கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி தொழில் உரிமம் கட்டணம் புதுப்பித்தல் மற்றும் புதிய உரிமம் பெறுதல் தொடர்பான சிறப்பு முகாம் சங்கர் நகர் பகுதி குடிநீர் மேல்நிலைத் தொட்டி காவலர் குடியிருப்பு அரையில் மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் நடைபெறுகிறது இம்முகாமில் புதிய சொத்து வரியை அனிபா பெற்றுக்கொண்டார், நடைபெறும் முகாமில் வருவாய் ஆய்வாளர்கள் சீனிவாசன், காயத்ரி, சுகாதார ஆய்வாளர்கள் ரவிசங்கர் மற்றும் மகாராஜா, வருவாய் உதவியாளர் கார்த்திக் மற்றும் மேட்டுப்பாளையம் நகராட்சி பணியாளர்கள் உடன் […]
Category: தேசிய செய்திகள்
புது மடத்தில் அரசு நிலத்தை தனிநபர் சொந்தமாக்க முயற்சி.!
புது மடத்தில் அரசு நிலத்தை தனிநபர் சொந்தமாக்க முயற்சி.! தொழுகை விடாமல் இடையூறு செய்வதால் ஜமாத்தார்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு .!! ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் புதுமடம் கிராம மக்கள் மஸ்ஜிதே நூர் ஜமாத் நிர்வாகத்திற்கு உட்பட்டு சுமார் 500க்கும் மேற்பட்டோர் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த கிராம மக்கள் மீனவத் தொழில் செய்து வருகின்றனர் பெரும்பாலானோர் இஸ்லாமியர்களாக இருப்பதால் பெருநாள் தொழுகை தொழுவதற்கு போதுமான இடவசதி இல்லாத நிலையில் அரசுக்கு சொந்தமான நிலத்தின் 33 […]
தேவகோட்டையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.!
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பாக மாவட்ட தலைவர் குமரேசன் தலைமையில் ஊழியர்களுக்கு எதிராக செயல்படுதல், சத்துணவு ஊழியர்களை ஒருமையில் பேசுதல், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் – ஐ கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் பல்வேறு சங்கத்தின் மாவட்ட, வட்டார பொறுப்பாளர்கள், வட்டார தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க உறுப்பினர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
பேராவூர் ஊராட்சியை ராமநாதபுரம் நகராட்சியோடு இணைக்க கடும் எதிர்ப்பு :
பேராவூர் ஊராட்சியை ராமநாதபுரம் நகராட்சியோடு இணைக்க கடும் எதிர்ப்பு : திட்டத்தை கைவிடக் கோரி ஏராளமான பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை ராமநாதபுரம் அருகே உள்ள பேராவூர் ஊராட்சியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பேராவூர் ஊராட்சியை ராமநாதபுரம் நகராட்சியோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர் . பேராவூர் ஊராட்சியை ராமநாதபுரம் நகராட்சியோடு இணைத்தால் தங்களுக்கு 100 நாள் வேலை திட்டம் கிடைக்காது, கிராமப்புற ஊராட்சிக்கு […]
மாற்றுத்திறனாளி குடும்பத்தோடு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு:
மாற்றுத்திறனாளி குடும்பத்தோடு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு: கமுதி பேருந்து நிலையத்தில் தரைக்கடை வைத்திருக்கும் அவருக்கு கூடுதல் வாடகை நிர்ணயித்திருப்பதாக குற்றச்சாட்டு..! ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான். இவர் கமுதி பேருந்து நிலையத்தில் தரைக்கடை வைத்து நடத்தி வருகிறார்.இந்த நிலையில் இன்று அவர் திடீரென தன்னுடைய குடும்பத்தோடு ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து கூறிய அவர், கமுதி பேருந்து நிலையத்தில் தரைக்கடை […]
கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவுக்கு பைபர் படகுகளை அனுமதிக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.!
ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் கச்சத்தீவு திருவிழாவிற்கும் கச்சதீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு இயந்திரம் பொருத்திய நாட்டுப்படகில் சங்குமால் பகுதியை சேர்ந்த பட்டங்கட்டி சமூதாயத்தை சேர்ந்த மீனவ மக்கள் சென்று வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது காலத்திற்கு ஏற்ப நவீன முறையில் இயந்திரம் பொருத்திய பைபர் படகுகளுக்கு மாறிவிட்டதால் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பைபர் படகில் கச்சத்தீவு திருவிழா செல்வதற்கு தொடரப்பட்ட வழக்கில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் பரிசீலனை செய்து அனுமதிக்க […]
தஞ்சை ஹோட்டலில் பணிபுரிய பெண்களுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் வழங்கி மகளிர் தின வாழ்த்துகள் கூறிய தஞ்சை ஜோதி அறக்கட்டளை செயலாளர் .!
