கஜா புயல் மக்கள் அஞ்ச வேண்டாம் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கடலூர் – பாம்பன் இடையே கரையை கடக்கும் கஜா புயல் குறித்து மக்கள் அஞ்ச வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கூறினார். மேலும் அவர் கூறியதாவது: கஜா புயலை எதிர்கொள்ள மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்த தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எளிதில் தண்ணீர் தேங்கும் தாழ்வான பகுதிகளாக 39 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மீட்பு பணிகளை மேற்கொள்ள 15 மண்டல அளவிலான பாதுகாப்புகள் பல்வேறு துறை அலுவலர்கள் கொண்ட 135 […]
Category: தேசிய செய்திகள்
புயல் கரையைக் கடக்கும் முன் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்..
வீடு மற்றும் வீட்டின் கட்டமைப்பை பரிசோதியுங்கள். எங்கேனும் வெடிப்பு இருந்தால் பூச்சு வேலை செய்தல், கதவுகளின் தாழ்ப்பாள்களை சரி செய்தல் போன்றவற்றை துரிதமாக முடியுங்கள். வீட்டுக்கு அருகே இருக்கும் முறிந்த கிளைகள், பட்டுப்போன மரக்கிளை, அதிக எடையுடன் மரக் கிளை இருந்தால் அதனை அப்புறப்படுத்துங்கள். வீட்டு மாடி, உயரமான சுவர்களில் இருக்கும் கட்டைகள், பயன்படுத்தாத கண்ணாடி, கண்ணாடிப் பொருட்கள் இருந்தால் அப்புறப்படுத்தவும். பேட்டரிகள், மண்ணெண்ணெய், மெழுகுவர்த்திகள், குடிநீர் கேன்கள், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள், அத்தியாவசிய மருந்துகளை […]
“மூஸா” தெரிந்த வரலாறு… உற்சாகம் தரும் முறையில்…
”மூஸா” என்ற இறைத்தூதரின் வரலாறு எழுத்தாளர் ஜெஸிலா பானுவால் எழுதப்பட்டு 09/11/2018 அன்று ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் திரைப்பட இயக்குநர் மற்றும் ரௌதிர பேச்சாளர் கரு.பழனியப்பன் மூலம் வெளியிடப்பட்டது. பொதுவாக புதிய களம், புதிய கதை, அறியாத விசயங்களை எழுதினால் படிக்கும் வாசகர்களின் கவனத்தை எளிதில் ஈர்க்கலாம். ஆனால் பல்லாயிரம் வருடங்களாக பல அறிஞர்கள் மூலமாகவும், திருமறை மூலமாகவும், பல எழுத்தாளர்கள் மூலமாகவும் படித்து, அறிந்த கதையை லாகவகமாக கையாள்வது என்பது, கயிற்றின் மேல் நடப்பது […]
வாலிபர் உடல் உறுப்பு தானம்..
சென்னையில் விபத்தில் படுகாயமடைந்த வாலிபரின் உடல் உறுப்பு தானத்தால், ஆறு பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.ஆவடியைச் சேர்ந்தவர், நாகராஜ். அவரது மகன் கோகுல்நாதன், 17. இருவரும், அக்., 30ல், வீட்டின் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்த இருவரும், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதில், லேசான காயமடைந்த நாகராஜ், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.தலையில் பலத்த காயமடைந்த கோகுல்நாதனுக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனளிக்காத நிலையில், […]
பாம்பன் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு..
அந்தமான் கடற்பகுதில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. 12.11.2018 க்கு மேல் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவேண்டாம் எனவும், கடலுக்கு சென்ற மீனவர்கள் 12.11. 18 இரவுக்குள் கரை திரும்ப வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். 14.11. 18 இல் சென்னை உட்பட தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும். இதன் […]
இராமநாதபுரம் அருகே நோய் தடுப்பு பணி…
இராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் மூலம் டெங்கு, பன்றி காய்ச்சல் போன்ற வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய பணிகளில் கிராம ஊராட்சி செயலர்கள் பங்கு மிகவும் இன்றியமையாதது. ஊரக பகுதிகளில் பொதுமக்களுக்கு விநியோகிக்கும் குடிநீரில் அனுமதிக்கப்பட்ட அளவு குளோரினேசன் செய்து வழங்க வேண்டும். குடிநீர் தொட்டிகளை போதிய கால இடைவெளியில் முறையாக சுத்தம் செய்ய வேண்டும். குடிநீர் விநியோக குழாய்களில் ஏற்படும் அடைப்பு, […]
கீழக்கரை தெற்கு தெரு சங்கத்தினர் சார்பாக நில வேம்பு கசாயம்..
