துணை நிலை ஆளுநரின் அதிகாரம் என்ன? உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகல் இணைப்புடன்…

டெல்லி துணை நிலை ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க அதிகாரம் கிடையாது என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. டெல்லி துணை நிலை ஆளுநருக்கு இருக்க கூடிய அதிகாரங்கள் என்ன என்ன என்பது குறித்தும் உச்சநீதிமன்றம் விரிவான தீர்ப்பினை வழங்கியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசின் முடிவுகளில் துணை நிலை ஆளுநர் தலையிட அதிகாரம் உள்ளதா என்பதை விளக்க கோரி டெல்லி அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  முன்னதாக டெல்லி நிர்வாகத்தில் […]

டிஜிபிகளை நியமிக்க புதிய வழிமுறைகளை வகுத்தது உச்சநீதிமன்றம்…

மாநில அரசு இடைக்கால டிஜிபிகளை நியமிக்க தடை விதித்து பிரகாஷ் சிங்  என்பவர் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையே 2  ஆண்டுகள் பதவியில் இருக்கும் வகையில் டிஜிபிக்கள் நியமிக்கப்பட வேண்டும்  என்றும்  உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  இடைக்கால டிஜிபிக்களை நியமிக்க  கூடாதென மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிஜிபி நியமனம் தொடர்ப்பாக  பிரகாஷ் சிங் தொடுத்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது மாநில அரசுகள் தங்களுக்கு சாதகமான, அரசியல் […]

எஸ்டிபிஐ கட்சியின் புதிய மாநில நிர்வாகிகள் அறிவிப்பு..

எஸ்டிபிஐ கட்சியின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்,  விபரங்கள் கீழ்கண்டவாறு;- மாநில தலைவர் நெல்லை முபாரக் என்கிற V.M.S முகமது முபாரக் மாநில துணை தலைவர்கள்:- A. அம்ஜத் பாஷா KKSM.தெஹ்லான் பாகவி மாநில பொதுசெயலாளர்:- M.நிஜாம் முகைதீன். B.அப்துல் ஹமீத் அச.உமர் பாரூக் மாநில செயலாளர்:- T.ரெத்தினம் S.அமீர் ஹம்ஸா A.அபுபக்கர் சித்திக் S.அகமது நவவி வழக்கறிஞர் N.சஃபியா மாநில பொருளாளர்:- V.M.அபுதாஹீர்

தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சி புதிய நிர்வாகிகள் அறிவிப்பு..

கடந்த  ஜீன் 28, 29 2018ல் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்ற தலைமை நிர்வாகக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனித நேய மக்கள கட்சி  பின்வருவோர் தலைமை செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். தமுமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் 1. ஓ.யூ. ரஹ்மத்துல்லா 2. கோவை செய்யது 3. காரைக்கால் ஷேக் அலாவுதீன் 4. எம்.எச். ஜிப்ரி காசிம் 5. பி.எல்.எம். யாசீன் 6. ஹெச். ஜுல்பிகார் 7. சுலைமான் ஹாஜியார் 8. ஏர்வாடி ரிஸ்வான் […]

அறிந்து கொள்வோம் – நிலத்தின் நாட்டு வழக்கு பெயர்கள்!!

நிலத்தை அதன் தன்மையை பொருத்து , பயன்பாட்டை பொருத்து, நிலத்தின் மீது நடந்த மனித முயற்சியினை வைத்து அதற்கு பல்வேறு காரண பெயர்களையும் இடுபெயர்களையும், தமிழிலும், தமிழ் வட்டார வழக்குகளிலும் குறிப்பிடுவதை தமிழகம் முழுவதும் சுற்றி வந்ததில் நான் அறிந்தேன். பல்வேறு பத்திரங்களையும், பழைய ஆவணங்களையும் நாம் பார்த்த பொழுது இன்னும் பல பெயர்கள் பயன்படுத்தப்படுவதை நம்மால் தெரிந்து கொள்ள முடிந்தது. இவ் வார்த்தைகளை முழு அர்த்தத்துடன் நாம் தெரிந்து கொள்ளும் பொழுது ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் […]

பாதி சம்பளத்தை தானமாக வழங்கும் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி அஸ்லம் கான்..