தஞ்சையில் வசித்து வரும் தஞ்சை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபுராஜ்குமார் தனது அலுவலக பணியாளர்களுடன் தஞ்சையில் உள்ள ஹோட்டலுக்கு உணவருந்த சென்றார். ஹோட்டலில் இலை எடுக்கும் பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துகள் தெரிவிக்க வேண்டும் அதோடு அவர்களுக்கு கிஃபட் வழங்கி மகிழ்ச்சியில் திளைக்க வைக்க வேண்டும் என நினைத்தார். தாங்கள் சாப்பிட்ட இலைக்கு அடியில் கவர் ஒன்றை வைத்தார்.சாப்பிட்டு முடித்ததும் வழக்கம்போல் இலை எடுத்த பெண்கள் கவர் ஒன்று இருப்பதை கண்டு எடுப்போமா?வேண்டாமா? என யோசித்த நேரத்தில் […]
தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்.!
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம் ,பாதிரகுடி பஞ்சாயத்தில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இன் சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்மருத்துவ முகாமில் பெண்கள் நலன் தன்னார்வலர்கள் ராகினி மற்றும் பரமேஸ்வரி மாறனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக கலந்து கொண்டு தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக சர்க்கரை மற்றும் ரத்த கொதிப்பின் அளவை சரி பார்த்து மருத்துவ உதவி தேவைப்படுவார்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதாரத்தை அணுகுமாறு […]
விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக மகளிர் தின பொதுக்கூட்டம்.!
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் முன்னேற்றம் குறித்து பொதுக்கூட்டம் மற்றும் இப்தார் நிகழ்ச்சி விம் மாவட்ட தலைவி ரம்ஜான் பேகம் தலைமை தாங்கினார்.நகர் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தேவிபட்டினம் நகர் தலைவர் சமீரா வரவேற்புரை நிகழ்த்தினார். நஸ்ரின் ஆலீமா தொகுத்து வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த தமிழ் மாநில தலைவர் பாத்திமா கனி சிறப்புரை ஆற்றினர். மண்டல தலைவி கதீஜா பிவி கருத்துரை வழங்கினார். இறுதியாக […]
மேட்டுப்பாளையம் நஞ்சையா லிங்கம்மாள் கல்லூரியில் மகளிர் தின விழா .!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நஞ்சையா லிங்கம்மாள் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா மற்றும் பெண் ஆளுமைகளுக்கான பாராட்டு விழாவும் நடைபெற்றது விழாவுக்கு கல்லூரி நிர்வாக இணை அறங்காவலர் ஞானசேகரன் தலைமை வகித்தார். அறங்காவலர்கள் ஓய்வு பெற்ற காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெள்ளிங்கிரி. தம்பு. சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு விருந்தினர்களாகவும் விருது பெறுபவர்களாகவும் மேட்டுப்பாளையம் நகர மன்ற துணைத் தலைவர் அருள் வடிவு முனுசாமி. சவிதா மருத்துவமனை மருத்துவர் சசித்திரா தாமோதரன். தொழிலதிபர்அகிலா பாஸ்கர். பாடகர் ஸ்ரீநிதா. […]
தேசிய மகளிர் தின விழிப்புணர்வு நிகழ்வு.!
தேசிய மகளிர் தின விழாவை முன்னிட்டு காரைக்குடி அரசுபொது தலைமை மருத்துவமனையில் பாவை அறக்கட்டளை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி வட்டார மருத்துவ அலுவலர் மரு.அருள் தாஸ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் காரைக்குடி மூத்த வழக்கறிஞர் செந்தமிழ் செல்வி கலந்து கொண்டு சமுதாயத்தில் பெண்கள் சந்திக்க கூடிய சவால்கள் பற்றியும் பெண்களுக்கான உரிமைகள் பற்றியும் உரை ஆற்றினார். மேலும் பெண்களின் முன்னேற்றத்திற்கான செயல்பாடுகளை துரிதப்படுத்துவோம் என்னும் கருத்தை வலியுறத்தும் விதமாக மனிதசங்கிலி அமைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த நிகழ்வினை […]
தேவகோட்டையில் வெறிநாய் கடித்து அதிமுக கவுன்சிலர் உள்ளிட்ட 8 பேர் காயம் .!
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பேருந்து நிலையம் அருகில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மற்றும் நடந்து சென்றவர்களை வெறி நாய் ஒன்று தொடர்ச்சியாக காலில் கடித்து விட்டு தப்பி ஓடியது . இதில் தேவகோட்டை நகராட்சி அதிமுக கவுன்சிலர் முத்தழகு (55) வினோத்குமார் (19) அர்ஜுனன் (55)அன்பரசன் (52) வீரசேகரன் (43) நிகேதன் (23) பகுருதீன் (60) விஜயா (38) உள்ளிட்ட 8 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாலையில் […]
தேவகோட்டையில் சர்வதேச மகளிர் தின விழிப்புணர் நிகழ்ச்சி.!
