தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி, மண்டபம் ஆகிய இடங்களில் இந்திய கடலோரக் காவல் படை நிலையங்கள் உள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் காவல் படை நிலையம் 13. ஜன 1986ல் உருவாக்கப்பட்டது. ஆபத்து காலங்களில் மீனவர்களுக்கு உதவுதல், அந்நியர் ஊடுருவலை தடுத்தல், கடலோர சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கடத்தலை தடுக்க கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு உதவுதல் உள்பட பல்வேறு பணிகளை மேற்கொள்கிறது. ரோந்து பணியில் அதி நவீன ஹோவர் கிராப்ட்கள், சிறிய ரோந்து கப்பல் ஈடுபடுத்தப்படுகின்றன. இந்நிலையில் […]
Category: தேசிய செய்திகள்
தமிழக மீனவர்கள் எட்டு பேருக்கு நான்காவது முறையாக காவல் நீட்டிப்பு.. இலங்கை நீதிமன்றம் உத்தரவு..
இராமேஸ்வரம் நடராஜபுரத்தில் இருந்து ஜூலை 16ல் மிதவையில் 2 மீனவர்கள் தொழிலுக்குச் சென்றனர். காற்றின் வேகத்தால் இலங்கை கடல் பகுதிக்கு சென்ற இவர்களும், ஆக., 22 ல் புதுக்கோட்டையில் இருந்து மீன் பிடிக்க சென்று இலங்கை கடற்படை ரோந்து கப்பலில் மோதி படகு கவிழ்ந்தது. இப்படகிலிருந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 6 பேர் மொத்தம் 8 மீனவர்களின் வழக்கு இன்று (14.9.18) மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தராஜா மீனவர்களை செப்டம்பர் 26ம் […]
புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி உட்பட பல பேர் மீது பரமக்குடியில் விதி மீறியதாக வழக்கு…
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 11/09/2018ல் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தில் விதிகள் மீறி செயல்பட்டதாக புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட அக்கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு செய்துள்ளதாக காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் இன்று (13.9.18) கூறினார். அவர் கூறுகையில், பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைத்தன்று விதிகளை மீறி அஞ்சலி செலுத்த வந்ததாக 2017 இல் 105 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு விதிமுறைகளை கண்டறிய பரமக்குடி உள்பட 67 […]
கம்பத்தில் மகளிருக்கான சிறப்பு கருத்தரங்கம்..
தேனி மாவட்டம் கம்பத்தில் பெண்மையை போற்றுவோம் எனும் தலைப்பில், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு தேனி மாவட்ட மகளிரனியினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வெல்ஃபர் பார்ட்டியின் தேசிய பொருளாளரும், சீரிய சிந்தனை வாதியுமான, S.N.சிக்கந்தர், பெண்மையின் கண்ணியம், மற்றும் பெண்ணியத்தை எப்படி போற்ற வேண்டும் போன்ற பல்வேறு கருத்துக்களை பதிவு செய்தார். இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .
இராமநாதபுரத்தில் விடுதலை சிறுத்தை மற்றும் சார்பு கட்சிகள் நடத்திய சமத்துவப் பெரியார் கலைஞருக்கு புகழாஞ்சலி..
இன்று (09/09/2018) இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ் புலிகள் ஒருங்கிணைத்த தமிழ்புலிகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் தமிழ்முருகன் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் ரமேசு முன்னிலையிலும் அனைத்து கட்சிகள் பங்குபெற்ற சமத்துவப் பெரியார் கலைஞரின் புகழாஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக தமிழ்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பேரறிவாளன் கலந்துக்கொண்டு பேருரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் சகுபர் சாதிக், மாவட்ட செய்தித் தொடர்பாளர் சத்தியராசு வளவன், சமூக ஊடக மையத்தின் […]
டீசல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டம் மீனவர் சங்கங்கள் ஆதரவு…
டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தத் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் செப் 10 பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த எதிர்கட்சிகளின் போராட்டத்திற்கு இராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த விசைப்படகு, மின் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள், மீன்பிடி தொழில் சார்பு நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்து நாளை (10/09/2018) வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன. செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
கொடைக்கானலில் சுற்றுலாத்துறைச் சார்பாக சைல்டு லைன் அமைப்பும் அனைத்து ஊடக பத்திரிக்கையாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது….வீடியோ செய்தி..
