2019 தேர்தலுக்கு இப்போதே காய் நகர்த்த தொடங்கிய பாஜக… தமிழக பத்திரிகை, டிவி முதலாளிகளுக்கு தில்லியில் மோடி விருந்து..

தமிழகத்தை சேர்ந்த, அச்சு மற்றும் காட்சி ஊடக முதலாளிகளை தில்லிக்கு அழைத்து, பிரதமர் மோடி விருந்து வைத்துள்ளார். 2019-ஆம் ஆண்டின் துவக்கத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக எப்படியாவது மீண்டும் ஆட்சியை தக்கவைத்துவிட வேண்டும் என்று இப்போதே மோடியும் அமித்ஷாவும் காய் நகர்த்த துவங்கி விட்டனர். இதற்காக, இந்தியாவின் பிரபலமான நடிகர்- நடிகைகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். அதேபோல செய்திப் பத்திரிகைகள், தொலைக்காட்சி செய்தி சேனல்களையும் சந்திக்கும் வேலையை செய்துள்ளனர். […]

2019ல் வாக்கு சீட்டு முறை தேர்தலா?? மல்லுகட்ட தொடங்கிய எதிர்கட்சிகள்..

வரும் 2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் பல எதிர்பார்ப்புகளையும், ஆளுங்கட்சி பல சவால்களையும் எதிர் நோக்கிய வண்ணம் உள்ளன. அதே போல் வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வண்ணம் உள்ளது. இந்நிலையில் 2019 மக்களவை தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தை 17 கட்சிகள் சந்தித்து கோரிக்கை வைக்க முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் வாக்குச்சீட்டா அல்லது பட்டனா என்று??

கோவையில் கோர விபத்து..7 பேர் பலி.. பல பேர் படுகாயம்.. சொகுசு காரின் அதிவேக வினை… வீடியோ பதிவு..

கோவை பொள்ளாச்சி சாலையிலுள்ள சுந்தராபுரம் ஐயர் மருத்துவமனை அருகே அதிவேகமாக சொகுசு கார் ஒன்று வந்துள்ளது. அப்போது ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆடி கார் எதிரே நின்று கொண்டு இருந்த ஆட்டோ மீது மோதி பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்கள் 10 பேர் மீது மோதியதில் ஏழு பேர் சமபவ இடத்திலேயே இறந்துள்ளனர். இதில் ஐந்து பெண்கள் இரண்டு ஆண்கள் இறந்துள்ளனர். இதனையடுத்து படுகாயமடைந்த இருவருக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு […]

காவேரி மருத்துவமனையில் துணை ஜனாதிபதி மற்றும் தமிழக ஆளுனர்..

காவேரி மருத்துவமனையில் உடல் நல குறைவால் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் மு.கருணாநிதியை காண துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் தமிழக ஆளுனர் மருத்துவமனைக்கு வருகை புரிந்தார். அங்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரத்தனர். அவருடன் முக்கிய அரசியல் பிரமுகர்களும் உடனிருந்தனர்.

கடலாடி தாசில்தார் வாகனம் மீது மணல் அள்ளி வந்த டிராக்டர் மோதி சேதம்..

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே எம்.கரிசல்குளத்தையடுத்துள்ள மணிவலை எ கிராமப் பகுதியில் இருந்து சட்ட விரோதமாக திருட்டு மணல் அள்ளப்படுவதாக கடலாடி வட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு வட்டாட்சியர் முத்துலட்சுமி அப்பகுதியில் ரோந்து சென்றார். அப்போது மணல் அள்ளி வந்த டிராக்டரை நிறுத்தினார். ஆனால் சற்றும் எதிர்பாராத நேரத்தில் வட்டாட்சியரின் அரசு வாகனத்தின் மீது மணல் ஏற்றி வந்த டிராக்டர் மோதிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றதாக  கூறப்படுகிறது. இதில் அரசு வாகனத்தின் முன் பகுதி சேதமானது. இது […]

இளம் சாதனையாளர்களை ஊக்குவிக்கும் முகவை ரெகார்ட்ஸ் மற்றும் வில் மெடல்ஸ் நேசனல் ரெகார்ட்ஸ் …புகைப்பட தொகுப்பு..