கீழக்கரை தெற்கு தெரு சங்கத்தின் இளைஞர்கள் ஒன்றிணைந்து அப்பகுதி மக்களுக்கு இன்று (09/11/2018) நில வேம்பு கசாயம் விநியோகம் செய்தனர். இன்றிலிருந்து தொடர்ந்து 3 தினங்களுக்கு விநியோகம் செய்ய உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். கசாயம் குடித்ததும் வீட்டில் உள்ளோருக்காக பலர் பாத்திரத்தில் வாங்கியும் சென்றனர். தகவல்:- மக்கள் டீம்…
வத்தலக்குண்டு அருகே அரசு பேருந்து மோதி 100 நாள் வேலைக்காக சாலையோரம் சென்று கொண்டிருந்த மூன்று பெண்கள் படுகாயம்..
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு- சுந்தராஜபுரம் பிரிவில் காலை 8 மணியளவில் 100 நாள் வேலை பணிக்காக சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த பெண்கள் மீது மோதி விபத்துக் குள்ளானதில் 5 பெண்கள் படுகாயம் அடைந்தனர். இவர்களை சிகிச்சைக்காக அனுப்புவதற்க்கு 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தும் நீண்டநேரமாக 108 வாகனம் வராதததால் அப்பகுதி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டிவீரன்பட்டி காவல்துறையினர் தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக காயமடைதவர்களை வத்தலக்குண்டு […]
திண்டுக்கல் நகர்வடக்கு காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி..
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர், லஞ்சம் தவிர்ப்போம் புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்ற நோக்கத்திற்காக பள்ளி மாணவர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் இன்று (03/11/2018) காலை 09:20 மணிக்கு பேரணியை துவக்கி வைத்தார். இதில் 100 மாணவர்கள், 50 ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டனர். பேரணி திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஊரக வளர்ச்சித் துறை […]
இந்தியாவில் உலகின் மிகப் பெரிய படேல் சிலை திறப்பு..
உலகின் மிக உயரமான சர்தார் வல்லபாய் படேலின் உருவ சிலையை பிரதமர் மோடி இன்று நாட்டிற்கு அர்பணித்தார். குஜராத் மாநிலம் கெவாடியா மாவட்டத்தில் உள்ள சர்தார் சரோவர் அணையில் வல்லவாய் படேலின் 597 அடி உயர சிலை உருவாக்கப்பட்டது. இதன் சிலை திறப்பு இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். இவ்விழாவில் விழாவில் தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜீ, மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் பங்கேற்றனர். செய்தியாளர்:1 கே.எம்.வாரியார், வேலூர்
அறிவோம் – INSTANT MONEY ORDER (IMO)…
உங்கள் கணவரோ, மனைவியோ, நண்பரோ வெளியூர் செல்கின்றனர். அங்கே வேறு யாரும் அதிகம் பழக்கமில்லை, அங்கு திடீரென ஏடிஎம் கார்டு உட்பட பணப்பையை தவறவிட்டுவிடுகிறார். இப்படி ஒரு சூழலை நினைத்துப்பாருங்கள். நீங்கள் அவருக்கு எப்படி இங்கிருந்தே உதவுவது. மிகச்சுலபம், அருகில் உள்ள ஏதாவது ஒரு பெரிய தபால் நிலையம் செல்லுங்கள், அங்கே IMO (Instant Money Order) அனுப்பவேண்டும் என்று சொல்லுங்கள். விண்ணப்பத்தில், பெறுநர், அனுப்புநர் விபரம் மற்றும் அனுப்பவிரும்பும் தொகை மூன்றையும் நிரப்பி பணத்தை செலுத்தினால், உங்களுக்கு ஒரு சீல் […]
சாமல்பட்டி தேசிய நெடுஞ்சாலையை சரிசெய்த போலீசாருக்கு சபாஷ்…
கிருஷ்ணகிரி To திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சாமல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வேகதடைகளை பல ஆண்டுகளாக வண்ணம் தீட்டாமல் தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வந்தது. இதனை தடுக்கும் வகையில் ஊத்தங்கரை ஹவே போலீசார்கள் இன்று வண்ணம் தீட்டியது பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் பாராட்டினார்கள். இதேப்போன்று சில நாட்களாகவே கிருஷ்ணகிரி To தின்டிவனம் சாலையை போலீசாரே ஆட்களை வைத்து சரிசெய்து வருவது குறிப்பிடத்தக்கது. அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர் கீழை நியூஸ், ( பூதக்கண்ணாடி மாத […]
பணம் மோசடி சம்பந்தமாக விசாரிக்க முற்பட்ட பத்திரிக்கை ஆசிரியருக்கு மிரட்டல்…காவல் துறையில் புகார்..
