சவுதி அரேபியாவில் ஹஜ் பிறை தென்பட்டது..

இஸ்லாமிய வருடத்தின் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை இன்று (11/08/2017) தென்பட்டது.  இதன் அறிவிப்பை சவுதி அரேபிய அரசாங்கம் வெளியிட்டுள்ளது. ஆகையால் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி ஹஜ் முதல் பிறையாக கணக்கிடப்படும். இந்த வருடத்தின் புனித ஹஜ் கிரியையின் அரஃபா தினம் ஹஜ் பிறை 9, அதாவது 20 ஆகஸ்ட் அன்றும், மற்றவர்களுக்கு ஆகஸ்ட் 21ம் தேதி ஹஜ் பெருநாள் தொழுகையும் நடைபெறும். ஒவ்வொரு வருடமும் ஹஜ் கடமையை நிறைவேற்ற 25 முதல் 30 லட்சம் […]

இலவச ரயில் காப்பீட்டு திட்டம் ரத்து – ஐஆர்சிடிசி அறிவிப்பு..

ரயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச பயண காப்பீடு செப்.1 ஆம் தேதி முதல் ரத்து. 2017 டிசம்பர் முதல் வழங்கப்பட்டு வந்த இலவச பயண காப்பீடு ரத்து செய்யப்படுவதாக ஐ.ஆர்.சி.டி.சி அறிவிப்பு.

வாகன சோதனையின்போது டிரைவிங் லைசென்சை டிஜிட்டல் முறையில் காட்ட மத்திய அரசு அறிவிப்பு..

வாகன சோதனையின்போது ஓட்டுநர் உரிமம் (டிரைவிங் லைசென்ஸ்) வாகனப் பதிவு சான்றிதழ் உள்ளிட்டவற்றை மின்னணு (டிஜிட்டல்) முறையிலும் காண்பிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. தற்போதைய சூழலில், போக்குவரத்து போலீசாருக்கும், பிற காவல் அமைப்பினருக்கும் சாலைகளில் செல்லும் வாகனங்களை சோதனையிட உரிமை உண்டு. வாகனத்தின் காப்பீடு, பதிவு சான்று, […]

தீவிரவாதி கைது.. வெடிகுண்டுகள் பறிமுதல்..

மும்பையில் #சனாதன் சன்ஸ்தா என்ற இந்துத்துவ அமைப்பை சேர்ந்த வைபவ் ரவுட் எனும் தீவிரவாதியின் வீட்டிலும் கடையிலும் வெடிகுண்டுகள் கைப்பற்றபட்டது.. நேற்றிரவு தகவலின் பெயரில் ATS (Anti Terrorist Squad) நடத்திய சோதனையில் வெடிகுண்டுகள் மற்றும் வெடிபொருள்கள் சிக்கின. பத்திரிக்கையாளர் கௌவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரும் இதே #சனாதன்_சன்ஸ்தா அமைப்பை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றத்தில் 22 மொழிகளில் எந்த மொழிகளிலும் உறுப்பினர்கள் இனி பேசலாம்..

பாராளுமன்றத்தில் 22 மொழிகளில் எந்த மொழிகளிலும் உறுப்பினர்கள் இனி பேசலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் இதுவரை, அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட 17 மொழிகளை ஒரே நேரத்தில் மொழி பெயர்ப்பதற்கான வசதி மட்டுமே இருந்து வந்தது.  மீதமுள்ள காஷ்மீரி, டோங்ரி, கொங்கனி, சந்தலி, சிந்தி ஆகிய ஐந்து மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்ய முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. இதனால், பாராளுமன்றத்தில் இந்த மொழிகளில் பேசும் உறுப்பினர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். சமீபத்தில் […]

நாட்டறம்பள்ளியில் பள்ளி மாணவர்களை கொத்தனார் பணியில் ஈடுபடுத்திய அவலநிலை மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்கும்மா?..

வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதியில் ஆண்கள் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களை கட்டிட பணியில் ஈடுபடுத்தி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெற்றோர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது எனவே சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பு.