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மாவட்ட சுற்றுலாத்துறைச் சார்பாக சைல்டு லைன் அமைப்பு மற்றும் அனைத்து ஊடக பத்திரிக்கையாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் கொடைக்கானல் சைல்டு லைன் துணை மைய இயக்குநர் ராஜாமுகமது வரவேற்புரை வழங்கினார் பின் சென்னை மாநில ஒருங்கிணைப்பாளர் வில்லியம் விரிவுரை வழங்கினார். இதில் கொடைக்கானல் சுற்றுலா தளம் ஆகையால் ஊடக பத்திரிக்கையாளர்களின் தங்கள் கருத்துக்களை இப்போது தெரிவிக்கலாம் என்றார் பின்பு ஊடக பத்திரிக்கையாளர்கள் தங்களின் பலதரப்பட்ட கருத்துக்களை கூறினார் இதில் முதல் கட்டமாக […]
இராமநாதபுரம் மாவட்டத்தில் செப். 9ந்-தேதி முதல் 2 மாதம் 144 தடை உத்தரவு கலெக்டர் வீர ராகவ ராவ் தகவல்…
இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு பொது அமைதியை பாதுகாக்கும் வகையில் செப் 9 முதல் 2 மாதத்திற்கு 144 தடை உத்தரவை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் பிறப்பித்துள்ளார். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப். 11-ந்தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம், அக்டோபர் மாதம் 28,29,30 தேதிகளில் பசும்பொன்னில் தேவர் குரு பூஜை விழா நடைபெறுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த விழாக்களில் வாகனங்களில் வந்தவர்களால் ஏற்பட்ட சில அசம்பாவித சம்பவங்கள், […]
திண்டுக்கல் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை – முதியவர் கைது..
திண்டுக்கல் கரூர் சாலையில் உள்ளது எரும நாயக்கன்பட்டி இங்கு வசித்து வருபவர் மணி இவர் கூலி வேலை செய்து வருகிறார் இவரது 13 வயது மகள் காயத்ரி திண்டுக்கல்லில் உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார் இவர்களது வீட்டின் அருகே முருகன் என்ற 65 வயது முதியவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மாணவி காயத்ரிக்கு முதியவர் முருகன் நேற்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார் இதனை பார்த்த கிராம மக்கள் முதியவர் முருகனை பிடித்து கம்பத்தில் […]
இராமநாதபுரத்தில் தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி நிருபர்களுக்கு பேட்டி..
இராமநாதபுரத்திற்கு வருகை தந்திருந்த தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பேட்டியில் அவர் கூறியதாவது, “தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள கைதிகளை பாரபட்சமின்றி விடுவிக்க வலியுறுத்தி திருச்சியில் அக்டோபர் 7ம் தேதி சட்ட பாதுகாப்பு மாநாடு நடத்துகிறோம். கல்லூரி மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டை உடனடியாக திருப்பி அளிக்க வேண்டும். சோபியா ஒரு பனங்காட்டு நரி. இந்த மிரட்டலுக்கு எல்லாம் அஞ்ச மாட்டார். சோபியாவின் பாஸ்போர்ட்டை உடனடியாக அளிக்காவிட்டால் தமிழக மக்கள் […]
வத்தலகுண்டு பேரூராட்சியை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின், பிச்சையெடுக்கும் நூதனப் போராட்டம்,…
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காந்திநகர்ரோடு சம்ந்தமாக விடுதலை சிறுத்தைகள் கட்சிபல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காத பேரூராட்சிக்கு மக்களிடத்தில் பிச்சை எடுத்து அந்த பணத்தில் ரோடு போட சொல்லி விடுதலை சிறுத்தைகள் கட்சி நூதனப் போராட்டம் நடத்தினர். வத்தலகுண்டுவில் முக்கிய பகுதியான காந்தி நகர் ரோடு பல வருடங்களாக பராமரிப்பு இல்லாமல் முற்றிலும் பழுதடைந்து குண்டும் குழியுமாக கிடக்கிறது. அந்த ரோட்டில் மருத்துவமனைகள் பள்ளிக்கூடங்கள் போன்ற முக்கியமான கட்டிடங்கள் அந்த ரோட்டில் தான் அமைந்துள்ளது. ஆகையினால் நோயாளிகள் பள்ளிக்குழந்தைகள் வாகன […]
“appappo” கூகுள் ஸ்டோர் புதிய செயலி.. இருக்கும் “எப்பவுமே”..