சமீபத்தில் சென்னையை சார்ந்த ராதிகா என்ற பெண்ணிடம் திருநெல்வேலியை சார்ந்த விஜி என்ற பெண் ரூபாய் 2லட்சம் பணம் மோசடி செய்துள்ளதாக அறியப்படுகிறது. இது சம்பந்தமாக விஜியால் பாதிக்கப்பட்ட பெண் ராதிகா, “சொல்வோம் வெல்வோம்” பத்திரிக்கை ஆசிரியர் பாண்டி மீனாவிடம், தன்னிடம் பணத்தை ஏமாற்றிய விஜியிடம் நியாயத்தை கேட்க கோறி தஞ்சம் அடைந்துள்ளார் இது சம்பந்தமாக அப்பத்திரிகையின் ஆசிரியர் விஜியிடம் தொலைபேசியில் சம்பவத்தை விசாரித்துள்ளார். ஆனால் அதற்கு முறையாக பதில் கூறாமல் சொல்வோம் வெல்வோம் பத்திரிக்கை ஆசிரியர் […]
தேவர் குரு பூஜையை ஒட்டி திருவிளக்கு பூஜை..
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் தேவர் குரு பூஜையை முன்னிட்டு கமுதி பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் திருவிளக்கு பூஜை நடந்தது. இந்நிகழ்விற்கு முதல்வர் வே.அருணாச்சலம் முன்னிலை வகித்தார். இராமநாதபுரம் மாவட்ட விவேகானந்தா கேந்திரா பொறுப்பாளர் ரெ.சகுந்தலா தலைமை வகித்தார். இதில் மாணவிகள் கலந்து கொண்டனர். அனைத்து துறை பேராசிரியர்கள் , அலுவலக பணியாளர்கள், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் போ.பால்பாண்டியன், தங்கமுத்து, சிவராமகிருஷ்ணகுமார் செய்திருந்தனர். செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
பழமை மற்றும் முன்னோர்களின் வாழ்வியலை மாணவர்களுக்கு புகட்டும் அல்பய்யினா மெட்ரிக் பள்ளி.
அல்பய்யினா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ, மாணவிகளின் வாழ்வியல் முறையை ஒழுங்குபடுத்தும் வகையில் பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். அதன் வரிசையில் “ANCIENT DAY” எனுப்படும் “முன்னோர்கள் தினம்” கொண்டாடப்பட்டது. இது பற்றி பள்ளியின் நிர்வாகி கூறுகையில், “பாரம்பரியத்தைப் பற்றி தெரிந்து கொள்வது என்பது மார்க்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது, மேலும் இதைப் பற்றி அறிஞர்கள் இதுவும் ஒரு வகையில் இறைவனின் தூதர் காட்டிய வழி என கூறுகிறார்கள். அதேவேளையில் அரேபியர்களை பொறுத்தமட்டில் குறைந்தது பத்து தலைமுறையாவது அறிந்து […]
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு! – ஆர்வத்துடன் அனைத்து சமுதாய மக்கள் பங்கேற்பு .. புகைப்பட தொகுப்பு..