இராமநாதபுர்ம் முகம்மது தஸ்தகீர் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் முகவை ரெகார்ட்ஸ் மற்றும் வில் மெடல்ஸ் நேசனல் ரெகார்ட்ஸ் சார்பாக 26/07/2018 அன்று மாலை 3.00 மணியளவில் இளம் சாதனையாளர்களுக்கு அங்கீகார சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.  இவ்விழாவிற்கு முகம்மது தஸ்தகீர் கல்வியியல் கல்லூரி முதல்வர் டாக்டர்.சோமசுந்தரம் தலைமை தாங்கினார்.  முகவை ரெகார்ட்ஸ் மற்றும் வில் மெடல்ஸ் நேசனல் ரெகார்ட்ஸ் நிறுவனர் – தலைவர் ஆ.கலைவாணி  மற்றும் செயலர் சீ.தஹ்மீதா பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு […]

டெல்லியில் பட்டினிக் கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமிகள் பரிதாபச் சாவு – பாஜக/காங்கிரஸ் கண்டனம் – தலைநகர் அவல நிலை..

தலைநகர் டெல்லியில் உள்ள மந்தாவாலி பகுதியில் பசிக் கொடுமையால் உணவு இல்லாமல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பசிக்கொடுமைக்கு இறந்த இந்த 3 சிறுமிகளுக்கும் 2 வயது முதல் 8 வயது வயதைச் சேர்ந்தவர்கள். இந்தச்சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்த டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.  இது குறித்த விவரம் வருமாறு: டெல்லியில் உள்ள மந்தாவாலி பகுதியில் உள்ள ஜிடிபி அரசு மருத்துவமனைக்கு நேற்று நண்பகலில் 8 வயது, 4 வயது, […]

நெடுஞ்சாலையில் நெகிழ வைத்த அமைச்சர் விஜயபாஸ்கரின் மனித நேய செயல் – வீடியோ பதிவு..

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடப்பது வழக்கமாகிவிட்டது. இந்த நிலையில் இன்று மாலை 7.30 மணி அளவில் ஒரு காரும், மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் நசுங்கி காரில் சென்றவர்கள் படுகாயத்துடன் காருக்குள் துடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக திருச்சியிலிருந்து புதுக்கோட்டை சென்று கொண்டிருந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தனது காரில் இருந்து இறங்கி தனக்கு பாதுகாப்புக்கு வந்த போலீசாருடன் இணைந்து விபத்தில் […]

இராமநாதபுரம் தொகுதி அம்மா பட்டினம் புதுமடம் கிராமங்களை இணைக்க கூடிய ஓடை பாலம் பூமி பூஜை !

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி க்குட்பட்ட அம்மா பட்டினம் புதுமடம் கிராமங்களை இணைக்க்கூடிய ஓடை பாலம்    சுமார் 60 லட்சம் மதிப்பீட்டில்  அமைக்க அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பெரும் முயற்சி மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை பூமி பூஜை செய்து பாலம் கட்டும் பணியை தொடங்கி வைத்தார்.   இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியை   சேர்ந்த புதுமடம் ஊராட்சிக்குட்பட்டது அம்மா பட்டினம்ப, புதுமடம் மற்றும் அம்மாபட்டினம்  இவ்விரு கிராமங்களை இணைக்கும் வகையில் மன்னர் ஆட்சி காலத்தில் பழமையான கற்களை கொண்டு மக்கள் நடந்து […]

தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகத்தின் மூலம் இரண்டாவது கட்டமாக திறன் மேளா..

  தமிழ்நாடு அரசு கிராமப்புறங்களில் உள்ள படித்த இளைஞர்கள் திறன் பயிற்சிபெற வேண்டியதன் அவசியம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் வழங்கப்படும் திறன் பயிற்சிகள், சந்தையில் நிலவும் வேலைவாய்ப்பு விவரங்கள் மற்றும் திறன் பயிற்சிக்கு பதிவு செய்வது குறித்த விழிப்புணர்வை தமிழகத்தில் உள்ள 385 ஊராட்சி ஒன்றியங்களிலும் நடத்தப்பட வேண்டுமென ஆணையிட்டுள்ளது. இதன்படி தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் 385 ஊராட்சி ஒன்றியங்களிலும் திறன் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திறன் மேளா நடத்தப்பட உள்ளது. எனவேää […]

