இராமநாதபுரம் மாவட்டத்தில் சீரான குடிநீர் வினியோகம் செய்திட ரு.11 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டப்பணிகள்…

இராமநாதபுரம் மாவட்டம் பொது மக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்திட ரு.11.26 கோடி மதிப்பில் 396 புதிய குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் 107 இடங்களில் ஆர்ஓ பிளாண்ட் அமைக்கப்பட உள்ளன என தகவல் தொழிநுட்ப துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தெரிவித்தார். இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலர் கக்ஷட்டரங்கில் நடைபெற்ற அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கக்ஷட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன், மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் அரசு முதன்மை செயலளர் பி.சந்திரமோகன் முன்னிலையில் […]

தமிழக – கேரள எல்லையில் மாவோயிஸ்ட் நடமாட்டம்: நக்சல் தடுப்பு பிரிவு போலீஸார் சோதனை..

தமிழக – கேரள எல்லையில் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து நக்சல் தடுப்பு பிரிவு போலீஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். உடல் நலம் பாதிக்கப்பட்ட மாவோயிஸ்ட் பெண் ஒருவர் சிகிச்சைக்காக ஆனைக்கட்டி வழியே தமிழகத்துக்கு வர உள்ளதாக போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் கோவை மாவட்டம், தமிழ -கேரள எல்லையில் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மாவோயிஸ்ட் இயக்கத்தினரின் புகைப்படங்கள் எல்லையோர பகுதிகளில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இவர்கள் குறித்த தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கும்படி மலைகிராம மக்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. […]

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் (TNROA) வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு…

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம்  (TNROA) 19-06-2018 அன்று காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். ஆனால் இன்று நடைபெற இருந்த காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். நேற்று வெளியிட்ட செய்தி… https://keelainews.in/2018/06/16/tnroa-officials/

‘ரைசிங் காஷ்மீர்’ ஆசிரியர் சுஜாத் புகாரி படுகொலையை கண்டித்து சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் ஆர்ப்பாட்டம்…

கடந்த சில வாரங்களுக்கு முன்பு காஷ்மீரை சார்ந்த ‘ரைசிங் காஷ்மீர்’  நாளிதழின் ஆசிரியர் சுஜாத் புகாரி சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டார்.  இச்செயலுக்கு இந்தியா மட்டுமின்றி, உலகெங்கும் இருந்து கண்டனம் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலைநில் சென்னைப் பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் முன்பு  இன்று 18/06/2018, சுமார் 03.30 மணியளவில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களின் கண்டனத்தை பதிவு செய்தனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடத்திய துப்பாக்கிச் சூடு, மனிதாபிமானமற்ற செயல் – மேதா பட்கர் குற்றச்சாட்டு, வீடியோ பதிவு…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக தூத்துக்குடி வந்துள்ள சமூகவியல் செயற்பாட்டாளர் மேதாபட்கர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது 1988 ஆம் ஆண்டு முதல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்றும் எத்தனை தீர்ப்புகளை நீதிமன்றங்கள் வழங்கினாலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகவே சுற்றுச்சூழல் விதிமுறைகளை மத்திய அரசு மாற்றி அமைத்து வருவதாக புகார் தெரிவித்தார். தற்போது உள்ள தமிழக அரசிற்கு மக்களின் பிரச்சினைகள் கூட தெரியவில்லை என […]

3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி லாரிகள் நாளை முதல் ஸ்டிரைக்: நாடு முழுவதும் 75 லட்சம் லாரிகள் ஓடாது..

டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி நாளை (18-ம் தேதி) முதல் லாரி உரிமையாளர்கள் நாடுமுழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதுதொடர்பாக அகில இந்திய தரைவழி போக்குவரத்து லாரி உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் ரஜிந்தர் சிங், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.சுகுமார் ஆகியோர் ‘தி இந்து’விடம் கூறியதாவது, “நாடு முழுவதும் 80 லட்சம் சரக்கு லாரிகள் ஓடுகின்றன. தினமும் டீசல் விலை தொடர்ந்து […]

சிறைவாசிகளுக்கு விருந்தளித்து அவர்களோடு பெருநாள் கொண்டாடும் திருச்சி மாவட்ட தமுமுகவினர்…