சிலை திருட்டு வழக்கில் கைது செய்யப்படக்கூடும் என்ற அச்சத்தில் TVS குழும நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசன் முன் ஜாமீன் மனு..

ஸ்ரீரங்கம் கோவில் சிலை கடத்தல் புகார் குறித்து ஐ.ஜி பொன்மாணிக்க வேலுவின் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள  நிலையில் டிவிஎஸ் குழுமங்களின் தலைவர் வேணு சீனிவாசன் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயில் மூலவர் சிலை திருடப்பட்டுள்ளதாகவும், உற்சவர் சிலையும், பழங்கால பொருட்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் புகார்  அளித்திருந்தார். அந்த மனுவில் தனியார் உதவியுடன் கோவில் பிரகாரம் புணரமைக்கப்பட்டதிலும் பல கோடி […]

450 ஆண்டு பழமை கொண்ட நாகூர் தர்ஹாவை சிறப்புக்கும் வண்ணம் தபால் தலை வெளியிட தமிழக எம்.பிக்கள் கோரிக்கை மனு..

இந்தியாவில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களில் மிகவும் முக்கியமானதும் பிரசித்து பெற்றதுமான தமிழ் நாட்டில் உள்ள நாகூர் ஆண்டவர் ஹஜரத் செய்யது அப்துல் காதர் என்ற சாகுல் ஹமீது தர்ஹா ஆகும். இந்த தர்ஹா சுமார் 450 ஆண்டு கால பழமை வாய்ந்த தர்ஹா ஆகும். இந்த தர்ஹாவிற்கு அனைத்து மதத்தினரும் வந்து வழிபடும் வகையில் மிகப் பிரசித்து பெற்றதாகும். இந்த தர்ஹா தமிழ்நாட்டின் கடற்கரை நகரான நாகபட்டினத்தில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் 14 நாட்கள் […]

வேலூர் திருப்பத்தூரில் குடும்ப தகறாரில் மனைவியை கொன்ற கணவன்..

வேலூர் மாவட்டம்- திருப்பத்தூரில் 13/6 டி..எம் சுலைமான் தெருவில் பாபு என்பவரின் மகன் அல்தாப் (26),  இவர் ஊதங்கரையில் பழ வியபாரம் செய்து வருகிறார். மூன்று வருடங்களுக்கு முன்பு   மாலிக் பாஷா மகள் நாசியா (22) என்பவருடன் திருமணம் ஆகி 1 வயதில் ஓரு மகனும் உள்ளான். சமீப காலமாக  வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தினால் இருவருக்கும் இடையில் தகராறு தொடர்ந்த வண்ணம் இருந்துள்ளது.  அல்தாஃப் தன் மனைவியிடம் அடிக்கடி குடும்ப செலவுக்கு பணம் கேட்டு பிரச்சினை […]

நாளை (06/08/2018) நடைபெற இருந்த ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு..

நாளை (06/08/2018 – திங்கட்கிழமை) நடைபெற இருந்த ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.   சென்னையில் நடைபெற்ற கூட்டுறவு சங்கத்தினர் மற்றும் அதிகாரிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இன்னும் 2 மாதத்திற்குள் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதிகாரிகள் அளித்த உறுதிமொழியை ஏற்று போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது. சமவேலை சமஊதியம் உள்ளிட்ட 30 கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொண்டி கடலில் மீனவர்கள் மோதல்..

இராமநாதபுரம் மாவட்டம்  திருவாடானை அருகே தொண்டி கடலில் வெடி வீசி மீன் பிடித்தல் தொடர்பாக இரு தரப்பு மீனவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.  இன்று காலை (05/8/18) தொண்டி புதுக்குடி மற்றும் நம்புதாளை மீனவர்கள் தொழிலுக்குச் சென்றனர். மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களுக்கு இடையே மோதல் உருவானது. இதில் நம்புதாளை சே மீனவர் முத்துராஜா மண்டை உடைந்தது. இதையடுத்து இரு தரப்பினர் இடையே கரையில் மீண்டும் மோதும் சூழல் நிலவுவதால் தமிழக மெரைன் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

சாதி கொடுமையின் உச்சக்கட்டம் ..