தமிழகத்தை மிரட்டும் சைல்டு செக்ஸ் – நமது குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?…

மற்றுமொரு ‘நிர்பயா’ போன்ற சம்பவத்தால் கொந்தளிக்கிறது தமிழகம். இந்த முறை சென்னை அயனாவரத்தில் பாதிக்கப்பட்டிருப்பது பதின்மத்தைக்கூட தொடாத சின்னஞ்சிறு பெண் குழந்தை. அதிலும், கேட்கும் திறன் குறைந்த மாற்றுத்திறனாளிக் குழந்தை. எதிர்படுவோரை எல்லாம் தாத்தா, மாமா, அண்ணா என்றழைத்த வெகுளிக் குழந்தை. அந்தத் தாத்தாக்களும் மாமாக்களும் அண்ணன்களும்தான் அவளைக் குதறிப்போட்டுள்ளார்கள். எங்கிருந்து வந்தது இத்தனை வக்கிரம்? மனித மனம் விசித்திரமானது மட்டுமல்ல. அது வக்கிரமானதும்கூட. காதல், பாசம், கருணை, கோபம், பரிதாபம், விருப்பு, வெறுப்பு என எல்லா […]

புதிய 100 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் இயந்திரத்தில் வைக்க 100 கோடி செலவாகும் ??

ரெண்டு நாளைக்கு முன்னாடி ரிசர் பேங்க் சாம்பிளா விட்டபுதிய புதிய 100 ரூபாய் நோட்டுகள், ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள நோட்டுகளைவிட சிறியதாக இருக்கும் என்பதால், அவற்றை நிரப்புவதற்கு ஏற்ப நாடு முழுவதும் 2.4 லட்சம் ஏடிஎம்களில் மாற்றங்கள் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதற்கு 12 மாதங்கள் வரை ஆகும் என ஏடிஎம் எந்திர தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். புதிய 100 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதற்கு ஏற்ப ஏடிஎம் எந்திரங்களை மாற்றியமைத்து விட்டால், பழைய 100 ரூபாய் நோட்டுகளை […]

JIO மெகா சலுகை.. விளம்பரத்தில் ஒன்று … நடைமுறையில் வேறு..

கடந்த சில வாரங்களுக்கு முன்பு JIO நிறுவனம் பழைய கைப் பேசிகளை கொடுத்து, ₹.501/- செலுத்தி புதிய JIO-2 மாடல் கைபேசியை பெறலாம் என அறிவித்திருந்தது.  அச்சலுகை இன்று (21/07/2018) முதல் தொடங்கும் எனக்கூறி பல்லாயிர கணக்கான வியாபார முகவர்கள் முன் பணம் கட்டி புதிய கைபேசியை இன்று விற்பனைக்கு வாங்கினர். ஆனால் இன்று அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்த புதிய மாடல் அலைபேசியை வாங்கும் வாடிக்கையாளர்கள் ₹.594/-கு ரீசார்ஜ் செய்வது அவசியம் என்ற அறிவிப்பை அவர்களது […]

28வது GST குழு கூட்டம்.. பல வரி சலுகை மாற்றி அமைப்பு..

இன்று (21/07/2018) இந்திய தலை நகரில் 28வது முறையாக GST COUNCIL கூட்டம் 29 மாநில பிரதிநிதிகளை உள்ளடக்கி நடைபெற்றது.  இக்கூட்டத்தில் stationary items, napkins உள்ளிட்ட 32 பொருட்களுக்கு வரிச்சலுகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதே போல் உதாரணமாக  குளிர்சாதன பெட்டி, துணி துவைக்கும் இயந்திரம் மீதான ஜிஎஸ்டியை 28%இல் இருந்து 18%ஆக குறைத்தது ஜிஎஸ்டி கவுன்சில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் முழு நகலை காண கீழே க்ளிக் செய்யவும்:- GST-Revised-Rate  

மனநோயாளிகளை பாதுகாக்க கீழக்கரை மக்கள் டீம் முயற்சி…நாசா அமைப்பு ஒத்துழைப்பு..

