பத்திரிக்கையாளர்களுக்கு whatsapp மூலம் சேவை புரியும் மருத்துவர்..

தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கத்தின் நிரந்தர உறுப்பினர் டாக்டர் முருகமணி சென்னை தி.நகரில் பூர்ணிமா மருத்துவமனை வைத்து 20 ஆண்டிற்கும் மேலாக மருத்துவ பணி ஆற்றிவருகிறார். தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கம் சார்பில் அவரது மருத்துவ சேவையை பத்திரிகையாளர்களுக்கு இலவச சேவையாக ஆற்ற முன்வந்திருக்கிறார். இது குறித்து சங்க நிர்வாகிகளிடம் அவர் பேசியபோது, வாட்ஸப்பில் உடனடி மருத்துவ ஆலோசனை வழங்கப்படும் என்றும் முழு உடல் பரிசோதனையை பத்திரிகையாளர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வந்து பெற்றுக்கொள்ளலாம் என்று டாக்டர் முருகமணி […]

பழனி பேருந்து நிலையம் எதிரே இந்து அறநிலையத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

பழனி மத்தியபேருந்து நிலையம் ரவுண்டானா அருகில் இந்து முன்னனி மற்றும் இந்து வழக்கறிஞர் முன்னனணி தொண்டர்கள் 200க்கும் மேற்பட்டோர் மாநிலசெயலாளர் முத்துக்குமார் தலைமையில் இந்து அறநிலையத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பழனிமலை அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிதிருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12ஆண்டுகளுக்கு மேலாகியும் நிர்வாகம் கும்பாபிஷேகம் நடத்த முன்வராததால் பக்தர்களுக்கு தீங்குவர வாய்ப்புள்ளது என்றும் கோவில் திருப்பணி செய்ய வலியுறுத்தியும், பழனிஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி 3வது உற்சவர் சிலை செய்த மோசடி வழக்கில் சிலையை நீதிமன்றத்தில் ஒப்படைத்ததை கண்டித்தும், பழனியைஆண்டவனை தரிசிக்க வரும் […]

திண்டுக்கல் அருகே குட்டியபட்டியில் கிடாமுட்டுவிழா…

திண்டுக்கல் அருகே குட்டியபட்டியில் கிடாமுட்டுவிழா. இதில் திண்டுக்கல், மதுரை,தேனி,திருச்சி, உட்பட மாநிலம் முழுவதிலும் இருந்து 150க்கும் கிடாக்கள் பங்கேற்பு. இதில் வெற்றிபெற்ற கிடாக்களுக்கு பித்தளைஅண்டா, ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பழநியில் நிச்சயிக்கப்பட்ட ஆசிரியை கழுத்தறுக்கப்பட்டு கொலை…

பழநியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பள்ளி ஆசிரியையின் கழுத்தை அறுத்து தப்பியவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். பழநியைச் சேர்ந்த பகவதி மகள் பவித்ரா,23, தனியார் பள்ளி ஆசிரியை. இவர் நேற்று மாலை ஒரு வாலிபருடன் ஆர்.எப்.ரோட்டில் ஆட்டோவில் ஏறி பழநி அடிவாரத்திற்கு வந்தார். பூங்காரோடு ஆவின் அருகே அந்த வாலிபர், பவித்ராவின் கழுத்தில் பிளேடால் அறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். அப்பகுதியில் இருந்த ஆட்டோ டிரைவர் முத்துராமலிங்கம் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் […]

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சாலை மறியல்,..

நிலக்கோட்டை அருகே குண்டலப்பட்டி பிரிவில் மணல் ஏற்றி வந்த லாரி சாத்தாவு என்ற பெண்ணின் மீது மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவ மனையில் அனுமதி . நிலக்கோட்டை அணைப்பட்டி சாலையில் குண்டலபட்டி, மல்லியம்பட்டி கிராம பொதுமக்கள் சாலை மறியல்.

அறிவோம் சட்டம்- கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!..

அறிவோம் சட்டம்- கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!.. 1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும். 2. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும். 3. எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, […]

தேர்தல் முன் விரோதக் கொலை சகோதரர்கள் மீது குண்டர் சட்டம்…

உள்ளாட்சி தேர்தல் முன் விரோதம் தொடர்பான கொலை வழக்கில் சகோதரர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரையூர் அருகே சின்ன ஆனையூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு மருதங்கநல்லு£ர் காவடி முருகன், ராமலிங்கம் ஆகியோர் போட்டியிட்டனர். காவடி முருகனுக்கு ஆதரவான ஓட்டுகளை சின்னஆனையூர் முருகேசன் மூலம் ராமலிங்கம் சேகரிக்க முயன்றார். இது தொடர்பான மோதலில் ஆறுமுகம் கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக ராமநாதபுரம் நீதிமன்றம் வந்து திரும்பியபோது முருகேசனுக்கும், ஆறுமுகம் […]

