ட சைவ பிரியாணியில் செத்து கிடந்த பல்லி…
சமீபத்தில் மத்திய ரயில் நிலையங்கள் குறித்து தணிக்கை குழு பாராளுமன்றத்தில் சமர்பித்த ஆய்வு அறிக்கையில், ரயிலில் விற்கப்படும் உணவு பொருட்கள் மனிதர்கள் உண்ணுவதற்கு ஏதுவானதாக இல்லை என்கின்ற தகவல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை உறுதி செய்யும் விதமாக பூர்வா ரயில் எக்ஸ்பிரசில் விற்கப்பட்ட உணவில் பல்லி ஒன்று இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஜார்கந்தில் இருந்து யாத்ரிகர்களை ஏற்றிச் சென்ற ரயிலில் விற்கப்பட்ட சைவ பிரியாணியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடனே பயணிகள் ரயில் […]
டெல்லி அரசு திட்டங்களின் செயல்பாடுகளை மொபைல் செயலி மூலம் அறிந்து கொள்ள முடியும்-சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி
டெல்லியில் அரசு திட்டங்களின் நகர்வுகளை மக்கள் உடனடியாக அறிந்து கொள்ளும் பொருட்டு அலைபேசி செயலியை (Mobile App) உருவாக்க ஆம் ஆத்மி கட்சி அரசு திட்டமிட்டுள்ளது. எதிர் வரும் அக்டோபர் முதல் மக்கள் நல பணிகள்,ஊரக வளர்ச்சி திட்டங்கள் போன்ற செயல்பாடுகளை மொபைல் ஆப் மூலம் தெறிந்து கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி அரசு அறிவித்த திட்டங்கள் சம்பந்தமான் தகவல்களை ஆன் லைனில் பொது தளத்தில் பதிவு செய்வதன் மூலம் டெல்லி அரசின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த […]
மாட்டின் மீது இரக்கம் காட்டும் இதயம் மனிதன் மீது இல்லை-நாடு முழுவதும் வலுக்கும் போராட்டம்
மாட்டின் மீது இரக்கம் காட்டும் போது என் பெயரில் இரக்கம் இல்லை (Not In MyName) என்று பதாகைகள் ஏந்தி சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் கொலைச் சம்பவங்களுக்கு எதிராக சமூக ஆர்வலர்கள் தலை நகர் டில்லியிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டத்தை நடத்தியுள்ளனர். கடந்த மூன்று வருடங்களில் 28 பேருக்கு மேல் கொன்று குவித்திள்ள சங்பரிவார் கும்பல் இன்னும் எத்தனை பேரை கொன்று குவிக்க உள்ளதோ என்ற அச்சம் அனைவர் மனதிலும் பற்றியுள்ளது. இந்த போராட்டம் சமூக […]
சங்க்பரிவாரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக அமைந்த இஸ்லாமிய மாணவர் அமைப்பு சார்பாக நடந்த இஃப்தார் நிகழ்ச்சி…
கடந்த வருடம் ஜவர்ஹர்லால் பல்கலை கழகத்தில் MSC (பையோடெக்னாலஜி) முதலாம் ஆண்டு படித்து வந்த நஜீப் முஹம்மது என்ற மாணவனுக்கும் ABVP அமைப்பினருக்கும் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து 15 அக்டோபர் 2016 அன்று விடுதியில் இருந்து மர்மமான முறையில் காணாமல் போய்விட்டார். அதனை தொடர்ந்து தாத்ரியில் வசித்து வந்த முஹம்மது அஹ்லாக் என்ற முதியவரை மாட்டிறைச்சி வைத்து இருந்ததாக பசு காவலர்கள் என்று சொல்லப்படும் காவி பயங்கரவாதிகள் கொடூரமான முறையில் கொலை செய்தனர். அதே போல் […]
ரத்த தானத்தினை வலியுறுத்தி 11டன் லாரியை ஒரு விரலால் இழுத்த யோகா மாஸ்டர்..
கோவில்பட்டி சரமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஸ்குமார். யோகா மாஸ்டரான இவர் ரத்த தானத்தினை வலியுறுத்து விதமாகவும், 18 வயது நிரம்பிய அனைவரும் 6 மாதத்திற்கு ஒரு முறை ரத்த தானம் செய்ய வேண்டும், ரத்த தானம் செய்வதன் நன்மைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 11 டன் எடை கொண்ட லாரியை தனது ஒரு விரலால் இழுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் சாதனை நிகழ்வினை மேற்கொண்டார். கோவில்பட்டி காந்திமைதானத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வுக்கு தமிழ்நாடு […]
கவிக்கோ அப்துர் ரஹ்மான் புனித ரமலான் மாதத்தில் இறைவனடி சேர்ந்தார் ..
