இன்று (08-06-2018) உலக பெருங்கடல் தினம்….

உலக பெருங்கடல் நாள் எனும் இந்நாளை ஒவ்வொரு வருடமும் ஜூன் 8ம் தேதி உலக நாடுகள் முலம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மாபெரும் தினத்தை 1992ம் ஆண்டு பிரேசிலின் இரியோ டி செனிரோ நகரில் இடம்பெற்ற பூமி உச்சி மாநாட்டில் முதன்முறையாக கனடா இத்தினத்திற்கான கோரிக்கையினை முன்வைத்ததை அடுத்து உலகெங்கும் அதிகாரபூர்வமற்ற வகையில் உலக கடல் தினம் கொண்டாடப்பட்டது. பின்னர் ஐக்கிய நாடுகள் 2008ம் ஆண்டு எங்களின் சமுத்திரங்களும் எங்களின் பொறுப்புகளும் “Our Ocean, Our […]

இராமேஸ்வரம் தனுஸ்கோடியில் கடல் சீற்றம் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை..

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தனுஸ்கோடியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால், தனுஸ்கோடி பகுதிக்கு செல்ல சுற்றுலாபயணிகளுக்கு தடை விதிக்க மாவட்ட நிர்வாகம் உத்திரவிடவேண்டும் என சமுகஆர்வலர்கள் கோரிக்கை. இராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஸ்கோடி  தென்கடல் பகுதி கடந்த சில நாட்களாக இயல்பாக இருந்த நிலையில், இன்று வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் சுமார் 20அடி உயரத்திற்கு ராட்ச அலை எழுகின்றது.  இதனால் நாட்டு படகு மீனவர்கள் யாரும் இன்று மீன்பிடிக்க செல்லாமல் படகை கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் […]

தவறான கருத்தை பரப்பும் டைம்ஸ் ஆஃப் இந்தியா….

கடந்த வாரம் முதல் அனைத்து முன்னனி ஊடகங்களிலும் பாரதிய ஜனதா கட்சிதான் அடுத்த பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கப்ப போகிறது அதுவே 73 சதவீத மக்களின் விருப்பமாக உள்ளது என ஒட்டுமொத்த இந்திய மக்களின் கருத்து போல் ஒரு போலியான பிம்பத்தை உருவாக்கி வருகின்றனர். இந்திய பெருநாடு என்பது 1.324 பில்லியன் மக்கள் தொகையுடன் 29 மாநிலம் மற்றும் 7 யுனியன் பிரதேசத்துடன் 22 அதிகாரபூர்வமான மொழிகளை உள்ளடக்கியது.  ஆனால் இந்த கருத்துக் கணிப்போ 9 […]

கீழக்கரை நகராட்சி நிர்வாகமும் சுகாதாரத்துறையும் விழித்துக் கொள்ள வேண்டிய தருணம்..

கீழக்கரை நகர் ரமலான் முழுவதும் பரபரப்பாக இருக்கும் மாதம்.  அதில் மிகவும் முக்கியமாக உணவகங்கள், அதிலும் மாலை நேரத்தில் நோன்பு திறப்பதற்காக விற்கப்படும் உணவு வகைகளான போண்டா, பஜ்ஜி, பஃப் போன்ற வகைகள் அமோகமாக விற்கப்படும். ஆனால் இந்த உணவு வகைகள் அனைத்தும் சுகாதார முறைப்படி விற்கப்படுகிறதா என்பது பெரிய கேள்வி குறியாகும்.  ஏற்கனவே கலப்பட பொருட்கள் மிகுந்து கிடக்கும் இந்த உணவு சந்தையில் ஆரோக்கியிமில்லாமல் சமைக்கப்படும் உணவுகளால் பொதுமக்கள் பல் வேறான நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே […]

பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் போலீசார் தீவிர சோதனை..

பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட காவல்துறை அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் மிரட்டல் வந்ததை தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவலர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். போலீஸாரின் இந்த கொடூர செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.  தூத்துக்குடியில் போலீஸாரின் வாகனங்கள் பல தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை  உடன்குடியில் இருந்து நெல்லை சென்ற அரசுப் […]

நாம் தமிழர் கட்சி சார்பாக சுட்டுக்கொல்லப்பட்ட மாவீரர்களுக்கு வீர வணக்கம்…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி சென்ற மக்கள் மீது அரசாங்கத்தால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு 12 பேர் பலியாயினர், நூற்றுக்கும் மேற்பட்டோர் பல இன்னல்களுக்கு ஆளாகினர். இச்செயலை கண்டிக்கும் விதமாகவும், மறைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் இன்று  (26/05/2018 மாலை 6:00 மணியளவில் கீழக்கரை புதியபேருந்துநிலையம் அருகில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி கீழக்கரை நாம்தமிழர்கட்சி சார்பாக வீரவணக்கம் செலுத்தபட்டது. இந்த நிகழ்வில் நாம்தமிழர்கட்சி நகர் செயலாளர் பிரபாகரன், இனைச்செயலாளர் ஹபில் […]

பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக கீழக்கரை மற்றும் தமிழகம் முழுவதும் கருப்பு பட்டை அணிந்து துப்பாக்கி சூட்டை கண்டித்து கண்டனம்..

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடி மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழகம்  முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட சார்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று  (25/05/2018)   கீழகரைநகர் பாப்புலர் ஃ பிராண்ட் சார்பாக ஜூம்மா பள்ளிகளில்  கருப்பு  பேஜ் அணிந்து விழிப்புணர்வு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக SDPI  தமிழ் மாநில பொது செயலாளர் பி. அப்துல் ஹமீது கலந்து கொண்டார்.  மேலும்  பாப்புலர் ஃபிராண்ட் கீழக்கரை நகர் […]

வண்ணாங்குண்டில் எதிரொலித்த கண்டன குரல்..

கடந்த ஒரு வாரமாகவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போர் களமாக மாறியுள்ளது.  இது சம்பந்தமாக இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 12 பேர் பலியாயினர்.  இந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து பல் வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கண்டனக் குரலை எழுப்பி வருகின்றனர். இதைத் தொடர்ந்து இன்று (25-05-2018) தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக இழுத்து மூடவும்,ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற அமைதி பேரணியில் காவல்துறை நடத்திய […]

தூத்துக்குடி அராஜகம் – பிரஸ் மற்றும் மீடியா ரிப்போர்டர்ஸ் யூனியன் தலைவர் கண்டனம்..

கடந்த பல வருடமாக தூத்துக்குடி ஸ்டார்லெட் ஆலைக்கு எதிராக நடைபெற்று வரும் அறப்போராட்டம், இரண்டு தினங்களுக்கு முன்னர் ஆட்சியாளர்களின் அராஜகப் போக்கால் போர்க்களமாக மாறியது.  இச்சம்பவத்தில் தங்களின் வாழ்வாதாரத்திற்காகவும், வருங்கால சந்ததியனருக்காக போராடிய மாணவி உட்பட அப்பாவி மக்கள் 12 பேர் ஈவு, இரக்கம் இன்றி சுட்டுக் கொல்லப்பட்டனர்.  இதற்கு காவல்துறை மற்றும் ஆட்சியாளர்களின் போக்கை கண்டித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் மு.சிவதமிழவன், தலைவர் .தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் (2963/CNI), வெளியிட்டுள்ள […]

நிபா வைரஸ் – ஒரு எச்சரிக்கை பதிவு..

நிபா வைரஸ், மிகவும் கொடூரமான வைரஸ் ஒன்று சத்தம் காட்டாமல் இந்தியாவிற்குள் நுழைந்து பல உயிர்களை பலி வாங்கியுள்ளது.  இதுவரை கேரளாவில் மட்டும் நிபா வைரஸ் தாக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்து விட்டனர். இந்த நிபா வைரஸ் என்பது என்ன அது எப்படி பரவுகிறது என்றும் அதனை எப்படி தடுக்கலாம் என்றும் தற்போது பார்க்கலாம். புனேயில் உள்ள வைரஸ் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் மையம் கேரளாவில் நிபா வைரஸ் பரவியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிபா வைரஸ் […]

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா உண்டியல்களுக்கு வக்பு வாரியம் சீல் வைப்பு…

இராமநாதபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.  அதைத் தொடர்ந்து வக்பு வாரியத்தில் உள்ள குளறுபடிகளை களையவும், வக்பு வாரிய ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்கவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு வஃபு வாரிய மாநில உதவி செயலாளர் பசிர்அகமது தலைமையில் ஏர்வாடி தர்ஹாவில் உள்ள உண்டியில்களுக்கு சீல் வைக்கப்பட்டது.  இச்சம்பவத்திற்கு முன்னர் தர்ஹாவில் உள்ள  அனைத்து கதவுளையும் அங்குள்ளவர்கள் மூடினர்.  ஆனால் RDO சுமன் தலைமையில் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் […]

மருத்துவமனை உள்ளே மருந்து கடை. நிர்பந்திக்கப்படும் நோயாளிகள்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்….

மருத்துவ மனைகளுக்குள்ளேயே மருந்துக்கடை வைத்துக் கொண்டு நோயாளிகளை அங்கேயே மருந்து வாங்கியாக வேண்டும் என்று வற்புறுத்தப்படும் ஒரு நடைமுறை பற்றி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்தே, நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு இது குறித்து மத்திய, மாநில, யூனியன் பிரதேசங்களின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் ஏற்கெனவே மருத்துவமனைகளில் அதீத கட்டணம் ஆகியவற்றில் தத்தளித்து வரும் […]

கீழை நியூஸ் சார்பாக நடைபெற்ற கட்டுரை போட்டி முடிவுகள் அறிவிப்பு..

கீழக்கரை சுற்றுவட்டாரத்தை சார்ந்த பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் இல்லத்தரசிகளுக்கான மாபெரும் கட்டுரை போட்டி கீழை நியூஸ் நிர்வாகம் சார்பாக கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது. இந்த கட்டுரை போட்டியில் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ செல்வங்களும், இல்லத்தரசிகளும் கலந்து கொண்டு கட்டுரைகளை அனுப்பி, மிக சிறப்பாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்து இருந்தனர். கீழை நியூஸ் சார்பாக நடைபெற்ற கட்டுரை போட்டிக்கு அறிவிக்கப்பட்டு இருந்த போட்டி தலைப்புகளும், பரிசுகளும் பின் வருமாறு […]

ஜாக்டோ – ஜியோ போராட்டம்: தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கைது..ஒருவர் மரணம்.. புகைப்படத் தொகுப்பு

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், 7 ஆவது ஊதியக்குழுவின் முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை போலீஸார் கைது செய்தனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை விரைவில் திரும்பப் பெற வேண்டும், 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், 7 ஆவது ஊதியக்குழுவின் முரண்பாடுகளை களைய வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை சீரமைக்க வேண்டும், சிறப்பு காலமுறை […]

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான இந்துத்துவ ரவுடிகளின் கொலைவெறித் தாக்குதலுக்கு SIO வன்மையான கண்டனம்…

முன்னாள் குடியரசு துணைத்தலைவர் டாக்டர் ஹமீத் அன்சாரி கலந்து கொள்ள இருந்த ஒரு நிகழ்ச்சியை சீர்குலைக்கும் விதமாக பல்கலைக்கழகத்திற்கு சிறிதும் தொடர்பில்லாத ஏ.பி.வி.பி, இந்து யுவ வாகினி குண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனை எதிர்த்து காவல்துறையில் புகார் கொடுக்கச் சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் மீது ஏ.பி.வி.பி, இந்து யுவ வாகினி ரவுடிகளுடன் சேர்ந்து காவல்துறையினரும் கொலைவெறியுடன் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் பல்கலைக்கழக மாணவர் மன்ற தலைவர் உட்பட 50க்கும் மேற்பட்ட மாணவர்கள்  படுகாயம் அடைந்து மருத்துவமனையில் […]

இரண்டு மாத விடுமுறையில் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காக செய்யவேண்டியது என்ன?…