மக்கள் நலன்தான் முக்கியம், தொழிற்சாலைகள் அல்ல- மத்திய அரசை விளாசிய உச்ச நீதிமன்றம்…

காற்று மாசுபாடு காரணமாக நாடு முழுவதும் 60 ஆயிரம் பேர் வரை இறந்துள்ளநிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள தொழிற்சாலையில் “பெட்கோக்” (நிலக்கரி)இறக்குமதி செய்யவும் பயன்படுத்தவும் மத்திய அரசு அனுமதித்துள்ளதை எதிர்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர் எம்.சி.மேத்தா உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோக்கூர், தீபக் குப்தா ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தையும், மத்திய அரசையும் கேள்விகளால் துளைத்தனர். நீதிபதிகள் […]

அறிவோம் மூலிகை மருத்துவம் – சில முக்கிய குறிப்புகள்..

அனைத்து பூச்சி மற்றும் பிற விஷ உயிரினங்கள் கடிகளுக்கான எளிய இயற்கை மருத்துவம். மிக முக்கிய குறிப்பு குறிப்பெடுத்து பாதுகாத்து கொள்ளுங்கள்* எந்த விஷ கடிக்கும் உடனே அலோபதி மருத்துவத்தை நாடும் சூழலில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய எளிய அனுபவ மருத்துவ குறிப்புகளை தொகுத்துள்ளேன்.. பயன்படுத்தி பலன் பெறுங்கள்…எளிதில் கிடைக்காத சில மூலிகை செடிகள் இருந்தால் அவற்றை வீட்டில் வளர்ப்பது நல்லது. தேன் குளவி கொட்டியதற்கு…….* தேய்க்க கூடாது விஷம் இறங்கி வலி அதிகமாகும்.முள்ளை எடுத்துவிட்டு கொடுக்கு இருந்தாலும் […]

இராமநாதபுரத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமிக்கு மாவட்ட செயலாளர் காதர் பாட்சா உற்சாக வரவேற்பு…

திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமிக்கு இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கீழக்கரையில் இருந்து எச்.இல்யாஸ்  தலைமையில் EX இளைஞர் அணி செயலாளரும், 14 வது வார்டு பொதுச் செயலாளருமான எ.எஸ்.ராஜா, EX இளைஞர் அணி துணைச் செயலாளர் நாகராஜன், தொண்டர் அணி செயலாளர் மக்புல் சுல்தான், தி.மு.க.பிரமுகர் 14வது வார்டு முஸ்தபா, EX கீழக்கரை தொண்டர் அணி செயலாளர் செய்யது சாகுல் […]

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி பகுதிகளில் ஸ்மார்ட் க்ளாஸ் துவக்கம்..

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இன்று (13/7/18) ஸ்மார்ட் கிளாஸினை (மெய்நிகர் வகுப்பறை) தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் எஸ்.பிரபாகர், தலைமையில்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  தொடங்கி வைத்தார்கள்.

ஜார்கண்ட் இறைச்சி வியாபாரியை அடித்து படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு மாலை அமைச்சரை பதவிநீக்கம் செய்ய வேண்டும்! எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்…

ஜார்கண்டில் முஸ்லிம் இறைச்சி வியாபாரியை அடித்துப் படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு, மாலை அணிவித்து மரியாதை செய்த மத்திய பா.ஜ.க. அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவை பதவி நீக்கம் செய்ய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் புதிய தேசிய தலைவர் எம்.கே. ஃபைஜி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்; “ஜார்கண்ட் மாநிலத்தில் முஸ்லிம் இறைச்சி வியாபாரி அலிமுதீன் அன்சாரி என்பவரை அடித்துப் படுகொலை செய்த வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று, ஜார்கண்ட் உயர் நீதிமன்ற உத்தரவால் ஜாமீனில் வெளிவந்திருக்கும் கொலைக் குற்றவாளிகளுக்கு, மத்திய […]

மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு 9 பேர் பலியாகினர்.

மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு 9 பேர் பலியாகினர். பலியானவர்களில் 8 பேர் குழந்தைகள். ஒருவர் பெண். இதுகுறித்து மணிப்பூர் அதிகாரிகள் தரப்பில், ”மணிப்பூரின் மேற்குப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தலைநகர் இம்பாலுக்கு 96 மைல் தொலைவில் அமைந்துள்ள டெமென்ங்லாக்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் 9 பேர் பலியாகினர். பலியானவர்களில் 8 பேர் குழந்தைகள். இறந்தவர்களில் 7 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒருவர் பெண். இந்த நில நடுக்கத்தினால் பல வீடுகள் சரிந்துள்ளன. இதில் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை […]

தாஜ்மஹாலை பாதுக்காக முடியவில்லை என்றால் அதனை மூடிவிடுங்கள் அல்லது இடித்துதள்ளி விடுங்கள் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம்..

