தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பந்துவார்பட்டி மேற்கு தோட்டம் செல்ல சாலை வசதி அமைத்து தர பொது மக்கள் கோரிக்கை. பந்துவார்பட்டி மேற்கு தோட்டத்தில் நூற்றிற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.பந்துவார்பட்டி காலணி வழியாக தான் மேற்கு தோட்டத்திற்கு செல்ல முடியும். தற்போது மழை பெய்து சாலை குப்பை, மழைநீர் என நிரம்பி காணப்படுகிறது. அவ்வழியாக நடந்தோ இருசக்கர வாகனம் மூலமாக மேற்கு தோட்டத்திற்கு செல்ல முடியவில்லை என பொது மக்கள் பள்ளி மாணவர்கள் கூறி வருகின்றனார். பலமுறை […]
Category: தேசிய செய்திகள்
அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நெல் நேரடி கொள்முதல் நிலையம் திறப்புவிழா-விவசாயிகள் மகிழ்ச்சி…
அரியலூர் மாவட்டம் காமரசவல்லி கிராமத்தில் இன்று (09/10/2018) தமிழ்நாடு நெல் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலட்சுமி தலைமையில் அரசு தலைமைக் கொறடா எஸ் ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிலையத்தைத் திறந்து வைத்தார். மேலும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ராமஜெயம் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி ஒன்றிய செயலாளர் மற்றும் பொறுப்பாளர்கள் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நெல் நேரடி கொள்முதல் நிலையம் அப்பகுதியில் சுமார் பத்துக்கும் […]
பல வருடங்களுக்கு பிறகு தூர்வாரப்படும் தேனி மாவட்டம் தாமரைகுளம் கண்மாய் – மகிழ்ச்சியில் மக்கள் –
தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம், தாமரைக்குளம் கண்மாயில் இருந்து உபரி நீர் வழிந்தோடும் “தாமரைக்குளம் உபரி நீர் வாய்க்காள்” பல ஆண்டு காலமாக தூர் வாரப்படாததால் புதர் மண்டி இருந்தது. இதனால் தாமரைக் குளத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் செல்வதற்கு வழி இல்லாமல் இருந்து வந்தது. இக்கண்மாயில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரானது வடுகபட்டி, மேல் மங்கலம் வழியே சென்று வராக நதி ஆற்றில் கலக்கும். எதிர்வரும் பருவ மழையை கருத்தில் கொண்டும், நீர் வழித்தடப் […]
ஒழுக்கம், கடின உழைப்பால் வாழ்வில் உன்னத நிலை அடையலாம் – மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை..
இராமநாதபுரம் நேஷனல் அகாடமி பள்ளிகள் மற்றும் டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் ( ராமேஸ்வரம் ) இணைந்து உருவாக்கிய டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் அறிவியம் மையம் மற்றும் புத்தாக்க மையம் திறப்பு விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் திறந்து வைத்தார். பின்னர் ஆட்சியர், “ஆண்ட்ராய்டு மொபைல் மூலம் விரல் நுனியில் உலகம் உள்ளது. வேலை தொடர்பாக எண்ணற்ற வாய்ப்புகள் குவிந்துள்ள போதிலும் போட்டியிட்டு வெல்வதில் தான் ஒவ்வொருவரின் திறமை உள்ளது. […]
கிராமச் சுவரில் ஓவியம் வந்து தூய்மை இந்தியா விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசு பள்ளி மாணவனை பாராட்டிய ஆட்சியர்.
இராமநாதபுரம் அருகே பேராவூரைச் சேர்ந்த புபேஷ் சந்திரன் – அழகு சுந்தரி மகன் பிரஜின் குமார். இவர் இங்குள்ள இராமநாதபுரம் ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஓவியம், சிலம்பாட்டத்தில் இவருக்கு அலாதி பிரியம். ஒருவரை பார்த்த சில நிமிடங்களில் ஓவியம் வரைந்து அசத்தும் அசாத்திய திறன் படைத்தவர். இவரது ஒவியங்களை பார்த்து வியந்த முதன்மை மாவட்ட நீதிபதி கயல்விழி பாராட்டினார். சிலம்பாட்டத்தை மார்ச் மாதம் பொதுமக்கள் முன்னிலையில் அரங்கேற்றம் செய்து பாராட்டு […]
காந்தி நேசித்த விவசாயிகளை காந்தி ஜெயந்தி அன்று தடியால் அடித்து நொறுக்கிய போலீஸ்.. டெல்லியில் பரபரப்பு..
