எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வாக்காளர் பட்டியலை மாற்றியமைப்பதற்கான முயற்சியில் மத்தியில் ஆளும் கட்சி ஈடுபட்டுள்ளது. இதன் அபாயத்தை சில சர்வதேச ஊடகங்களும், இந்திய ஊடகங்களும் எச்சரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே உள்ளது. மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பலைகள் இருந்தாலும், மத்திய அரசு அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் முழு மூச்சாக உள்ளது. இதன் அபாயத்தை “THE WIRE” குறிப்பிட்டுள்ளதை, கீழே உள்ள லிங்கில் பார்க்கலாம்.. https://thewire.in/politics/ahead-of-2019-bjp-is-out-to-rearrange-the-electorate காஷ்மீரில் நிரந்தர […]
Category: தேசிய செய்திகள்
கேரள மக்களே கவலை வேண்டாம்.. செய்நன்றி மறவா தமிழர் கூட்டம் உள்ளது.. உங்களுக்கு உதவ..
நூறு ஆண்டு கால வரலாற்றில் காணாத அளவு மழை பெய்து.. கேரள மாநிலமே வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கிறது. கேரள மக்கள் சொத்தை இழந்து, இருக்கும் இடத்தை இழந்து, கால்நடைகளை இழந்து, வயல் நிலங்களை இழந்து, பல கோடிகளுக்கு அதிபதியாக இருந்தவர்களும் திக்கு திசை தெரியாமல் தவித்த வண்ணம் உள்ளனர். இந்திய ராணுவ வீரர்களும், அரசாங்க ஊழியர்களும், சமூக அமைப்புகளும், தன்னார்வலர்களும் தங்களால் இயன்ற அளவு கேரளா மக்களுக்கு உதவிகள் செய்தாலும் அவர்களுடைய இழப்புக்கு ஈடுகட்ட முடியாமலே உள்ளனர். […]
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்..
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மற்றும் அக்கட்சி சார்ந்த முதல் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் (வயது, 93) இன்று டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று (16/08/2018) மாலை 05.05 மணியளவில் காலமானார் என மருத்துவமனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இவர் கடந்த சில வருடங்களாகவே நோய்வாய்ப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வெல்க சுதந்திரம்.. போற்றுவோம் சுதந்திரத்தை…
நாம் சுதந்திரம் பெற்ற 1947ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை சுதந்திர தினத்தன்று நாட்டின் பிரதமர் டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி உரையாற்றுவது ஏன்? ஏன் அப்படி, இதன் பின்னனி என்ன? டெல்லி செங்கோட்டையைக் கட்டியவர் முகலாய சக்ரவர்த்தி ஷாஜகான். இவருக்குப்பின் இவரது மகன் ஔரங்கசீப் காலத்திலும் சாம்ராஜ்யத்தின் அதிகார மையமாக விளங்கியது செங்கோட்டை. ஔரங்கசீப்பிற்குப் பிறகு வந்த முகலாய மன்னர்கள் பலவீனமானவர்கள் என்பதால், நாதிர்ஷா என்ற ஈரானிய மன்னன் செங்கோட்டையைக் கைப்பற்றி, மயூராசனம் மற்றும் கோகினூர் வைரங்கள் உட்பட […]
மண்டபம் ஊராட்சி ஒன்றியம் ஆக்கிடா வலசை ஆரம்பப் பள்ளியில் சுதந்திர தின விழா..