டெல்லியைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அஸ்லம் கான் தனது சம்பளத்தில் பாதியை மாதம் தோறும் ஒரு குடும்பத்திற்கு நிதி உதவியாக வழங்கி வருகிறார். இந்தியா பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஒரு கிராமத்தில் சர்தார் மான் சிங் என்பரின் குடும்பம் வசிக்கிறது. லாரி டிரைவரான மான் சிங் சில மாதங்களுக்கு முன் வழிப்பறிக் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டார். நீண்ட நாட்கள் பணி நிமித்தமாக வெளியே சென்றிருந்த அவர் தனது மனைவி மற்றும் மூன்று மகள்களைப் பார்ப்பதற்காக தான் சம்பாதித்து […]

நான்கு வருடங்களுக்கு பிறகு காஷ்மீரில் கடும் வெள்ளம்.. அரசு எச்சரிக்கை..

2014 ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு பிறகு காஷ்மீரில் தற்போது மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஜீலம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் படகு இல்லங்கள் பலவும் நீரில் மூழ்கி உள்ளன. காஷ்மீரில் தற்போது கவர்னர் ஆட்சி அமலில் உள்ளதால், வெள்ள பாதிப்புக்கள் குறித்து கவர்னர் ஆய்வு செய்து வருகிறார். வெள்ள அபாயம் : தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஜீலம் ஆற்றில் அபாய அளவை எட்டும் அளவிற்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை மற்றும் வெள்ளத்தில் […]

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் சார்பதிவளார் அலுவலகத்திலும் லஞ்சமா??

சமீப காலமாக  அரியலூர் மாவட்டம்  ஆண்டிமடம் சார்பதிவளார் அலுவலகத்திலும் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக பொதுமக்கள் புலம்ப தொடங்கியுள்ளனர். இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட ஒருவர் கூறுகையில், “அலுவலகத்தில் உள்ளே உயர் அதிகாரிகள் நுழைவது போல் புரோக்கர்கள்  நுழைந்து அதிகாரி போல் மக்களிடம் பேரம்  பேசி நாளைக்கு வாங்க அல்லது 5 நாள் கழித்து வாங்க என்று சொல்லி விட்டு, இந்த புரோக்கர்கள்  மக்களின் வில்லங்க சான்றை, சார்பதிவாளர் அலுவலகத்தில் நுழைந்து எடுத்து கொடுக்கின்றனர்.   இதை சார்பதிவாளர் (ம) அலுவலகத்தில் […]

திட்டமிட்டப்படி ஜூலை-20 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் காலவரையற்ற வேலைநிறுத்தம்..

சேலம் கொண்டலாம்பட்டியில் உள்ள மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கக் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக சண்முகப்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், உயர்த்தப்பட்ட மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியத்தை குறைக்க வேண்டும். டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும். லாரிகளுக்கான வருமான வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. எனவே, ஏற்கெனவே திட்டமிட்டபடி […]

இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் …

இந்தியாவில் வழக்கறிஞர்களாக ஆண்களும், பெண்களுமே  பார்கவுன்சிலில் பதிந்து உள்ளனர். சமீபத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம்  பாலினமாக திருநங்கைகளும் காவல்துறை போன்ற துறைகளில் பணிபுரிய தொடங்கியுள்ளனர். இந்த நிலையில்  இந்தியாவின் முதல் திருநங்கை ஒருவர் நாளை காலை 11மணிக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு ஆகிறார். நீங்களும் வாழ்த்து சொல்ல விரும்பினால் வழக்கறிஞர் சத்யா : 09819181899

திருவண்ணாமலையில் செய்தியாளர் தாக்குதல்: புதுச்சேரி மற்றும் கர்நாடகத்தமிழ் பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்…