டெல்லியில் பேரணி நடத்துவதற்காக நுழைந்த விவசாயிகளை மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மோசமாக தாக்கி இருக்கிறார்கள். பாஜக அரசுக்கு எதிராக மும்பையில் விவசாயிகள் வரலாறு காணாத பேரணி நடத்தினார்கள். அதை தொடர்ந்து தற்போது மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் பேரணி நடத்த இருக்கிறார்கள். இந்த பேரணி இன்று டெல்லிக்குள் நுழையும் போது, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் அவர்கள் மீது மோசமாக தாக்குதல் நடத்தி உள்ளனர். இதன் வீடியோ வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த பேரணியில் 5000க்கும் […]
சென்னை விக்டோரியா தொழிற்நுட்ப மையத்தில் நவராத்திரியை முன்னிட்டு கைவினைப்பொருட்கள் மற்றும் கொலுபொம்மைகளின் கண்காட்சி – முழு வீடியோ..
சென்னை அண்ணாசாலையில் உள்ள விக்டோரியா தொழிற்நுட்ப மையத்தில் நவராத்திரியை முன்னிட்டு கைவினைப்பொருட்கள் மற்றும் கொலுபொம்மைகளின் விற்பனை கண்காட்சி இன்று (91/10/2018) தொடங்கியது. பார்வையாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். சென்னை அண்ணாசாலையில் உள்ள விக்டோரியா தொழிற்நுட்ப மையம் 1887 முதல் இயங்கி வருகிறது. கைவினைக் கலைஞர்களை உருவாக்கவும், ஊக்குவிக்கவும் பொருட்டு இந்த தொழிற்நுட்ப மையம் விக்டோரியா மகாராணி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த தொழிற்நுட்ப மையத்தில் கைவினை கலைஞர்களாலும், மாற்றுதிறனாளி கலைஞர்களளாலும் உருவாக்கப்படும் […]
இராமநாதபுரம் ஆட்சியருக்கு டில்லியில் விருது…
தேசிய அளவில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த அரசு அதிகாரிகளுக்கு தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சி புதுடில்லி விஞ்ஞான் பவனில் இன்று (01.10.2018) நடந்தது. இந்நிகழ்வில் மூத்த குடிமக்களுக்கு கடந்த 2017-18 நிதி ஆண்டில் சிறப்பாக சேவை ஆற்றியமைக்காக மதுரை மாவட்டத்திற்கு Vayoshrestha Samman விருது கிடைத்துள்ளது. இந்த விருதை துணை ஜனாதிபதி வெங்கைய்ய நாயுடு, மதுரை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி தற்போது இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றும் கொ.வீரராகவ ராவிற்கு வழங்கி கவுரவித்தார். செய்தி:- முருகன், […]
சொந்த செலவில் கடற்பாசி கண்காட்சி வைத்து ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் மீனவர்..
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீனவர் காலனியை சேர்ந்த மீனவர் ராஜேந்திர பிரசாத் . இவர் தனது கடந்த பல ஆண்டு கால சொந்த முயற்சியால் தோணித்துறை பகுதியில் கடற்பாசி மியூசியம் உருவாக்கியுள்ளார். தனது அன்றாட வருமானத்திற்கு உழைத்தது போக எஞ்சி நேரத்தை மியூசியம் உருவாக்க செலவிட்டுள்ளார். கடலில் கண்டுபிடிக்கப்பட்ட 300 வகை பாசிகளில் 160 வகை பாசி வகைகளை இந்த மியூசியத்தில் பாதுகாத்து வருகிறார். இதுவரை எம்.எஸ்சி., எம்.பில்., மாணவர்கள் 485 பேருக்கும், ஆராய்ச்சி முனைவர்கள் 70 […]
இந்தோனேசியா சுனாமி.. இராமநாதபுர பகுதி கடலும் கொந்தளிப்பாக இருக்கும்..- வானிலை எச்சரிக்கை..
இந்தோனேஷியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான நிலநடுக்கத்தால் சுனாமி தாக்குதலுக்கு ஆளாகி உள்ளது எனவே அதன் தாக்கம் இராமநாதபுரம் பகுதி கடற்கரை பகுதியிலும் இருக்கலாம் எனவே கடற்கரை பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இந்தியா கடல்சார் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதுபோல் இன்று இரவு 12.00 மணி வரை உயர் சுழற்சி அலைகளும் இருக்கும், ஆகையால் கடலுக்குள் செல்லும் மீனவர்கள் கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். அறிவிப்பு – Indian National Centre for Ocean Information Services.