அரசியல் அதிகாரம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பரவலாக்கப்பட வேண்டும், ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மற்றும் முஸ்லிம்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்ற அடிப்படையில், அரசியலாய் அணி திரள்வோம்! அதிகாரத்தை வென்றெடுப்போம்! என்ற முழக்கத்தோடு ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு திருச்சி ஜி கார்னரில் (அக்.21) அன்று நடைபெற்றது. மாநாட்டின் முதல் நிகழ்வாக காந்தியடிகள் அரங்கில் ‘நெருக்கடிக்குள்ளாகும் மதச்சார்பின்மையும், அரசியல் எழுச்சிக்கான தேவையும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. அதேபோல் முற்போக்கு பத்திரிக்கையாளர் கெளரிலங்கேஷ் அரங்கத்தில் ‘ஒடுக்கப்பட்ட […]
வேலூரில் வீர வணக்க நாள்…
வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் பணியின் போது உயிர் நீர்த்த போலீசாருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. வேலூர் எஸ்.பி.பர்வேஷ் குமார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை எஸ்.பி ஏற்றார். அனைத்து ADSP, DSP I இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் போலீசார் கலந்து கொண்டனர். நக்சலைட்டால் பாதிக்கப்பட்ட குடும்பத்ற்கு மரியாதை கொடுக்கப்பட்டது. வேலூர் மாவட்ட செய்தியாளர் கே.எம். வாரியார்
எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாடு – வெற்றி பெற வாழத்துக்கள்…
திருச்சி மாநகரில் இன்று (21/10/2018) எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக அனைத்து சமுதாயத்திலும் உள்ள ஒடுக்கப்பட்டவர்களுக்காக எழுச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் இந்தியாவில் அனைத்து சமுதாய தலைவர்களும் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்கள். மேலும் இந்த மாநாட்டில் தீவிரவாதத்தாலும், தீவிரவாதிகளாலும், ஜாதி சமயத்தின் பேரால் கொல்லப்பட்டவர்களின் பெயர்களில் நினைவு கூறும் விதமாகவும், கௌரவிக்கும் விதமாகவும் அரங்கங்கள் அமைக்கப்பட்டடிருப்பது குறிப்பிடதக்கது. உதாரணமாக காந்தியடியகள் அரங்கம், கெளரி லங்கேஷ் அரங்கம் போன்றவையாகும். இந்த மாநாட்டிற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் பிற […]
திருச்சி பாரத சாரண சாரணிய இயக்கம் தமிழ்நாடு சார்பில் அண்ணல்காந்தியடிகள் அஞ்சல்தலை கண்காட்சி..
மகாத்மா காந்தி 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு பாரத சாரண சாரணிய இயக்கம் – தமிழ்நாடு திருச்சிராப்பள்ளி கல்வி மாவட்டம் சார்பில் அஞ்சல் தலை மூலம் அறிவோம் காந்தியை என்ற தலைப்பில் மகாத்மா காந்தி தபால் தலை கண்காட்சி, மாணவர்கள் அனைவரும் மகாத்மா காந்தி வரலாற்றினை, சிந்தனைகளை, அறத்தினை, அகிம்சா வழியினை அறியும் வகையில் அரசு சையது முர்துசா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் வேலுசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் . […]
திருச்சி மாநகராட்சி அரசு மேனிலைப்பள்ளியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினவிழா..
சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருச்சி கீழரண் சாலை மாநகராட்சி அரசு மேனிலை பள்ளியில் சைல்டு லைன் நோடல் நிறுவனம் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பு இணைந்து பெண் குழந்தைகள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் இராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக குழந்தை நல குழு உறுப்பினர்கள் முனைவர் சங்கரி, வழக்கறிஞர் ராஜலட்சுமி ஆகியோர் பெண் குழந்தை உரிமை, பாதுகாப்பு குறித்து பேசினார்கள். நோடல் ஒருங்கிணைப்பாளர் தியகராஜன் VAC […]
You must be logged in to post a comment.