திருவண்ணாமலையில் செய்தி சேகரித்து  கொண்டிருந்த செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளதை கர்நாடகத்தமிழ் பத்திரிகையாளர் சங்கம் கண்டித்துள்ளது. இது குறித்து கர்நாடகத்தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தலைவர் முத்துமணி, செயலாளர் மதியழகன் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை, “சென்னையில் இருந்துசேல‌ம் வ‌ரை அமைக்க‌ த‌மிழ‌க‌ அர‌சு திட்ட‌மிட்டிருக்கும் ப‌சுமைவ‌ழிச்சாலை திட்ட‌த்தை எதிர்த்து திருவ‌ண்ணாம‌லையில் பொதும‌க்க‌ள் ந‌ட‌த்திய‌ போராட்ட‌ம் தொட‌ர்பான‌ செய்தியை சேரித்து கொண்டிருந்த சன் நியூஸ் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது அம்மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தாக்குதல் […]

தொடரும் பத்திரிக்கையாளர் தாக்குதல்- சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கடும் கண்டனம், ஆளுநரிடம் புகார்..

இன்று (29.06-2018) வெள்ளிக்கிழமை , சென்னை சேலம் இடையே அமைக்க திட்டமிட்டுள்ள 8 வழி சாலை தொடர்பான செய்தி சேகரிக்கும் பணியில் திருவண்ணாமலை மாவட்டம்  நம்பியந்தல் நயம்பாடி கிராமத்தில் சன் செய்தியாளர் செல்வகுமார் மற்றும் ஒளிப்பதிவாளர்  வேலு ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். சாலை திட்டத்துக்காக நிலம் அளவீடு செய்யப்படுவதை எதிர்த்து கிராமமக்கள் போராட்டம் நடத்தியதை செய்தி சேகரித்து வந்த நிலையில் அங்கிருந்த மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளார்  சின்னராஜ் , ஒளிப்பதிவாளர் வேலு மீது பலப்பிரயோகம் செய்து கீழே தள்ளியுள்ளார். […]

‘தமிழ்நாடு பொன்விழா ஆண்டு’ விழாவினை முன்னிட்டு, கல்லூரி மாணாக்கர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் துவக்கம்…

‘தமிழ்நாடு பொன்விழா ஆண்டு” விழாவினை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் இன்று (27.06.2018) தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் கல்லூரி மாணாக்கர்களுக்கான கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் பேச்சுப்போட்டிகளை துவக்கி வைத்தார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன், பேசியதாவது: தமிழ்மொழியின் வரலாறும், தமிழ் மக்களின் கலாச்சாரமும் வரலாற்றில் மிகவும் தொன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது. உலகில் உள்ள அனைத்து மொழிகளையும் ஒப்பிடுகையில் நமது தமிழ் மொழியானது மிகச் […]

காவல்துறைக்கு எதிராக குவியும் பத்திரிக்கையாளர் சங்கங்களின் கண்டனக் குரல்..

கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்துறை சம்பந்தமான செய்தி வெளியிட்டது சம்பந்தமாக பேராண்மை எனும் பத்திரிக்கையின் நிருபர் விமேலேஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இச்செயலைக் கண்டித்து பல பத்திரிக்கையாளர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்த வண்ணம் உள்ளனர். சங்கங்களின் கண்டனக் குரல் கீழே..

அரசு அலுவலகத்தில் மனு கொடுத்தால் ரசீது வாங்க மறந்து விடாதீர்கள்..

பொதுமக்கள் அரசு அலுவலகத்தில் கொடுக்கும் புகார் மனுவுக்கு மூன்று நாட்களுக்குள் மனுவை பெற்றுக் கொண்டதற்கான ரசீது வழங்க வேண்டும் என உள்ளது. அதே போல் பெற்ற மனுவுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு அல்லது அம்மனு நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணத்தை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என 2015ம் அரசு வெளியிட்ட அரசாணை தெரிவிக்கிறது. அரசாணையை படிக்க கீழே சொடுக்கவும்… par_e_99_2015 (1) ஆனால் மனுவை அரசு அலுவலகத்தில் ஏற்றுக் கொள்ளவே பல மாதங்கள் ஆகிறது என மனதுற்குள் புலம்புவது […]

ரூபாய் நோட்டு – நாணயங்களில் உள்ள நுண்கிருமிகளால் நோய் பரவும் அபாயம்…உணவகங்கள் கவனமாக இருப்பது அவசியம்..