கோடை விடுமுறை தொடங்கி விட்டது, Mobile,TV என்று வீணாக பொழுதை போக்காமல் கீழ்கண்ட செயல்களை குழந்தைகளை ஈடுபட வைக்க  முயற்சிக்கலாம், அவர்களையும் சிரமப்படுத்தாமல், பொழுது போக்காக, அவர்களே விரும்பி செய்யும்படி.. 1) உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு வங்கிக்கு உங்கள் குழந்தைகளை அழைத்தச்செல்லுங்கள், வங்கியில் உள்ள அனைத்து சலான்களையும் (Chalan) நிரப்புவது எப்படி என்பதை கற்றுக்கொடுங்கள், A.T.M ல் எவ்வாறு பணமெடுப்பது என்பதையும், சேமிப்பின் அவசியத்தையும் அக்கறையுடன் சொல்லிக்கொடுங்கள்.   2) அதுபோல அருகில் உள்ள […]

மரண தண்டனை சட்டம் ஒரு பக்கம்.. சில்மிஷம் மறுபக்கம்…

சென்னை  சூளைமேட்டில் வசிக்கும் மூன்றரை வயது சிறுமி,கண்ணகி தெருவில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார். அதே தெருவில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவிலுக்கு அருகே சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கோவில் பூசாரியான உதயகுமார் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். மிரண்டு போன குழந்தை வீட்டுக்கு வந்து அழுதுள்ளது. பெற்றோர் விசாரித்த போது கோவில் பூசாரி தன்னை கிள்ளிவிட்டதாக கூறியதால் உஷாரடைந்த பெற்றோர் சிறுமியிடம் நடந்த சம்பவங்களை விபரமாக கேட்டுள்ளனர். அந்த பூசாரி தொடர்ச்சியாக  இதுபோன்ற சில்மிஷத்தில் […]

பொய் வழக்கில் சிக்கவைக்கப்பட்ட ஐந்து செய்தியாளர்களை நீதிமன்றம் விடுதலை செய்தது!

தமிழகத்தில் உள்ள பல்வேறு சீனியர் ரிப்போர்ட்டர்களில் ம.பா.கெஜராஜ் என்பவரும் ஒருவர். இவர் கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் பத்திரிகையாளராக உள்ளார். அவற்றில் வேலூர் நாரதர், தந்தை பெரியாரை நிறுவனராகக்கொண்ட விடுதலை நாளேடு, பத்திரிகை துறையின் ஜாம்பாவான் ஷ்யாம் நடத்தி வந்த தராசு வார இதழ், ஆகியவற்றில் வேலூர் மாவட்ட செய்தியாளராகவும், குமுதம் ரிப்போர்டடர் இதழின் சீனியர் நிருபராக கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்ட செய்திகளையும் சேகரித்து எழுதி வந்தார். இந்நிலையில் 27.06.2010 தேதியிட்ட […]

அம்பேத்கரும் தப்பவில்லை காவி மயத்தில் இருந்து…

கடந்த சில மாதங்களாகவே உத்திரபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களும், வன்முறை சம்பங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆட்சியாளர்களே தவறான வகையில் சட்டத்தை கையாள்வதால், சாமானிய மக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள். இந்நிலையில் எந்த திசையில் நோக்கினாலும் “காவி மயம்” என்று சொல்லும் வகையில் அனைத்திலும் காவி சித்தாந்தம் திணிக்கப்பட்டு, காவி நிறம் பூசப்பட்டு வருகிறது. அரசு கட்டிடங்கள் தொடங்கி ,போக்குவரத்து வாகனங்கள், மின் கம்பங்கள் என அனைத்திலும் காவிநிறம், […]

*காட்பாடி அருகே ரயிலிருந்து தள்ளிவிடப்பட்ட டிக்கெட் பரிசோதகர்*

பெங்களுர்லிருந்து ஹவுரா வரை செல்லும் யஷ்வந்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் பரிசோதகரக சந்தேஷ் குமார் (36) என்பவர் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்து வந்தார். முன்பதிவு பெட்டியில் பயணித்த ஆறு வட மாநில பயணிகளிடம் டிக்கெட் கேட்டதினால் வாக்குவதம் முற்றி டிக்கெட் பாரிசோதகரை ஒடும் ரயிலிருந்து தள்ளிவிட்டனர். இதில் லேசான காயம் அடைந்த சந்தோஷ் குமார் காட்பாடி ரயில் நிலையத்தில் உள்ள தமிழ் நாடு இருப்பு பாதை காவல் நிலையத்தில் ஆறு வட மாநில பயணிகள் மீது […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!