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் ஆக்கிடா வலசை ஆரம்பப் பள்ளியில் சுதந்திர தின விழா நடந்தது. கிராமத் தலைவர் ச.ரவி தலைமை வகித்தார். கிராமக் கல்விக்குழு பொருளாளர் M மலைராஜன், பள்ளி மேலாண் குழு தலைவி T. நம்புலெட்சுமி முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர் நா.கோமகன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் . சுதந்திர இந்தியாவைப் பேணிக் காப்போம் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் […]
பள்ளி மாணவ, மாணவிகள் புகார் கூற புதிய எண் அறிமுகம்…
நகர பகுதிகளைப் போல் மலைப்பகுதி அரசு பள்ளிகளிலும் ‘‘ஸ்மார்ட் கிளாஸ்’’ ஆரம்பிக்கப்படும். மலைப் பகுதி பள்ளிகளும் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும். மாணவ- மாணவிகள் தங்களது குறைகளை- புகார்கள் கூற கல்வித்துறை சார்பில் 14417 என்ற புதிய எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண் மூலம் மாணவ- மாணவிகள் புகார் மற்றும் குறைகளை தெரிவிக்கலாம். புகார் கூறுபவர்கள் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும். தொடர்ந்து இதன் மீது விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவிலேயே முதன் முதலாக இந்த திட்டம் […]
இராமநாதபுரம் மாவட்ட அஞ்சலக கோட்ட புதிய கண்காணிப்பாளர் பொறுப்பேற்றுக் கொண்டார்…
இராமநாதபுரம் மாவட்ட அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளராக நாகர்கோவில்பணியாற்றிய வீரபுத்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து இராமநாதபுரத்தில் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, “நான் நாகர்கோவிலில் முதுநிலை அஞ்சலக அதிகாரி யாக பணியாற்றி பணிமாறுதலில் தற்போது இராமநாதபுரம் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளேன். இந்திய அஞ்சல் துறையின் ஒரு மைல்கல்லாக இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் வங்கி சேவையை பிரதமரால் வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து பொதுமக்களும் நிதி சேவை […]
கூடுதல் எஸ்.பி., பெயரால் ரூ.2.80 லட்சம் வசூல்: இருவர் கைது..
இராமேஸ்வரத்தில் முறைகேடாக மது விற்க கூடுதல் எஸ்.பி., வெள்ளத்துரைக்கு பணம் கொடுக்க வேண்டும், என பல்வேறு நபர்களிடம் ரூ.2.80 லட்சம் வசூலித்தவரையும், பணம் கொடுத்த நபரையும் போலீசார் கைது செய்தனர். இராமேஸ்வரத்தில் மதுக்கடை இல்லாததால், அங்கு அனுமதியின்றி முறைகேடாக மது விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்தது. கூடுதல் எஸ்.பி., வெள்ளத்துரை தலைமையில் போலீசார் சோதனை நடத்தியதில் 3 ஆயிரம் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் சிலரை கைது செய்தனர். சிலர் தலைமறைவாகினர். முறைகேடாக மதுபானம் பிரச்னையில்லாமல் விற்பனை […]
CBSE வினாத்தாள் கசிவதை தடுக்க Microsoft நிறுவனத்துடன் இணைந்து புதிய வழிமுறை உருவாக்கம்…
சி.பி.எஸ்.இ. வினாத்தாள் கசிவதை தடுக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து புதிய வழிமுறையை உருவாக்கியுள்ளது. இதன் படி தேர்வு மையத் தேர்வாளர்கள் தேர்வு தொடங்க அறை மணி நேரத்துக்கு முன்பு மட்டுமே வினாத்தாளை பதிவிறக்கம் செய்ய முடியும், மேலும் தேர்வாளர்கள் ஓடிபி எனப்படும் ஒருமுறை ரகசியக் குறியீடு அல்லது ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் முறையில் தங்களை அடையாளங்களை பதிவிட்ட பிறகே வினாத்தாளை பதிவிறக்கம் செய்வதற்கான ஆப்ஷன்களை பெற முடியும். மேலும் பதிவிறக்கம் செய்யப்படும் வினாத்தாள் பக்கத்தில் குறிப்பிட்ட தேர்வு […]
ஆகஸ்ட் 15முதல் புதிய ரயில் அட்டவனை – முழு விபரம்..