விழுப்புரம் மாவட்டத்தில் மழை,வெள்ளம் இடர்கால ஆய்வுக்கூட்டம்…
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் இடர்கால நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் RDO தலைமையில் 25/09/18 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் மழை வெள்ளம் போன்ற காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான விஷயங்கள் ஆய்வு செய்யப்பட்டது. மழை,வெள்ளம் பாதிப்புக்குள்ளாகும் என்று கண்டறியபட்டுள்ள பகுதிகளின் மண்டல குழுவின் முதன்மை பொறுப்பாளர்கள் (first respondents) கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. செய்தி தகவல்:-அபுபக்கர்சித்திக். செய்தி தொகுப்பு:-அ.சா.அலாவுதீன்,மூத்த நிருபர் கீழை நியூஸ்( பூதக்கண்ணாடி மாத இதழ் )
கீழக்கரை வீட்டு வரி மறுபரிசீலனை ஆய்வு பணி தொடக்கம்..
கீழக்கரை நகரில் உள்ள காலியிடம், வீடுகள், மற்றும் கடைகளுக்கு விதிக்கும் சொத்துவரி மதிப்பை மறுபரிசீலனை செய்து அதிகப்படுத்தும் பணியை கீழக்கரை நகராட்சியினர் இன்று முதல் தொடங்கி உள்ளனர். இதற்காக வீடு தேடி வரி வசூல் செய்ய வரும் நகராட்சி அலுவலர்கள் சொத்தை வரி சுய மதிப்பீட்டு படிவம் ஒன்றை வீடுகள் மற்றும் கடைகள் வைத்திருக்கும் அனைவருக்கும் வழங்கி வருகிறார்கள். அதில் பெயர், முகவரி, வீட்டின் அளவு, கை பேசி எண், மின் இணைப்பு எண் போன்றவற்றை நிரப்பி […]
மதுரை வில்லாபுரத்தில் வீட்டு வசதி வாரியத்தால் வீணாகும் பல லட்சம்..
மதுரை வில்லாபுரத்தில் வீட்டு வசதி வாரியம் மூலமாக ஏறக்குறைய சுமார் 21 ஆண்டுகளாக விற்பனையாகமல் வீணாகியுள்ளது. இக்கட்டிடமானது சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இக்கட்டிடமானது எவவித பராமரிப்பு மற்றும் சுகாதாரத்திற்கு கேடு விளைவிப்பதாகவும் உள்ளது. இதனால் ஜன்னல், கதவுகள் அதிகமாய் களவு போய் உள்ளன. இரவு நேரங்களில் அல்லாமல் பகல் நேரங்களிலும் களவுகள் அதிகமாக நடக்கிறது. சிறுவர்கள் இக்கட்டிடத்தை தவறுதலாக பயன்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் இக்கட்டிட வளாகத்தில் ஆடு,மாடுகள் கட்டவும், அதனை கழிப்பிடமாகவும் பயன்படுத்துகின்றனர். போலிசாரின் […]
தெறிக்கும் வலிகள் வெளியீட்டு விழா..
புழல் சிறைக்குள் சென்று ஒளிப்பதிவு செய்த காட்சிகளில் தெறிக்கும் வலிகள் வெளியீட்டு விழா சென்னை பல்கலைக்கழக பிராதனக் கட்டிடத்தில் நடைபெற்றது. சென்னை மாநகர கமிஷ்னர் விஸ்வநாதன், அவர்கள்.கலந்து கொண்டு ஆவணப்படத்தை வெளியிட்டார் .சிறைக் கைதிகளின் மறுபக்கம் குறித்த ஆவணப்படம் வெளியீடு! செய்தி:-அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர் கீழை நியூஸ்( பூதக்கண்ணாடி மாத இதழ் )
பாராபட்சம் காட்டும் தனியார் பேருந்துகள்..
திருச்சியில் இருந்து மணப்பாறை, வையம்பட்டி, அய்யலூர், வடமதுரை வழித்தடத்தில் திண்டுக்கல் வரை இயக்கப்படும் தனியார் பேருந்துகள் திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்குள் வந்து நின்றவுடன் திருச்சி செல்லும் பயணிகள் மட்டுமே அபே ருந்திற்குள் ஏறவேண்டும் என்றும் இடையில் உள்ள ஊர்களுக்கு பயனிப்பவர்கள் ஓரமாக நின்று பேருந்து புறப்படும் போதுதான் ஏறவேண்டும் என்று வாய்மொழி உத்தரவிடுகிறார்கள். இதனால் இடைப்பட்ட ஊருக்கு செல்லும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். இதனால் வயோதிகர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களை பேருந்தில் ஏறி அமர்ந்து விட்டால் கட்டணம் வசூலிக்க […]
நேற்றைய செய்தி எதிரொலி .. இன்று நடவடிக்கை … நன்றியுடன் பொது மக்கள்..