சாகிக்கொடுமையால் ஆதரவற்ற பெண்ணின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் மறுத்த நிலையில், ஒடிசா மாநில எம்எல்ஏ ஒருவர் தனது மகன்களின் உதவியுடன், அந்தப் பெண்ணின் உடலைத் தோளில் சுமந்து அடக்கம் செய்து மனிதநேயத்தை வெளிப்படுத்தியுள்ளார்_* பிஜு ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ரெங்காலி தொகுதியைச் சேர்ந்த எம்எல்ஏ ரமேஷ் பட்டுவா இந்த மனிதநேயச் செயலைசெய்து அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறார். சாதிக்கொடுமை நம் நாட்டில் இன்னும் தீவிரமாகவே இருக்கிறது!..

வியர்வையின் வண்ணங்கள் ஓவிய கண்காட்சி – 2018 – வீடியோ பதிவு..

உழைப்பவர்களின் உன்னதத்தை எடுத்துரைக்கும் வகையில் டிசைன் ஒவியப் பள்ளியின் ஏழாம் ஆண்டை முன்னிட்டு மேஜிக்கல் எக்ஸ்பிரசன்ஸ் 2018 நிகழ்வில் வியர்வையின் வண்ணங்கள் தலைப்பில் மூன்று நாள் ஓவியக் கண்காட்சி திருச்சியில் துவங்கியது. ஓவிய கண்காட்சி துவக்க விழாவில் சிறப்பு அஞ்சல் உறை சிறப்பு முதல் நாள் அஞ்சல் முத்திரையுடன் அஞ்சல் உறை வெளியீட்டு விழா நடைபெற்றது. மத்திய மண்டல தபால்துறைத் தலைவர் அம்பேஷ் உப்மன்யூ சிறப்பு அஞ்சல் உறையினை வெளியிட இருதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் செந்தில் […]

ஒளிந்திருக்கும் திறமைகளை உலகுக்கு அடையாளம் காட்டி வரும் “WILL MEDAL” – கராத்தேவில் உலக சாதனை படைத்த திருப்பூர் சிறுவன்..முழுமையான புகைப்பட தொகுப்பு..

உலக சாதனைகள் என்றால் வசதி படைத்தவர்கள் மட்டும் தான் செய்ய முடியும், அப்படியே ஒரு சாமானியன் சாதனை புரிந்தால், அவன் சாதனையை உலகுக்கு அறிமுகப்படுத்த பல சோதனைகளை சந்திக்க வேண்டும்.  அந்த வேதனைகளையும், சாதனைகளாக்கி சாமானியனையும் உலகுக்கு அறிய வைக்கும் பணியில் உள்ள அமைப்பு தான் “WILL MEDAL OF WORLD RECORDS” & “MUGAVAI RECORDS”. இந்த அமைப்பு உலகுக்கு வெளிய தெரியாமல் சாதாரண கிராமத்து மக்களின் சாதனைகளை கூட வெளி உலகுக்கு கொண்டு வந்து, […]

மதுரை அழகர் கோவில் அருகே நூற்றுக்கணக்கான தேசிய பறவை மர்மமான முறையில் சாவு – வீடியோ பதிவு..

மதுரை அழகர் கோயில் சாலையில் சூர்யா நகர் கோல்டன் சிட்டி அருகே இன்று (04/08/2018) நமது நாட்டின் தேசிய பறவையான சுமார் 80 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது. அதை வனத்துறையினர் இறந்த மயில்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர், இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது,

அறிவோம் சட்டம் – “கிராம சபை”..