கீழக்கரை சாலையோரம் மற்றும் தெருக்களில் சுற்றித் திரியும் மனநலம் பாதித்தவர்கள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம்  கடந்த வாரம் கீழக்கரை மக்கள் டீம் அமைப்பு  சார்பாக மனு அளித்ததின் பேரில் இராமநாதபுரம் மாவட்ட  மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் தெருக்களின் சுற்றித்திரியும் மனநலம் பாதித்தவர்களை காப்பகத்திற்கு கொண்டு  செல்ல  ஏர்வாடி மனநல காப்பகம் மூலம், கீழக்கரை காவல் நிலையத்தில் அனுமதி கோரப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று (21/07/2018) காலை இரு காவலர்கள் துணையுடன்,  வடக்குத் தெரு நாசா ஆம்புலன்ஸ் மூலம் […]

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் கைது – வீடியோ பதிவு..

மதுரை ஆத்திக்குளம் பகுதியில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் திரவியம் கைது. பக்கத்து வீட்டு சிறுமியை வீட்டில் தூக்கிவைத்து பாலியல் தொந்தரவு செய்கையில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திறன்டு சிறுமியை காப்பாற்றினர். பொதுமக்கள் திரண்டதால் அப்பகுதியில் சிறிது நேரம்  பதட்டம் ஏற்பட்டது. பின்னர் தகவல் அறிந்த தல்லாகுளம் போலிஸ்சார் ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் திரவியத்தை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர் .

காட்பாடி அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சட்டபணிகள் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம்…

வேலூர்மாவட்டம்,காட்பாடியில் உள்ள அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சட்டபணிகள் குழுவின் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் சட்டபாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மாவட்ட உரிமையியல் நீதிபதி வண்ணமலர் தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி,காட்பாடி நீதித்துறை நடுவர் ஜெயசுதாகர்,வழக்கறிஞர் மகாலிங்கம் உள்ளிட்ட திரளான வழக்கறிஞர்கள் பொதுமக்களும் கலந்துகொண்டனர் இந்த விழிப்புணர்வு முகாமில் மாவட்ட உரிமையியல் நீதிபதி வண்ணமலர் பேசுகையில் குழந்தைகளுக்கு நல்ல தோடுதல் தீய தோடுதலுக்கும் உள்ள வித்தியாசத்தை தெளிவுபடுத்த வேண்டும் […]

சென்னை காவல்துறையினரால் நீக்கப்பட்ட இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) ஊழியர்….

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் ஊழியர் சேத்துப்பட்டு காவல்நிலைய துணை ஆய்வாளர் இளையராஜாவால் தாக்கப்பட்டதற்கு இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு ஒரு திருமண நிகழ்விற்கு சென்றுவிட்டு திரும்பிய சகோதரர் ஹாரூனின் வாகனத்தை ஈகா திரையரங்கு அருகில் நிறுத்திய காவல்துறையினர் அவரிடம் ஆவணங்களை கேட்டுள்ளனர். தன்னிடமிருந்த ஆவணங்களின் நகல்களை காட்டிய பிறகு அசல் ஆவணங்களை கேட்டுள்ளனர். வீட்டில் இருக்கிறது என்றதும் பணம் கேட்டுள்ளனர். பணம் தர முடியாது, காவல் நிலையத்திற்கு வந்து […]

ஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய்: பழைய நோட்டுகள் செல்லுமா?

மோடி தலைமயிலான மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். அதன் பின்னர் புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியாகின. அதன் பின்னர், ரூ.10, ரூ.50, ரூ.200 ஆகிய புது நோட்டுகளையும் ஆர்பிஐ புழக்கத்தில் விட்டது. இந்நிலையில் இன்று புதிய ரூ100 நோட்டுக்கான மாதிரியை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. புது 100 ரூபாய் லாவண்டர் நிறத்தில் காந்தியின் […]

முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவையர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்…

முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் விதவையர்களின் குழந்தைகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல்   12-ம் வகுப்பு மற்றும் கல்லூரி படிப்புகளுக்கு  ரக்ஷா மந்திரி முன்னாள் படைவீரர் நலநிதி வாயிலாகவும் (RMEWF) தொழிற்கல்விசார்ந்த பட்டப் படிப்புகளுக்கு பாரதப் பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டம் வாயிலாகவும்  (PMSS) கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இளநிலை படை அலுவலர்  தரத்திலுள்ள முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு ரூ  பாரதப் பிரதமர் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இயலாத முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு தொகுப்புநிதி கல்வி […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!