தேவகோட்டை அருகே ஆறாவயல் பாரத் பப்ளிக் பள்ளி சார்பாக சர்வதேச மகளிர் தின விழிப்புணர் ஊர்வலம் நடைபெற்றது. பள்ளி முதல்வர் அம்பிகா வரவேற்றார். சிவகங்கைத் தொகுதி எம்.எல்.ஏ.செந்தில்நாதன் தலைமை உரையாற்றி பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். தேவகோட்டை செயின்மேரிஸ் மேல்நிலைப்பள்ளியில் இருந்து தியாகிகள் பூங்கா வரை ஊர்வலம் சென்றது. மகளிர் நலன்,குழந்தைகள் நலன், மாணவ மாணவிகள் நலன் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தியும் கோஷமிட்டும் ஊர்வலம் சென்றனர். தேவகோட்டை நகர்மன்றத்தலைவர் சுந்தரலிங்கம் […]
காரமடை கண்ணார்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழா.!
கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி கண்ணார்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழா இந்த ஆண்டும் பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பாடல் பட்டிமன்றம் கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் பல்வேறு போட்டிகளும் காலை முதல் மாலை வரை நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலரும் சிக்காரம்பாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான ஞானசேகரன் கலந்துகொண்டு போட்டியில் கலந்து கொண்ட மாணவ […]
கீழக்கரை வடக்குத்தெரு நாசா சங்கத்தின் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி.!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வடக்குத்தெரு சமூக நல அமைப்பான நாசா சங்கத்தின் சார்பில் இஃப்தார் சந்திப்பு நிகழ்ச்சி நாசா மர்கஸில் நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் வடக்குத்தெரு மக்களின் வளர்ச்சி குறித்தும் , சமூக முன்னேற்றங்கள் குறித்தும் நாசா சங்கத்தின் பணிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக மக்கள் பணியாற்றிட நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து உங்களுடைய ஒத்துழைப்பை தருமாறு கேட்டுக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் கைதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.!
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகம் முன்பாக SDPI கட்சியின் அகில தேசிய தலைவர் MKபைஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், விடுதலை செய்யக்கோரியும் இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது, அதன் தொடர்ச்சியாக மாவட்ட தலைவர் ரியாஸ் கான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டம் பொது செயலாளர் முகம்மது சுலைமான் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல் கண்டன உரையாற்றினார் . இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தலைவர் பீர் மைதீன் மற்றும் கீழக்கரை […]
எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.!
SDPI கட்சியின் அகில தேசிய தலைவர் MKபைஜி அவர்கள் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், விடுதலை செய்யக்கோரியும் இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது, அதன் தொடர்ச்சியாக மதுரை தெற்குவாசல் (பள்ளிவாசல்) பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் மதுரை தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமை தாங்கினார், மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத்தின் தலைவர் M.அப்துல் காதர் முன்னிலை வகித்தார். மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது […]
அரசு மாணவர் விடுதியில் தூய்மை பணியாளராக பணியாற்றுபவர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படவில்லை என புகார்..!
ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் மாணவ மாணவியர் விடுதிகளில் துப்புரவு பணியாளராக பணியாற்ற 30 பேர் தேர்வு செய்யப்பட்டு, கடந்த 2013 ஆம் ஆண்டு தொகுப்பூதியம் ரூபாய் 2000 மும், அதனை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு ரூபாய் 4200 வும் சிறப்பு கால முறை ஊதியம் விகிதம் வழங்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் அதன் பிறகு தங்களது ஊதியம் உயர்த்தப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். […]
மேட்டுப்பாளையத்தில் மக்கள் இரவு நேரத்தில் திடீர் போராட்டம்
மேட்டுப்பாளையத்தில் மக்கள் இரவு நேரத்தில் திடீர் போராட்டம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் யு பி எல் பிளீச்சிங் தனியா நிறுவனம் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிறுவனத்தில் இருந்து வெளியாகும் கழிவு புகையால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் காற்றுடன் கலந்து பல துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது இந்த நிலையில் இன்று இரவு வெளியான கழிவு புகையால் மிகவும் சிரமத்திற்கு உள்ளான பொதுமக்கள் திடீரென்று தனியார் நிறுவனத்தின் முன்பு நிறுவனத்தை மூடக்கோரி திடீர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். இதனால பகுதியில் சிறிது […]
தமிழக ஆளுநர் ஆர்என் ரவி போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை சந்திப்பு.!
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், கிடப்பில் போடப்பட்டுள்ள இருநாட்டு மீனவர் பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் மீனவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மீனவர்களின் காத்திருப்பு போராட்ட பந்தலுக்கு வந்த தமிழக ஆளுநர் ஆர்என் ரவி மீனவர்களின் கோரிக்கை மனுவை பெற்று உடனடியாக […]