இந்திய ரயில்வேயின் புதிய கால அட்டவனை ஆகஸ்ட் 15-ல் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த புதிய ரயில்வே கால அட்டவனை நாளை (14/08/2018) இணையத்தளத்தில் வெளியிடப்பட உள்ளது. முழுமையான அட்டவனை நகலை பார்வையிட கீழே க்ளிக் செய்யும். Southern Railway Time Table 2018_Sale Copy_Low Resolution
சுதந்திர தினத்திற்கு பிளாஸ்டிக் கொடிகள் பயன்படுத்த வேண்டாம் – உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்..
இந்தியாவின் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் சுதந்திர தினத்தன்று பிளாஸ்டிக் கொடிகள் அதிக அளவில் பயன்படுத்த கூடும் என்ன நிலையில், பிளாஸ்டிக் பொருளால் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம் என இந்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. காகிதத்தால் செய்யப்பட்ட தேசியக் கொடிகளை மக்கள் பயன்படுத்த உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
திருச்சி அதிமுக நிர்வாகி அராஜக போக்கு.. கைது ஆவாரா?? காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?? வீடியோ பதிவு..
திருச்சி மாநகரில் அதிமுக பிரமுகர் ஒருவர் பொது இடத்தில் காவல்துறை அதிகாரிகளை அநாகரீகமான வார்த்தையில் திட்டியது, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆளுங்கட்சி காரர்களிடம் விளையாடுகீறீர்களா என காவல்துறையினரை ஆபாச வார்த்தைகளால் பேசும் திருச்சி அதிமுக நிர்வாகி வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிர்வாகியின் பெயர் திலக் என அறியப்படுகிறது. திருச்சி அ.தி.மு.க நிர்வாகி . சத்திரம் பேருந்து நிலையத்தில் போலீஸ் தடுப்பை உடைத்து சேதப்படுத்தி காவல்துறையினரை ஆபாச வார்த்தைகளால் மிக கடுமையாக வசை பாடியுள்ளார். உதவி ஆணையரயே […]
சட்டம் அறிவோம் – பிழை வழக்கு (MISTAKE OF FACT)..
பிழை வழக்கு (மிஸ்டேக் ஆப் பேக்ட் – MISTAKE OF FACT) என்றால் ஒரு குற்றம் நடைபெற்றுள்ளது என்று உரிய ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் ஒருவர் புகார் அளித்தால், அந்தப் புகாரினை ஏற்றுக்கொண்டு முதலில் அவருக்கு காவல்துறை அலுவலர் CSR( Community Service Register) எனப்ப்டுகின்ற “மனு ஏற்புச் சான்றிதழ்” அளிக்க வேண்டும். அந்தப் புகாரின்படி விசாரணை செய்து, கைது செய்யப்படக்கூடிய குற்றம் நடந்திருக்கிறது என்று தெரிய வந்தால், முதல் தகவல் அறிக்கை தயார் செய்து, குற்ற விசாரணை […]
சமையல் கேஸ் ₹.35/- விலையேற்றம்..
சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை இம்மாதம் ரூ.35 அதிகரிக்கப்பட்டுள்ளது. விலை ஏற்றத்திற்கு ஏற்ப மானியத்தின் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறினார்கள்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முறையான பாதுகாப்பு தராமல் மிகவும் கஷ்டபடுத்தி அனுப்பியது தமிழக காவல்துறை -ஆம்ஆத்மிகட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் கண்டனம்!..வீடியோ பதிவு.
திமுக தலைவர் மு. கருணாநிதி மறைவையொட்டி அஞ்சலி செலுத்த வந்த காங்கிரஸ் தலைவர் வந்த பொழுது முறையான பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை என சர்ச்சை நிலவி வரும் வேளையில், இறுதி அஞ்சலி செலுத்திட வந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் முறையான பாதுகாப்பு தரப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை அசத்தல் டி.வி எனும் இணைய தள டி.வி வெளியிட்டுள்ளது. அஞ்சலி செலுத்த வந்த கெஜ்ரிவால் கூட்ட நெரிசலில் சிக்கி கடும் அவதிக்குள்ளானார், தமிழக போலீசு ஒரு முதல்வருக்கு முறையே தர […]
கோவைக்கு வயது 213..