தமிழகத்தின் மிகச் சிறந்த கவிஞர்களில் ஓருவரான கவிக்கோ அப்துர்ரஹ்மான் திடீர் மறைவு. அவருடைய மறைவு நிச்சயமாக இலக்கிய உலகிற்கு பெரும் இழப்பு என்றே கூறலாம். கவிக்கோ உடல்நலக்குறைவால் இன்று (02-06-17) இன்று காலமானார். கவிக்கோ பற்றிய வாழ்கை குறிப்பு.. அப்துல் ரகுமான் ,(பிறப்பு: நவம்பர் 9, 1937), தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும் ஆவார். கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார். ‘வானம்பாடி’ இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர். எழுதுபவர்களின் தலைவாயிலில் தம் கவிதை வெளியீடுகளின் வாயிலாகப் புதுக்கவிதைத் துறையில் […]
சமீபத்திய மும்பை தீபாலி கொலை வழக்கு – பெற்றோர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் ஒரு எச்சரிக்கை மணி..
கடந்த வாரம் மும்பையில் தீபாலி என்ற பெண்மணி உடம்பில் பல முறை குத்தப்பட்டு பிணமாக அவருடைய வீட்டிலிருந்து மீட்கபட்டிருக்கிறார். இவர் தயானேஸ்வர் என்ற பிரபல போலிஸ் அதிகாரியின் மனைவியாவார். கொலையுண்டவரின் கணவர் கடந்த புதன் அன்று மாலை 2 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால் அழைப்பு மணி அடித்தும் திறக்காததால் மனைவியும் மகனும் சினிமாவுக்கு சென்றிருப்பார்கள் என்று எண்ணி சாயங்காலம் வரை காந்திருந்துள்ளர். பின்னர் அலைபேசியிலும் மனைவியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதால் தன்னிடம் இருந்த மாற்று […]
பொதுத்தேர்வு முடிவுகளும்… பெற்றோர்களின் ஆதங்கமும்..என்று தீரும் பிள்ளைகளை வதைக்கும் இந்த மதிப்பெண் மோகம்..
சமீபத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. எந்த ஒரு தேர்வுக்கும் வெற்றியும் தோல்வியும் சகஜம் என்பது போல் பல மாணவச் செல்வங்கள் வெற்றி பெற்று அடுத்த நிலைக்கு சென்றுள்ளார்கள். இன்னும் சில மாணவச் செல்வங்களோ அடுத்த நிலைக்கு செல்வதற்கு குறுகிய கால அவகாசம் எடுத்துள்ளர்கள். ஆனால் இவர்கள் எல்லாம் தோல்வி அடைந்தவர்கள் என்பதை விட அடுத்த நிலையை அடைய சீரிய திட்டம் தீட்டக் கூடியவர்கள் என்று கூட நாம் எடுத்துக் […]
மாட்டு மூத்திரத்தைக் குடிக்க ஆதரிக்கும் மத்திய அரசு… மாட்டிறைச்சிக்கு தடை..
மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு மூன்று வருடத்தை நிறைவு செய்யும் பரிசாக சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் விதமாக சுற்றுப் புற சூழல் அமைச்சகம் மூலம் பசு, எருமை, ஒட்டகம் போன்ற மிருகங்களை இறைச்சிக்காக வெட்டுவதற்கும், விற்பதற்கும் தடை விதித்துள்ளது. இது தனி மனிதனின் அடிப்படை உரிமையை பறிக்கும் விதமாகும். ஒரு மனிதன் தான் எதை உண்ண வேண்டும் என்பதை அரசாங்கம் தான் முடிவு செய்ய வேண்டிய மிக மோசமன நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான். இந்த சட்டம் […]
இந்தியாவிலேயே புதிய வகை நண்டு இனத்தை கண்டுபிடித்த இளம் விலங்கியல் முஸ்லிம் பர்வீன் பர்ஸான அப்ஸர்…
வட கிழக்கு மாநிலமான மேகாலாயாவின் குகையில் வாழும் புதிய வகை நண்டு இனத்தை இளம் விஞ்ஞானி ஒருவர் இந்தியாவிலேயே முதல் முறையாக கண்டறிந்துள்ளார். இமய மலையை தழுவியிருக்கும் மேகாலயா பற்றி சொல்லும் போது அதன் வசீகரத்தன்மை கொண்ட அழகு நிறந்த அடர்த்தியான காடுகள் மற்றும் நீர் நிலைகளை குறிப்பிடாமல் இருக்க முடியாது. உலகில் மொத்தம் 34 பகுதிகள் பல்லுயிர்களின் வாழ்விடமாக கருதப்படுகிறது. அதில் இந்தியாவில் உள்ள நான்கு இடங்களில் மேகாலயாவும் பல்லுயிர்கள் வாழும் பகுதிகளில் ஒன்றாக அறியப்படுகிறது. […]
You must be logged in to post a comment.