“கேள்வி கேட்கும் சமுதாயமே, சிறந்த சமுதாயம்”.. வாருங்கள் கேள்வி கேட்போம்.. கிராம சபையில்… நாம் கீழே விவாதித்திருக்கும் விசயங்களை நாம் நடைமுறை படுத்த தொடங்கினாலே ஊராட்சியில் பல பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிடும்:- கிராமசபை கூட்டத்தின் பயன் என்ன ?? நாம் என்ன செய்ய வேண்டும் ?? * நம் கிராம வளர்ச்சிக்கு நாமே சட்டம் இயற்றுவோம் * கேள்விகளை கேட்போம் உரிமைகளை பெறுவோம் * கிராமசபையின் தீர்மானமே அந்த கிராமத்தின் சட்டம் * சட்டசபைக்கு இணையான வலிமை= […]

35 ஆண்டு காலம் தாயகம் செல்ல முடியாமல் தவித்தவரை ஊருக்கு அனுப்பி வைத்த இந்தியன் சோசியல் ஃபோரம்..!!

தஞ்சாவுர் மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்த ஷேக் முஹம்மது இப்ராஹிம் 02.02.1983 ல் பஹ்ரைனுக்கு வேலை செய்வதற்காக வந்தார். பிறகு கம்பெனியில் வேலை நீக்கம் செய்து அனுப்பிய போது சட்டத்திற்கு புறம்பான வகையில் நாட்டிற்கு செல்லாமல் விசாவின்றி பஹ்ரைனில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் வருடங்கள் உருண்டோடிட ஊருக்கு செல்ல விரும்பிய ஷேக் அவர்கள் பாஸ்போர்ட் மற்றும் இந்திய குடிமகன் என்கின்ற எந்த ஆதாரமும் இல்லாமல் தாயகம் செல்ல முடியாமல் தவித்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் […]

காந்தி சிலையும் தப்பவில்லை காவி மயத்தில் இருந்து…

கடந்த சில மாதங்களாகவே உத்திரபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களும், வன்முறை சம்பங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆட்சியாளர்களே தவறான வகையில் சட்டத்தை கையாள்வதால், சாமானிய மக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள். இந்நிலையில் எந்த திசையில் நோக்கினாலும் “காவி மயம்” என்று சொல்லும் வகையில் அனைத்திலும் காவி சித்தாந்தம் திணிக்கப்பட்டு, காவி நிறம் பூசப்பட்டு வருகிறது. அரசு கட்டிடங்கள் தொடங்கி ,போக்குவரத்து வாகனங்கள், மின் கம்பங்கள் என அனைத்திலும் காவிநிறம், […]

மோடி திறந்து வைத்த 14 வழி சாலை 2 மாதத்தில் சேதம்… ஊழலா??

கடந்த மே மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்த 14 வழிச்சாலை ஒரு மழைக்கே தாங்காமல் சேதமடைந்ததுள்ளது. சுமார் 11 ஆயிரம் கோடி செலவில் கட்டமைக்கப்பட்ட சாலை தரமில்லாமல் இருப்பதால் பொதுமக்கள் அதிருப்பதி அடைந்துள்ளனர். மேலும் இந்த சாலை கட்டமைப்பில் பெரிய அளவில் ஊழல் இருக்கலாம் என்றும் மக்கள் மத்தியில் பேச்சு நிலவி வருகிறது. இச்சாலை 11 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்ட டில்லி – மீரட்டை இணைக்கும் 14 வழி அதி நவீன சாலையை கடந்த […]

சிக்கலில் சிக்கி தவிக்கும் பழமை வாய்ந்த பாண்டியன் ஊரணி..

இராமநாதபுரம் மாவட்டம் சிக்கலில் அமைந்துள்ள பாண்டியன் ஊரணி 26 ஏக்கர் கொள்ளளவு கொண்ட பொததுமக்களின் அன்றாட தண்ணீர் தேவையை பூர்த்தி செய்த வரலாற்று சிறப்புமிக்கதாகும். இராமநாதபுரம் மாவட்டத்தின் மூன்றாவது பெரிய பாசன கண்மாய் சிக்கல் பாசன கண்மாய்,  இதன் பாசனப் பகுதி பொட்டல் பச்சேரி தொட்டியபட்டி என 3500 ஏக்கர் பாசன பரப்புகளாகும். இதில்  விவசாய கண்மாய் சுமார் 9 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.  இதற்கு நீர் வரும் வழித்தடங்கள் இரண்டு உள்ளன. அது  முதலாவதாக […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!