ஒவ்வொரு வருடமும் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ரமலான் 30 நாட்களிலும் திருச்சி சிறையில் உள்ள இஸ்லாமிய சிறை கைதிகளுக்கு தேவையான சஹர் சாப்பாடும், இப்தார் நோன்பு திறப்பதற்கு தேவையான பழங்கள் மற்றும் உணவு பொருட்கள் அனைத்தும் திருச்சி மாவட்ட தமுமுகவினர் ஏற்பாடு செய்து கொடுத்தனர். பெருநாள் தினத்தன்று திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு மாவட்ட தலைவர் சகோதரர் முஹம்மது ரபிக் மற்றும் மாவட்ட செயளாலர் மஞ்சக்குடி பாபு அவர்களின் தலைமையிலான குழு, மட்டன் பிரியாணியை சமைத்து சிறையில் உள்ள […]

மனித உறுப்பு மார்க்கெட் ஆகிறதாதமிழகம்? – ஆள் பிடிக்க அலையும் மாஃபியாக்கள்..!

இன்றைய நிலைக்கு ஒருவர் பத்து பைசாகூட இல்லாத பஞ்சபராரியாக இருக்கலாம். ஆனால், ஆரோக்கியமான மனிதன் எனில் இன்றைய தேதிக்கு அவரது விலை சுமார் ஐந்து கோடி ரூபாய். வாயைப் பிளக்க வேண்டாம். வாயின் விலையே ஏழெட்டு லட்சங்களைத் தாண்டுகிறது. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், சர்வதேச உடல் உறுப்பு கள்ளச் சந்தையில் இன்றைய நிலவரப்படி ஒரு நுரையீரலின் விலை ஒரு கோடியே 85 லட்ச ரூபாய். கல்லீரல் 94 லட்சம். சிறுநீரகம் 93 லட்சம். ஒரு ஜோடி […]

வாணியம்பாடி அருகே உள்ள கங்குந்தி மலையில் இருந்து மினி லாரி விழுந்த விபத்தில் 7 பேர் பலி என தகவல் வெளியாகியுள்ளது..

ஆந்திர மாநிலம் குப்பத்திலிருந்து மினி லாரி ஒன்றில் மாங்காய் ஏற்றிக்கொண்டு 13 பேர் வேலூர் வந்துள்ளனர். தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான, வாணியம்பாடி அருகே உள்ள கங்குந்தி மலைப்பகுதியில் லாரி வந்துகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி மலையில் இருந்து உருண்டு விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மீதமுள்ளவர்களை  மீட்கும் பணியில், காவல்துறையினர் […]

TNROA – தமிழ்நாடு வருவாய் அதிகாரிகள் சங்கம் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் அறிவிப்பு..

TNROA – (Tamilnadu Revenue Officials Association) தமிழ்நாடு வருவாய் அதிகாரிகள் சங்கம்  20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 19-06-2018 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளது. இன்று 16.06.18 சனிக்கிழமை தூத்துக்குடி யில் TNROA மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில்  20 அம்ச கோரிக்கைகள் குறித்தும், அரசின் நிலைபாட்டை குறித்தும் மிகவும் விரிவாக விவாதத்தினை முடித்து இறுதியில் 19.06.18 செவ்வாய் முதல் ஏற்கனவே திட்டமிட்டு கள பணியாற்றியும், பிரச்சாரத்தையும் முடித்துள்ள நிலையிலும், அரசிடமிருந்து […]

தலித் சிறுவர்கள் கிணற்றில் குளித்தது குற்றமா?, வைரலாகி வரும் வீடியோ..