24/11/1804 ஆம் ஆண்டு கோவையை தலைநகரமாகக்கொண்டு புதிய கோவை மாவட்டத்தை ஆங்கிலேயா்கள் அமைத்தனர். 1848 ஆம் ஆண்டு கோவை நகருக்கு நகராட்சி அங்கீகாரம் கொடுக்கப்பட்டது. முதல் நகராட்சி தலைவராக சர்ராபர்ட் ஸ்டேன்ஸ் பதவியேற்றார். இதற்கு முன் கோவையை சோழர்களும், அதன்பின் பாண்டியர்களும், பின் சாளுக்கிய மன்னரும் பின்னர் டெல்லியைஆண்ட முகலாயர்களும், பின் விஜயநகர சாம்ராஜ்யமும் , பின்னர் மதுரையை தலைமையாகக் கொண்டு நாயக்க மன்னர்கள் வசம் கோவை வந்ததாம். ஆனால் இன்று சென்னைக்கு அடுத்த பெருநகரமாக […]
வெள்ளம் தொடர்பாக, வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !..
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், இன்று(12.08.18) சென்னை, சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள , மாநில பேரிடர் மீட்பு மேலாண்மை கட்டுப்பாடு மையத்தில் , செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது ‘கேரளம் மற்றும் கர்நாடகத்தில் கனமழை பெய்து ,வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கபிணி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து அதிக அளவில், நீர் வெளியேற்றப் படுவதால், வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி வீதம் , இரு தினங்களில் மேட்டூர் அணைக்கு நீர் வந்து சேரும். இதனால் தமிழகத்தின் காவிரி கரையோர மாவட்டங்களிலும் […]
ரயில் தாமதமானால் இனி டிரைவரே வேகத்தை அதிகரிக்கலாம் !..
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 30 சதவிகிதம் ரயில்கள் இந்தியாவில் தாமதமாக வந்துள்ளதாக ரயில்வேதுறை தெரிவித்துள்ளது. இந்த தாமதத்தை தவிர்க்க புதிய உத்தரவை ரயில்வே துறை பிறப்பித்துள்ளது. இந்த புதிய முறைப்படி, ரயில் தாமதம் ஆனாலோ அல்லது இறுதி நேரத்திலோ ரயிலின் வேகத்தை டிரைவரே அதிகரிக்கலாம். இதற்கு முன்னர் 110 கி.மீ வேகம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் சராசரி வேகம் என்பது 40 முதல் 50 கி.மீ வேகமாக இருந்தது. அதேபோன்று 130 கி.மீ வேகம் செல்லும் […]
பாரத வங்கியின் நஷ்டம் 4,876 கோடி..
நாட்டில் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) சுமார் ரூ. 4,876 கோடி இழப்பை சந்தித்துள்ளது. வாராக் கடன்களால் பொதுத்துறை வங்கிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன. லாபத்தில் இயங்கிவந்த வங்கிகள், வாராக் கடன் காராணமாக நஷ்டத்தில் இயங்குகின்றன. வங்கிக் கிளைகள் மற்றும் ஏடிஎம்களின் அடிப்படையில் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியும் வாராக் கடனால் தற்போது நஷ்டத்தை சந்தித்துள்ளது.
பாலியல் வன்கொடுமை மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு..
24 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக மத்திய அமைச்சர் ராஜன் கோஹைன் மீது அஸ்ஸாம் மாநில காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆகஸ்ட் 2-ம் தேதி, மத்திய ரயில்வே இணை அமைச்சர் ராஜன் கோஹைன் மீது, நாகோன் காவல் நிலையத்துக்கு இரண்டு புகார்கள் வந்ததாகவும், இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதியப் பட்டு, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிவு […]
You must be logged in to post a comment.