கீழை நியூசில் நேற்று (25/09/2018) வெளியான கொட்டிய மழையில் “கரைந்து போன கட்டிய வாய்க்கால்” என்ற செய்தியின் அடிப்படையில் இன்று (25/09/2018) திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் ஒன்றிய BDO, மற்றும் AD நேரடியாக சம்பவ இடத்தை பார்வையிட்டு மக்களிடம் ஆமை வேக பணிகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும் இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்புவதாக கூறிச்சென்றார். மக்களின் குறை தீர்க்க அரசு அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுப்பார்களா? மைலாப்பூர் மக்கள் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர். உடனடியாக […]
ஒரு நாள் மருந்து கடைகள் அடைப்புக்கு ஒத்துழைப்பு தர கீழக்கரை மருந்து வர்த்தக சங்க தலைவர் வேண்டுகோள்
இந்தியா முழுதும் ஒரு நாள் மருந்து கடைகள் அடைப்பு வரும் 27/09/2018 அன்று மருந்து விற்பனையாளர்கள் சங்கம் சார்பாக தேசிய அளவில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்சமயத் ஆன்லைன் விற்பனைக்கு மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து, வருகின்ற 28.09.18. வெள்ளிக் கிழமை ஒரு நாள் மத்திய அரசை கண்டித்து மருந்து கடைகள் முழுவதையும் அடைத்து, ஆன்லைன் விற்பனைக்கான எதிர்ப்பை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவும், ஆன்லைன் வர்த்தகத்தால் ஏற்படும் தீமைகளை மக்களிடம் கொண்டு செல்லவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் விறுவிறுப்பாக நடந்த வாக்காளர் சிறப்பு முகாம் மற்றும் ஆய்வு ..
தற்போது தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களின் வாக்காளர்கள் புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பெயர் சரிபார்த்தல், வாக்காளர் ஜாபிதாவில் பெயர் உள்ளதா? என உறுதி செய்து, முகவரி மாற்றம், புதிய வாக்காளர்கள் சேர்த்தல் போன்றவைகள் இந்த முகாமில் நடைபெற்று. தற்போது சில வாக்காளர்கள் குறிப்பாக சிறுபான்மை வாக்காளர்கள் சில அரசியல் கட்சிகளால் நீக்கப்பட்டு இருப்பதாக ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தது. வாக்கு என்பது இந்திய ஜனநாயகத்தில் ஆட்சியாளர்களை இனம் காட்டும் உரிமை என்பதை மக்கள் […]
போலந்து நாடு – சுயக்கட்டுபாட்டுக்கும், பழைமை மற்றும் இயற்கையை பாதுகாப்பதில் ஒரு முன்னுதாரணம்…பிரத்யேக வீடியோ மற்றும் புகைப்படம்…
போலந்து நாடு, இந்தியாவில் இருந்து 6,200 கிலோ மீட்டர் தொலைவில் 2004ம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் இணைந்த ஒரு நாடாகும். இன்னும் இந்நாட்டில் ஐரோப்பிய நாடு பணமான யூரோ இல்லாமல் அந்நாட்டு பணமான பாலிஸ் நோட்டே உபயோகத்தில் உள்ளது, ஆகையால் இங்கு மற்ற ஐரோப்பிய யூனியன் நாடுகளை விட விலைவாசி குறைவாகவே உள்ளது. இந்நாடு மொத்தம் 120,300 சதுர கிலோ மீட்டர் நில அளவுடன் மொத்தம் 38,433,600 மக்கள் தொகையை கொண்டதாகும். இங்கு 87 சதவீதம் […]
பழனியில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம் அறிவிப்பு..
மாற்றுத்திறனாளி சங்க மாவட்ட செயலாளர் நூருல்ஹூதா கைதை கண்டித்து, பழனி சார்ஆட்சியர் அலுவலகத்தை இன்று 11மணியளவில் முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக மாற்றுத்திறனாளிகள் சங்கம் அறிவிப்பு. சார் ஆட்சியர் அலுவலகம் அருகே 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் குவிந்ததால் பரபரப்பு. மாற்றுத்திறனாளிகளை சார்ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காமல் சாலையை காவல்துறையினர் அடைத்ததால் சாலையில் மாற்றுத்திறனாளிகள் அமர்ந்துள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .
You must be logged in to post a comment.