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவோம் மாவட்டத்தில் உள்ள வகாதி என்ற கிராமத்தில் இருக்கும் கிணற்றில் கடந்த 10-ம் தேதி மூன்று தலித் சிறுவர்கள் குளித்துள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் சிறுவர்களை ஆடைகளை அணிய விடாமல், நிர்வாணமாக வைத்து தாக்கியுள்ளனர்.மேலும், சிறுவர்களை சிறிதும் மனிதாபிமானம் இன்றி அங்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 3 சிறுவர்களும் தலித் பிரிவினர் என்பதால் அங்குள்ள உயர்சாதியினர் இந்த […]

கொத்தன்குளம் கிராமத்தில் ‘ஸஹர் உணவு’ சமைத்து விருந்து தந்த கீழக்கரை இளைஞர்கள்

கீழக்கரையில் புனித ரமலான் மாதத்தை ஒட்டி நன்மையான விசயங்களை போட்டி போட்ட வண்ணம் செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் கீழக்கரையில் உள்ள பல சமூக அமைப்புகள் தான் என்ற வட்டத்திற்குள் நின்ற விடாமல் தேவையுடையவர்களுடைய கண்டறிந்து அவர்களுக்கும் தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். கீழக்கரை சின்னக்கடை தெருவைச் சார்ந்த இளைஞர்கள் உத்திரகோசமங்கை அருகில் உள்ள கொந்தன்குளம் என்ற கிராமத்தில் உள்ள மக்களுக்கு சஹர் நேர சாப்பாடு ஏற்பாடு செய்து விருந்து கொடுத்தனர். இவ்விருந்தில் அவ்வூர் மக்கள் அனைவரும் […]

தோழர் பெ. மணியரசன் மீதான தாக்குதலை கண்டித்து அறிக்கை! – மக்கள் அதிகாரம்..

கடந்த 10-6-2018 ஆம் தேதி இரவு தஞ்சையில் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தின் பின்புறத்தில் அமர்ந்து பயணித்த தோழர் பெ. மணியரசன் அவர்களை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்த சமூக விரோதிகள் வம்படியாக அவரது கையைப் பிடித்திழுத்துக் கீழே தள்ளியுள்ளனர். இந்த எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்து வாகனத்திலிருந்து சாலையில் விழுந்து காயமடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள் இந்த தாக்குதல் பற்றி கேள்வி எழுப்பினார். திருட்டுக்காக நடந்த குற்றம் […]

இராமநாதபுரத்தில் புதிய தலைமுறை மீதான வழக்கை வாபஸ் பெற கோரி பத்திரிக்கையாளர்கள் ஆர்பாட்டம்.

சமீபத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்தும் வட்ட மேசை நிகழ்ச்சியில் பல் வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் இயக்குனர் அமீரும் கலந்து கொண்டார்.  நிகழ்ச்சிக்கு இடையில் ஏற்பட்ட குழப்பத்தால் நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது.  பின்னர் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தின் உரிமையாளரிடம் புகாரை பெற்று காவல்துறையினர் ஊடகதுறையின் சுதந்திரத்தை நெறிக்கும் விதமாக புதிய தலைமுறை மற்றும் இயக்குனர் அமீர் மீது  வழக்கு பதிவு செய்தனர்.   காவல்துறையின் இச்செயலை கண்டித்து பல் வேறு […]

இலங்கை கடற்படை இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவது இல்லை கடல்பிராந்திய தலைமை அதிகாரி மறுப்பு.

இலங்கை கடற்படை  இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவது இல்லை என்று தமிழக மற்றும் பாண்டிசேரி கடல்பிராந்திய தலைமை அதிகாரி மறுப்பு தெரிவித்துள்ளார். இன்று 12/06/2018) உச்சிபுளியில் உள்ள இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ் பருந்து  விமானபடை தளத்தில் மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் கடலோர பாதுகாப்பு குறித்து பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் மட்டத்தில்லான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி கடல்பிராந்திய தலைமை அதிகாரி அலோக் பட்நாயக் கடலோர பாதுகாப்பு மற்றும் சட்டவிரோத […]

முதுகுளத்தூரில் இருசக்கர வாகனக்காப்பகம் அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்…

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் சமீபகாலமாக வாகனங்களின் அதிகரிப்பால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவருகிறது. முதுகுளத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தில் வசிப்பவர்கள் பரமக்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகர், கடலாடி, கமுதி , சாயல்குடி போன்ற வெளியூர் மக்கள், தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் வேலைக்கு செல்ல முதுகுளத்தூர் வந்து செல்ல வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். இதனால் தங்களது இருக்கர வாகனங்களை பாதுகாப்பாக விட்டு செல்ல இருக்கர வாகனக் காப்பகம் இல்லாமல் மிகவும் சிரமத்தில் உள்ளனர். முதுகுளத்தூரில் இரு சக்கர வாகனக்காப்பகம் இன்றி மெயின் பஜாரில் உள்ள கடைகளுக்கு […]

மிரட்டலுக்கு நான் வளைந்து கொடுக்கமாட்டேன் – 63 குழந்தைகளைக் காப்பாற்றிய டாக்டர் கபீல்கான் ஆவேசம்..

உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் குழந்தைகள் இறந்த நிலையில், தனது சொந்த செலவில் சிலிண்டர் வாங்கி 63 குழந்தைகளைக் காப்பாற்றியவர் டாக்டர் கபீல்கான். அதனால், அவர் அப்பகுதி மக்களின் பாராட்டுக்குரியவரானார். ஆனால், அங்கு அந்த மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு கபீல்கான் கவனக்குறைவாக பணியில் இருந்ததாகக் கூறி அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டு, 7 மாதங்கள் சிறையில் இருந்த அவர் சமீபத்தில்தான் ஜாமீனில் […]

முகவையில் தமுமுக சார்பாக பிரமாண்ட இப்தார் நிகழ்ச்சி…..

முகவையில் இன்று (10/06/2018) தமுமுக சார்பில் இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த இஃப்தார் நிகழ்ச்சியில்  ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்தநிகழ்வில் சிறப்பு விருந்தினராக  கீழக்கரை மக்கள் சேவை அறக்கட்டளை யின் நிறுவனர் MKE உமர் அப்துல் காதர் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் இந்நிகழ்வில் சஃப்ரான் குரூப் ஆஃப் கம்பெணி நிறுவனர் காபத்துல்லாஹ்,  முன்னாள்  இராமநாதபுரம் தமுமுக  மாவட்ட தலைவர் அன்வர், முன்னாள் மாவட்ட துணைச் ணெநலாள்யர்  கீழை சிராஜ்த்தீன், முத்த நிர்வாகி கீழை.கோஸ் முஹம்மது, […]

இராமேஸ்வரம் துறைமுகத்தில் மீன்துறை அதிகாரிகளுக்கும் படகு உரிமையாளர்களுக்கும் வாக்குவாதம் படகுகளின் ஆய்வு பல மணி நேரம் நிறுத்தம்..

தமிழகத்தில் மீன்பிடி தடைக் காலம் நிறைவடைய சில தினங்களே  உள்ள நிலையில் இராமேஸ்வரத்தில் மீன்துறை அதிகாரிகளுக்கும்,  படகு உரிமையாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு படகுகளின் ஆய்வு பணிகள் நிறுத்தப் பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது கடல் மீன்பிடிப்புள்ள பகுதிகளில்  மீன்கள் இனப் பெருக்கத்துக்காக ராமநாதபுரம், புதுக்கோட்டை,  தூத்துகுடி,  நாகை, தஞ்சை, சென்னை, திருவள்ளுர்  உள்ளிட்ட நீலாங்கரை முதல் குளச்சல் வரையிலான  கிழக்கு கடற்கரை துறை முகங்களில்  தமிழகத்திலுள்ள 13 மீன்பிடி  மாவட்டங்களில் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்பரல் 15ம் தேதி […]

வீணாகும் குடிநீர்.. நகராட்சி உடனடி நடவடிக்கை தேவை…

கீழக்கரை வடக்குத் தெரு பகுதியில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பொது குடி நீர் குழாயில் கேடு உண்டாகி, நீர் வீணாகியது, பின்னர் பலமுறை தொடர்பு கொண்டு புகார் அளித்த பின் தற்காலிக முறையில் பிளாஸ்டிக் குழாய்களை வைத்து சரி செய்யப்பட்டது.  மீண்டும் தற்பொழுது குடிநீர் கசிவு ஏற்பட்டு தெருக்களில் ஓடிய வண்ணம் உள்ளது. அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்தை அழைத்து புகார் அளித்த பொழுது, இப்பணி தனியார் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, விரைவில் சரி செய்யப்படும் என்ற […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!