உலக அதிசயங்களில் ஒன்றான, இந்தியாவின் அரிய பொக்கிஷமான தாஜ்மஹாலை பாதுக்காக முடியவில்லை என்றால் அதனை மூடிவிடுங்கள் அல்லது இடித்துதள்ளி விடுங்கள் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் வருகை தருகின்றனர். தாஜ்மஹால் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உருவாகி வருவதால் காற்று மாசு ஏற்பட்டு தாஜ்மகாலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. வெள்ளை பளிங்கு கல்லால் கட்டப்பட்ட தாஜ்மஹால், தற்போது செம்பழுப்பு நிறத்திற்கு […]

கோவில்பட்டியில் அண்ணன் தூக்கிட்டு தற்கொலை – அதிர்ச்சியில் தங்கை மரணம்…

கோவில்பட்டி சண்முகா நகரைச் சேர்ந்தவர் பரமசிவம். இவருக்கு முத்துப்பாண்டி, திருப்பதி, மகாலெட்சுமி, கற்பகவல்லி என்ற 4 பிள்ளைகள். திருப்பதியை தவிர மற்றவர்களுக்கு திருமணமாகி விட்டது. தோணுகால் தலையாரியாக திருப்பதி(37) பணிபுரிந்த நிலையில், சில காரணங்களால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் கிடைத்தும் கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி […]

பெற்றோர் சுய சம்பாத்யத்தில் பிள்ளைக்கு உரிமை உண்டா – சபாஷ் சரியான தீர்ப்பு – அறிந்து கொள்வோம் சட்டம்..

தாய், தந்தைசுயமாக சம்பாதித்து கட்டிய வீட்டில், மகன் என்பதால், சட்டரீதியாக உரிமை கோர முடியாது. பெற்றோர்களின் அனுமதியளித்தால், கருணை அடிப்படையில் மட்டுமே மகன் தங்க முடியும் என டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. தாய், தந்தை சுயமாக சம்பாதித்து கட்டிய வீட்டில், மகன் என்பதால், சட்டரீதியாக உரிமை கோர முடியாது. பெற்றோர்களின் அனுமதியளித்தால், கருணை அடிப்படையில் மட்டுமே மகன் தங்க முடியும் என டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த வயதான தம்பதி […]

கூட்டத்தால் கோவையை தினரடித்த தினகரன்,..

முட்டை ரூபத்தில் ஆட்சிக்கு நெருக்கடி – டிடிவி தினகரன், கோவை கொடிசியா மைதானத்தில் அம்மா மக்கள் முன்னேற கழகத்தின் பிரமாண்ட பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அக்கழகத்தின் துணை பொதுச்செயலாளரும், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் தலைமை தாங்கினார். பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவருக்கு வீரவாள் பரிசளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுக்கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், இந்த ஆட்சிக்கு முட்டை ரூபத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மக்களுக்காகத்தான் திட்டம் இருக்க வேண்டும் […]

கடந்த 2016-ம் ஆண்டில் 55 ஆயிரம் குழந்தைகள் கடத்தல்: உள்துறை அமைச்சக தகவலால் அதிர்ச்சி..

கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 55 ஆயிரம் குழந்தைகளை கடத்தப்பட்டுள்ளனர். இது 2015-ம் ஆண்டைக் காட்டிலும் 30 சதவீதம் அதிகம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 2017-18-ம் ஆண்டு குழந்தைகள் கடத்தல் குறித்த அறிக்கையில், கடந்த 2016-ம் ஆண்டில் நாட்டில் 54 ஆயிரத்து 723 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். இந்த வழக்குகளில் மொத்தம் 40.4 சதவீதம் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. […]

9 வயது சிறுமியை சீரழித்த குற்றவாளிக்கு மரண தண்டனை: 46 நாட்களில் தீர்ப்பு..

மத்திய பிரதேசம் போபால் பகுதியில் பலாத்கார குற்றவாளிக்கு விரைவாக விசாரித்த கோர்ட் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ம..பி. அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தின் படி முதல்முறையாக 46 நாட்களில் விசாரணை நடத்தி தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ம.பி. மாநிலம் சாகர் மாவட்டம் ரெக்லி என்ற பகுதியைச் சேரந்தவன் நாராயணன் பட்டேல், இவர் கடந்த மே மாதம் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தான். போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். சாகர் மாவட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டில் […]

ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்தப்படும்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேட்டி..

ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்தப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.டெல்லியில் நீட் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்புகளை மத்தியமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். அதில் NEET, JEE Main, UGC Main, G-MAT, G-PAT, G-Main உள்ளிட்ட தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தும் என்றும் 8 அமர்வுகள் மூலம் தேர்வு நடத்தப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும் இனி நீட் தேர்வு கணினி மூலம் நடத்தப்படும், நீட் தேர்வு பிப்ரவரி […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!