Google Play Storeல் புதிதாக சோதனையாக வெளியிடப்பட்டுள்ள செயலிதான் (Application) “appappo”என்ற பெயரில் எப்பவுமே கிடைக்கும் விதமாக வெளியாகி இருக்கும் செயலிதான் இது. நம் புழக்கத்தில் எத்தனையோ செயலிகள் இருந்தாலும், இது மாறுபட்டே உள்ளது. இந்த செயலி சாமானியன் முதல் சாதூர்யமானவரகள் வரை அனைவருக்கும் விரும்பி பார்க்கும் வண்ணம் முன்னனி பிரபல எழுத்தாளர்கள் முதல் வளர்ந்து வரும் அனைத்து தரப்பிலான எழுத்தாளர்களுடைய படைப்புகளையும் பார்க்கலாம், படித்து ரசிக்கலாம். இதற்கான செலவு நாம் டீ குடிக்கும் செலவை விட […]
ஆசிரியர் தினத்தில் நிச்சயமாக நினைவு கூற வேண்டியவர்கள்..
ஆசிரியர் தினமாகக் கொண்டாடத் தகுதியுள்ளவர்கள் ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்திரிபாய் பூலே. சமூக விடுதலைக்கும் ஒடுக்கப்பட்டவர்களின் நிலை உயர கல்வி ஒன்றே ஆயுதம் என்று பள்ளி திறந்து கல்வி வழங்கிய ஆசான் ஜோதிபாய் பூலே. சாவித்திரிபாய் பூலேவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. வீடு கூட்டுவது, பாத்திரம் கழுவுவது, சமைப்பது இது தான் பெற்றோரால் கற்றுக் கொடுக்கப் பட்டது. என்ன ஆச்சரியம்! ஜோதிராவ் பூலே தன் மனைவி சாவித்திரிபாய் பூலேயைப் படிக்க வைத்தார். இந்தியாவிலேயே பெண் குழந்தைகளுக்கான முதல் […]
சிறுபான்மையின மாணவர்களுக்கு பேகம் ஹஸரத் மாஹல் நேஷனல் ஸ்காலர்ஷிப் திட்டம்….
சிறுபான்மையினராக கருதப்படும் முஸ்லீம், கிறித்துவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள் மற்றும் பார்சி சமூகத்தைச் சார்ந்த கல்வியில் சிறந்து விளங்கி பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வி தொடர்ந்து பயில முடியாத மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் ‘‘பேகம் ஹஸரத் மாஹல் நேஷனல் ஸ்காலர்ஷிப் ” (முன்பு மௌலானா ஆசாத் கல்வி ஸ்காலர்ஷிப்) என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பெற்றோரின் ஆண்டு வருமானம் அனைத்து வகையிலும் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்; 9–ம் வகுப்பு முதல் 11–ம் […]
வத்தலக்குண்டு கூட்டுறவு சங்க தேர்தலில் ரகளை ..வீடியோ செய்தி …
இன்று திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு நகர கூட்டுறவு வங்கி தேர்தல் வாக்கு எண்ணிக்கையிள் போது திமுக வேட்பாளர்கள் 11 பேர் முன்னிலை வகித்தனர். பின்னர் மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது அதிமுக நிர்வாகி திடீரென வாக்கு சீட்டில் மையினை ஊற்றி ரகளை செய்ய தொடங்கினர். தோல்வி பயத்தில் வாக்கு எண்ணிக்கையை தடுத்து நிறுத்த அதிமுக வினர் முயற்ச்சி செய்வதாக திமுக குற்றச்சாட்டு வைத்ததை தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டதால் போலிசார் குவிக்கப்பட்டனர். செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத […]
மதுரையில் பெய்த மழையில் மூழ்கிய கார்.. வீடியோ செய்தி..