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளது.  அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ரூபாய் நோட்டுகளை எச்சில் வைத்து எண்ணுவது, இவ்வாறான அழுக்கு படிந்த நோட்டுகளை பயன்படுத்துவதால் அதிலுள்ள நுண்கிருமிகள் மூலம் உணவு நஞ்சாதல், வயிறு, சுவாசக் கோளாறுகள் ஏற்படுகின்றன.  மேலும் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு நோய் எளிதாக தொற்றிக் கொள்ளும். மேலும் உணவகங்களில், குறிப்பாக சாலையோர கடை வைத்திருப்பவர்கள் பல  விதமான […]

நாங்கள்தான் பத்திரிக்கையாளர்கள் – எங்களையும் அறிந்து கொள்ளுங்கள், புரிந்து கொள்ளுங்கள்..

உண்ண நேரத்திற்கு உணவில்லை… ஆனால் தினம் ஒரு அமைச்சருடன் சந்திப்பு.. உறங்க இடமில்லை.. உழைப்புகேற்ற ஊதியம் இல்லை.. உழைப்புகேற்ற ஓய்வில்லை.. வாழ்க்கையில் நிம்மதியில்லை.. எங்களுக்காக பேச ஆளுமை இருந்தும், இயலவில்லை.. எதிர்த்து கேட்க துணிவும் இருந்தும்.. கேட்க முடியவில்லை.. ஆதரவாக அரவணைக்க அருகில் உறவுகள் இருந்தும்.. காண இயலவில்லை.. பண்டிகைகள் அனைத்தும் வரும்.. ஆனால் எங்களுக்கு பாதி பண்டிகை சாலைகளில்.. வாழ்வும் இல்லை சாவும் இல்லை.. முழுவதும் போராட்டமே.. எண்ணிலடங்கா பிரச்சனையுடன் அரசு சபைக்கு சென்று தீராவிட்டாலும்.. […]

தமிழகத்தில் உயர் காவல்துறை அதிகாரிகள் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம்..

தமிழக அரசால் இன்று பல பகுதிகளில் பணியாற்றி வரும் உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வும் , பணி இடமாற்ற உத்தரவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன் விபரங்களை காண கீழே உள்ள க்ளிக் செய்யவும்.. Rc.No.86868-GB VII(3)-2017

தொடரும் லாரி ஸ்டிரைக் : கோரிக்கைகளை அரசு பரிசீலிக்காவிட்டால் மேலும் சில சங்கங்கள் பங்கேற்க திட்டம்…

லாரிகள் வேலைநிறுத்தம் இன்று 4-வது நாளை எட்டியுள்ள நிலையில், தங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்காவிட்டால் போராட்டத்தை கைவிட போவதில்லை என லாரி உரிமையாளர்கள் எச்சரித்துள்ளன. டீசல் விலையை குறைத்து 3 மாதங்களுக்கு ஒருமுறை விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது லாரி உரிமையாளர்களின் முக்கிய 3 கோரிக்கைகளில் ஒன்றாகும். இவற்றை வலியுறுத்தி கடந்த 18-ம் தேதி முதல் நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தங்களை மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்து […]

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு விமான நிலையம் – அமைச்சர் மணிகண்டன் கோரிக்கை மனு..

இராமநாதபுரம் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையாக மாவட்டத்திற்கான விமான நிலையம் உள்ளது.  இந்த குறையை போக்கும் எண்ணத்தில்  இராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒரு புதிய விமான நிலையம் வேண்டி தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன்  மத்திய அமைச்சரிடம் மனு அளித்துள்ளார். இதுவரை எந்த அமைச்சரும் எடுக்காத முயற்சியை அமைச்சர் மணிகண்டன் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியின் போது தமிழக பஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் உடனிருந்தார். இதற்கான கோரிக்கை மனுவை மத்திய தொழில், […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!