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்கப் பாதையில் இன்று பெய்த மழையில் தியாகராஜா கல்லூரியில் இருந்து வந்த ஒரு கார் தண்ணீரில் மூழ்கியது. தற்செயலாக அந்த பகுதியில் உள்ள சமூக ஆர்வலர் காளமேகம் அந்த கார் மூழ்கி இருந்தது கண்டு அதிர்ந்து போனார் உடனடியாக சக ஊழியர்கள் கூட்டிக் கொண்டு அந்த காரில் உள்ள நபர்களை அவர்களை காப்பாற்றி மற்றும் தீயணைப்பு துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் கொடுத்து அந்த காரை மீட்டனர். செய்தி:- மதுரை: காளமேகம்
பழனி அருகே ஆயக்குடியில் முன்விரோதம் காரணமாக பெருமாள் என்ற இளைஞருக்கு சரமரியாக அரிவால் வெட்டு காவல்துறை விசாரணை..
பழனி அருகே உள்ள பழைய ஆயக்குடி 7வது வார்டில் கோபாலகிருஷ்னன் மகன் பெருமாள் வயது 33 என்பவர் வசித்து வந்துள்ளார் இவருக்கு திருமணமாகி ஜீவிதா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளன.சம்பவமான நேற்று இரவு 7.00 மணியளவில் பழைய ஆயக்குடி அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தம் எதிரே நின்று கொண்டிருந்த போது முன்விரோதம் காரணமாக அங்கு மறைந்திருந்த ரமேஷ்,மதன்,கோபால் ஆகிய மூவரும் திடீரென பெருமாள் மீது அரிவாலால் சரமாரியாக வெட்டத் தொடங்கினர். இதில் பெருமாள் மண்டையில் சரமாரியாக […]
காட்பாடியில் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட கல்லூரி மாணவனின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. – குற்றவாளிகளின் கைவரிசை தொடர்வதால் மக்கள் அச்சம்…
வேலூர் மாவட்டம்,காட்பாடி விருதம்பட்டு அருகேயுள்ள ராதாகிருஷ்ணன் நகரில் வசிப்பவர் ரமேஷ். இவர் தனியார் பேருந்து நிறுவனத்தில் மேலாராக பணியாற்றி வருகிறார். இவர் கேரளாவை சேர்ந்தவர். இவரது மகன் டிஷோ ரமேஷ் (21) திருநெல்வேலியில் தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். விடுமுறைக்காக அவர் சொந்த ஊரான காட்பாடிக்கு வந்திருந்தபோது கடந்த மாதம் 16 ஆம் தேதி இரவு காரில் மாணவரை வலுக்கட்டாயமாக தூக்கி கடத்தி சென்றனர். முதலில் மாணவன் செல்போனிலிருந்து அவரின் பெற்றோருக்கு தொடர்புகொண்டு உங்களின் மகன் உயிரோடு […]
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் சுகாதாரம் பேண வேண்டிய ஆரம்ப சுகாதார நிலையம், சுகாதரமின்றி கிடக்கும் அவலம்..
நிலக்கோட்டை பகுதியில் பல வருடங்களாக இயங்கி வந்த ஆரம்ப சுகாதார நிலையம் தற்பொழுது எவ்வித பராமரிப்பும் இன்றி சுவர்கள் இடிந்து புதர்கள் மண்டி போய் செயல்பாடில்லாமல் இருக்கின்றது. இதனால் நிலக்கோட்டையில் உள்ள கர்ப்பிணிப் பெண்கள்,மற்றும் குழந்தை பெற்றெடுத்த பெண்கள் இவர்களுக்கான மருத்துவ சேவைகளை பெற சுமார் 8 முதல் 10 கி.மீ வரை செல்லவேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவத் தேவைகள் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி, குழந்தைகளுக்கான சத்துணவு மருந்துகள், […]
சேலம் அருகே இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்… 7 பேர் பலி,!
சேலம்- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி தனியார் சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பெங்களூருவில் இருந்து பாலக்காடு நோக்கி மற்றொரு தனியார் சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இதனிடையே பெங்களூருக்கு மலர் ஏற்றிச் சென்ற லாரி பழுதடைந்து நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்தது. அப்போது சேலத்தில் இருந்து வந்த பேருந்து லாரியை கவனிக்காமல், அருகில் வந்து லாரியை கவனித்த பேருந்தின் ஓட்டுநர் பதற்றமடைந்த அவர் லாரி மீது மோதாமல் இருக்க பேருந்து […]
You must be logged in to post a comment.